Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

19 நீ... நான்...

ஒரு நாள் சிரித்தேன்...
மறுநாள் வெறுத்தேன்...
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே...
மன்னிப்பாயா...
மன்னிப்பாயா...
மன்னிப்பாயா...
மன்னிப்பாயா...
மன்னிப்பாயா...

தன் கண்களிலிருந்து தாரை தாராயாய் வலிந்த கண்ணீரை துடைக்க துளி கூட எண்ணமில்லாது கீழே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் உத்ரா.... சற்றே தொலைவில்.... விருவிருவென நடந்த அவனின் பிம்பம் அவள் கண்ணில் தோன்றி மறைந்தது....

உத்ரா : யாரிவன்... ஏன் இங்க வந்தான்... ஏன் என் மாமாவ நியாபகப்படுத்துனான்... ஏன் என்ன அறைஞ்சான்... அய்யோ இறைவா... என் மாமா எங்க... எனக்கு ஏன் அவன் முகம் மறந்து போச்சு... அந்த விபத்து ஏன் நடந்துச்சு... எனக்கு ஏன் இந்த சாபம்.... தயவு செஞ்சி நா என்ன செஞ்சிருந்தாலும் என் முன்னாடி வா ஆதன்.... என அவள் கத்தியது தொலைவில் நடந்து சென்ற அவனின் செவியையும் தீண்டி வந்தது.....

அவ்விடத்திலிருந்து எப்படியாவது வெளியே சென்று கோவத்தை அடக்கி விட வேண்டுமென உணர்வில்லாதவனை போல் அவளை அறைந்து விட்டு திரும்பியும் பாராது விருவிருவென சென்ற ஆதித்தின் கால்கள் அந்த " ஆதன் " என்ற அழைப்பில் உறைந்து நின்றது... அவனின் கால் ஓர் அடியும் அவ்விடத்திலிருந்து நகரவில்லை...

தன்னையும் அறியாது அந்த அழைப்பு வந்த புறம் திரும்பிய ஆதித்.... அக்காட்சியை கண்டு அதிர்ந்து அழுது கதறி கொண்டிருந்த உத்ராவை நோக்கி அதி வேகமாய் ஓடினான்....

கண்களை திறக்க கூட இயலாமல் கதறி அழுத உத்ரா... பல காலடி சத்தத்தை கேட்டு அதை கவனிக்கும் முன்னே.... திடீரென கேட்ட ஒரு துப்பாக்கி தோட்டா சத்தத்தின் பின்..... அக்ஷா என்ற அலரலோடு கண்கள் திறக்க முயன்றும் முடியாமல் போக அவ்விடத்திலே மயங்கினாள்....

தன்னையும் அறியாது அவளருகில் ஓடி வந்த ஆதித் துப்பாக்கி சுடப்படவும்.... தான் மனதில் புதைத்து வைத்திருந்த அனைத்தையும் தன்னை அறியாது கிளரி எடுத்ததோடு மட்டுமல்லாமல்.... "நான் தான டி உன் ஆதன் " என அவனே அறியாமல் அவனின் " அக்ஷா " என்னும் ஓர் அழைப்பில் உணர்த்தினான் அவன்..... தோட்டா பாய்ந்த அதிர்விலும்.... அழுகையின் காரணத்தாலும்... மனவலிகளின் வீரியத்தாலும்... அவளின் ஆதன் மீதே மயங்கி சரிந்தாள் ஆதனின் அக்ஷாவான நம் கதாநாயகி உத்ர தக்ஷாயினி....

தன் கரங்களில் சாய்ந்தவளை மார்போடு இருக்கி அணைத்தவன் அவன் முன் கருப்பாடை அனிந்து துப்பாக்கிகளை ஏந்தியவாறு நின்ற சில ரௌடிகளை பார்த்து பித்து பிடித்தவனை போல் கத்தினான்.... அவனின் கண்கள் இரண்டும் கோபமென்னும் மாபெரும் திறையில் மறைந்து போனது.... அவனவளை கீழேயே கிடத்தியவன்.... அவனின் முதுகில் சொருகப்பட்டிருந்த பிஸ்ட்டலை எடுத்து சுற்றி நின்ற அனைவரையும் நொடி பொழுதில் சுட்டு கீழே சரிய வைத்தான்....

கீழே விழுந்த அனைவரும் எழ இயலாது வலியில் துடித்தனர்.... அவர்களை நெருங்கிய ஆதித் மிருகம் போல் தாக்க தொடங்கினான்....

ஆதித் : எவ்ளோ தைரியம் இருந்தா என் அக்ஷாவ சுடப்பாத்தீங்க.... என் கூட பிரச்சனைன்னா.... உன் மொதலாளிய என் கூட நேருக்கு நேர் மோத சொல்லு டா.... இப்டி முதுகுல சுட சொல்லாத.... இனிமே என் அக்ஷாவோட நிழல கூட நீங்க யாரும் தொட கூடாது... தொட்டீங்க... உங்களோட சேர்த்து உங்க மொதலாளியையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்டுவேன் டா.... என உதரிவிட்டான்.... அத்தோடு அங்கே விரைந்து வந்த ஆதித்தின் கார்ட்ஸ் அவர்களை தூக்கி கொண்டு மறைந்தனர்....

இவ்வளவு நேரம் அந்த கயவர்களுக்கு ருத்ரமூர்த்தியாய் காட்சி அளித்தவன்... இப்போது நடக்கவும் தெம்பில்லாத நோயாளியை போலானான்... சில அடி தூரத்தில் மயங்கி கிடந்தவளின் அருகில் சென்றான்.... அவளின் முகத்தை ஒரு நொடி தன்னையும் அறியாது இரசித்தவன் பின் தன்னை தானே கடிந்து கொண்டு...

ஆதித் : உன்ன ஏமாத்துனவ டா இவ... உன் அக்ஷா இல்ல... உனக்காக பிறந்தவ இல்ல... நீ எப்பையோ ஏமாந்து போய்ட்ட... அவ உனக்கு சொந்தமானவ இல்ல... எல்லாம் எப்பையோ முடிஞ்சு போச்சு... இவள நம்பாத... நம்பாத.... என தன்னுள்ளே கூறி கொண்டான்....

ஆனால் அவனின் கூர் விழிகளோ... அவளை கண்டதினாலோ என்னவோ.... கோவத்தை மறக்க முயற்சித்தது.... அவ்விடத்திலிருந்து விருட்டென எழுந்த ஆதித்.... திரும்பியும் பாராது அவ்விடத்திலிருந்தே நகர்ந்தான்....

கண்ணே தடுமாறி நடந்தேன்...
நூலில்லான மழையாகி போனேன்...
உன்னால் தான் கவிஞனாய் ஆனேனே...
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ...
உனை நோக்கியே...
எனை ஈர்க்கிறாறே...
மேலும் மேலும்
உருகி உருகி...
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்...

கண்களை அழுந்த மூடி திறந்த ஆதித்தின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது.... அவனின் பதினாறு வயதில்.... முதல் முறை பாவாடை தாவணி அனிந்து தன்னிடம் தான் முதலில் காட்டுவேன்... என எவரையும் உள்ளே விடாமல்... தியாவை வைத்து ஆதித்தை திருட்டு தனமாய் வர வைத்து சிறு பிள்ளையாய் பாவாடையை சுற்றி காட்டிய பதினோறு வயது உத்ரா தான் வந்து சென்றாள்...

அடுத்த சில நொடிகளிளே.... தலையில் ஒரு பக்கம் இரத்தம் பீரிட்டு வலிய... அவனை அந்நொடியிலும் ஆதன் என அழைத்த.... அவளின் அதே பூ முகம் மின்னி மின்னி மறைய....

அதை இயலாமையாய் எண்ணினானோ என்னவோ.... சில நொடிகளிளே ஏதோ ஒரு நினைவை நினைவு படுத்திய அவன் மூளை அவனுக்கு உத்ராவின் மேலுள்ள கோவத்தை நினைவூட்டியது....

ஆதித் : எனக்கு அவ வேண்டாம்.... அவள நா பாக்கவே கூடாது... பாக்கவே கூடாது.... அவளுக்கு நா யாரோ... அவ என்ன மறந்துட்டா.... என்ன மறந்துட்டா.... என கண்டதையெல்லாம் கீழே போட்டு உடைத்ததோடு.... இல்லாததை இருக்கென கூறி தன்னை தானே தேற்றி கொண்டான்....

அவன் அவ்விடத்திலிருந்து அகன்ற அடுத்த சில நிமிடங்களிளே... ஆதித்தின் கனிப்பை பொய்யாக்காது ஆதன் என கத்தியவாறே எழுந்தமர்ந்தாள் உத்ரா....

அவள் முன் கோவமாய் நின்றிருந்தனர் அவளின் அண்ணன்கள்... ரித்திக் மற்றும் விஷ்வா....

ஒரு மணி நேரமாய் இவளை காணாமல் ஊர் முழுவதும் மொத்த குடும்பமும் வையிற்றில் நெருப்பை கட்டி கொண்டு அலைய.. இவளோ நட்ட நடு காட்டில் படுத்து கொண்டிருக்கிறாளே... என திட்டியவாறே இவளருகில் வந்தவர்கள்.. அவள் ஏதோ ஓர் பெயரை கூறி கொண்டு திடீரென எழவும்.... பதறி றோய் அவளருகில் அமர்ந்னர்...

விஷ்வா : உத்ரா மா... என்னடா ஆச்சு... ஏன் பயந்து போயிருக்க... நீ எப்டிடா இங்க வந்த... என தலையை தடவி கேட்க...

உத்ரா : அண்ணா... அண்ணா...

ரித்திக் : அண்ணா தான் சொல்லு டா.. என்ன ஆச்சு...

உத்ரா : அண்ணா.... அண்ணா... என அதை தவிற வேறெதுவும் அவளின் இதழை தாண்டி வரவில்லை...

விஷ்வா :சரி எழுந்துரு.... பொருமையா.. இப்போ சொல்லு....

ரித்திக் : என்ன ஆச்சு...

உத்ரா : வீட்டுக்கு போலாம்னா... என்ன எதையும் கேக்காதீங்க... ப்லீஸ்.... என கண்களை மூடி கொண்டாள்.... சகோதரன்களும் அவளை அவள் போக்கில் விட்டு கை தாங்கலாய் அலைத்து வந்தனர்.....

அவன் யார் என்ற யோசனையிலே சுழன்று கொண்டிருந்தாள் உத்ரா... சில நிமிடங்களிளே மூவரும் வீட்டை அடைய.. எவரையும் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்து அவளின் அறை கதவை சாத்தினாள்..... அனைவரும் கேள்வியாய் ரித்திக் மற்றும் விஷ்வாவை காண... அவர்கள் கண்களை மூடி திறந்து " விரைவில் சரியாகி விடுவாள் " என உறுதி அளித்தனர்....

சிந்தையினூடே அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றனர்.... ஆனால் உறக்கத்தை தேடி சென்ற நம் நாயகிக்கு தான் நித்ரா தேவி அருகிலே வராமல் வம்பிழுத்து கொண்டிருந்தாள்.... அவளின் செவியை.... அதே அக்ஷா என்ற அழைப்பு ரிங்காரமிட்டு கொண்டே இருந்தது.... அதோடு துப்பாக்கி சத்தம் கேட்டது நினைவு வர.... சம்மந்தமே இல்லாமல் அவனுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என உள்ளூர பயந்தாள்.... அவளின் இதயம் சான்றே இல்லாமல் அடித்து கூறியது அவன் தான் இவளின் ஆதனென.... ஆனால் அதை நம்பத்தான் இவள் தயாராக இல்லை....

தான் ஏன் ஆதனிற்காய் துடிக்கிறோம் என்பதை பத்து வருடம் களித்து இன்று தான் யோசிக்க தொடங்கினாள்.... பாலாப்போன தூக்கம் அப்போது அவளை வந்து ஆரத்தழுவி கொண்டது....

ரித்திக்கின் அறையில்.... உறக்கம் கிட்டாமல் குட்டி போட்ட பூணையை போல் அங்குமிங்கும் நடந்து கொண்டாருந்தான் ரித்திக்... ரித்தக்கின் மனம் அவனை நினைத்து கவலை பட்டு கொண்டிருந்தது... ஏனெனில் அவனை தேடி சென்றவன்... திடீரென தன் தங்கை காணாமல் போனதை அறிந்து அவளை தேடும் வேலையில் இறங்கினான்.... எந்த ஆத்திரத்தில் எதை எல்லாம் உடைத்து வைத்திருக்கிறானோ... என அவனின் ஒரு மனம் கவலைப்பட.... மற்றைய மனமோ.... " இன்னும் எத்துனை நாள் தான் அவனின் இந்நிலையை பார்ப்பது " என கவலை கொண்டது....

ஆதித் உத்ராவை வெறுக்க காரணமென்ன...???

உத்ரா ஆதித்தின் முகத்தை மறந்தது எப்படி????

வாசித்து கருத்தை தெரிவியுங்கள்....

நீ... நான்...

இதயங்களே... இது சிறிய அத்யாயம் தான்... காலைலயே போட்டதால பிரச்சனை இல்லன்னு நெனக்கிறேன்... அந்த " அவன் " எவன்னு சொல்ல தாமதமாகும்... அந்த ட்விஸ்ட்டையாவது நா கொஞ்சம் லேட்டா ரிவெல் பன்றேனே... உங்களுக்காக இத்தன ட்விஸ்ட்டையும் சீக்கிரம் சீக்கிரமா திறந்துருக்கேன்... சோ அது லேட்டா தான் வரும்.... ரொம்ப லேட் பன்ன மாட்டேன்... ஃப்லஷ்பக் முன்னாடி தெரிஞ்சிரும்.... அப்டி தான் நெனக்கிறேன்..... சரி சரி மறக்காம இந்த யூடிய பத்தி சொல்லிட்டு போங்க... டாட்டா... குட் நைட்...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro