18 நீ... நான்...
அழகாய் பூத்த காலை மலரினை பார்த்து புன்னகைத்த தியா... அதை பரித்து தன் கூந்தலில் சூடி கொண்டாள்... அதிகாலை மணி ஐந்து... அதிகாலையிலே எழுந்தது நம் தியாவின் வாழ்வில் பெரும் சாதனையே... அதை நினைத்து பூரித்து கொண்டவள்.... மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடினாள்.... அவளின் தாய் அம்ருதா டீ போட்டு எடுத்து வர.... தனக்கானதை வாங்கி மெல்லமாய் ரசித்து ருசித்து அருந்தினாள்...
பிருந்தா பாட்டியும் மரகதம் பாட்டியும் காலை உணவிற்கு தேவையான காய்களை நருக்கிக் கொண்டிருக்க... ராஜேந்திரன் தாத்தா நாற்காலியில் அமர்ந்து... மெத்தையில் சாய்ந்தமர்ந்திருந்த தன் அண்ணன் நாராயனன் தாத்தாவுடன் பேசியவாறு இருந்தார்....
அவர்களருகில் தேவராயன் காலை செய்திதாளை வாசித்து கொண்டிருந்தார்...
தீரா : இவருக்கு இதத்தவிற வேற வேலையே இல்லையோ...
அன்னப்பூரனி ஒரு சோபாவில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருக்க.... காதில் ஹெட்செட்டும்... ஸ்லீவ்லெஸ் டாப்பும்... கொண்டையிட்ட கூந்தலுமாய் வந்து நின்ற ரேகா.... ஒரு சோபாவில் கால் இரண்டையும் தூக்கி மேல் வைத்தவாறு அமர்ந்து எவரையும் மதிக்காது போன் நோண்ட தொடங்கினாள்....
தீரா : இது வேஸ்ட்டு....
அதே நேரம் ரேகாவை போல் இல்லையென்றாலும்... சாதாரண டாப்... மற்றும் பாவாடை... போனீ டெய்லுமாய் வந்த மேகா... அனைவரையும் பார்த்து குட்டி புன்னகை சிந்திவிட்டு மரகதத்தின் அருகில் அமர்ந்து கொண்டாள்....
பாட்டிகள் இருவரும் அவளை பார்த்து புன்னகைத்தனர்...
தீரா : குட் கெர்ள்....
சரியாக ஷியாமும் அம்ருதாவின் அர்ச்சனையை கேட்டவாறு தூக்கம் கலையாத கண்களுடன்... மண்டையை சொரிந்தவாறே கீழே இறங்கி வந்து....
ஷியாம் : குட் மார்னிங் தாத்தாஸ்.... குட் மார்னிங் க்ரனீஸ்... என நாழ்வருக்கும் காலை வணக்கம் தெரிவிக்க....
நாராயனன் மரகதம் : காலை வணக்கம் டா பேராண்டி
ராஜேந்திரன் பிருந்தா : குட் மார்னிங் டா பேரா
அவர்களும் அவனுக்கு புன்னகையுடன் பதிலளித்தனர்.... அடுத்து அவனின் பார்வை அவனின் இடதில் சற்றும் மதிக்காமல் அமர்ந்திருந்த அன்னப்பூனனி ரேகா மேல் விழ... இவனும் அவர்களை ஒரு பொருளாக கூட பார்க்காமல்... தன்னை பார்த்து புன்னகைத்த மேகாவிற்கு மாத்திரம் சிறு புன்னகையை பதிலாய் தந்து விட்டு அம்மியை தேடி சமையலறையில் நுழைந்தான்... அங்கே நம் தியா ஸ்லப்பின் மேல் அமர்ந்து டீ கப்பிற்குள் முகத்தை விட்டவாறு குடித்து கொண்டிருந்தாள்...
ஷியாம் : குட் மார்னிங் டி குட்டி என அவள் தலையில் கொட்டி விட்டு தாண்டி சென்றான்...
தியா : குட் மார்னிங் டா நெட்ட... என அவளருகிலிருந்து தக்காளியை தூக்கி அவன் மேல் எறிந்தாள்... கழுத்தில் போய் சரியாய் அடிக்க... தடவி கொண்டே திரும்பி பார்த்தான்....
அவளோ பலுப்பு காட்டி விட்டு கூடத்திற்கு ஓடி விட்டாள்... தன் தாயிடமிருந்து டீ கப்பை வாங்கி கொண்டு இவனும் வந்து வெளியே அமர்ந்தான்... தனக்கான கப்பையும் எடுத்து கொண்டு வந்த அனைவரோடும் அமர்ந்தார் அம்ருதா...
ஷியாம் தியாவின் செல்ல சண்டைகள் காரணமாய் அங்குசிரிப்பொலி எழும்பி கிடக்க... ரேகாவும் அன்னப்பூரனியும் அதை கண்டு முகம் சுழித்தவாறு அவரவர் வேலையில் மூழ்கினர்....
எதற்சையாய் தன் கண்களை பாட்டு பாடிக் கொண்டே உயர்த்திய ரேகா.... அவளையும் மறந்து தான் அமர்ந்த இடத்திலிருந்து எழுந்தாள்... அவளின் வாய் தந்தியடிக்க தொடங்கியது... இவ்வளவு நேரம் பெரியவர்களுக்கு கூட மரியாதைக்காக காலை இறக்கி வைக்காதவள்... திடீரென எழுந்து நிற்கவும்... அவளின் பார்வை சென்ற இடத்திலே மற்றவர்களும் பார்க்க.... அதை அலட்சியமாய் பார்த்த அன்னப்பூரனி... பின் தான் கண்டது கனவில்லையென உணர்ந்து அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார்....
குடும்பத்தினர் அனைவரும்.... ஆனந்த அதிர்ச்சியிலும்... ஆச்சர்யத்திலும் மூழ்கி முத்தெடுத்தனர்....
மாடி படியில்.... வெள்ளை வேஷ்டி... கருப்பு சட்டை... மடித்து விடப்பட்ட கை... முருக்கி விடப்பட்ட மீசை.. ஆளை எடைபோடும் கூர் விழிகள்... நிமிர்ந்த நடையுமாய்... கம்பீரமாய் நடந்து வந்தான் ஆதித்தன்....
இவனை இந்த தோற்றத்தில் கண்ட அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்க....தன் செருமலிலே அனைவரையும் நிலையடைய வைத்தான் நம் நாயகன்....
ஷியாம் : டேய் அண்ணா... என்னடா கோலம் இது...
தியா : கட்டப்பஞ்சாயத்து எதுக்காவது போரியா...
ஆதித் : கை கால கட்டி தொங்கவிற்றுவேன்... ஷு.. என அதட்டினான்....
அம்ருதா : ஆதி.. என்னடா இது.... நானே சொன்னாலும் நீ வேஷ்டிய தொட மாட்டியே டா....
தீரா : அத அவன் கட்டீட்டு வந்தானோ... இல்ல ஒட்டீட்டு வந்தானோ... யாருக்கு தெரியும்...
ஆதித் : என்ன சொன்ன.... என முறைக்க...
தீரா : இல்ல டா... ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி கட்டீர்க்க போலன்னு சொன்னேன்... உடனே முறைக்காத...
ராஜேந்திரன் : சரி சரி... சொல்லு ஆதித்தா... என்ன இது கோலம்....
ஆதித் : இது தான தாத்தா நம்ம குடும்பத்தோட வழக்கம்.... தெருவுல போர நாய்லாமா நம்ம குடும்ப வழக்கத்த எனக்கு நியாபக படுத்தனும்....
நாராயனன் : என்னடா சொல்ல வர...
ஆதித் : இனிமே நா எங்கையும் போக போறதில்ல... இங்க தான் இருக்க போறேன்... அதனால நானே எல்லா பொருப்பையும் ஏத்துக்குறேன்... நீங்க பஞ்சாயத்து பொருப்ப மட்டும் பாத்துக்கோங்க தாத்தா.... என பெரியவர்களின் வயிற்றில் பாலை வார்த்தான்....
மரகதம் : என் ராசா... இந்த வார்த்தைய நீ எப்போ சொல்லுவன்னு தான் நா எதிர்பார்த்தேன்...
பிருந்தா : என் கண்ணே பற்றும் சாமி... எந்த பிச்சக்கார நாயோட கண்ணும் பற்ற கூடாது உன் மேல... என நெட்டி முரித்தார்...
ஷியாம் : பட்டாதான்... எரிஞ்சு போய்டுமே...
தேவராயன் : என்னடா சொல்ற....
ஷியாம் : ஒன்னுமில்ல ப்பா...
நாராயனன் : இதுக்காக தான் எதிர்பார்த்தேன் ராசா... போய்ட்டு வா... இனிமே எவன் நம்ம குடும்பத்த பத்தி பேசுறான்னு பாத்துறேன்...
ராஜேந்திரன் : பேசுறவன் அதுக்கப்ரம் உயிரோடவே இருக்க மாட்டான் நாராயனா.... என கம்பீரமாய் சென்ற தங்கள் பேரனை பார்த்து கொண்டே நக்கலாய் கூறினார்.....
அன்னப்பூரனிக்கு உடலெல்லாம் சில்லிட்டிருந்தது... தான் கண்டது கனவா நெனவா என அறியாமலே... நின்றவரை ரேகா பிடித்து உலுக்கி சுயநினைவை அடைய வைத்தாள்.... அடுத்த நொடி அவசர அவசரமாய் தன் அறைக்குள் சென்றார்... ரேகா மற்றும் மேகாவும் அவரை பின் தொடர.... ஃபோனை எடுத்த அன்னன்பூரனி உடனே தன் அண்ணன் மருதவேலுக்கு ஃபோனை போட்டார்.... சில நொடிகளிளே ஃபோன் எடுக்கப்பட...
அன்னம் :ஏண்ணா... நா உன் கிட்ட எதாவது கேட்டனா... வந்த நீ வாய மூடிட்டு போக வேண்டியது தான.... இன்னைக்கு உன்னால என்ன என்னாலாமோ நடந்துடுச்சு... என கத்தி கொண்டே போக....
அப்புறமோ " ஹலோ ஹலோ " என கத்திய ராஜேஷ்... எப்படியோ அவரை நிருத்தினான்...
ராஜேஷ் : அத்த.. நா ராஜேஷ் பேசுறேன்...
அன்னம் : உன் அப்பன்ட்ட குடு டா ஃபோன....
ராஜேஷ் : இருங்க அத்த... என அவரிம் கொடுத்து விட்டு ஸ்பீக்கரில் போட்டான்...
மருதவேல் : என்னாச்சு அன்னம்... ஏன் ஆவேசமா இருக்க...
அன்னம் : உன்னால இங்க என்ன என்னாலாம் நடக்குது தெரியுமா.. என் மருமகள்கள விட வந்த நீ... விட்டுட்டு போக வேண்டியது தான.... நீ ஏதேதோ பேசி அவன் கோவத்த கெளரி விட்டுட்ட... இப்போ அவன் பொருப்பேத்துட்டு வந்து நிக்கிறான்...
மருதவேல் : என்ன அன்னம் சொல்ற... என அதிர்ச்சியா கேட்க...
ராஜேஷோ குழம்பி போனான்.... "எவன் வந்தான்... எந்த பொருப்ப ஏத்துக்குட்டான் "னு.... அதை கேட்கவும் தைரியமில்லாதவன் அமைதி காத்தான்...
அன்னம் : என்ன நொன்ன அன்னம்... அவனே எல்லாத்தையும் பாத்துக்குரேன்னு சொல்லி கெளம்பி போய்ட்டான்... இனிமே ஊர விட்டே போக மாட்டான்....
மருதவேல் தலையில் கை வைத்து கீழே அமர்ந்துவிட்டார்....
ராஜேஷ் : அத்த... இனிமே நடக்குரத பாத்துக்கலாம்... நீங்க ஃபோன வைங்க... என கட் செய்தான்...
ச என சலித்தவாறு மெத்தையில் அமர்ந்தார் அன்னப்பூரனி... மேகா அமைதியாய் நிற்க.... அவர் அருகில் நெருங்கிய ரேகா.... அவரை தொட்டு தன் புறம் திருப்பினாள்...
ரேகா : அத்த.... உங்க மகன நா கல்யாணம் பன்னிக்கிறேன்....
அன்னம் :என்னமா சொல்ற.
ரேகா : ஆமா அத்த.... பத்து வர்ஷத்துக்கு முன்னாடி பாத்தது... அப்பவே அவன் அழகு தான்... இன்னைக்கு ஆணழகனா இருக்கான்... பத்தாததுக்கு.... ஜெமீந்தார் குடும்பத்தோட ஒரு வாரிசு....முன்னாடில இருந்தே என்ன இவனுக்கு கட்டி குடுக்குரது தான நம்ம திட்டம்... அதையே செயல் படுத்துவோம்... அவன் என் கழுத்துல தாலி கட்டீட்டான்னா... அவனோட மொத்த சொத்தும் என் பேர்ல எழுதி வச்சதுக்கு சமம் தான....
தீரா : வாடி சிருக்கி... நீ உன் அப்பன மிஞ்சீருவ டி.... ஏதோ ஆதித் இவள கட்டிக்கிறேன்னு காலுல விழுந்து கிடக்க மாரி பேசுறாளே....
அன்னம் : என் தங்கமே... சரியா சொன்னடா.... இதையே செயல் படுத்துவோம்... சின்னவன் ஷியாமுக்கு... நம்ம மேகாவ பேசீறலாம்... மொத்த சொத்துமே நம்ம காலுக்கு அடில வந்துடும்... என அமைதியாய் நின்ற மேகாவை இழுக்க.... அவள் ஏதோ கூற வாயெடுக்கும் முன்னே.... அவளை பிடித்திழுத்து கொண்டு மாடிக்கு சென்றாள் ரேகா....
தன் பழைய புல்லட்டை எடுத்த ஆதித்.... அதில் மெல்ல வருட... பல இனிமையான நினைவுகள் வந்து சென்றது... அதனூடே.... " ஆதன் " என்னும் அவளின் அழைப்பும் இணைய.... இப்போது அந்த புல்லட்டை கண்டவனுக்கு உள்ளூர எரிய... அதை தள்ளி விட்டு உடைக்கப்போனவனுக்கு.... அவன் மனசாட்சி " இத விட்டா வேற பைக்கில்ல டா ..... சென்னைல இருந்து பைக்க அனுப்ப சொல்லி... அத எப்போ வந்து நீ எப்போ போறது.... இன்னைக்கு இதுலையே போ " என வலியுறுத்த... சலித்தவாறே அதில் ஏறியவன்.... பல வருடம் களித்து அதை உயிர் பித்தான்.... அதை உயிர் பித்த நொடியே.... பைக் இன்ஜின் மக்கர் செய்தது....
ஆதித்திற்கு மெல்ல மெல்ல கடுப்பாக தொடங்க.... பின் அவன் மீண்டும் மீண்டும் ட்ரிகர் செய்யவும் தானாய் உயிர் பித்துக் கொண்டதோடு.... இன்ஜினில் நடுவே சிக்கப்பட்டிருந்த ஒரு செயினை தூக்கி எறிந்தது.... வெளியே விழப்போன செயின்... ஆதித் கவனிக்கும் முன்னே... பைக்கின் ஏதோ ஒரு பாகத்திலே தொங்கி கொண்டது..... அதை ஆதித் இன்றே பார்த்திருதால் வர போகும் பல பிரச்சனைகள் தீருமோ தீராதோ... அவை அனைத்திலும் இவன் நிம்மதியாகவாவது இருந்திருப்பான்....
பைக்கை எடுத்து கொண்டு முதலில் வயலுக்கு சென்றவன்.... கூடாரத்திற்குள் நுழைந்தான்.... அவன் பிறப்பிற்கு முன்பிலிருந்து இங்கு வேலை பார்க்கும் பலரும் அவனை அடையாளங்கண்டு கொண்டு மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.... அவனின் இருகிய தோற்றம்.... அனைவரையும் நடுங்கத்தான் வைத்தது....
இனி கிராம பொருப்பை தான் தான் காண போவதாகவும்.... மாத சம்பலமில்லாமல்.... பாதி சம்பலம் தினம் அளிக்கப்படும் எனவும்.... மீதி பாதி.... மாதத்தின் தொடக்கத்தில் அளிக்கப்படுமெனவும் அறிவித்தான்.... எடுத்துக்காட்டாக.... மாத சம்பலம் இரண்டாயரமாய் இருப்பின்... அதில் ஆயிரம் ரூபாயை.... தினம் பிரித்து குடுப்பதாகவும்... மீதி ஆயிரத்தை முழுமையாய் மாத தொடக்கத்தில் கொடுக்க வேண்டுமென கூறினான்.... வேலை பார்த்தவர்கள் அனைவரும் ஆனந்தமாகினர்....
தங்களின் ஜமீந்தார் தங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை எனினும்.... மாத சம்பலம் தருவதனால்... திடீரென தேவை படும் அத்யாவசியமான பொருட்கள் வாங்க பணம் இருப்பதில்லை.... இதை கூறினால் எங்கு ஜெமீந்தார் கவலைபடுவாரோ... என பயந்து இதுவரை எவரும் கூறியதில்லை... இன்று எதையும் கூறாமலே அறிந்து செயல்பட்ட ஆதித்தன் அனைவரின் கண்களுக்கும் மகானாய் காட்சி அளித்தான்...
அங்கிருந்து கிளம்பியவன்... அடுத்து மார்கெட்டிர்க்கு செல்ல வேண்டிய காய்கறிகள்... பழங்கள் கீரைகள் பறிக்கப்படும் தோட்டத்திற்கு சென்று... இதே வழக்கத்தை அறிவித்து.... ஒன்றரை மணி நேரம் அதையே மேற்பார்வை பார்த்து விட்டு சென்றான்....
ஊரிலும் பெரிய வீட்டின் மூத்த பேரன் பொருப்பேற்றுவிட்டார் என்னும் செய்தி காட்டுத்தீயாய் பறவிது.... அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கினர்.....
ஆதித்தின் முதல் நாளிளே பலமாற்றம் கொண்டு வர பட்டது... ரேஷன் பொருட்களிலும் குறைவின்றி கிடைக்க வேண்டிய வேலைகளை செய்து விட்டு வந்தான்....
இவை அனைத்தைதும் அறிந்து கொண்ட ரித்திக் அதிர்ச்சியிலே திளைத்திருந்தான்... அவனின் நினைவு தானாகவே நேற்றைய சம்பவத்தை நினைவூட்டியது....
அவன் : வெயிட் அன் வாட்ச்... என கூறியவன்... பின் திடீரென தான் என்ன என்ன கூறினோம்.. என நினைவு கூர்ந்து பார்த்தவனுக்கு.... தலைக்கு மேல் கோவமேறியது... இவனின் முகம் மாறுவதை கண்ட ரித்திக்... குழப்பத்த்துடன்...
ரித்திக் : என்னடா ஆச்சு...
அவன் :நா என்ன சொல்லிர்க்கேன்.... அவள நா கட்டிக்கனுமா.... அவ எப்டி என் பொண்டாட்டி ஆவா.... ச்சி... இல்ல.... அவ ஒரு கொலகாரி.... எனக்கு நெருக்கமானவங்க என்ன விட்டு போனதுக்கு எல்லாமே அவ தான் காரணம்.... நா மூளை மழுங்கி போய் பேசீர்க்கேன்.... அவள போய் என் பொண்டாட்டின்னு.... ஆ.... என அருகில் இதுவரை இவனின் கண்ணில் அகப்படாது தப்பித்து வந்த முகம் பார்க்கும் கன்னாடியை எடுத்து எங்கோ வீசினான்... அதுவோ ஜன்னலில் போய் இடித்து சுக்கு நூறாய் உடைந்து நொருங்கி அனைத்து இடத்திலும் சிதறியது...
ரித்திக் : டேய் அதுக்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்ல டா...
அவன் : நீ பேசாத.... நா தான் அந்த ஆதித்தன் மேல இருக்க கோவத்துல லூசு மாறி பேசுறேன்னா... நீ என்ன திருத்த மாட்டியா.... என் பிரச்சனை என்னன்னு தான் உனக்கு தெரியும்ல.... அ... தெரியும்ல.... உன் கொலகார தங்கச்சிய எனக்கு கட்டி வைக்கலாம்னு பாத்தியா.... முடியாது... முடியவே முடியாது..... என பித்து பிடித்தவன் போல் கத்த....
தீரா : இவன் அந்நியனுக்கே டஃப் குடுப்பான் போலருக்கே...😱
ரித்திக் : தோ பாரு.... அவளுக்கும் உனக்கும் சம்மந்தமே இல்ல.... என கூறிக் கொண்டே எதையோ அவ பன்ட் பாக்கெட்டினுள் இருந்து எடுத்தான்....
அவன் : இல்ல... இல்ல... என கத்தி கொண்டே ரித்திக்கின் மீதே மயங்கி சரிந்தான்..... அவன் மீது செழுத்திய மயக்க மருந்து கொண்ட ஊசியை மெதுவாய் எடுத்த ரித்திக்... அதை ஓரிடத்தில் வைத்து விட்டு அவனை பத்திரமாய் ஓரிடத்தில் படுக்க வைத்தான்.....
மயக்கத்திலும் நிலையில்லாமல் " இல்ல இல்ல " என பிதற்றி கொண்டே இருந்தான்.... அதை கண்டு தாங்க இயலாத ரித்திக்... கோபம் கொப்பளிக்க....
ரித்திக் : உன்னோட இந்த நிலமைக்கு காரணமான யாரையும் நா விடமாட்டேன் டா... எனக்கு தெரியும்... நீ கோவமா இருக்கப்ப.... வேற எதோ ஒரு பொருள உன் பொருளா நினைசு பேசுவன்னு.... உன்ன இப்டி வாரத்துக்கு ஒரு முறை... ஊசி போட்டு அடக்குரது எனக்கு தான் கஷ்ட்டமா இருக்கு.... உத்ரா உனக்கானவ இல்லன்னு எனக்கும் தெரியும்... உன் கோவம் எகிர கூடாதுன்னு தான் நானும் தொடர்ந்து அது சம்மந்தமாவே பேச்சு குடுத்தேன்.... ஆனா இப்டி அதையே நீ நியாபகப்படுத்திக்குவன்னு நா நெனச்சே பாக்கல.... கவலை பட மாட்டேன் டா... இப்போ நடந்தது எதுவும் உனக்கு காலைல நியாபகம் இருக்காது.... அது ஒன்னு தான் எனக்கிருக்குர நிம்மதி.... உன்னோட இந்த நிலமைக்கு யார் யார்லாம் காரணமோ... அவங்க எல்லாரையும் நா தண்டிப்பேன் டா.... அந்த ஆதித்தனையும் சும்மா விட மாட்டேன்.... என கூறி அவனருகிலே படுத்து கொண்டான்.....
அதிலிருந்து மறுநாள் காலை தான் இருவருமே கண் விழித்தனர்.... அவன் நேற்று எந்த திட்டத்தையும் செயல் படுத்தாமல் போனதால் தான்.. இன்று ஆதித்தன் பொருப்பை ஏற்று விட்டான் என புரிந்துகொண்டான் ரித்திக்.... ஏனெனில் அவன் ஆதித்தனை பொருப்பை ஏற்க விட்டிருக்க மாட்டான்... அவன் பொருப்பை ஏற்றதால் என்ன ஆத்திரத்தில் இருக்கிறானோ.... என நொந்தவாறே அவனை தேடி சென்றான்....
இப்படி ஆதித் அனைத்து வேலைகளையும் முடிக்கவே இரவாகி விட்டது..... இன்னும் வீடு திரும்பாத தன் மகனுக்காய் காத்திருந்தார் அம்ருதா.....
விட்டத்தை வெறித்து கொண்டு அமர்ந்திருந்தாள் உத்ரா... இரவின் பனி கலந்த தென்றல் காற்று அவள் மேனியை தீண்டி சிலிர்க்க வைத்தது.. அவளின் கார்கூந்தல் காற்றில் அசைந்தாடி கொண்டிருந்தது... மான் விழியோ அங்குமிங்கும் அலைந்தாடி மாயவனின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தது... அவளையும் அறியாது எதனாலோ அவ்விடத்திலிருந்து எழுந்தவள்.... இரவு மணி எட்டென்பதையும் பாராது குடும்பத்திடமும் தெரிவிக்காமல் கால் போன போக்கில் நடக்க தொடங்கினாள்....
மிருவை நினைத்து வாணத்தை பார்த்து சிரித்து கொண்டிருந்த விஷ்வா... எதற்சையாய் நட்ட நடு ரோட்டில் அலுங்காமல் குலுங்காமல் சென்ற அவனின் தங்கை தென்பட்டாள்.... முதலில் எங்கு செல்கிறாளென குழம்பியவன்... பின்... பெரியம்மா ரித்திக்கை காணாது தேடிய பொழுது அவ்விடத்தில் உத்ராவும் இருந்ததை நினைவு படுத்தி அவனை பார்க்க தான் செல்கிறாளென இவனே ஒன்று நினைத்து கொண்டு மாடியிலிருந்து கீழே சென்றான்.....
கால் போன போக்கில் நடந்த உத்ரா... அன்று கண்ட அதே ஆலமரத்தை கண்டு அதனருகில் போய் அமர்ந்தாள்... அவளின் கண்கள் தானாய் கண்ணீரை சுரக்க தொடங்கியது... நினைவுகள் முழுவதும் எதிலோ சுழன்று கொண்டிருந்தது... அப்போது சட்டென ஏதோ ஒரு சிலிர்ப்பை உணர்ந்த உத்ரா... அங்குமிங்கும் சுற்றி பார்த்தாள்.... வெகு தொலைவில் ஓர் நிழல் இவ்விடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.... அதை கண்டு குழப்பத்திலும் அதிர்ச்சியுலும் பயத்திலும் இன்னும் பல உணர்வுகளில் படபடவென வேகமாய் அடிக்க தொடங்கியது அவளின் இதயம்..... இவள் இங்கு நிற்பதை சற்றே அருகில் வந்ததும் கண்டுகொண்ட அந்த நிழல் உடனே திரும்பி நடக்க தொடங்கியது.... தான் கண்டது அவனை தானோ.... என ஆர்ப்பரிக்கும் தன் மனதை அடக்கி விட்டு அவனை பின் தொடர்ந்து ஓடிய உத்ரா... எதையும் சிந்திக்காமல் அவனை பின்னிருந்தே இருக்கி அணைத்து கொண்டாள்.... அவன் முதுகில் சாய்ந்தவளுக்கு அங்கு நீண்ட அமைதி நிலவியது புரிய.... அவனின் இதய துடிப்பு மட்டுமே அங்கு ஓசையாய் பறவியது....
அவள் அணைத்ததுமே ஒட்டி வைத்ததை போல் நின்றவன்.... ஓரிரு நிமிடங்கள் அசைவில்லாது நின்றுவிட்டு..... திடீரென அவளை தள்ளி விட்டான்.... தள்ளாடியவாறு நின்ற உத்ரா... தான் அறையப்பட்டதை உணர்ந்து கண்ணத்தில் கண் வைத்து நிமிர்ந்து நோக்கிவள் அதிர்ந்தாள்....
கண்களில் ரௌத்திரம் பொங்க.... இருகிய முகத்துடன் நின்றான் ஆதித்.....
ஆதித் எவ்வாறு இங்கே வந்தான்...??
உத்ரா ஏன் அவனை கண்டு அதிர்ந்தாள்...??
பொருத்தாருந்து பார்ப்போம்...
நீ... நான்...
வெரி சாரி இதயங்களே... நேத்து ரொம்ப பிசி... அதனால தான் யூடி தர முடியல.... இன்னைக்கும்... KMMக்கு குடுக்க முடியுமான்னு தெரியல.... ட்ரை பன்றேன்....
வாசித்து ருத்தை தெரிவியுங்கள்.... நகலெடுக்க வேண்டாம்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro