15 நீ... நான்...
ஓரிரு நிமிடங்கள் அவன் புறம் இருந்த உத்ராவின் பார்வை பின் மீண்டும் அவ்வீட்டை சுழல தொடங்கியது... கீழே இறங்கி வந்த ஆதித் அனைவரையும் பார்த்து பொதுவாய் " வாங்க " என கூறிவிட்டு சட்டென வெளியேறினான்...
அன்கியும் மிருவும் இது ஆதித்தன் மாமா / அண்ணா இல்ல என மனதுக்குள்ளே அதிர்ச்சியோடு நினைத்து கொண்டனர்... அந்நேரம் இவர்களை கண்டு முகத்தில் அரும்பிய புன்னகையுடன் நெருங்கிய அம்ருதா...
அம்ருதா : வாங்க வாங்க... எல்லாரும் எப்டி இருக்கீங்க பசங்களா... அன்கிதா மிரு மா எப்டி டா இருக்கீங்க... அடடே உத்ரா.. என்னடா அத்தைய பாக்காம வீட்ட சுத்தி பாத்துட்டு இருக்க...
அன்கி : நல்லா இருக்கோம் அத்த...
உத்ரா : சும்மா தான் அத்த... நீங்க எப்டி இருக்கீங்க...
அம்ருதா : நல்லா இருக்கேன் டா... வா வா உக்காரு... எவ்ளோ வளந்துட்ட...
மிரு : காலம் போச்சுள்ள சித்தி... அப்டி தா இருப்போம்...
அம்ருதா : அடையாளமே தெரியாம வளந்துட்ட மிரு மா அழகா இருக்க டி என மருமகள்களையும் சேர்த்து நெட்டி முரித்தார்...
விஷ்வா : அத்த இதெல்லாம் உங்களுக்கு அடுக்குமா... மகள் மருகமள பாத்ததும்... மகனையும் மருமகனையும் கலட்டி விட்டுட்டீங்கல்ல... என பொய்யாய் குறை கூற...
அம்ருதா : ஆறு வர்ஷமா உங்க இரெண்டு பேர தான டா கொஞ்சினேன்...
ஷியாம் : ஆமா ஆமா கொஞ்சி கிளிச்சிட்ட...
அம்ருதா : என்ன சொன்ன....
ஷியாம் : ஒன்னுமில்லையே..
அம்ருதா : ம்ம்ம்ம் சரி சரி என்ன சாப்புடுரீங்க..
தியா : மா மொதல்ல மாங்கா இருந்தா உத்ராக்கு குடு...
அம்ருதா : இன்னும் மாங்கா திங்கிரத விடலாயா நீ...
உத்ரா : ஈஈஈஈஈ
அம்ருதா : இருங்க நா எடுத்துட்டு வரேன்.... என சமயலறையை நோக்கி சென்றார்... வழியில் சாப்பாட்டு மேஜையிலே மாங்காய்கள் இருக்க... அதை எடுத்து வந்து உத்ராவிடம் கொடுத்தார்....
உத்ரா : தன்க்ஸ் அத்த என்றாள் உற்சாகமாய்....
அம்ருதா : வாலு... என அவளின் தலையை கலைத்து விட்டார்...
உத்ரா அதன் பின் எதையும் கவனிக்கவில்லை அவள் உண்டு அவள் மாங்கா உண்டு என அதில் மூழ்கினாள்... ஒரு வாய் மாங்காயை கடித்த அடுத்த நொடியே அவளின் இதயம் நின்று துடித்து... தன் அதிர்ச்சியை வெளிகாட்டாது அதை ருசித்து ரசித்து உண்டாள்.... அப்போது அவளையே அறியாமல் அவளுக்கு இருந்த நிம்மதியை குளைக்கவே வாயிலில் வந்து நின்றது ஒரு ஜீப்....
-----------------------------------------------------------------------
அது ஒரு மா தோட்டம்... நெடுந்துயர்ந்த மாங்கா மரங்கள் நிறைந்து இருந்தது... ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு மாங்கா கொத்து தொங்கி கொண்டு நடனமாடி கொண்டிருந்தது... வெண் பஞ்சு மேகம் அங்கு எவருக்கோ பயந்து ஒதுங்கியே இருந்தமையால் சூரியனோ " நான் உன்னை பார்க்க வந்துவிட்டேன் "என்பதை போல் அந்த தோட்டதில் மேலே கூடாரம் போட்டு அமர்ந்திருந்தான்....
அவன் கதிரினாலோ என்னவோ... கைகளை மடக்கி கீழே நின்ற ரித்திக்கின் முன் கெஷ்வலாய் ஒரு மாமரத்தின் மேல் மாங்கனியை கண்டவாறு திரும்பி அமர்ந்திருந்தவனது உருவம் நிழலாய் மறைந்திருந்தது....
தன் முன் தன்னை காணாது திரும்பி அமர்ந்திருந்தவனை கண்களால் எரித்து கொண்டு நின்றிருந்தான் ரித்திக்...
தீரா : நல்லவேளை இவனுக்கு க்ரிஷ்ஷோட சக்தி இல்ல... இருந்துச்சு முன்னாடி இருக்க அவனோட சேர்த்து மாந்தோட்டமே எரிஞ்சி போய்ர்க்கும்...
தன்னை அரைமணி நேரமாய் பின் நின்றவாறே பார்வையால் துளைத்தெடுத்து கொண்டிருந்தவனை கண்டும் காணாமல் அமர்ந்திருந்தான் அவன்... இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர் இல்லை என்பதை போல் தங்களது வீம்பை பிடித்து கொண்டு இருந்தனர்.... மேன்மேலும் பொருத்துக்கொள்ளாத ரித்திக்கே தன் வாயை திறந்தான்....
ரித்திக் : இன்னும் எவ்ளோ நேரம் மாங்காவையே திங்கிர மாரி பாக்குரதா உத்தேசம்...
அவன் : நீ எவ்ளோ நேரம் என் பின்னாடி இருந்தே என்ன எரிக்கிர மாரி பாக்குரதா உத்தேசம் வச்சிர்க்கியோ அது வர... என சலைக்காமல் அடுத்த நொடி பதில் தந்தான்...
ரித்திக் :இப்போ என்ன.... ப்லன் போட்டு உன்ன யாரும் இங்க இழுத்துட்டு வரல....
அவன் : நானும் அதேதான் சொல்றேன்... என்ன யாரும் இங்க இழுத்துட்டு வரல...
ரித்திக் : சரி வந்தது வந்துட்ட... என் பழிவாங்குர முயற்சில நீ தலையிட கூடாது... என விரல் நீட்டி எச்சரிக்க....
அவன் : இப்போ நீ பழிவாங்கி என்ன பன்ன போற...
ரித்திக் : தெரியாத மாரி பேசாத... நா பழிவாங்காம விட மாட்டேன்...
அவன் : இதனால ஆதித்தன் பாதிக்கப்படுவான்...
ரித்திக் : எனக்கு கவலை இல்லை... எனக்கும் அதான் வேணும்..
அவன் : அப்டியா...
ரித்திக் : ஆமா...
அவன் : உன்ன அதுக்கு அந்த பாலாபோன கெழவி (அதான் பா அன்னப்பூரனி) விடமாட்டாங்க.... அவனும் தான்...
ரித்திக் : நா பழிவாங்க போறதே அவன தான்ங்கும் போது... எனக்கொரு கவலையும் இல்லை... அவன வெத்து பேப்பருல ஒரு சைன் போட வச்சிட்டா போதும்.... நெருங்கி நெருங்கி வர அன்னப்பூரனி விட்டுட்டு போய்டுவாங்க..
அவன் : அவங்க புத்திய பத்தி தான் எனக்கும் தெரியுமே... என்று பல்லை கடித்தான்...
ரித்திக் : அவனால தான் இன்னைக்கு நா என் பாதி சந்தோஷத்த இழந்துட்டு நிக்கிறேன்...
அவன் : நீ சந்தோஷத்த இழந்ததுக்கு அந்த ஆதித்தன் என்ன பன்னான்... என்று ஏளனமாய் வந்தது அவனின் கேள்வி...
ரித்திக் : உனக்கு தெரியாதா... பத்து வர்ஷத்துக்கு முன்னாடி முருக்கிக்கிட்டு போனவன் எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு இங்க வந்தானாம்... என் கையால அனுபவிக்கனும்னு தான....
அவன் : இத்தன வர்ஷமும் அவன்கூட தான இருந்த... நீ என்ன பன்ன....
ரித்திக் : சரியான நேரம் அமையலையே.... இல்லன்னா எப்பவோ போற்றுப்பேன்... என்றான் கையை முருக்கி தன் கோவத்தை அடக்கியவாறு...
அவன் :ஹ்ம்... ஜெமிந்தார் ஐயா என்ன செய்ராரோ இல்லையோ... ஆதித்தன நிச்சயமா ஊர் தலைவனாக்காம விட மாட்டாரு....
ரித்திக் : அவனுக்கு உரிய பதவி தான அது...
அவன் : ஹ்ம்... அவன் அந்த பதவில உக்காந்துட்டா அவன அசைக்க முடியாது...
ரித்திக் : இப்போமட்டும் நீ அசைச்சு கிழிச்சிட்ட...
அவன் :ம்ச் அது இல்ல... அவன் அந்த பதவிக்கோ போய்ட்டா வெத்து பேப்பர்ல அவனுக்கே தெரியாம சொத்த வாங்கிடும் அந்த கெழவி... யாருக்கோ சேர வேண்டிய சொத்த அவங்களுக்கு நா கெடைக்க விட மாட்டேன்...
ரித்திக் : இத்தன வர்ஷம் இந்த வேலைல என்ன தூண்டி விட்டுட்டு நீ ஏன் இப்போ இறங்குன...
அவன் : எவ்ளோ வர்ஷம் தான் என் நண்பனான நீயும் தனியாவே சமாளிப்ப... அதான் கூட்டுல இணைஞ்சிட்டேன்...
ரித்திக் : பார்ட்னர் இன் க்ரைம் அகைன் மச்சான்???
அவன் :யா...
ரித்திக் : எங்க ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு உன்னால இனி தப்பிக்கவே முடியாது... என திரும்பி நடந்தான்...
அவன் பாதி தூரம் செல்லும் முன்னே.... மரத்தில் அமர்ந்திருந்தவன் ஏதோ கத்தியது மெல்லமாய் கேட்டதால் அவன் செவியை அடையவில்லை....
திடீரென கேட்ட ஜீப்பின் சத்தத்தில் அனைவரும் வாயில் புறம் தங்கள் கவனத்தை திருப்ப... தன் உடல் குழுங்க ஓடோடி வந்த அன்னம்.... வாயிலில் நின்ற ஜீப்பை அடைந்து அதன் அருகிலே.... மாடர்ன் யுவதிகளாய்.... அலைபாயும் கூந்தல் க்ளட்ச்சில் அடங்கி.... ஜீன்சா பிஞ்சு போன சாக்ஸா என சந்தேகம் வருமளவு கருப்பு பன்ட்டும்.... ஸ்லீவ்லெஸ் டாப்பும் அனிந்து.... கருப்பு கன்னாடிக்குள் குளிர் காய்ந்த மை அப்பிய கண்களும் தத்தெக்க பத்தெக்கவென தொங்கி கொண்டிருந்த ஹன்பகுமாய் நின்ற அவரின் அண்ணன் மகள்களை ரேகா மேகா என கூக்குரலிட்டவாறே அணைத்து கொண்டார்....
அதிலும் மேகாவை விடவும் ரேகாவின் பாவனைகள் அனைவரின் முகத்தையும் சலிப்பில்லாமல் சுலிக்க வைத்தது...
ரேகா : ஹலோ அன்ட்டி...
அன்னம் : அன்ட்டி பன்ட்டின்னுக்குட்டு... அத்தன்னு கூப்டு
ரேகா : ஆன் அத்த... என்ன ஆசிர்வாதம் பன்னுங்க...
மேகா : அத்த என்னையும்...
அன்னம் : நல்லா இருங்க டா...
" என்னமா வந்த உடனே அத்தைக்கு ஐசா " என கேட்டு கொண்டே வந்தார் அன்னப்பூரனியின் அண்ணன் மருதவேல்...
மேகா :எங்க அத்தைக்கு வைக்குறோம்.. உங்களுக்கு என்ன...
மருதவேல் : ஒன்னு மில்ல தாயி...
அன்னம் : ஹாஹா அண்ணா.. விளையாட்டு போதும் வாங்க உள்ள.... வா ரேகா மேகா
இருவரும் : வரோம் அத்த.... என அவர்கள் காலடி எடுத்து வைத்ததுமே அனிச்சயாகவே உத்ராவின் கால்கள் எழுந்து நின்றது.... தான் நிற்கிறோம் என்பதையே உணராமல் தன் முன் அன்னப்பூரனியுடன் சிரித்து பேசியவாறு வந்த ரேகாவை காரணமே இல்லாமல் துளைத்தெடுத்தது அவளின் கண்கள்... கனிவை பறைசாற்றும் அவள் கண்மணிகளில் அவளையும் அறியாமல் ஏதோ ஒரு வித வெறுப்பு தென்பட்டது...
உள்ளே நுழைந்த அன்னம் தனக்கு நேரெதிரே மாங்காவை வைத்தவாறு நின்ற உத்ராவை கண்டு உடல் கொதித்தது.... அவளை ஏசப்போன வாய் திடீரென ஏதோ நினைவு வந்து அடங்கியது... அவரின் மனக்கண்ணில்.... இதே உத்ரா... பத்து வயது சிறுமியாய் பாவாடை சட்டை அனிந்து... கண்களில் சட்டென ஊற்றெடுத்த கண்ணீருடன்.... கைகளிலிருந்த மாங்காவை அன்னப்பூரனியின் புறம் வீச... அவரின் தலையை பதம் பார்க்க வைத்த சம்பவம் ஓடியது.... அதை நினைத்த சில்லிட்ட அவரின் உடல் பின் மீண்டும் பழையநிலை அடைந்து.... கோவமாய் அவளை முறைத்தார்...
அன்னம் : ஏ இராசிகெட்டவளே... எதுக்குடி என் வீட்டுக்குள்ள வந்த.... எத திருடலாம்னு வந்த.... அன்... பெரியவர மயக்கி வீடு சொத்தையெல்லாம் பரிக்க வந்தியா.... என கத்த...
உத்ரா நடுங்கி போய் நின்றாள்.... மிருவும் அன்கியும் அவளை பிடித்து கொள்ள.... ஷியாமும் விஷ்வாவும் கோவத்தில் சட்டென எழுந்த வேகத்தில் மேடையிலிருந்த கன்னாடி ஜக் கீழே விழுந்து நொருங்கி போனது.... தியா கோவத்தில் கத்த போக.... அம்ருதா அவளை தடுத்தார்....
அம்ருதா : அக்கா வார்த்தைய அளந்து பேசுங்க... சின்ன பொண்ணுகிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாம....
அன்னம் : ஏய் இதுல நீ தலையிடாத... எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு அவ இங்க வந்தா... அன்... இவளால தான் எல்லாமே நடந்துச்சு.... என அபாண்டமாய் அவள் மீது பழி போட்டு கத்தி கொண்டே போக...
அவரை நிலைகுலைய வைத்தது அவனின் திடீர் வரவு.... அவர் முன் ருத்ரமூர்த்தியாய் நின்றவனது தோற்றம் நெருப்பில் தகதகவென எரியாத குறையாய் அவன் மனம் எரிய.... ஒரு நொடி அவரை அறைய ஓங்கிய தன் கையை... அருகிலிருந்த டேபிலில் காட்டினான் உத்ராவின் பாசமிகு அண்ணன் ரித்திக்...
இவன் எங்கேந்து வந்தான் என்பதை போல் அனைவருமே பார்த்து கொண்டிருக்க....
ரித்திக் :பன்றதெல்லாம் பன்னீட்டு என் தங்கச்சிய பேசுரியா நீ... இவ்ளோ பேசுர நீ என்ன உத்தமியா.... என் தங்கச்சிய பத்தி என்ன தெரியும் உனக்கு.... அன்...
ரேகா : ஏய்.... ஹு ஆர் யு மேன்.... எதுக்கு எங்க விஷயத்துல தலையிடுர....
ரித்திக் : முளைச்சு மூணு இலை விடாத நீலாம் என் முன்னாடி வராத...
அப்போது திடீரென கேட்டது " அம்மா " என்ற கடுங்கோபமான குரல்... அனைவரும் வாசல் புறம் நடுங்கியவாறு திரும்ப.... அங்கோ கடுங்கோபத்தில் முகத்தீல் எள்ளும் கொள்ளும் வெடிக்க... ரித்திக்கை நேருக்கு நேர் பார்த்து முறைத்தவாறு கோவத்தை கட்டுப்படுத்த இயலாமல் கன்னாடி டம்ளரை உடைத்து கையில் மலமலவென இரத்தம் சொட்ட நின்றான் ஆதித்தன்.....
அதில் பதறிய அனைவரும் அவன் முன் ஓடும் முன்.... அவனருகில் சென்ற ரித்திக்... அவன் கண்ணத்திலே ஓங்கி அறைந்தான்.... இதை சற்றும் எதிர்பார்க்காத அனைவரும் அவனை ஆவென பார்த்து கொண்டிருக்க.... அடுத்த நொடி ஆதித்தின் இரத்த கைகளும்.... ரித்திக்கின் விரைத்த கைகளும் முன் நிற்பவரின் சட்டை காலரில் இருந்தது....
ஆதித் : எவ்ளோ தைரியம் இருந்துர்ந்தா... என் முன்னாடி வந்தது மட்டுமில்லாம என்னைனே அறஞ்சிருப்ப.... என ரித்திக்கின் சட்டை காலரை இருக்கி பிடிக்க....
ரித்திக் : நீ ஏன் டா என் முன்னாடி வந்த.... உன்... ச... அவங்க என் தங்கச்சிய தகாத மாரி சொல்லி பேசுவாங்க... நா பாத்துட்டு சும்மா இருக்கனுமா... என உன் அம்மா என கூறவந்தவன் அதை வெட்டிவிட்டு அவங்க என மாற்றி இவனும் அவன் சட்டையை பிடிக்க....
இரு இளம் காளைகள் தங்கள் கட்டுக்கடங்காத கோவத்தை ஒருவர் மேல் ஒருவர் காட்டியவாறு நின்றதை அனைவரும் " இவனுங்க இப்பையும் விட மாட்டானுங்க போலருக்கே " என்று பயந்தவாறே பார்க்க... உத்ரா மாத்திரம் குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.... ஆனால் மறந்தும் அவள் ஆதித்தை பார்க்கவில்லை.... மறந்தும் என்பதை விட.... அவள் கவனிக்கவில்லை.....
ஆதித் மற்றும் ரித்திக்கிற்குள் இருக்கும் பகை என்ன....
உத்ராவை அன்னப்பூரனி ஏன் குறை கூற வேண்டும்....
அடுத்த த்யாயத்தில பாப்போம்..
நீ... நான்...
நகலெடுப்பதை விட்டுவிட்டு எழுத்தாளர்களுக்கு ஆதரவளியுங்கள்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro