14 நீ... நான்...
மூச்சு முட்ட ஓடோடி வந்த அன்கி ஓரிடத்தில் நின்று மூச்சு வாங்க... அவள் முன் உத்ராவும் மிருவும் யாரையோ கட்டி அணைத்து மகிழ்ச்சியில் பேசி கொண்டிருக்க... யாரு என நிமிர்ந்து நோக்கிய அன்கி மகிழ்ச்சியில்.... " மச்சி " என கத்தி கொண்டே ஓடி சென்று தியாவை அணைத்து கொண்டாள்...
தோழிகள் நாழ்வரும் இருக்கி அணைத்து கொள்ள.... அவர்களை கலைத்தது ஒரு குரல்.... " ம்க்கும்... நம்மள யாருன்னு தெரியாதாம்.. ஆனா ஃப்ரெண்ஸ்ஸ மட்டும் தெரியுமாம் " என கேட்க.....
தோழிகள் நாழ்வரும் திரும்பி நோக்கி... அங்கோ விஷ்வாவும் ஷியாமும் தோளில் கை போட்டு கொண்டு நின்றனர்...
தியா : ரொம்பத்தான் போடா....
மிரு : எப்டி டி இருக்க... எப்ப வந்த...
தியா : சூப்பரா இருக்கேன் டி... இன்னைக்கு தா வந்தேன்...
அன்கி : வி மிஸ்ட் யு சோ மச் டி...
தியா : மீ டூ டி...
விஷ்வா : பாச மழை பொழியிது மச்சான்.. வா நாமளும் கொஞ்சிப்போம்...
ஷியாம் : ஐ மிஸ்ட் யு மச்சான்..
விஷ்வா : ஐ மிஸ் யு டூ மச்சான்...
ஷியாம் : உன்ன பாத்து எவ்ளோ நாளாச்சு...
மிரு : டேய் அண்ணா... இது உனக்கே ஓவரா இல்ல... இரெண்டு நாள் முன்னாடி வர... கட்டி புடிச்சு மீட்டிங் ஹவர்ஸ்ல தூங்கீட்டு இப்போ வந்து ரொம்ப நாளாச்சுங்குர...
ஆம்... நம் ஷியாமின் தோழன் சாட்சாத் விஷ்வாவே தான்... இருவரும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள்... தன் நண்பன் 14 வயதிதே சென்னை சென்றதை ஏற்று கொள்ள முடியாத விஷ்வா... அடுத்த ஒரு வருட படிப்பை வந்தனக்குரிச்சியில் முடித்து விட்டு... பெரிவர்களின் கை காலில் விழாத குறையாக அனுமதி வாங்கி தங்கைகளையும் மனதில்லாமல் பிரிந்து காதலியிடம் தன் மனதை தெரிவித்து விட்டு சென்னை சென்றான்....
விஷ்வா தன் அத்தை மகளை சிறு வயதிலிருந்து பார்த்து பார்த்து வளர்ந்தான்.... அவள் மீது அவன் வைத்த நேசம் வளர வளர வேறொரு உணர்வென உணர்ந்து அதை பிரியும் முன்பாதி விவரித்தும் மீது விவரிக்காமலும் சென்று மறைந்தான்....
அங்கு இருவரும் சேர்ந்து ஆறுவருடம் ஒன்றாகவே படித்து ஒரே மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றினர்... இரு நாட்கள் முன்பே... ஷியாம் குடும்பத்தோடு இனி வந்தனக்குரிச்சியில் இருக்கப்போவதை பற்றி கூற விஷ்வா பணிநீக்கம் செய்து விட்டு ஒரு நள் முன்னே இங்கு வந்து சேர்ந்தான்....
இதில் கூடுதல் இரகசியம் என்னவென்றால்.... அன்கி வாலு தனம் செய்தே ஷியாமின் மனதில் நுழைந்திருந்தாள்... பொல்லாதவன் அவன் நண்பன் விஷ்வாவை போலே ஊரை விட்டு செல்லும் முன்னே... தன் விருப்பத்தை அன்கியிடம் கூறி அவளை குழப்பிவிட்டுவிட்டு சென்றான்....
வயதின் கோளாறெனவே தோழிகள் இருவரும் அதை தூக்கி எறிய வருடக்கணக்காய் முயன்று கொண்டிருக்க.... வந்த நாளே " வயது கோளாறில்லை... மனதின் கோளாறு தான டி காதலியே " என நிரூபித்து விட்டனர் இருவரும்....
ஷியாம் : அண்ணன் இத்தன நாள் களிச்சு வந்துர்க்கனே... என் கிட்ட நலம் விசாரிக்கனும்னு உனக்கு தோனல...
விஷ்வா : அட நீ வேற மச்சான்... என் கூட ஒன்னு வந்து பொறந்துர்க்கு பாரு... நா வந்து இரெண்டு நாள் ஆகுது... இப்போ வர நல்லாயிருக்கியா டா அண்ணா ன்னு ஒரு வார்த்தை கேக்கல...
மிரு : கேட்டா மட்டும் நீ பாக்க நல்லா இல்லன்னு எங்களுக்கு தெரியாமையா போய்ட் போகுது...
அன்கி : அதான... பணமரத்துக்கு மச்சானாட்டம் வளந்துட்டு பெருசா பேசுறானுங்க...
உத்ரா தியா : ஹ்ம் ஹ்ம்... இங்க இரெண்டு பேர் இருக்கோம்.... நியாபகம் இருக்கா இல்லையா...
அன்கி : இருந்துட்டு போங்க... எங்களுக்கு என்ன...
தியா : அடிங்கு... ஒருத்தி வந்துருக்கேன் என்ட்ட பேசாம பெருசா சண்ட போட போய்ட்டாளுவோ...
மிரு : சரி டி சரி டி கோசிக்காத
விஷ்வா : ம்க்கும்... அவ கோச்சிக்கிட்டாளும்...
தியா : மாமா... உனக்கு என் கிட்ட அடிவாங்காம டச் விட்டு போச்சுன்னு நினைக்கிறேன்....
மிரு : நல்லா குடு தியா... அப்பையாவது தூங்குர மூளை எந்திரிக்கிதான்னு பாப்போம்...
அன்கி : என் அண்ணன் அடிவாங்குரதுல உனக்கென்ன டி அப்டி ஒரு ஆவல்...
விஷ்வா : அதான...
மிரு : பரம்பரை பகை...
உத்ரா : எரும... இரெண்டு பேருமே ஒரே பரம்பரை தான்... இதுல பரம்பரை பகை ஒன்னு தான் கேடு... என கூற....
மிரு : ம்க்கும் உன் நொண்ணன் காசு செலவ பன்னு அலுப்பு பட்டுக்குட்டு என் குச்சி முட்டாய திருடி திண்டது தான் டி என் பரம்பரை பகை... என்ன அண்ணா... கரெக்ட் தான....
ஷியாம் : சூப்பர் செல்லம்... என ஹைஃபை அடித்து கொண்டான்....
ஏனெனில் இந்த மொத்த கூட்டமும் பிறந்ததிலிருந்தே நெருங்கிய உறவுகள்... அடித்து பிடித்து விளையாடுவது தான் இவர்களின் வேலை... அண்ணா மாமா தங்கச்சி அத்த பொண்ணு என அன்பாக இருப்பர்....
தியா : இதுங்களுக்குள்ள இப்போ கூட இந்த அடிச்சிக்குரத விடல பாரேன் டி....
உத்ரா : விட்டுட்டா தான் உலகம் அழிஞ்சிடுமே...
தியா : சரி நீ சொல்லு டி எப்டி இருக்க... பாட்டி அத்த மாமாலாம் எப்டி இருக்காங்க...
உத்ரா : எல்லாரும் நல்லா இருக்காங்க.... அங்க அத்த மாமா பாட்டி தாத்தா எல்லாரும் எப்டி இருக்காங்க...
தியா : அன் எல்லாரும் நல்லா இருக்காங்க....
உத்ரா : என்னடி படிக்கிற... இல்ல படிச்சு முடிச்சிட்டியா...
தியா : மெடிசின் டி... ஃபோர்த் இயர்... இங்க தான் அட்மிஷன் வாங்கியிருக்காங்க.... இவ்வளவு நேரம் மாற்றி மாற்றி விஷ்வா மற்றும் ஷியாமுடன் முட்டி கொண்டிருந்த அன்கியும் மிருவும் "ரியலி " என கத்தி கொண்டே இவளருகில் வந்தனர்...
உத்ரா : ஐஐ சூப்பர் டி... நாங்களும் மெடிசின் ஃபோர்த் இயர் தான்...
தியா : வாவ்... அப்போ காலேஜு..
விஷ்வா : நம்ம ஊர்ல ஒரு மெடிக்கல் காலேஜ்தான இருக்கு... அனேகமா ஒரே காலேஜா தான் இருக்கும்....
மிரு : வாவ் வாவ் என்று தன் தோழிகளை அணைத்து கொண்டாள்...
ஷியாம் :சரி வாங்க டா எல்லாரும் வீட்டுக்கு போவோம்...
மிரு :நாங்க எதுக்கோ அண்ணா நீங்க போய்ட்டு வாங்க...
ஷியாம் : அட வா மிரு மா... உன் பெரியம்மா உன்ன பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க...
தியா : வாங்க வாங்க தாத்தாவ பாத்துட்டு புல்லா என்ஜாய் பன்னலாம்.
அன்கி :ஆனா தியா அப்ப...
ஷியாம் : மாமா சித்தப்பட்ட நா பேசிக்கிறேன்.... யு காய்ஸ் ஜஸ்ட் கம் வித் மி...
விஷ்வா :சரி போகலாம் அப்பா மாமாட்ட நா பேசிக்கிறேன்...
ஷியாம் : கம் கம்... ஓய் உத்ராமா ஏன் அங்கையே நிக்கிற...
உத்ரா : அத்தான்...
ஷியாம் : சொல்லு...
உத்ரா : எனக்கு மாங்கா வேணும் அப்போதான் வருவேன்...
ஷியாம் : இன்னும் மாரலையா நீ...
உத்ரா : நீ பரிச்சு தருவியா மாட்டியா...
விஷ்வா : தங்கச்சி மா.. எனக்கிருக்குரது ஒரே மச்சான்... அவன இப்டி விஷப்பரிட்சை எழுத சொல்ரியே உனக்கு நியாயமா இல்ல...
உத்ரா : எனக்கு இருக்குரதும் ஒரே அத்தான் தான்... நா அவன்ட்ட தான் கேக்க முடியும்...
ஷியாம் :அண்ணன் தங்கச்சி இரெண்டு பேரும் சேந்துக்குட்டு என்ன வச்சு காமெடி பன்னிக்கிட்டு இருக்கீங்களா...
உத்ரா : காமெடிலாம் இல்ல... எனக்கு மாங்கா வேணும் அத்தான்...
ஷியாம் :வந்த அன்னைக்கே மாரியம்மா கிட்ட என்ன பூஜ வாங்க வைக்கனும்னு முடிவு பன்னிட்ட... சரி இரு பரிக்கிறேன்...
மிரு தியா :அப்போ எனக்கும் வேணும் டா அண்ணா...
ஷியாம் :ஓக்கே தங்கச்சிஸ்... மரத்த தேடுங்க அண்ணன் பரிக்கிறேன்... என கையை முரிக்க... அன்கியோ... " நமக்கு மாங்கா வேணும்ஜு இந்த மாங்காட்ட எப்டி கேக்குரது " என ஆலோசித்து கொண்டிருக்க.... அனைவரும் மாங்காவை தேடும் தேடல் வேட்டையில் மூழ்கியதை உறுதி செய்த ஷியாம் தானும் மாங்காவை தேடுவதை போலே அன்கி அருகில் சென்றவன் அவளுக்கு கேட்பதை போல்...
ஷியாம் : உனக்கு மாங்கா வேணாமா பொண்டாட்டி... என வினவ...
அவன் வினாவில் நிலையடைந்தவள் நிமிரவும் அவனை மிக அருகில் கண்டவள் ....காதல் நிறைந்த அக்கண்களில் அவளையும் மறந்து தொலைய தொடங்கினாள்... அவளின் இதயம் போதாக்குறைக்கு ஸ்லோ மோஷனில் துடிக்க... அவன் நெருங்க நெருங்க... அதன் துடிப்பு திக்... திக்... என துடிப்பது மெல்லிய ஓசையாய் கேட்டது... அதை இரசிக்க வேண்டுமா இல்லை தவிர்க்க வேண்டுமா என அறியாமல் அவன் கண்களுல் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தாள்...
தீரா : அடப்பாவி பயலே... ஒரு அளவில்லையாடா... அவன் அண்ணன்காரனெ அங்க தான் டா இருக்கான்... எழுந்து தொலடா....
எப்படியோ அவள் இடையில் கிள்ளி அவனே நிலைக்கும் கொண்டு வந்தான்...
அன்கி : அவ்ச்.... என கத்த.... அனைவரும் அவள் புறம் திரும்பினர்.... அவள் கத்தியதற்கு காரணமானவனோ... " இந்த மரத்துல வீடு கட்டுனா வாஸ்த்து எந்த பக்கம் பாக்கனும் " என்ற ரேஞ்சிற்கு எதையோ கணக்கு போடுவதை போல் நின்றிருந்தான்...
மிரு : என்னடி ஆச்சு...
அன்கி : ஒன்னும் இல்ல டி... ஒரு வளந்து கெட்ட எறும்பு கடிச்சிருச்சு...
உத்ரா : எறும்பு என் அத்தான் சைஸுக்கு இருக்குமா டி என கேட்க.... சட்டென திரும்பி அவளை முறைத்தாள்...
உத்ரா : ஈஈஈஈ இல்ல வளந்து கெட்ட எறும்புன்னு சொன்னல்ல... அதான்.... என இழுக்க...
அன்கி : மரியாதையா வந்துரு....
விஷ்வா : சரி வாங்க பா... ஒரு மாங்காவும் நல்லா இல்ல...
ஷியாம் : வீட்ல இருக்கும் நா தரேன் வா உத்ராமா...
உத்ரா : சரி அத்தான்...
தியா : வாங்க வாங்க போவோம்....
அங்கு காத்திருக்கும் வில்லங்கத்தை அறியாது மகிழ்ச்சியோடு நடையை கட்டினர்... புது வித உணர்வோடு செல்லும் உத்ராவின் மகிழ்ச்சி சென்று வரும் பொழுது நீடித்திருக்குமா என்பது சந்தேகமே....
அரண்மனையை அடைந்தவர்கள் உள்ளே நுழைந்திட.... அவர்களை வாயிலிலே கண்டு கொண்ட பாட்டிகள் இருவரும் அன்பாய் வரவேற்த்து உபசரித்தனர்.... அப்போது இவ்வீட்டை பல வருடம் களிந்து மீண்டும் காணுவதால் சுற்றி பார்த்து கொண்டே நடந்தாள் உத்ரா... சரியாய் அதே நேரம் ரொம்ப நேரம் அறையினிலே அடைந்து கிடக்க விரும்பாத ஆதித் வெளியே சென்று விட்டு மீண்டும் வெளியே செல்ல வேண்டி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான்.... சுற்றி சுற்றி சுழன்று கொண்டிருந்த உத்ராவின் கண்மணிகள் ஏதோ ஒன்றை லேசர் வைத்து தேடி கொண்டிருந்தது... ஆனால் அவள் கண்களுக்கு அவள் தேடியது தான் கிட்டவில்லை.... அவள் சலித்து கொண்டு திரும்பவும் மாடியிலிருந்து இறங்கி வந்த ஆதித் இவர்களை பார்க்கவும் சரியாய் இருக்க.... இருவரின் பார்வையும் நேர் கோட்டில் சந்தித்தது....
நிகழப்போவதென்ன....
உத்ரா எதை தேடுகிறாள்...
பொருத்திருந்து பார்ப்போம்....
நீ... நான்...
ஹாய் இதயங்களே.... என் ஐந்தாவது கதையை பதிப்பித்திருக்கிறேன்.... வாசித்து கருத்தை தெரிவியுங்கள்...
மீண்டும் பேய் களத்தில் இறங்கியிருக்கும் தீராவின் ஆட்டம்.. 😜
காலத்தின் மாய மரணம்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro