13 நீ... நான்...
சொல்லாமல் தீண்டிச் செல்லும் தென்றலை போல்...
உணரும் முன்... விழி கொண்டு தீண்டிச் செல்லும் உன்னை...
வாழ்வில் காணும் வரம் இன்னும் கிட்டவில்லையே...
உமக்கிருக்கும் சினத்தை எமக்காக தூக்கி எறிந்துவிட்டு
உனக்காய் காத்திருக்கும் பாவையிவளை காண வா என் அன்பே...
ரித்திக் : சரி எனக்கு சில வேலை இருக்கு நா கெளம்புரேன்...
உத்ரா : பாத்து போய்ட்டுவா அண்ணா... என கூற...
அவளருகில் வந்தவன் அவள் முடியை அமைதியாய் கோதிவிட... அவன் கையை பிடித்து தன் கண்ணத்தில் வைத்து கொண்டாள் உத்ரா...
ரித்திக் : குட்டிமா...
உத்ரா : சொல்லுண்ணா...
ரித்திக் : அண்ணன் கிட்ட எதாவது மறைக்கிரியா ...
உத்ரா : இல்ல அண்ணா... இல்ல...
ரித்திக் : அண்ணாவ உனக்கு எவ்ளோ புடிக்கும்..
உத்ரா : இந்த உலகத்த விட ரொம்ப புடிக்கும்..
தீரா ம.வ : அப்போ அவ மாமாவ இந்த பிரவஞ்சத்த விட ரொம்ப புடிக்கும்னு சொல்லுவளோ...
உத்ரா : நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அதான் உண்மை... என முனுமுனுத்தாள்...
ரித்திக் : அண்ணா எதாவது தப்பு பன்றேன்னு தோனுதா டா...
உத்ரா : நீ எதுவும் பன்ன மாட்டண்ணா... பன்னாலும் அதுல காரணமிருக்கும்...
ரித்திக் : ஹ்ம்.. சரி நா போய்ட்டு வரேன்...
உத்ரா : வாண்ணா...
மிரு :வாங்க டி தோட்டத்துக்கு போவோம்...
அன்கி : போலாமே..
உத்ரா : ம்ம் சரி வாங்க...
விஷ்வா : நானும் வரவா...
மிரு : உனக்கு வேற என்ன வேலை வா..
விஷ்வா : ம்க்கும் போடி...
.......................................................................
மெல்ல அடி எடுத்து வைத்த ஆதித் பத்து வருடமாய் திறந்திராது... தூசி படிந்து பூட்டி கிடந்த அவ்வறையின் முன் சென்று நின்றான்.... அவனின் மனம் முழுவதும் பாரம் கூட தொடங்கியது... அவ்வறையை எவ்வளவு மணி நேரம் வெறித்தானோ.... பின் ஏதோ உணர்ந்தவனாய் அதை திரும்பியும் பாராமல் அருகிலிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தான்...
அதில் நேருக்கு நேராக.... வெள்ளை நிற டீ ஷர்ட்டில் ... கறுப்பு கன்னாடி அனிந்து ... கேசம் அலைபாய்ந்திட... ஸ்டைலாய் நின்று கொண்டு கீழே பார்ப்பதை போலான ஆதித்தின் பருவ வயது புகைப்படமே அது... ஆளுயரத்திற்கு இருந்த அப்புகைப்படத்தை கண்டவன்.... அதிலிருந்த அவன் தோள் பகுதியை தன்னையும் அறியாமல் வருடினான்... பின் திடீரென தன் விரலை எடுத்தவன்... அப்புகைப்படத்தில் தோளின் பின் லேசாய் தெரிந்த ஒரு சிறு பெண்ணை விரக்த்தியாய் பார்த்தவன்... அப்புகைப்படத்தை உடைக்க போக.... திடீரென இப்புகைப்படம் அவன் தந்தை அளித்த பரிசென நினைவு வந்த முயற்சியை கை விட்டான்....
மெத்தையில் சென்றமர்ந்தவன்.... தன் கரம் கொண்டு தலையை தாங்கி யோசிக்கலானான்...
ஆதித் : எங்க வர கூடாதுன்னு நெனச்சேனோ... யார பாக்க கூடாதுன்னு நெனச்சேனோ.. எத விட்டு ஓடனும் னு நெனச்சேனோ... எல்லாம் இப்போ கண் முன்னாடி... இனி எங்க போக முடியும் என்னால.... நா ஏன் இங்க பொறக்கனும்... எனக்கெதுக்கு இந்த சாப வாழ்க்கை... என தன்னை தானே வருத்திக் கொண்ட சமயம்... அவனை வந்து தீண்டியது " ஆதன் " என்ற அழைப்பு....
அதை கேட்டதும் காரணமே இல்லாமல் கோவம் தலைக்கேறியது.... அதை காட்ட விரும்பாதவனாய் அவ்வறையிலிருந்த ஆளுயர ஜன்னலருகில் சென்று நின்றான்.... அங்கிருந்து பார்க்க மொத்த வந்தனக்குரிச்சியும் தெளிவாய் தெரியும்....
ஆதித் :நீ ஏன் டி என் வாழ்க்கைல வந்த.... நா என்ன பன்னேன் உன்ன.... நா வேணும்னு இருக்கப்ப... நீ புரிஞ்சிக்கல... நா தேவையே இல்லன்னு ஒதுங்குனதுக்கு அப்ரம் ஏன் என்ன தொரத்தி தொரத்தி வர.... உன்ன மனசுல இருந்து எப்பவோ தூக்கி எறிஞ்சிட்டான் டி இந்த ஆதித்....
அன்னப்பூரனி :ஆமா ஆமா அவன் திட்டுனதல்லாம் தூக்கி எறியத்தான் போறேன்... அவன் என் மகன்தானே...
மரகதம் :நல்லது தாயி...
அன்னப்பூரனி : சரி அத்த.... நா போய் வேலைய பாக்குறேன்... என் அண்ணன் வந்துருவாங்க...
மரகதம் : ம்ம் சரி மா...
...................
ராஜேந்திரன் : எனக்கு ஏதோ சரியா படல நாராயனா...
நாராயனன் : கவலப்படாத ராஜேந்திரா... நம்ம குடும்பவாரிசுங்கள இத்தன நாள் பிரிச்சு வச்சதே போதும்... இனிமே என்ன பிரச்சனை வந்தாலும் அவங்களே சரி பன்னிப்பாங்க...
ராஜேந்திரன் : உண்மை தான்... ஆதித்த எதுக்கும் தயார் படுத்த தேவையில்ல.... உன் செல்ல பேரன் பேத்திய தான் தயார் படுத்த காலமாய்டுச்சு...
நாராயனன் : என் செல்லங்க உன் பேரன் மாரி சின்ன புள்ளைலையே நம்ம முதிர்ச்சிய அடையல சாமி... நியாபகம் வச்சுக்க...
ராஜேந்திரன் : ஹ்ம்... நம்ம வயது அறிவு அவனுக்கு அப்பவே இருந்ததால தான் பத்து வயசுலையே குடும்பத்துல நடந்தத புரிஞ்சிட்டு பிரிஞ்சி போனான்....
நாராயனன் : அதே அறிவு தான் ராஜேந்திரா நம்ம வாரிச இன்னைவரைக்கும் உயிரோட வச்சிர்க்கு....
பிருந்தா : ஆதித்தாக்கு ஒன்னும் ஆகாது... இரெண்டு பேரும் கவலப்படாம சாப்ட வாங்க...
நாராயனன் :கொஞ்ச நேரங்களிச்சு சாப்புடுரோம் தாயி...
அம்ருதா : மாமா... சாப்புர்ர நேரத்துல சரியா உணவெடுத்துக்காததுனால தான் இப்போ இப்டி படுக்கைல கெடக்கீங்க... வாங்க சாப்ட...
நாராயனன் : சரி வரேன் புள்ள... போ போய் சாப்பாடு வை...
அம்ருதா : மாமா நீங்களும் வாங்க...
ராஜேந்திரன் : வரேன் மா...
அம்ருதா : ஏங்க... என்னங்க..
தேவராயன் : அன் சொல்லு அம்ருதா...
அம்ருதா : பசங்க எங்க...
தேவராயன் :மாடில தான் இருக்காங்க...
அம்ருதா : இல்லங்க... ஆதி மட்டும்தான் ரூம்ல படுத்துர்க்கான்... தியா ஷியாம் இரேண்டு பேரும் வீட்ல இல்ல...
தேவராயன் : விடு சுத்தி பாக்க போயிருப்பாங்க...
அம்ருதா : ம்ம்ம் சரி சாப்புட வாங்க... என அழைத்து சென்றார்....
...............................................................................
மா தோட்டம் ஒன்றில் மாங்கா கிடைக்கிறதா என தோழிகள் மூவரும் தேடியவாறு வந்து கொண்டிருந்தனர்.... அவர்கள் பின் விஷ்வா ஃபோனுக்குள் தலையை விட்டு கொண்டு வந்தான்....
மும்மரமாய் தேடி கொண்டு வந்த தோழிகளில் உத்ரா... ஒரு மாமரத்தை சுட்டி காட்ட... அதை நோக்கி மிரு உத்ரா இழுத்து கொண்டு ஓடினாள்... ஏதோ கீழே விழுந்த சத்தம் கேட்டு குனிந்து எழுந்த அன்கி... தன் தோழிகள் ஓடுவதை கண்டு இவளும் ஓடப்போக.... திடீரென அவள் கரத்தை பிடித்து பக்கவாட்டில் இழுத்தது ஒரு வலிய கரம்.... அதில் தடுமாறியவள் இழுத்தவரின் மீதே மோதி விழாமலிருக்க அவரின் சட்டை காலரை இருக்கி பிடித்து கொண்டு கண்களை மூடி கொண்டாள்.....
சிறிது நேரம் களித்தே.... தான் யாரோ ஒருவரின் கை வளைவில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து பட்டென கண்களை திறந்தவள் அதிர்ச்சிக்குள் மூழ்கி தத்தளிக்க தொடங்கினாள்.... அவன் கண்களென்னும் கடலிலிருந்து அவளை காப்பாற்றவே சொடக்கிட்டு எழுந்து நிற்க வைத்தான் ஷியாம் கார்த்திக்...
அவனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தில் ஒட்டி வைத்ததை போல் பிரதிபலித்தது.... அவள் அவனை இமைக்காது பார்த்து கொண்டிருக்க..... தன் மார்புடன் ஒன்றி நின்றவளின் அழகில் சொக்கி திலைத்த ஷியாம் அவள் நெற்றியிலிருந்து கன்னத்தில் வருடி விளையாடிக் கொண்டிருந்த கற்றை முடியை கண்டு போராமை பட்டவாறு அதை ஒதுக்கி விட்டான்.... அந்த வாய்ப்பில் அவன் விரல்கள் அவள் பஞ்சு கன்னத்தை வருட தவறவில்லை... அதில் நிலையடைந்தவள் அவனிடமிருந்து விலகவும் இயலாமல் விலகாமலிருக்கவும் இயலாமல் அவன் கண்களை காண முடியாமல் நெளிய....
ஷியாம் : ஓய் பொண்டாட்டி..... என்ற அழைப்பில் அவளை நிலைக்கு கொண்டுவந்தான் அவன்....
அன்கி : டேய் ஃப்ராடு யாரு டா நீ.... விட்ரா என்ன...
ஷியாம் : ஆஹான்.... நா யாருன்னு தெரியாதா உனக்கு...
அன்கி : ஹலோ முன்ன பின்ன தெரியாத பொண்ணு கை புடிச்சிட்டு இருக்க... தெரியாதான்னு வேற கேக்குர... எனக்கு தெரியாது டா...
ஷியாம் : ஆஹான்... இதெல்லாம் மெடம்க்கு தெரியும்.. ஆனா மாமா பொண்டாட்டின்னு கூப்ட்டது மட்டும் தெரியாது...
அன்கி : கூப்டிட்டியா... நா கவனிக்கல... மொதல்ல என்ன விடு டா... என சினுங்க...
ஷியாம் : சினுங்காத டி பொண்டாட்டி... மாமா பத்து வர்ஷம் களிச்சு பாக்குறேன்... பாவாடை சட்டையும் இரெட்ட சடையுமா திரிஞ்சிட்டு இருந்தப்பவே... என்ன ஆட்டி வச்ச... இப்போ என்ன மயக்கிட்டீயே டி... என கிரக்கமாய் கூற...
அன்கி : பொருக்கி விட்ரா...
ஷியாம் : ஆமா... பொருக்கி தான்... காதல் பொருக்கி...
அன்கி : அய்யோ விட்டு தொல டா..
ஷியாம் : ரொம்ப நடிக்காத... அப்ரம் நீ கத்த கத்த ஊருகுள்ள தூக்கிட்டு போய் உங்க அப்பன் முன்னாடியே தாலிய கட்டிடுவேன்...
அன்கி :படுபாவி.. என் அப்பாவ பத்தி பேசாத...
ஷியாம் : அப்போ நம்மள பத்தி பேசுறேன்...
அன்கி : நீ ஒரு ஆணியையும் எடுக்க வேணாம்... விடு என்னைய... என ஒரே மூச்சாக அவனை தள்ளிவிட்டு ஓட முயல... சுதாரித்து நின்ற ஷியாம் புள்ளி மானாய் தப்பி ஓட முயன்றவளின் பாவாடை கனுக்கால் வரை தூக்கி இருந்ததால் லாவகமாய் அவள் காலை பிடித்து ஓட முடியாமல் பிடித்து வைத்தான்...
ஷியாம் : இப்போ ஓடு பாக்கலாம்...
அன்கி : அய்யோ அண்ணா வரான் டா... விட்டு தொல...
ஷியாம் : அப்போ அழகா புருஷனுக்கு ஒரு உம்மா குடு..
அன்கி : தொடப்பக்கட்ட பிஞ்சிடும்....
ஷியாம் : பத்து வர்ஷம் களிச்சு பாக்குறேன் ஒன்னே ஒன்னு குடேன் டி... இல்லனா விட மட்டேன்...
அன்கி : இப்போ விட்ரியா இல்லையா நீ...
ஷியாம் : குடுக்குரியா இல்லையா நீ... என அவளை போலே கேட்க...
அன்கி : ப்லீஸ்... விடுங்க ஷியாம் மாமா... என பாவமாய் கேட்க... அவளின் மாமா என்னும் அழைப்பை பல வருடம் களித்து கேட்டதில் மெய் மறந்து நின்றவனை கண்டு... கண்ணத்திலே கிள்ளி வைத்தவள் காலை விடிவித்து கொண்டு திரும்பி பார்த்து சிரித்து கொண்டே ஓடினாள்....
இது என்னயா புது ஆட்டம்??????
நம் பெரியதுரைகளின் கவலையின் காரணம் என்ன...??
பொருத்திருந்து பார்ப்போம்...
நீ... நான்...
ஹாய் இதயங்களே... நம்ம கதை என்ன அவ்ளோட்விஸ்ட்டோடையா போகுது... ம்ம் இருக்கலாம்... நிறைய பேரு கேட்டீங்க... ஏன் இவ்ளோ ட்விஸ்ட்ன்னு... வொய் பிகாஸ்... நா கொஞ்சொ எல்லாத்தையும் இப்டி புதிராவே எழுதனும்னு பழகீட்டேன்... அத சட்டுன்னு விடவும் முடியல... து மட்டும் இல்லாம என் கதைலாம் சும்மா லவ்வா மட்டும் போச்சுன்னா யாரும் படிக்க மாட்டாங்க... கொஞ்சமாவது விருவிருப்பு வேணும்... விருவிருந்நு இல்லன்னா... படிக்கிர நீங்களே ரீடிங் லிஸ்ட்ல போட்டு போய்டுவீங்க... அதான் கொஞ்சம் மர்மமா கொண்டு போறேன்.... ஆனா கதை ஆரம்பிச்சதுல இருந்து ஒன்னு இரெண்டு ட்விஸ்ட்டு தான் பா வச்சிர்க்கேன்... ஃப்லஷ்பக் தெரியாததால உண்மைலாம் தெரியும் போநு உங்களுக்கு அதெல்லாம் ட்விஸ்ட்டா தெரியிது... அவ்ளோ தான்.... மத்தபடி... இனிமே தான் ட்விஸ்ட் கதைல அதிகமாகும்... கொஞ்ச கொஞ்மா தான்... ஒரேடியாலாம் இல்ல.. கவலப்பாதீங்க... நானும் யோசிக்கனும்ல...
எனக்கு ஒன்னு மட்டும் புரியல.... என் முதல் மூன்று கதைலையுமே மொத இருவது அத்யாயத்துக்குமே 100 200 வோட்ட தாண்லப்பா... ஆனா இது ஒரேடியா... 11 ஆவது அத்யாயத்துலையே 200 தாண்டி இன்னைக்கு 300 நிக்கிது... மாஷா அல்லாஹ்... எப்டி ப்பா.... காதல் கதைகளுக்கு மட்டும் தனி மவுசு இருக்கும் போலவே... இது தெரியாம போச்சு எனக்கு....
சரி இதயங்களே... உங்க தீரா முதல் முறையா இப்டி கதை எழுத ட்ரை பன்னி இருக்கா... நல்லா இருக்கா இல்லையா... எதாவது சொல்லுங்க... இன்னைக்கு வேற ஏதேதோ இருக்கு... ரொம்ப ஓவரா இருக்கா... இல்ல மொக்கையா இருகா... இல்ல சுமாரா இருக்கா... எதாவதுன்னா சொல்லுங்க... மாத்திக்கலாம்... நோ ப்ராப்லம்...
நகலெடுப்பதை விட்டுவிட்டு எழுத்தாளர்களுக்கு ஆதரவளியுகள்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro