12 நீ... நான்...
அந்த பரந்து விரிந்திருந்த மொத்த அரண்மனையும் நடுங்கி அடங்கியது ஆதித்தின் அத்துனை கடுங்கோபமான அலரலில்.... ஆதித் ஒன்றும் மகா சக்தி படைத்த ஹீரோவெல்லாம் இல்லை தான்.... ஆனால் அவன் கோவத்தை அடக்க... அப்படிப்பட்ட ஒரு மகாசக்தி படைத்த ஹீரோ பிறந்து வந்தாலும் முடியாத காரியமே....
எத்துனை கோவமிருப்பின் அவன் வீட்டை விட்டு செல்லவில்லை என அனைவரும் நிம்மதியடைய.... மெல்ல நிலையடைந்த அன்னப்பூரனி வெளிரி போன முகத்துடன்....
அன்னப்பூரனி : நீ சொல்லிட்டா நா உன் அம்மா இல்லன்னு ஆய்டுமா.... என்ன தா சொன்னாலூம் உன்ன பெத்து வளத்தவ நான் தான.... என கண்ணீருடன் கத்த...
அம்ருதா : அக்கா அழுகாதீங்க... அவன் கோவத்துல பேச்சீட்டு போறான்....
அன்னப்பூரனி : நீ பேசாத டி... எல்லாம் உன்னால தான்... எல்லாமே உன்னல தான்...
அம்ருதா : நா என்னக்கா பன்னேன்...
அன்ப்பூரனி : நீ ஏன் டி அவன அழச்சிட்டு போன.... என் மகன மந்திரம் போடு மயக்குனது நீ தான்... உன்னல நா இன்னைக்கு தனி மரமா நிக்கிறேன் டி... கட்டுன புருஷனும் மேல போய்ட்டாரு... மெத்த புள்ளயும் மதிக்காம ரோட்ல போற எவளோ ஒருத்தி நீ உன்ன அம்மான்னு சொல்றான் என கத்த...
அவ்ளவு தான்.... கத்தி மட்டுமே சென்ற ஆதித் கோவத்தை அடக்க இயலாது மாடியிலிருந்து விருவிருவென இறங்கி வந்து....
ஆதித் : எவ்வளவு தைரியம் இருந்துர்ந்தா என் அம்மாவ ரோட்ல போற ஒருத்தின்னு சொல்லுவ.... அவங்க என் அம்மா... என் குடும்பத்த பேசுறதுக்கு முன்னாடி என்ன கடந்துட்டு பேசு.... என அடிக்க கோவத்தில் அதிவேகத்தில் கை ஓங்கியவனின் கரம் அம்ருதாவின் " ஆதி "என்ற அலரலில் காற்றிலே நின்றது...
பயத்தில் வெளவெளத்து போன அன்னம் வலிப்பு வராத குறையாய் அவரை அடிக்க ஓங்கிய அந்த பலமான கையை பார்த்து கொண்டிருந்தர்.... அவர் மனம் வேறு... " இந்த கையால அடி வாங்கி இருந்தா ஸ்பாட் அவ்ட் தான்... அப்ரம் கருமாதி வக்க கூட எவனும் இருக்க மாட்டான் " என கூறியது...
கோவத்தில் வெறி பிடித்தவன் போல் நின்றவனருகில் வந்து கண்ணத்திலே ஓங்கி ஒரு அறை விட்டார் அம்ருதா.. உடனே ஷியாம்மும் தியாவும் அம்மா என கத்தினர்.... ஆதித் அவர்களை கையுயர்த்தி அமைதியாக்கினான்....
அம்ருதா : யாரு டா உனக்கு சொல்லி கொடுத்தது பெரியவங்கள அறையிரத... வயசுக்கு மீறுனவங்கள திட்டுனதும் இல்லாம அடிக்க வேற செய்ர... உன்ன அப்டியா டா நா வளத்தேன்...
ஆதித் : மா அவங்க என்ன சொன்னாங்கன்னு கவனிச்சியா இல்லையா நீ...
அம்ருதா : அவங்க சொன்னதுல என்னடா தப்பிருக்கு.... அன்.. என்ன தப்பிருக்கு.... ஆயிரம் தா சொன்னாளும்... நா உன் வளர்த்த அம்மா தான டா...
அதித் : மா.....
அம்ருதா : கத்தாத.... சொல்லு.... ஆயிரந்தா இருந்தாலும் நா உன்ன பெத்தவ இல்ல தான டா...நீ சொன்னா மட்டும் அவங்க உன் அம்மா இல்லன்னு ஆய்டுமா...
ஆதித் : மா.... பத்து மாசம் பெத்துட்டா மட்டும் அம்மா ஆய்ட முடியாது.... பலர் பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தைய தொலைச்சிட்டு.. 50 வர்ஷம் களிச்சு அவங்களுக்கு பல குழந்தைங்க இருந்தலும் அந்த தொலைஞ்சு போன குழந்தையோட நினைவு அவங்கள விட்டு போகாத... இதா இயற்கையாவே எல்லா தாயோட உணர்வும்... ஆனா இவங்களுக்கு அப்டி இல்ல..... 20 வர்ஷம் என்ன தொலச்சிட்டு பேருக்கு புள்ள புள்ளன்னு சொல்லிட்டு திரியிராங்க.... அப்டி இருக்கப்ப.... நா பொறந்து 20 வர்ஷம் என்ன வளர்த்து... நாழு வர்ஷம் என்ன தேடிதவிச்சு பத்து மாசம் சுமக்காமையே... 26 வருஷமா மனுசுல சுமக்குர நீ தான் எனக்கு முக்கியம்.... என மனதில் பசுமரத்தாணியை போல் அடித்து கூறினான்.....
அவனின் பதில் இது போன்து தான் இருக்குமென்பதை முன்பே உணர்ந்த அந்த தாய் கண்ணீருடன்....
அம்ருதா : ஆதி... என்ன இருந்தாலும் நா உன்ன பெத்தவ இல்ல டா...
ஆதித் : ஏன் மா அதுலைலே இருக்க.... இதே ஊர்ல பல காலத்துக் முன்னாடி பெத்த குழந்தைய கள்ளிப்பால் கொடுத்து கொல்ர பழக்கம் இருந்துச்சுல்ல... இங்க மட்டும் இல்ல... எல்லா இடத்துலையும் இருந்துச்சு.... ஏன் இன்னமும் கூட... பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தைய பிஞ்சுனு கூட பாக்காம குப்பத்தொட்டியிலையோ... குளக்கரைலையோ... ஆஷ்ரமத்திலையோ போட்டுட்டு போர பல தாய் இருக்காங்க... அவங்கள மாரி தான் இவங்களும்... ஆனா அவங்க கூட விட்டுட்டு போன குழந்தைய நினைச்சு கவலப்படுவாங்க.... ஆனா இவங்க இல்லவே இல்ல... என அமிலமாய் வந்தது அவனின் வார்த்தைகள்....
அன்னப்பூரனி : எப்டி பாத்தாலும் அவ அடுத்த வீட்டுக்காரி தான....
ஆதித் : நிறுத்துரீங்களா... திரும்ப அறைய எனக்கு நேரம் எடுக்காது.... எனக்கு இந்த வீட்ல எவ்ளோ உரிமை இருக்கோ... அதே உரிமை என் குடும்பத்துக்கும் இருக்கு....
நாராயணன் : ஆதித்தா... நீ எதுக்கும் அசராத குணம்னு எனக்கு தெரியும் டா.... என் மகன் தேவராயனும்... என் மருமக அம்ருதாவும்.... என் தம்பி ராஜேந்திரனும் அவன் பொஞ்சாதியும்... என் பேரன் பேத்தியும் இங்க தான் எப்பொவுமே இருப்பாங்க.... என்று என் உறவு என்பதில் அழுத்தி கூறினார்....
அப்போது திடீரென அன்னம் அதிர்ச்சியுடன்...
அன்னம் : அப்போ வாங்குகுன அட்மிஷன் சீட்டூ...
மரகதம் பாட்டி : எங்க பேத்தி தியாக்கு தான்... என முன்பே இனி இங்கு தான் வழ்க்கை என மொத்த குடும்பமும் திட்டம் போட்டதாய் தெளிய வைத்தார் பாட்டி....
தியா : ஹய்யா ஜாலி.. இனிமே இந்த சொர்கத்த விட்டு போக தேவையில்ல.... யாஹு... என மாடி படி பக்கம் ஓடினாள்.... ஷியாமும் அவளுடன் இணைந்து கொண்டான்... ஆதி அம்ருதாவின் கட்டளைக்கு இணங்க அவன் அறையை நோக்கி நகர்ந்தான்.....
தீரா : ஹப்பா.... வாங்க இத்த மொத்த குடும்பத்த பத்தியும் இப்ப விவரிக்கிறேன்....
அண்ணன் நாராயனதுரை தம்பி ராஜேந்திர துரை.... இவர்ககளின் குடும்பம் பரம்பரை பரம்பராய் வந்தனக்குரிச்சியில் ஜமீந்தார் குடும்பமாக இருந்து வருகின்றனர்... இக்குடும்பத்தில் ஒரு வளக்கமும் உண்டு... இரு ஆண் பிள்ளையெனில்.. ஒருவர் ஜமீன்தார் மற்றும் ஊர் பொருப்பிற்கும்... மற்றவர் குடும்ப தொழிலுக்கும் வெளி உலகிற்கும் பொருப்பாவர்...
அந்த வகையில் முதலாமவர் நாராயனன் ஜமீந்தார் பொருப்பிற்கும் இளையவர் ராஜேந்திரன் தொழில் பொருப்பிற்கும் தேர்வு செய்யப்பட்டனர்.... இருவரும் முழு மனதோடு போட்டி பகையின்றி அவரவர் பதவியை ஏற்றனர்...
நாராயனன் மற்றும் மரகதம் தம்பிதற்கு திருமணம் நடந்து அவர்களுக்கு தங்கதுரை பிறந்தார்.... ராஜேந்திரன் மற்றும் பிருந்தாவிற்கு திருமணம் நடந்து தேவராயதுரை பிறந்தார்....
இவ்விருவரிலும் யாரை தேர்வு செய்ய வேண்டுமென அவர்களை கேட்டே முடிவு செய்ய சொல்ல அண்ணன் தம்பி இருவரும் மாற்றி மாற்றி அலோசித்து.... வருடா வருடம் மாறி கொள்ளலாம் என முடிவெடுத்தனர்....
அதன் பின் தங்கதுரைக்கு அன்னப்பூரனி திருமணம் செய்து வைக்கப்பட்டார்....
தீரா : இத சொன்னா நம்ம ஹீரோ என்ன உசுரோடையே பொதச்சிருவான்.... உங்களுக்கே புரிஞ்சிருக்கும்...
அடுத்த ஒரு வருடத்தில் தேவராயன் மற்றும் அம்ருதாவிற்கு திருமணம் நடந்தது..... தேவராயன் மற்றும் அம்ருதாவிற்கு ஆதித் பிறந்த இரண்டாவது வருடம் ஷியாம் பிறந்தான்.... அடுத்து தியா பிறந்தாள்....
இம்மூவரை வளர்ப்பது தான் அம்ருதாவின் தலையாய கடமை.... பாட்டிகள் இருவருக்கும் பேரப்பிள்ளைகளென்றால் உயிர்... பொத்தி பொத்தி வளர்த்தனர்....
தீரா : இப்பதிக்கு இது போதும்....
--------------------------------------------------------
தான் ஏதோ ஒரு குளத்தில் முழுகுவதை உணர்ந்து அவள் தத்தளிக்க.... அப்போது வேங்கையென நீந்தி வந்தவன் அவளை தாங்க கரை சேர்க்க.... அவன் முகம் காணும் முன் அனைத்தும் மங்களாக.... யாரோ அவள்தலையில் திடீரென அடிக்க.... படபடப்புடன் சட்டென எழுந்தாள் உத்ரா.... அவளை சுற்றி எவரும் இல்லை.... கதவும் பத்தாதற்கு பூட்டப்பட்டிருக்க... பின்னே கனவென உணர்ந்து புறங்கையால் தன் முகத்தில் பூத்திருந்த வேர்வை முத்துக்களை துடைத்தாள்....
உத்ரா : கனவு தான் லூசு... ஏன் பயப்புட்ர.... சரி வா வெளிய போவோம்... என அவளிடமே பேசியவாறு அறையை விட்டு வெளியேறினாள்.... அங்கோ மொத்த குடும்பமும் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தது.... அவர்கள் அனைவரையும் கண்டு அழகாய் கண்களை விரித்து..... அவர்களுடன் ஓடி சென்று இணைந்து கொண்டாள்....
அனைவரும் அவளையும் நலம் விசாரித்து விட்டு அரட்டையை துவங்க.... தோழிகள் உத்ராவின் மாற்றத்தை கவனிக்காமல் இல்லை.... இத்துனை நாள் இல்லாத மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது.... ரித்திக்கின் வரவினால் தான் இந்த மகிழ்ச்சி என்று நினைத்து கொண்டனர்.... ஆனால் மகிழ்ச்சியாய் இருப்பவளோ அதர்கான காரணத்தை யூகிக்க கூட முயலவில்லை... வேறொருவன் அவ்வேலையில் மூழ்கியிருந்தான்...
விவ்ஷா : உத்ரா குட்டி..
உத்ரா : சொல்லுண்ணா...
விஷ்வா : இன்னைக்கென்ன உன் முகம் என்னைக்கும் இல்லாம ப்ரைட்டா இருக்கு...
அன்கி : என்னைக்கு டா அவ பேசு டார்க்கா இருந்துச்சு... இன்னைக்கு ப்ரைட்டாக...
ரித்திக் : அதான...
விஷ்வா : நீ மூடு... எனக்கு தெரியாதா என் தங்கச்சி முகத்த பத்தி ...
மிரு : அதான் தெரியாதே.... என இடையில் புகுர... அவளை அவன் முறைக்கவும்... தலையை மறு பக்கம் திருப்பி கொண்டாள்..
உத்ரா : அப்டிலாம் ஒன்னும் இல்ல அண்ணா...
விஷ்வா : ஏதோ சொல்ற... நானும் நம்புறேன்...
அன்கி : ஆமா நீ உன் ஃப்ரெண்ட்ஸ பாக்க போல...
விஷ்வா : நா நேத்து தான வந்தேன்... எங்க போகுறது....
மிரு : ம்ம்ம் ஆமா காலைல ஜெமிந்தார் வீட்டுல கூட்டமா இருந்துச்சே... ஏன்...
அன்கி : நைட்டு தாத்தாக்கு ஹார்ட் அட்டக் வந்துருச்சாம்...
விஷ்வா : என்னடி சொல்ற...
அன்கி : ஆமா ஊர்ல பேசிக்கிட்டாங்களே உனக்கு தெரியாதா...
ரித்திக் :தெரியாதே...
அன்கி : ஆனா இப்போ ஓக்கே.... வீட்டுக்கு அழச்சிட்டு வந்துட்டாங்க...
உத்ரா : வந்துட்டாங்கன்னா... என்ன அர்த்தம்.... பாட்டி மட்டும் தனியாவா... எப்டியும் பெரிய ஊட்டம்மா உதவியிருக்க மாட்டாங்களே...
அன்கி : இல்ல டி... சென்னைல இருந்து சின்ன தாத்தா வந்தாக... அவங்க தான் உதவுனது...
மிரு : அட அப்டியா... நல்லது தான்....
ரித்திக் : என்ன அன்கி... திடீர்னு அமைதியாய்ட்ட...
அன்கி : அப்டிலா இல்லையே அண்ணா... அவ தான் அப்போலேந்தே அமைதியா இருக்கா... என உத்ராவை சுட்டி காட்ட...
உத்ரா : அப்டிலாம் இல்ல... எனக்கு எனக்கு...
அன்கி : உனக்கென்ன பல்லு வலியா... என அவள் சொல்ல வந்ததை கூற... அவளோ முளிக்க.... சகோதரன்கள் இருவரும் அவள் முளிப்பதை கண்டு வாய் விட்டு சிரித்தனர்....
உத்ரா : அதெல்லா ஓக்கே... நா எப்போ எப்டி வீட்டுக்கு வந்தேன்...
ரித்திக் : நீ கன்னாமூச்சி விளையாடுரேன்னு பக்கத்து ஊரு காட்டுக்கு போய்ட்ட...வெயிலடிக்கவும் காலைல சாப்டாதால மயங்கி விழுந்துட்ட... நல்லவேளையா ந்த நேரத்துல உன்ன தேடி நா அங்க வந்தேன்...
விஷ்வா : இல்லனா என்ன ஆகுரது... இனிமே தனியா எங்கையாவது போய் பாரு அப்போ இருக்கு... உனக்கு...
உத்ரா : கூல் கூல் பாசமலர்களே... இனிமே எங்கையும் தனியா போக மாட்டேன்...
அன்கி : கூடவே தான்... நாங்க இருக்கோமே...
விஷ்வா : அதான் சனி விடமாட்டுது...
மிரு : எருமைகடா... என முதுகிலே போட்டு நங்கு நங்கென குத்தி கீழே தள்ளி விட்டுவிட்டாள்....
ஆதித்தின் கோவத்திற்கு காரணமென்ன...???
அன்னப்பூரனி ஆதித்தை ஏன் திடீரென அரவனைக்க வேண்டும்...???
பொருத்திருந்து பார்ப்போம்....
நீ... நான்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro