11 நீ... நான்...
முகத்தில் முத்து முத்தாய் வேர்வை வேர்த்திருக்க... பல வருடம் இல்லாத நிம்மதி உணர்வு வதனத்தில் தாண்டவமாட... அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள் உத்ரா.... அவளின் அறையை விட்டு வெளியேறிய ரித்திக் அவன் சித்தப்பா சித்தி மற்றும் பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தான்...
கார்த்திகா : என்னாச்சு பா... உத்ராக்கு என்ன ஆச்சு...
ரித்திக் : ஒன்னும் இல்ல சித்தி... காலைல சும்மா கண்ணாமூச்சி விளையாடலாம்னு போயிருக்கா... சாப்டாம இருந்ததால மயங்கி விழுந்துட்டா... நா தான் தூக்கிட்டு வந்து படுக்க வச்சேன்...
ராமானுஜம் : சொல்லாம போ மாட்டாளே ப்பா...
ரித்திக் : நீங்க தூங்கிக்கிட்டு இருந்தீங்களேன்னு போய்ர்க்கா சித்தப்பா...
குமரி : ம்ம்ம் சரி நீ எப்போ வந்த... ஒன்ற வர்ஷமா கூப்ட்டதுக்கு... வர மாட்டேன்னு முருக்கிக்கிட்டு நின்ன....
ரித்திக் : அதுவா ஸ்வீட்டி... என் கம்பெனில புது ஆளு கிடைச்சிடுச்சுன்னு என்ன தொறத்தி விட்டுட்டாங்க...
குமரி : இந்த காலத்து புள்ளைங்களுக்குலாம் இந்த மாரி வேணும்ங்குரவர நிக்கிறீங்க... அது தூரம் போனதும் வந்துரீங்க.. நீயும் ஒரு காலத்துல காதலி வேணும்னு எங்களல்லாம் விட்டுட்டு போய் நிப்ப... அவ வேணாம்னு போனதும்... எங்கள தேடி தேவதாஸ் மாரி வந்து நிப்ப... என நொடித்து கொண்டார்...
ரித்திக் : ரொம்ப வாய் தான் பாட்டி உனக்கு... நா என்ன சொல்றேன்... நீ வேற ட்ரக் போட்டு போய்ட்ட...
பாட்டி : ம்க்கும் போடா... எனக்கெல்லாம் நல்ல வாய் தான்...
ராமானுஜம் : மா சும்மா இருங்க... ஏன் தம்பி வன்ட்ட... புடிச்ச வேலை தான...
ரித்திக் : சும்மா சொன்னேன் சித்தப்பா... புடிச்ச வேலை தான்... அங்கையே இருக்க இருக்க என்ன புடிச்சவங்கலல்லாம் இழந்துடுவேன் போல.... அதான் வேலைய விட்டுட்டு வந்துட்டேன்....
தீரா : என்னாமா சமாளிக்கிறான் இவன்....
கார்த்திகா : ஹ்ம்... வந்ததும் அம்மாவ பாத்தியா இல்லையா... அக்கா மகன் வந்துட்டான்னு உடனே ஃபோன் பன்னீர்ப்பாங்களே....
" ம்க்கும் இவன் வந்து பாத்துட்டாளும் " என சலித்து கொண்டே உள்ளே நுழைந்தார் ரித்விக்கின் தாயார் அம்புஜம்....
ராஜப்பன் ராமானுஜம் மற்றும் ராஜசெல்வன் மூவரும் சகோதரர்கள்...
ராஜப்பன் ... அவரின் மனைவி அம்புஜம்... இவர்களின் ஒரே மகன் ரித்திக் ராவ்... ராஜப்பன் சில வருடம் முன்பே விபத்தினால் உயிர் நீத்தார்... தன் அன்பு மகனை கடினப்பட்டு சமுதாயத்தில் தனி மனுஷியாய் நின்று வளர்த்து ஆளாக்கினார்...
ராமானுஜம் கார்த்திகா தேவி அவர்களின் ஒரே மகள் நம் நாயகி உத்ரா...
ராஜசெல்வன் மற்றும் பார்கவி அவர்களின் முதல் மகன் விஷ்வமித்ரன்... மகள் அன்கிதா....
சகோதரர்கள் மூவருக்கும் ஒரு தங்கை இருக்கிறார்.... அவர் அத்திகை... அவர் கணவர் வேலன்... அவர்களின் ஒரே மகள் மிருனாளினி....
ராமானுஜம் : வாங்க அண்ணி...
குமரி : வா மா
அம்புஜம் : ம்ம் வரேனன் தம்பி... வரேன் அத்த...
ரித்திக் : ஹாய் மை டியர் செல்லமே...
அம்புஜம் : படவா ஓடி போய்டு... அப்ரம் சூடு வச்சிருவேன்...
ரித்திக் : மம்மி... என பாவமாய் முகத்தை வைத்து உடத்தை பிதுக்க...
அம்புஜம் : போடா அந்த பக்கம்... நா உன் மேல கோவம்...
கார்த்திகா : நீ இங்க வா மகனே... உன் அம்மாக்காரி கோவமா இருக்காலாம்... என அழைக்க...
ரித்திக் :வந்துட்டேன்... என அவரின் அருகில் சென்று அணைத்து கொண்டான்....
அம்புஜம் : ம்ஹும்... நீயே உன் மகன கொஞ்சு...
ரித்திக் : சித்தி பசிக்கிது...
கார்த்திகா : உன் ஆத்தாக்காரி சாப்பாடு கூடவா குடுக்கல... நீ வாடா தங்கம் நா சாப்பாடு குடுக்குறேன்...
ரித்திக் : வா சித்தி போவோம்...
அம்புஜம் : ம்ம்ம் அப்டியே இடுப்புல வச்சு தூக்கிட்டு போ...
கார்த்திகா : ம்ம்க்கும் நீ வா மகனே... என அவனை அழைத்து கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு சென்றார்...
ராமானுஜமும் குமரி பாட்டியும் அக்கா தங்கையின் நடுவில் நடக்கும் சம்பாஷனைகளை கண்டு சிரித்து கொண்டிருந்தனர்....
அப்போது சரியாக.... அப்பா என கூக்குரலிட்டவாறே உள்ளே நுழைந்தாள் அன்கிதா... அவளருகில் அவளை போலவே பறபறப்பாக ஓடோடி வந்தாள் மிருனாளினி ....
அம்புஜம் : ஏன் டி ஏன் இப்டி கத்திக்கிட்டே வர...
மிரு : எங்க அத்த உத்ரா...
குமரி : ஏன் டி சிருக்கிங்களா... காலங்காத்தால ஊர சுத்திட்டு இப்போ அவ எங்கன்னு வந்து கேக்குறீங்க...
அன்கி : அட பதில் சொல்லு பாட்டி... நெர்வசா இருக்குல்ல...
குமரி : என்னது
மிரு : பாட்டி வல வலன்னு இழுக்காம உன் பேத்தி எங்கன்னு சொல்லு...
குமரி பாட்டி : உன் அம்மா ரொம்ப இடம் கொடுத்து வளத்துட்டா டி...
மிரு : என் அம்மாவ நீ தான வளத்த... அப்போ நா உன்ன சொல்லவா...
குமரி பாட்டி : வாயாடி...
அன்கி : பாட்டி.... சொல்ல போறியா இல்லையா...
கார்த்திகா : ஏன் டி இந்த கத்து கத்துறீங்க... என் புள்ளங்க சாப்ட்டுக்குட்டு இருக்கானுங்கல்ல...
மிரு : புள்ளைங்களா...ரித்திக் மாமா மட்டும் தான வீட்டுல இருந்துச்சு... இன்னோன்னு யாரு...
கார்த்திகா : என் இளைய மவன் விஷ்வா தான்... என நகர்ந்து நிற்க.... அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாய் அப்பளத்தை நொருக்கி கொண்டு உண்ணுவது தெரிய...
அன்கி : டேய் அண்ணா... நாங்க இங்க வரும் போது அங்க தான டா இருந்த... எப்டி டா எங்களுக்கு முன்னாடி வந்த...
மிரு : செவுரேறி வந்துருப்பான் டி உன் நொண்ணன்...
விஷ்வா :கரெக்ட்டா கண்டுப்புடிச்சிட்ட டி... என சாப்பிட்டு கொண்டே கத்தினான்...
அம்புஜன் : சாப்புடு டா... கத்திக்கிட்டு....
விஷ்வா : ஓக்கே மம்மி.. என உணவில் கவனத்தை செழுத்தினான்....
மிரு : சொல்பப்போறீங்களா இல்லையா...
ராமானுஜம் : ஏன்டா ஆவேசமாவுர... போ அறையில தா நித்திரைல இருக்கா...
அன்கி : தூங்குரான்னு முன்னாடியே சொல்லலாம்ல ப்பா...
ராமானுஜம் : எங்கமா அப்பாவ சொல்லவீட்டீங்க...
இருவரும் : ஈஈஈ கரெக்ட் தான்....
கார்த்திகா : சரி வாங்க டி சாப்ட....
இருவரும் : வந்துட்டோம்.....
---------------------------------------------------------
நிற்கவும் நேரமில்லாமல் நில்லாமல் ஓடிக் கொண்டே இருந்த நம் ஆதித்தனின் இதயமும் வண்டியும் ஒரே சேர... அந்த அரண்மனையின் முன் சென்று அமைதியானது.... அவன் சட்டை முழுவதும் வேர்வையினால் ஈரமாகியிருக்க.... முகத்தில் வேர்வை வீற்றிருந்தும் சோர் உராமல் வந்து நின்றவனை அவ்வரண்மனையில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் சற்று நின்று அதிர்ச்சியோடு ஆராய்ந்தனர்.... பதினாறு வருடம் முன் இதே வீட்டை விட்டு கைகளில் இரத்தம் சொட்ட சொட்ட.... அவனை சுற்றி ஓடிய பலரையும் காணாது தான் பிடித்த பிடியில் கண் காணா தேசம் சென்றவன் இன்று நினைத்து பார்க்காத மாற்றத்துடனும்... ஆணழகனாய் மீண்டும் அவனை காண்போமா என்று நினைத்த அனைவரின் கண்களுக்கும் விருந்தாகி போனான் .....
எவரையூம் கவனிக்காது முன்னேறி நடந்தவன் தன் மனதில் அலைமோதும் கட்டுக்கடங்கா ஆத்திரங்களை கை விட்டிராது... எவ்வீட்டிற்கு வரகூடாதென நினைத்தானோ அதே வீட்டிற்கு அவன் இக்கட்டான சூழ்நிலை வந்து நிறுத்தியதை நினைத்து பார்த்தான்....
அவன் கண்கள் தீக்கனலாய் கொழுந்து விட்டெரிந்தது.... எதையும் வெளி காட்டி கொள்ளாதவன் அவ்வீட்டினில் நுழைய..... அனைவரும் அங்கு கூடி நிற்க.... இவனை கண்டு கொண்ட ராஜேந்திரன் தாத்தா இவன் புறம் திரும்ப.... அனைவரும் அவர் திரும்பும் புறமே திரும்ப... அங்கே உணர்ச்சி துடைத்த வதனத்துடன் கட்டு கோப்பாய் நிமிர்ந்த நின்றவன கண்டு அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் பிரம்மிப்பிலும் அபார மகிழ்ச்சியிலும் திலைத்தது அந்த முதிய தம்பதி....
" ஐயா " என கத்தி கொண்டே ஓடோடி வந்தார் படுக்கையில் மாரடைப்பினால் வீழ்ந்து கிடந்த ஜமீந்தார் நாராயண துரையின் மனையாள் மரகதம்..
மரகதம் : இத்தன காலமா எங்கையா போன... இங்க உனக்காக உசுர கைல புடிச்சிட்டு கெடக்கவள பாக்க உனக்கு இப்போதா நாளி கெடச்சிதா.... ஏன் யா என்ன விட்டு போன.... என கதறி அழ......
" பாட்டி " என்று தேனாய் தூவி அவரை அமைதி படுத்தினான்....
இவ்வழைப்பிற்காய் அவர் எத்துனை ஆண்டு ஏங்கி தவித்திருக்கிறார்.... எண்ணிலடங்கா மகிழ்ச்சியோடு அவனை கட்டி கொண்டு அழுது தீர்த்தார்.... அவரை சமாதானம் செய்தவன் பார்வையை சுழல விட.... படுக்கையில் சாய்ந்து தன் கம்பீரம் விட்டுவிடாது அமர்ந்திருந்த நாராயனன் தாத்தா இவனை அமைதியாய் எந்த உணர்வையும் வெளிக்காட்டாது நோக்குவதை கண்டவன் அப்படியே நிற்க.... நம் நாயகன் மட்டும் சலைத்தவனா என்ன.... அவருக்கு மேல் சென்று அவன் முகத்தில் எந்த அசைவும் இல்லாமல் நின்றான்.... அதை காண பொருக்காதவர்.... வா என சைகையால் அழைத்தார்....
ஓரிரு நொடி அப்படியே நின்றவன் பின் மருக்காமல் அவர் அருகில் சென்று அமர்ந்தான்.... அவரின் அதே நிமிர்த்தல் அவன் முகத்தில் இரு மடங்கு அதிகமாய் பிரதிபலித்தது.... அவனை அணைத்து கொண்டவர் தோலோடு சாய்த்து முதுகில் தட்டி கொடுத்தார்.... அதற்காக காத்திருந்தானோ என்னவோ... இமை மூடி அமைதியாய் அதை ஏற்றான்...
மற்ற அனைவரும் அதை நிம்மதியோடு கண்டு களித்தனர்... அப்போது சரியாக அந்நிம்மதியை குளைப்பதற்காகவே வரவளித்தார் அன்னப்பூரனி...
அன்னப்பூரனி : ராசா.... வந்துட்டியா பா... எப்டி யா இருக்க.... நல்லா வளந்துட்டியே... சரியா சாப்புர்ரியா... வேலைக்கு போரியா.... என தாத்தாவை அணைத்து கொண்டு அமர்ந்திருந்தவன பிடித்து இழுத்து கேள்வி கனைகளை அடுக்கினார்....
அவர் வரவை அனைவரும் வெறுத்தாலும் பெரியவர்கள் அதை முகத்தில் காட்டாது அமர்ந்திருக்க... நம் தியாவும் ஷியாமும் அதெற்கெனவே பிறந்ததை போல் அன்னப்பூரனியை அஷ்டகோனலாய் முகத்தை வைத்து பார்த்து கொண்டிருந்தனர்....
அவர் கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் அவரை ஏதோ அர்த்தம் பொருந்திய பார்வையுடன் அமைதியாய் பார்த்து கொண்டிருந்தான் ஆதித்... அவன் கண்கள் ஏனோ... " இவன் பொருமையை பிடித்து வைத்திருக்கிறேன்... இவன் காதை அடைத்து விடுங்கள் காதுக்குள் இவர் வார்த்தைகள் தப்பித்தவறியேனும் சென்றால் என் கதியையும் சேர்த்து நம் அனைவரின் கதியும் அதோ கதி தான் " என அவன் மனம் கூறுவதை போல் பிரதபிலத்திக் கொண்டிருந்தது....
அம்ருதாவோ உலகில் உள்ள எல்லா இறைவனையும் துணைக்கு அழைத்து கொண்டிருந்தார்.... அவர் மகன் கோவப்படக்கூடாதென.... ஆனால் இறைவன் தான் முன்பே இப்படித்தான் என முடிவெடுத்துவிட்டாரே... பின் அப்லிக்கேஷன் போட்டு என்ன பிரயோஜனம் ....
அனைவரும் எதிர்பார்த்ததை போலே இழுத்து பிடித்திருந்த ஆதித்தின் பொருமை அன்னப்பூரனியின் அடுத்த கூற்றில் மொத்தமாய் பிரிந்தது...
அன்னப்பூரனி : என்னப்பா.... எவ்ளோ கேள்வி கேட்டுட்டு இருக்கேன்.... ஒன்னுத்துக்கும் பதில் சொல்ல மாற்ற.... உன்ன பெத்த இந்த அம்மாவ தேடி வர உனக்கு இத்தன வர்ஷமா....
அவ்வளவு தான் அனைவரும் கண்களில் கை வைத்து மூடி கொண்டனர்.... ஆதித்தின் கண்கள் ரௌத்திரத்தில் பொங்கி வலிய.... ஒரு நொடி அன்னப்பூரனிக்கே பயத்தில் உடல் நடுங்கியது.... அவன் முதலில் பேசாது அமைதியை கடைப்பிடிக்க முயல...
அன்னப்பூரனி : என்னப்பா அம்மாவ பாத்ததும் பேச்சு வரலையா....
அவ்வளவு தான்.... அங்கே ஆரம்பித்தது மைக்கே இல்லாத ஆதித்தின் மிக பயங்கரமான கோப போராட்டம்...
ஆதித் : வில் யு ஷட் அப்.... நா ஒன்னும் உங்க மகன் இல்ல.... ஐம் ஆதித்தன்.... தட்ஸ் இட்... எத்துனை முறை சொல்லீர்க்கேன்.... டோன்ட் எவர் ட்ரை டு டேக் அட்வான்ட்டேஜ் இன் மி.... என் அம்மா பேரு அம்ருதா ... அப்பா தேவராயன்... அவ்ளோ தான்... புரிஞ்சிதா.... என அவ்வரண்மனையே அதிரும் அளவு கத்தி விட்டு விருட்டென மாடி ஏறி சென்றான்.....
ஆதியின் தாய் யார்...
ஆதியிற்கும் வந்தனக்குரிச்சி ஜமீந்தாருக்கும் என்ன சம்மந்தம்....
பொருத்திருந்து பர்ப்போம்...
நீ... நான்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro