09 நீ... நான்...
சென்னையில் AR MEGA SITE இல் தரையிறங்கியது ஆதித்தின் விமானம்.... அதிலிருந்து விரைந்து இறங்கிய ஆதித்... அவனின் பல பைக்குகளில் நடுவில் அடைப்பட்டிருந்தத ஒரு ராயல் என்ஃபீல்டை எடுத்தவன்... தொழில்களை இங்கே மூட்டை கட்டி போட்டு விட்டு அவன் வீட்டை நோக்கி பறந்தான்....
அங்கே.... ஒரு வெள்ளை நிற வணில் பாட்டி விடியாத முகத்துடன் சாய்ந்து அமர்ந்திருக்க.... முகத்தில் பிராகசமில்லாது துணி மணிகள் அனைத்தையும் கண்ணீருடன் பெட்டியில் மடித்து வைத்து கொண்டிருந்தார் அம்ருதா.... தேவராயன் பறபறப்பாய் போனில் அழைபப்பு வருகிறதா என்று பார்த்து கொண்டிருந்தார்...
வீட்டின் மொட்டை மாடியில் நின்று நடப்பதை பார்த்து கொண்டு நின்றிருந்தாள் தியா.... அவள் கண்ணின் ஓரம் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது... அவளை தேடி மேலே வந்த ஷியாம் தன்னந்தனியாய் நின்ற தன் தங்கையின் தோள் மீது கை வைத்தான்... மெல்ல திரும்பி பார்த்தவள் மீண்டும் விண்ணை வெறிக்க தொடங்கினாள்....
ஷியாம் : தியா...
தியா : நாம பன்னது சரியா அண்ணா...
ஷியாம் : ஏன் டா இப்டி கேக்குர...
தியா : ஆது அண்ணாக்கு நாம செஞ்சது சரியா... எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு...
ஷியாம் : நீ ஏன் தியா தப்பா யோசிக்கிற...
தியா : எனக்கு அப்போ என்ன நடந்துச்சுன்னு தெரியாது தான் அண்ணா... ஆனா ஆது அண்ணா கஷ்டப்படும் போது கூட இருந்து நா பாத்துர்க்கேன்.... பத்து வருஷம் போயிருந்தாலும் இன்னுமே அதையெல்லாம் அண்ணன் மறக்கலன்னு எனக்கும் தெரியும்...
ஷியாம் : ம்ம்ம் உண்மை தான்... அண்ணனால எதையுமே மறக்க முடியல... மறந்த மாரி நெனச்சிட்டு இருக்கான்...
தியா : நம்ம கூடையும் இருக்க முடியாம நாழு வர்ஷமா லண்டன் ல தனி மரமா இருக்குரவனுக்கு எவ்ளோ கஷ்டம்னு இதுலையே புரியிது... நாம அவன தானாவே சரி பன்னி இங்க வரவைக்கனும்னு நெனச்சோம்... ஆனா சிரிப்ப மறந்த அதே ஆதித்தன் தான அண்ணா இன்னைக்கு ஊருக்கு வரப்போறான்...
ஷியாம் : வேற வழி இல்ல டா... இங்க நடக்குரது எதையும் நம்மலாள மாத்த முடியாது... அதுக்குன்னு இறைவன் யாரையாவது அனுப்பி வச்சிர்ப்பான்... அவங்களுக்காக காத்திருப்போம்...
தியா : டேய் அண்ணா... ஆது அண்ணாக்கு உண்மை தெரிஞ்சா நம்ம நிலமை என்ன ஆகுரது...
ஷியாம் : ஒன்னும் ஆகாது... முன்னாடி ப்லன் பன்னோம் தான்... எதாவது சொல்லி அவன வரவச்சு பாட்டி கிட்ட கூட்டீட்டு போய்டலாம்னு... ஆனா நாம ப்லன ஆரம்பிக்கிரதுக்கு முன்னாடியே இறைவன் திட்டம் தீட்டீட்டாரு விடு...
தியா : ம்ம்ம் எல்லாம் சரி தான்... ஆனா எனக்கு குற்றஉணர்ச்சியா இருக்கு டா அண்ணா...
" நீ எதுக்கு தியாகுட்டி உன்னையே ப்லேம் பன்னக்கிற " என்ற குரலை கேட்ட இருவரும் விழி விரித்து அதிர்ச்சியில் திரும்பி நோக்க.... மாடி படியின் தொடக்கத்தில் தோளில் மாட்டிய பகோடே நின்றான் ஆதித்தன்....
இருவரும் அளவில்லா அதிர்ச்சியில் அசைவில்லாமல் நிற்க.... தன் தம்பி தங்கையை பல வருடம் நேரில் கண்டதில் இத்துனை வருடங்கள் அவன் மனதினுள்ளே மறைத்து வைத்த அன்பு வெளிவர... அவனையும் அறியாமல் இருவரின் அருகில் சென்றவன்.... ஆசையாகவும் ஆறுதலாகவும் அவர்களின் தலையை கோத.... அதில் நிலையடைந்ததுமே.... தன்னை விட சற்றே உயரமாய் இருந்தவனை ஷியாமும்.... தன்னை விட இரண்டரை மடங்கு உயரமாய் இருந்தவனை தியாவும் இருக்கி கட்டி கொண்டனர்.... இருவரின் கண்களிலிருந்தும் ஆறாய் கண்ணிர் அவர்களின் தமையனை கண்டதில்.... அவர்களை தானும் பதிலுக்கு அணைத்தவன்.... இருவரின் பின்னந்தலையிலும் கோதிவிட்டு ஆறுதல் படுத்தினான்...
ஷியாம் : இவ்ளோ சீக்கிரம் எப்டி அண்ணா வந்த...
ஆதித் : அப்ரமா சொல்றேன் டா.. தியா நீ ஏன் உன்னை ப்லேம் பன்னனிக்கிற..
தியா : இல்லண்ணா... அது... என இழுக்க...
ஆதித் : சொல்லு... என்றவனின் குரலில் கடுமை குடியேற...
தியா : பத்து வர்ஷத்துகு முன்னாடி நா உன்ன கீழ தள்ளி விடாம இருந்துர்ந்தா இவ்ளோவும் நடந்துர்க்காதுல்ல.... என பாவமாய் கேட்க..
ஷியாமும் ஆதியும் ஒரே போல் தலையில் அடித்து கொண்டனர்... அவளோ அதை கண்டு பேந்த பேந்த முளிக்க...
ஆதித் : இங்க பாரு தியாகுட்டி உனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல...
தீரா : அதான நீ என்ன அவன மேம்பாலத்துலையா தள்ளிவிட்ட... சோபால தான தள்ளிலிட்ட...
ஷியாம் : உன்ன யாரு டி இங்க வர சொன்னது...
தீரா : எனக்கு யாரு சொல்லனும்.. நா எப்பொ வேணா வருவேன்... எப்போ வேணா போவேன்...
ஆதித் : அதே மாரி எனக்கு எப்போ வேணா கோவம் வரும்... எப்போ வேணா கோவம் போகும்... அதனால மரியாதையா ஓடிடு...
தீரா : ஓ மை காட்...
தியா : ஓடி தொலை டி.. இவன் கோச்சிக்கிட்டு திரும்ப லண்டன் போய்ட போறான்...
தீரா : ஏது லண்டனா... இனிமே அந்த பக்கம் கூட திரும்ப கூடாது நீ...
ஷியாம் : சரி எங்களுக்கு டைம் ஆச்சு... அண்ணா வா போலாம்... தியா வா... நீயும் வா டி...
தீரா : நா வரேன் நீ போ...
வணில் அனைவரும் ஏறி அமர.... ஆதித்தின் எதிர்பாரா வருகையை கண்ட பெரியவர்கள் மகிழ்ச்சி கொள்வதா இல்லை கவலை கொள்வதா என தவித்தனர்.... அனைவரும் ஏறியதும் தன் பைக்கில் அவர்களுக்கு வழி காட்டியாய் முன் சென்றான் ஆதித்தன்... அவனுக்கு அவன் கிராமத்திற்கு செல்லும் வழி அத்துப்படி.... இன்றளவும் அவைகளை மறவாமல் சிறு வளைவு நெளிவோ கூட இல்லாது சென்று கொண்டிருந்தவனை பின்னிருந்து கண்ட பெரியோர்கள் வருத்தமுற்றனர்...
பாட்டி : அவன் ஊர்ல அவனுக்குன்னு இருக்க உயர்ந்த மரியாதையோட பல பேருக்கு நடுவுல வாழ வேண்டிய புள்ள இப்போ தனியா போறான்...
அம்ருதா : எல்லாம் விதி அத்த.... யாருக்கும் இல்லாத கஷ்டம்... அவன் சந்தோஷமா இருக்க வேண்டிய காலத்த தனிமைலையே களிச்சுட்டான் அத்த.... நம்மளால ஒன்னுமே செய்ய முடியல...
பாட்டி : விதி போட்ர சதிய இறைவனாலையே மாத்த முடியாதுங்குர பச்சத்துல நம்மளால மட்டும் என்ன செஞ்சிட முடியும்....
++++++++++++++++++++++++++++++
கிஷோர் : ஏன் மா இப்டி பன்றீங்க... அண்ணா போறேன்னு சொல்ற வர ஒன்னு சொல்லாம இருந்துட்டு அவன் பத்திரமா சென்னை போய்ட்டான்னு தெரிஞ்சதும் உக்காந்து அழரீங்களே...
அப்பெண்மணியோ தன் அழுகையை தான் தொடர்ந்தார்.... அவரின் தோற்றமும் இருளிள் தெரியவில்லை...
கிஷோர் : உண்மைய தான் சொல்லுங்களேன்... ஏன் அவன கண்காணிக்கிறீங்க....
" வெளியே போ கிஷூ " என அவர் கத்தியதும் திரும்பி பாராமல் வெளியேறினான் கிஷோர்....
+++++++++++++++++++++++++++++
வந்தனக்குரிச்சி
குழப்பத்துடனே எழுந்தமர்ந்த உத்ரா அவளருகிலிருந்த தண்ணி பாட்டிலில் தண்ணி மொத்தமும் காலியானதை உணர்ந்து கீழே வைக்க குனிந்தாள்... அப்போது கீழே ஒரு கலண்டர் கிடக்க.. அதை எடுத்தவள்... அன்றைய தேதியை கண்டதும்... எதற்சையாய் மணியை கண்டவள் அதிர்ச்சியில் வெளிறினாள்...
ஏனெனில் தஞ்சாவூரிலிருக்கும் இந்த முக்கிய நகராட்சி மற்றும் கிராமமான வந்தனக்குரிச்சியில் மேற்கு தமிழகத்திலிருந்து வரும் இரெயில் நாழு நாட்களுக்கு ஒரு முறை தான் வரும்... அதை விட்டால் இங்கிருந்து சில இடங்களுக்கு பேருந்து மூலம் மட்டுமே செல்ல முடியும்... ஆனால் புதன் கிழமை மட்டும் ஒரு தனியார் இரயில் அதிகாலை 5 மணி முதல் 5 :30 மணிக்குள் வந்து செல்லும்....
உத்ரா : இன்னைக்கு புதன்கிழமை ... புதன் காலைல அஞ்சு மணிக்கு ட்ரெயின் வருமே... மணி இப்பவே அஞ்சு... போலாமா வேணாமா... மாமா வருமா... தெரியலையே...
திடீரென அவளின் மனதில்.... " இத்தன நாளா வருமா வராதான்னு தெரிஞ்சா போய் பாத்துட்டு வந்த... இப்போ மட்டும் என்ன யோசிக்கிற... "
உத்ரா : இல்ல.... இன்னைக்கு என்ன நாள்ன்னு பாத்தியா.... மார்ச் 4.... எனக்கு பொறந்ததுல இருந்தே நல்லதா நடுக்குர நாள்.... மாமாவ நா பாத்த நாள்.... அது மட்டுமில்ல மாமா என்ன விட்டு போன நாள்.... அது ஒன்னு தான் எனக்கு நடந்த கெட்டது... இன்னைக்கு என்னவோ மாமா உண்மையாவே என் முன்ன வரும்னு தோனுது...
மனம் : அப்போ போக வேண்டியது தான...
உத்ரா : அது... என் மூஞ்சிலையே முளிக்காதன்னு சொல்லீட்டு போன மாமாவ எப்டி போய் பாக்க சொல்ற...
மனம் : ஏன் உனக்கு ஈகோவா...
உத்ரா : ச இல்ல.... என் மாமா முன்னாடி ஈகோலாம் ஒரு விஷயமே இல்ல..
மனம் : அப்போ போ...
உத்ரா : போகத்தான் போறேன்.. நீ போ அந்தப்பக்கம்....
பெரியவர்களுக்கு சத்தம் வராமல் வெளியேறிய உத்ரா யாவரும் அறியாது வீட்டை விட்டு சத்தமில்லாமல் வெளியேறினாள்.... இரெயில் தண்டவாளத்தை தோக்கி ஓட தொடங்கினாள்.... காலை கதிர்கள் அவள் கால் கொலுசில் பட்டு தெரித்திட... வண்ண மலர்கள் சூரியனை கண்ட மகிழ்ச்சியில் அழகாய் புன்னகைக்க விரியும் போது சரியாய் அவர்களை உத்ரா கடந்து செல்ல... அவள் மென் பாதம் பட்ட இடமெல்லாம் பூக்கள் ஆவலாய் பார்க்க தொடங்கியது... சூரியனோ.... " ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ... ஹீரோயின பாத்தது போதும் என்ன கொஞ்சம் பாருங்க " என வீரியமாய் கதிரனுப்பி அவன் புறம் திருப்பினான்....
மலர்களும் " நாங்களே இன்னைக்கு வர தான் ஹீரோயின இரசிக்க முடியும்... இனிமே ஹீரோ விட்ரானோ இல்லையோ ... நீ வேற அப்பப்ப வந்து டிஸ்டர்ப் பன்னிக்கிட்டு " என்பதை போல் சினுங்கி அவர்களின் இதழ்களில் படர்ந்திருந்த பனித்துளிகளை காற்றாய் ஆக வழி விட்டது....
ஊரை நெருங்கி வந்து கொண்டிருந்த ஆதித்தனின் கண்கள் காலை கதிரவனின் கதிர்களில் சுடர்விடும் உளைக்கையாய் காட்சி அளித்தது....
செந்நிற சூரியனை பிரதிபளிக்கும் ஒளியை கண்களில் ஏந்தி வந்தவனை கண்டதுமே இணம் கண்டு கொண்டானோ பகலவன்... அவனை கண்ட பேரின்பத்தில் அவன் மீது வெயில் பரப்பினான்.... சூரியனை மதிக்கும் எண்ணமில்லாத ஆதித்தன் தன்னை அமோகமாய் வரவேற்த்த சூரியனை தள்ளி வைத்து விட்டு பைக்க திடீர் நிறுத்தமிட்டு நிறுத்தினான்...
அவனின் மனம் சூரியனையும் தாண்டி எரிமலையாய் வெடிக்க தயாராகி கொண்டிருந்தது... இதில் அவனை காட்டிலும் பத்தடி முன்பிருந்த வருகைபலகையை கண்டு இன்னுமே மாறுதலாய் உணர்ந்தான்....
எந்த ஊரிற்கு இனி வாழ்வில் என்றுமே வர கூடாதென நினைத்து வெளியேறினானோ... அதே ஊரின் முன் இயலாமையுடன் நின்றவனின் பின் வந்த வேணும் ஏதோ ஒரு ரிங்டோன் ஒலியுடன் நிறுத்தப்பட.... அடுத்த ஐந்து நிமிடத்தீல் வணிலிருந்து இறங்கி இவனை நோக்கி ஓடி வந்தான் ஷியாம்...
------------------------------------------------------------
இளந்தென்றல் முன் நெற்றியில் வருடி செல்ல.... கற்றை முடிகள் நெற்றியில் நடனமாட... அலைபாயும் கண்கள் நொடிக்கு நொடி பாய்ந்து கொண்டிருந்த பச்சை நிலத்தை இரசித்து கொண்டு வர... மாநிறத்தில் கட்டுக்கோப்பான தேகத்துடன் ஆணழகனாய் வந்தனக்குரிச்சி இரயில் நிலையத்தை இன்னும் சிறிதே நிமிடங்களில் அடைய போகும் இரயிலின் பூட் பாத்தில் கைபிடியை பிடித்தவாறு நின்றான் அவன்.....
----------------------------------------------------------
ஷியாம் : அண்ணா ண்ணா...
ஆதித் : என்ன ஆச்சு ஷியாம்...
ஷியாம் : தாத்தாக்கு ஒன்னுமில்லையாம்... கண் முளிச்சிட்டாராம்... பாட்டி ஃபோன் பன்னாங்க...
இப்போதே ஆதித்திற்கு மூச்சு வந்தது... அவனின் முகம் தெளிவடைந்தது...
ஷியாம் : அண்ணா...
ஆதித் : சொல்லு டா
ஷியாம் : தாத்தாக்கு சரியாய்டுச்சுன்னு லண்டன் போய்டாதண்ணா... என தயங்கிவாறே கூற.... அவனை நிமிர்ந்து நோக்கியவன்..... கண்டுக்கொள்ளவே மாட்டானோ என்று தளர்ந்து போன சூரியனை.... எதிர்கொள்ளும் புன்னகையுடன் அதனை நேருக்கு நேர் கண்டு..
ஆதித் : ம்ஹும்.... போகமாட்டேன்.... இனி என் வாழ்வோ சாவோ அது இங்க தான்... என்றதுடன் அவன் பைக்கை மீண்டும் உயிர்பித்து தேனி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையை தாண்டி சீரிப்பாய்ந்தான்.....
நம் நாயகி உண்மையிலே யாரை காண வேண்டி ஓடுகிறாள்....
நம் நாயகனின் முடிவு எதில் சென்று முடியும்....
பொருத்திருந்து பார்ப்போம்...
நீ... நான்...
இதயங்களே.... என்னமோ நடக்கப்போகுது அது மட்டும் உறுதி... என்னன்னு கேக்கதீங்க.... ஏன்னா.. நான் எந்த நேரத்துல எப்டி ட்விஸ்ட் வப்பேன்னு தெரியாது.... சோ பொருத்திருந்து பாருங்கோ...
நகலெடுப்பதை விட்டுவிட்டு எழுத்தாளர்களுக்கு பக்கபலமாய் நில்லுங்கள்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro