06 நீ... நான்...
முன் நின்ற விஷ்வாவை கண்டவள்... உணர்ச்சி வசத்தில் ஓடி சென்று அணைக்க முயல.. அவனோ இரண்டடி சட்டென்று பின்னே நகர்ந்தான்... அதில் நினைவடைந்தவள் தான் செய்ய முனைந்ததை உணர்ந்ததும் கண்களை விருத்து அவனை நோக்க... அதை கண்டும் காணாமல் இளநகை புரிந்த விஷ்வா... இன்னும் அவளை பார்த்து கொண்டே நிற்க...
மிரு : விஷு.. நீ எப்போ வந்த...
விஷ்வா : நா எப்பையோ வன்ட்டு போறேன் உனக்கென்ன...
இந்த கேள்வியில் தன் நிலையை உணர்ந்த மிரு உடனே தன் ஃபார்மை கப்பென பிடித்து கொண்டாள்...
மிரு : எனக்கென்னவோ... நீ எப்போ வந்தா எனக்கொன்னும் இல்ல தான்... ஆனா என்ன ஏன் டா தூக்கிட்டு வந்த...
விஷ்வா : அன்... திருச்சி ல... அம்மிக்கல்ல தூக்குனா பரிசு தராங்கலாம்... அதான் உன்ன தூக்கி ப்ரக்டிஸ் எடுத்துக்குட்டேன்...
மிரு : அதுக்கு வேற ஆள் கிடைக்கலையா....
விஷ்வா : கிடைக்கல.. அதான் தூக்கிட்டு வந்தேன்...
மிரு : வந்ததும் வராததுமா ஏன் தொல்ல பன்ற.... என்ன மொதல்ல வீட்ல கொண்டு போய் விடு... என்ன தேடுவாங்க...
விஷ்வா : அப்போ நா தேடலையா...
மிரு : ஏன் டா சைக்கோ மாரி மூஞ்ச வச்சிட்டு பயங்கராமா கேக்குர...
விஷ்வா : சரி நார்மலாவே கேக்குறேன்... சொல்லு நா தேடலையா...
மிரு : அ... அது நீ தேடுனியா தேடலையான்னு எனக்கு எப்டி தெரியும்... நீ ஊர்லையா இருந்த...
விஷ்வா : உனக்கு தெரியாது...
மிரு : ஆமா...
விஷ்வா : ஆத நா நம்பனும்...
மிரு :அஃப்கோர்ஸு...
விஷ்வா : அப்போ ஏன் அன்கிட்ட பேசும் போதுலாம் ஸ்பீக்கர்ல போட்டு பக்கத்துலையே உக்காந்துருக்க... என அசால்ட்டாய் கேட்க... கப்பென போனது நம் மிருவிற்கு....
மிரு : அ...அது..
விஷ்வா : சொல்லு... என சாவகாசமாய் காலை நீட்டி போட்டு சேரில் அமர்ந்து கொண்டான்....
மிரு : அன்கி பேசும் போது ரெக்கார்ட் பன்னி கலாய்க்கிறதுக்காக பக்கத்துல உக்காந்து கேப்பேன்...
விஷ்வா : ஓஹோ...
மிரு : ம்ம்ம்
விஷ்வா : சரி எத்தன டைரி முடிச்ச...
மிரு : 16 என டக்கென கூறிவிட... அப்போதே அவள் எதை கூறினாளென்பது அவளுக்கு புரிய வர... நாக்கை கடித்துக் கொண்டு அவனை பார்த்தாள்... விஷ்வாவோ வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்... அதை கண்டு தலையிலே அடித்துக் கொண்டவள்.... இருக்கும் கட்டிடத்திலிருந்து வெளியே ஓடினாள்... இவனும் சிரித்தவாறே அவனின் ப்லக் ஜெர்கினை எடுத்து கொண்டு தோலில் போட்டவாறு வெளியே வந்தான்....
ஏனெனில் சிறு வயதிலிருந்தே மிருவிற்கு டைரி எழுதும் பழக்கமுண்டு... பெரும்பாலும் அவளின் மனதிற்கு நெருக்கமான அனைவருக்கும் தனி டைரி போட்டு எழுதுவாள்... ஆனால் இதுவரை அவள் தனி டைரி போட்டு மிக மும்மரமாய் எழுதியது அவள் தோழிகளுக்கு மட்டுமே... ஆனால் மற்றொருவருக்கும் எழுதுவாளென்பது விஷ்வா ஒருவன் மட்டுமே அறிந்தது... அவனுக்கான டைரி தான் அது... எப்பொழுதெல்லாம் அவனை நினைக்கிறாளோ அப்பொழுதெல்லாம் டைரியில் ஏதேனும் ஒரு கவிதை எழுதிவைப்பாள்... அவன் கேள்விக்கு டக்கென பதில் கூறியவள்... தான் கிட்டதட்ட நான்கு வருடமாகவே அவன் நினைவில் தான் இருக்கிறேன் என அடித்து புரியவைத்துவிட்டியே டி... என புலம்பிக் கொண்டாள்....
வெளியிலிருந்த வனில் ஏறி அமர்ந்தாருந்தாள் மிரு.... அவளருகில் வந்து அமர்ந்தவன் எதுவும் பேசாமல் வண்டியை எடுத்து கொண்டு அவள் வீட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்தான்...
உத்ராவின் வீட்டில்...
ராமானுஜம் ஏதோ ஒரு யோசனையில் சுழன்றவாறு அமர்ந்தாருந்தார்... அவரருகில் அவரின் தாய் குமரி டீவி சீரியல் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தார்...
கார்த்திகா தேவி : என்னங்க...
ராமானுஜம் : சொல்லு மா
கார்த்திகாதேவி : இன்னும் இரெண்டு வாரத்துல உத்ரா காலேஜுல நாழாவது வர்ஷப்படிப்ப ஆரம்பிச்சிருவாங்க...
ராமானுஜம் : அதனால என்னமா...
கார்த்திகா : ஜமீந்தாரைய்யா... உங்க கிட்ட தான அட்மிஷன் போட சொன்னாங்க...
ராமானுஜம் : ஆமா...
கார்த்திகா : போட்டாச்சா...
ராமானுஜம் : போட்டாச்சு மா... உத்ரா பட்ச்லையே கெடச்சிடுச்சு... வந்த உடனே அனுப்பீட வேண்டியது தான்..
கார்த்திகா : நல்லதுங்க... தாமதமாக்கீருந்தா.. பெரிய ஊட்டம்மா... தயத்தக்கான்னு குதிச்சிர்ப்பாங்க...
ராமானுஜம் : அவங்க இதுக்கு ஒன்னும் சொல்லீர்க்க மாட்டாங்க... இங்க அட்மிஷன் போடுரதுல அவங்களுக்கே விருப்பமில்ல போல...
கார்த்திகா : ம்ம்ம் அதுவேறையா...
குமரி பாட்டி : ஏன் டா ராமு... பொட்ட புள்ளைய இன்னும் எத்தன காலம் டா படிக்க வைக்கிறது... எப்டியும் புருஷன் வீட்டுக்கு போய் அடுப்பூத தான போறா... அதுக்கு எதுக்கு காசு கட்டி படிக்க வைக்கிற....
ராமானுஜம் : என்னமா இப்டி சொல்லீட்ட... நல்லா படிக்கிற புள்ளைய கல்யாணம்னு பூட்டி வைக்கனுமா..
குமரி பாட்டி : அதத்தான காலாகாலமா பன்னிக்கிட்டு வாரோம்...
உத்ரா : அதனால நானும் அப்டி இருக்கனும்னு அவசியமில்ல... நா படிச்சு டாக்டரா ஆவேனே தவிற படிப்ப நிறுத்தீட்டு கல்யாணம் பன்னிக்க மாட்டேன்... என விருட்டென உள்ளே வந்தவள் கத்திவிட்டு அவளறையில் புகுந்துக் கொண்டாள்...
குமரி பாட்டி : அடியே கார்த்திகா... உன் புள்ளைக்கு உள்ள திமிற பாரு டி... பெரிய மனுஷி பேசிக்கிட்டு இருக்கேன்... மரியாதை இல்லாம கத்திட்டு போனதும் இல்லாம... இந்த நேரத்துல எங்க போய்ட்டு வாரா இவ...
கார்த்திகா : தோட்டத்துக்கு போய்ட்டு வரா அத்த...
குமரி பாட்டி : காலிருக்குன்னு தான அங்க இங்கையும் அலையிர வெட்டி போடுரேன் இரு...
உத்ரா : நா உன் தடிய வச்சு கூட நடந்துக்குவேன்.. என உள்ளிருந்து கத்தினாள்...
குமரி பாட்டி : சிருக்கி... வெளிய வருவல்ல அப்ப இருக்கு உனக்கு...
உத்ரா : நீ சீரியல் பாக்க டீவிய சரி செய்ய சொல்லி கூப்புடுவல்ல.. அப்ப இருக்கு உனக்கு...
குமரி பாட்டி : அடியாத்தி...
ராமானுஜம் : மா... சும்மா இரு மா.. அவ தான் சின்ன புள்ள... நீ வேற கத்திக்கிட்டு...
குமரி பாட்டி : என்னையவே சொல்லு எப்போப்பாரு...
உத்ரா : உன் மேல அப்பாக்கு பாசமே இல்ல பாட்டி அதான்... என அறையிலிருந்து வந்தவள் அவரின் தோலில் கை போட்டுக்கொள்ள...
குமரி பாட்டி : ஆமா ராசாத்தி... நீ தான் என் மேல எப்பவுமே அப்புட்டு பாசம் வச்சிருக்க...
உத்ரா : பாட்டி பசிச்கிது...
குமரி பாட்டி : வா தங்கம் நா வெண்டைக்கா கொழம்பு வக்கிறேன்... வா என அழைத்து சென்றார்..
இதை கண்டு இராமானுஜம் தலையிலடித்துக்கொள்ள...
கார்த்திகா : இதுக்கு தான் பாட்டிக்கும் பேத்துக்கும் நடுவுல போக கூடாதுன்னு சொல்றது... எங்க கேக்குறீங்க.. நீங்க.. என சிரித்து விட்டு சென்றார்...
இப்படித்தான் பாட்டியும் பேத்தியும்... நேரமிருக்கும் போதெல்லாம் அடித்து கொள்ள வேண்டியது... அதன் பின்... தோலில் கை போட்டு கொண்டு கொட்டிக்கொள்ள போக வேண்டியது...
லண்டன்
ஆதித் : டு யூ நோ வாட் ஹவ் யு டன்... (Do you know what have you done?? )என கடுங்கோவத்தில் ருத்ரதாண்டவமாடிக் கொண்டிருந்தான்....
அவன் முன் அந்த இன்ட்டர் நெஷ்னல் கம்பெனியின் சீஈஓ நடுங்கி கொண்டிருந்தார்...
தீரா : அனேகமா லப்டப்ப உடச்சதுக்கு இவன் தான அவர் முன்னாடி நடுங்கி அவரு இந்த டயலாக்க சொல்லனும்.. இங்க என்ன உல்ட்டாவா நடக்குது...
சீஈஓ : சாரி ஸர்...
ஆதித் : இந்த சாரிய வச்சு என்ன செய்ய சொல்றீங்க... நா யாருன்னு தெரிய கூடாதுன்னு சொல்லி தான இங்க ஜாயின் பன்னேன்... அப்ரம் நா இங்கதான் வேலை பாக்குறேன்னு எப்டி ந்யூஸ் போச்சு.... என அவன் கத்திய கத்து நல்லவேளையாக ரூம் சௌன்ட் ப்ரூஃபாக இருப்பதனால் வெளியே செல்லவில்லை...
சீஈஓ : ரியலி சாரி ஸர்... எப்டி போச்சுன்னே தெரியல...
ஆதித் : ஆ.... என கத்தியவன்.... ப்ரிப்பர் மை ரிசெக்னேஷன் லெட்டர் ரைட் நௌ... (Prepare my resignation letter... right now)
சீஈஓ : ஸர்... என இழுக்க....
ஆதித் : டூ வாட் ஐ செட்...( do what I said) என கத்திவிட்டு விருட்டென வெளியேறினான்....
இவன் செல்வதையே தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த அந்த புதிய தமிழன் சீஈஓவின் அறைக்குள் அதிரடியாய் நுழைந்தான்.... "நிலநடுக்கம் நடந்து முடிந்து அமைதி நிலவியது" என நினைத்த சீஈஓ திரும்பவும் சரியாய் அவன் உள் நுழைய... அவரோ... " இத தான் புயலுக்கு முன் அமைதின்னு சொல்லுவாங்களோ... நிலநடுக்கம் போய் புயல் வந்துருச்சே " என பீதியாக பார்த்து கொண்டிருக்க.... அவன் எப்போதும் அனிந்திருக்கும் அந்த மாஸ்க்கை இப்போதும் கலட்டாமல் முன்னேறி வந்தவன்...
அவன் : என்ன நடந்துச்சு...
சிஈஒ அனைத்தையும் படபடவென மூச்சு விடாமல் உலரி கொட்டிய அடுத்த நொடி... சப்பென அறைந்து விட்டான்... அவர் கண்ணத்தில் கை வைத்து கொண்டு பாமவாய் பார்க்க...
அவன் : யு ஆர் ஃபயர்ட் (You are fired )என கத்திவிட்டு வெளியேறினான்...
சீஈஓ : இவருக்கு நீங்க பரவால்ல போலையே... என ஆதித்தை நினைக்க.... அதே நேரம் யாரோ ஒருவர் கதவை தட்டிவிட்டு உள்ளே வர.... வந்த ப்யூன் சீயிஓவிடம் ஒரு லெட்டரை குடுத்து விட்டு வெளியேறினார்.. அந்த லெட்டரை படித்த சீஈஓ தன் நினைப்பை மாற்றி கொண்டார்... ஏனெனில் வந்தது என்னவோ... சில ப்ரின்டிங் லெட்டர்.. " இனி இன்ட்டர்நெஷ்னல் கம்பெனி எதிலும் வேவை இல்லை " என்ற லெட்டரிருந்தது...
சீஈஓ : அவராவது இங்க உள்ள வேலைய மட்டும் தூக்குனாரு... இவரு ஒரேடியா தூக்கிட்டாரே... என புலம்பியவாறே தன் சீஈஓ பதவியை நிறுத்தி விட்டு இதே கம்பெனியின் கிளை ஒன்றில் இவருக்காய் காத்திருருந்த ஜீ எம் போஸ்ட்டில் போய் அமர்ந்தார்...
தீரா : பாவம் யாரு பெத்த புள்ளையோ.. யாரோ எவருக்கோ சொன்ன இன்ஃபர்மேஷன்ல இவரு மாட்டிக்கிட்டாரு... என் ஆழ்ந்த அனுதாபங்கள்... நீங்க செய்த தியாகத்திற்கு சீக்கிரமே நற்செய்தி உங்களை தேடிவரும்....
யார் தான் இந்த புதியவன்...
இந்த விஷயம் யாரால் யாரடம் தெரிவிக்கப்பட்டது...
பொருத்திருந்து பார்ப்போம்....
நீ... நான்...
தயவு கூர்ந்து கதையை நகலெடுக்க வேண்டாம்.... கதை திருட்டை ஒழிக்க முயற்சாயை எடுங்கள்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro