05 நீ... நான்...
காலை கதிர்களின் கோப இரேகைகள் முகத்தில் படர்ந்திட... எரிச்சல் கொடுத்து கொண்டிருந்த இமைகளை பிரித்தவனின் கண்களிரண்டும் சிவந்திருக்க.... இரவெல்லாம் உறங்காமல் விடிய காலையிலே படுக்கையை விட்டு எழுந்தான் ஆதித்... அவனை சுற்றி நோக்கிவனுக்கு... இரவு நிகழ்ந்த அனைத்தும் கண் முன் காட்சியாய் வந்து சென்றது...
கணினிக்குள் மூழ்கி கிடந்த ஆதித்தின் தலைவலி முன்பிருந்ததை விட பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே போக... அதை தாங்க இயலாமலும்... எங்கு வேலையை மூடி வைத்தால் அவள் நினைவு வந்து விடுமோ என்ற எண்ணத்திலும்... முன்பே அவள் நினைவு வந்து விட்டதை அறியாமல் கணினியில் மூழ்கியவனுக்கு.... கண்கள் மெல்ல மெல்ல சிவக்க தொடங்க... அவனையும் அறியாது... அவனை சுற்றி வந்தது...." ஆதன் " என்னும் அதே அழைப்பு.... தலைவலி மெல்ல மெல்ல குறைய ... அவ்வழைப்பு மெல்ல எகிரியது.... அதை கேட்க. விரும்பாதவன்..... கணினிக்குள் மூழ்கி ஏதேதோ செய்து பார்த்தான்.... அனைத்தும் வீணாக..... கோவத்தை அடக்க இயலாதவன்.... அவன் முன் வீம்பு செய்து கொண்டிருந்த கணினியை தூக்கி மடாரென கீழே போட்டு உடைத்தான்....
தீரா : ஏன் டா இப்போ அத போட்டு உடைக்கிற....
ஆதித் : எல்லாம் உன்னால தான்...
தீரா : நா என்னடா பன்னேன்...😳😳
ஆதித் : நடந்த ஆக்சிடென்ட்ல எனக்கு மெமரி லாஸ் ஆக வக்காம என்னடி பன்னி தொலச்ச... மத்த யாரும் நினைவுல வர மாற்றாங்க.... ஆனா... அது... வந்து வந்து வந்து வந்து...
தீரா : எத்தன வந்து...
ஆதித் : நீ மூடு... இத்தன முறை வந்து என் உயிர வாங்குது...
தீரா : நீ சென்னை போனா அது ஏன் உன் உயிர வாங்க போகுது...
ஆதித் : அங்க போகக்கூடாதுன்னு எனக்கு மட்டும் ஆசையா... ஆனா அங்க போனா...
தீரா : அங்க போனா...
ஆதித் : என்ன அதே இடத்துக்கு அனுப்புவாங்க... நா மறக்க நினைக்கிற எல்லா விஷயமும் நியாபகத்துல வரும்...
தீரா : பத்து வருஷமா மறக்க ட்ரை பன்னி மறக்காதது... நீ இனிமே ட்ரை பன்னியா மறக்க போகுது... என முனுமுனுக்க...
ஆதித் : என்ன சொன்ன... என கண்கள் சிவக்க திரும்ப...
தீரா : ஆஹா... சத்தமா சொல்லிட்டோமா... சரி சமாளிப்போம்.... அதுவா... அர்ஜூன வச்சு கொஞ்ச ட்விஸ்ட் யோசிச்சிட்டு இருந்தேனா.. ஆதான் என்னையும் அறியாம சொல்லிட்டேன்...
ஆதித் : அவனையும் விடலையா நீ...
தீரா : அவனுக்கு எப்பவோ ஆப்பு வச்சிட்டேன்... இப்ப அவன் எல்லாரையும் சேத்துக்குட்டு ஆப்பு வச்சிட்டு இருக்கான்... சரி சரி யு கன்ட்டின்யூ...
ஆதித் : ம்ம்ம் அதனால நா அங்க போக விரும்பல...
தீரா : நீ விரும்பலன்னா.... உன்ன இங்கயே இருக்க விட்டுட்டா நா எப்டிடா இத ஓட்டுவேன்...
ஆதித் : எப்டியாவது ஓட்டு... ஆனா நா போமாட்டேன்...
தீரா : நா எதுக்கு இருக்கேன்.. பாத்துக்குறேன்...
மீண்டும் ஆதன் என்னும் அதே அழைப்பு அவன் மனதை தீண்ட.... துள்ளி எழுந்த மனதுடன்.... துளிர்விட்ட அவன் கோபமும் துள்ளி எழ... அடுத்து சில நிமிடங்களிலே அந்த அறை சின்னா பின்னமானது அவன் ஆத்திரத்தில்....
கோவத்தை அடக்க இயலாத அரக்கனாய் கத்தியவன்... விருட்டென அவ்வறையை விடு வெளியேறி.... அந்த பில்டிங்கின் கடைசி தளத்திலிருந்து ஸ்விம்மிங் பூலில் குதித்தான்....
நாழு மணி நேரத்திற்கும் மேலாக அதில் நீந்தியவன்... அவ்வழைப்பு அவனை தீண்டவில்லை என்பதை உணர்ந்த பின்னே எழுந்து அறைக்கு வந்து படுத்தான்....
ஆதித் : ஹ்ம்... ஊருக்கு வர சொல்லி எல்லாரும் இனி கம்ப்பல் பன்ன ஆரம்ச்சிருவாங்க... ஷியாம் தியாவால ரொம்ப நாள் இழுத்தடிக்க முடியாது... பத்தாததுக்கு தீராவும் விடமாட்டா... எதாவது தில்லாலங்கடி வேலை பார்ப்பா... நா தா உஷாரா இருக்கனும்... என அவன் அடங்காத கேசத்தினை அழுந்த கோதியவன்... எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான்....
சென்னை
ஃபோனை நோண்டிக் கொண்டே பைக் சாவியை ஒரு கையில் சுழற்றியவாறு மாடி படியில் காலை வைத்தான் ஷியாம்... அப்போது....
தேவராயன் : அம்மா... அம்மா.... இங்க வாங்க...
பிருந்தா பாட்டி : சொல்லுடா என்ன
தேவராயன் : ஆதிக்கிட்ட இருந்து ஃபோன் வந்துச்சா.... என கேட்டதுமே.... பதறிய ஷியாம்... மாடி படியிலிருந்து ஓடி... அங்கிருந்து எட்டி பார்த்தான்...
பிருந்தா பாட்டி : இல்ல பா.. போன வாரம் தான் கால் பன்னானாம்...
தேவராயன் : இன்னும் எவ்ளோ நாள் தான் அங்கையே இருக்க போறானாம்... லண்டன் போய் நாழு வர்ஷத்துக்கு மேல ஆகுது... இந்த நாழு வர்ஷத்துல நாப்பது கம்பெனிக்கு மேல மாரிட்டான்... நீ வாடான்னு கூப்ட்டா.... சம்பலத்துல மட்டும் ஒரு லட்சத்த அனுப்பி வைக்கிறான்... என்ன திமிறு அவனுக்கு... சீக்கிரமே வர சொல்லுங்க அவன....
ராஜேந்திரன் தாத்தா : என்ன டா ரொம்ப தான் என் பேரன திற்ற... அவன் வரப்ப வருவான் நீ பொருமையா இரு...
ஷியாம் : நம்ம தாத்தாவ எப்போ அண்ணா கரெக்ட் பன்னான்...
தியா : தாத்தா முன்னாடிலேந்தே அவன் பக்கம் தான் டா...
ஷியாம் : நீ எப்போ டி வந்த...
தியா : நீ மாடி படில பம்மும் போதே வந்துட்டேன்...
ஷியாம் : நாம இனிமேலும் இங்க இருந்தா... நம்ம தலைய உருட்ட ஆரம்ச்சிருவாங்க... வா ஓடிடலாம்...
தியா : டன் வா... என இருவரும் பறபறப்பாய் கிழிறங்கி... அனைவருக்கும் பொதுவாய் " போய்ட்டு வரோம் " என கத்திவிட்டு அவரவர் வண்டியில் சிட்டாய் பறந்தனர்....
பிருந்தா : என்ன ஆச்சு இந்த புள்ளைங்களுக்கு... ஆதித் தான் இப்டி ஓடுவான்... இப்ப இதுங்களும் அப்டியே ஓடுதுங்க...
அம்ருதா : ஹ்ம்.. அண்ணன் மாரியே பொறந்துருக்காங்க என்ன பன்றது...
தன் கேடிஎமில் மருத்துவமனையை அடைந்த ஷியாம் வாலை சுருட்டி கொண்டு போய் அவன் கேபினுள் நுழைந்தான்... அடுத்தடுத்து நோயாளிகள் வந்து கொண்டே இருக்க.... அப்போது... அடுத்த நோயாளிக்காய் இவன் டிங்கென மணி அடிக்கவும்... டொக் டொக் என சத்தம் வந்து கதவு திறக்கப்பட....
ஷியாம் : கமின்... என நிமிர்ந்தவன்... கதவு மூடப்பட்டதும்... என்ன யாரையும் காணும்... என முனுமுனுக்க...
கீழிருந்து திடீரென ஒரு கை மேலே உயரவும் பதறிய ஷியாம் கீழே நோக்க... அங்கோ... தன் முட்டை கண்களை திறந்து வைத்தவாறு.... உதட்டை பிதுக்கி கொண்டு குட்டி கௌனில் நின்று கொண்டிருந்தது ஒரு குட்டி பெண்குழந்தை....
ஷியாம் : யாரு பாப்பா நீங்க... அம்மா வரலையா... தனியாவா வந்தீங்க...
பாப்பா : ஏன் அப்பா கூட வதக்கூடாதா (வரக்கூடாதா) என மழலை மொழியில் கேட்க...
ஷியாம் : வரலாமே... யாரு வரக்கூடாதுன்னு சொன்னாங்க... என சேரிலிருந்து எழுந்து பாப்பாவின் அருகில் வந்தான்...
பாப்பா : நீ டான (தான ) இப்போ கேத்த (கேட்ட ).. அம்மா வல்லையான்னு....
ஷியாம் : நா தனியா வந்துர்க்கியேன்னு கேட்டேன் பாப்பா....
பாப்பா : நா தனியா வல்ல... அம்மா டா (தா) தனியா போடுச்சு... (போய்டுச்சு)
ஷியாம் : எங்க போனாங்க...
பாப்பா : தெல்லையே... (தெரியலையே ) என அழகாய் கையை விரித்து காட்டியது...
ஷியாம் : சரி வா... நாம போய் தேடுவோம்.... என அவளை தூக்கி கொண்டு வேளியே வந்தான்.... அப்போது....
" ஆது ஆது " என்ற இனிய குரல் அவனை நோக்கி வர.... திரும்பியவன்.. ஒரு பாவை அவனை நோக்கி வருவதை கண்டு குழம்ப... அந்த ஆது என்ற பெயர் அவனுக்கு எவரையோ நினைவூட்ட... அவன் தோலில் தட்டி நினைவிற்கு வரவைத்த பாப்பா....
பாப்பா : அம்மா வன்டுச்சு... (வந்துடுச்சு )
ஷியாம் : இவங்க தான் உன் அம்மாவா...
பாப்பா :இல்ல....
ஷியாம் : அப்ரம்...
பாப்பா : என் தம்பிட்டு (தம்பிக்கு )அம்மா...
ஷியாம் : அப்போ உனக்கு அம்மா இல்லையா...
பாப்பா : அப்பா தான் என் அம்மா...
அப்பெண் : வாயாடி வாடி இங்க... என அவளை அவனிடமிருந்து தூக்கி கொண்டார்...
அப்பெண் : தன்க்ஸுங்க... நா செக்கப்க்கு போயிருந்தப்ப.. உக்கார வச்சிட்டு போனேன்... எங்கையோ ஓடீட்டா... ரொம்ப தொல்லை பன்னாளா...
ஷியாம் : இல்லங்க... பாப்பா சும்மா பேசீட்டு தான் இருந்தா... அப்ரம்... என இழுக்க...
அப்பெண் : சொல்லுங்க...
ஷியாம் : பாப்பா பேரென்ன... ஆதுன்னு சொன்னீங்களே...
அப்பெண் : ஆதர்ஷனா...
ஷியாம் : நைஸ் நேம்...
அப்பெண் : ஓக்கே... டாக்டர் தன்க்ஸ் வரேன்... டாக்டர்க்கு டாட்டா சொல்லு... என பாப்பாவிடம் கூற...
பாப்பா : டாட்டா டாட்டர் (டாக்டர்)
ஷியாம் : டாட்டா என இவனும் அவன் அறைக்கு மீண்டும் சென்றான்....
வந்தனக்குரிச்சு
கண்களை ஏதோ ஒரு துணி இருக்கி மூடியிருப்பதை உணர்ந்து தலையை அங்குமிங்கும் ஆட்டினாள் மிரு... அவள் கைகளும் எதிலோ கட்டப்பட்டிருக்க... கத்த தொடங்கினாள்...
மிரு : ஹேய்... யாரு என்ன கடத்தினது.... எங்க வீட்ல என்ன ரொம்ப நேரமா தேடுவாங்க.. என்ன விடுங்க....
" அப்போ நா தேடலையா " என திடீரென ஒரு குரல் கேட்க....
மிரு : யா..யாரு... என்ன... கடத்துனது... ஹலோ.. என்ன அமைதியாகீட்டிங்க.... யாருமே இல்லையா...
" இங்க தான் இருக்கேன்... "
மிரு : நீ..நி... நீ தானா...
" நான் நான் தான் "
மிரு : விஷு... என அலர.... அடுத்த நொடி அவளின் கைகட்டுகள் விடுவிக்கப்பட்டது.... அவள் உடனே கண் கட்டை அவிழ்க்க... அவள் முன் முகத்தை மறைத்தவாறு நின்றான் ஒரு ஆண்... ஆறடி ஆண்மகன்... கூர் விழிகள்.. அடர்ந்த புருவம்.. கைகளிரண்டும் பாக்கெட்டினுள் திட்டம் தீட்ட... கண்கள் அவளையே துளைத்தெடுத்தது...
மிரு : யார் நீ...
அவன் மெல்ல அவன் முகத்திறையை விலக்க... அவன் வதனத்தை கண்டவளுள் மின்சாரம் பாய... அவனோ இருகி நின்றிருந்தான்..அன்கியின் சகோதரன்.... விஷ்வமித்ரன்...
நீ... நான்...
ஹாய் இதயங்களே... கதைகள் திருடு போறத பத்தி கேள்வி பட்டேன்... அதனால என் கதைகள் இங்க இருந்து நீக்கலாமா வேணாமான்னு தெரியல... என்ன பன்னனும்னு சரியான முடிவெடுக்க முடியல... நா சில நாட்கள் முன் சொன்ன மாரி கதைய ஹோல்டுலையே போட்டுட்டு போய்ர்க்கலாபான்னு தோனுது... நா எந்த முடிவெடுத்தலும் எனக்கு ஸப்போர்ட்டா இருப்பீங்கன்னு நம்புறேன்... நாஎந்த முடிவெடுத்தலும் முகம் தெரியாத உங்கள பத்தி யோசிக்காம என்னால எடுக்கவும் முடியாது... உங்களுக்கு நல்ல விஷயமா பட்ர ஒரு நல்ல முடிவெடுக்க முயற்சி பன்றேன்... உங்கள சுத்தி மத்தவங்க கதைய திருடி போட்ரவங்க யாராவது இருந்தா அவங்களுக்கு சொல்லி கொஞ்சம் புரிவைங்க... எங்க உழைப்புகள வீணடிச்சிடாதீங்க... 🙏🙏🙏🙏
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro