Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

03 நீ... நான்...

சேகரநாதன்... ஜமீந்தாரின் தம்பி மகன்.... உத்ரா பெரியப்பாவின் மச்சினன்... இதுவரை பெரும்பாலும் நம் தோழிகள் அவரை கண்டதுமில்லை... அவரிடம் சிக்கியதுமில்லை... இன்று அவர்களின் தோட்டத்திலிருந்தே வந்தமையால் என்ன சொல்வாரோ... என்று ஊள்ளூர நடுங்கி கொண்டிருக்க.... ஒரு புறம் வீட்டில் மாட்டி விட்டுவிடுவாரோ என்ற பயமும் வந்து போனது... இத்தகைய உணர்வுகளில் அன்கியும் மிருவும் திலைத்திருக்க.... சேகரநாதனின் முன் குத்துக்கல்லாட்டம் நின்று கொண்டிருந்த உத்ராவின் மனதில் பலவித பேரலைகள் கடந்து சென்றது.... " உன்னால தான் எல்லாமே... ராசி கெட்டவளே... ஏன் டி இங்க வந்த... " என்ற ஒரு பெண்ணின் மிக அவேசமான குரல் அவளை கடந்து செல்ல.... வேர்த்து விருவிருத்து போன உத்ரா... அடுத்த நொடி.... நடுங்கி கொண்டு தடுமாற.... தோழிகள் அவளை பிடிக்கும் முன்னே.... அவளை சரியாய் நிற்க வைத்த சேகரநாதன் தன்னுடனே கொண்டு வந்த கூடையில் இருந்த தண்ணீரை அவளுக்கு அருந்த கொடுத்தார்....

அதை கண்டு சற்றே அதிர்ந்தவாறு வாங்கி அருந்தியவள்... தெளிந்ததும் எழுந்து நிற்க....

சேகர் : என்னமா உத்ரா... ஏன் இந்த ஓட்டம் ஓடியாந்துட்டு என்ன கண்டதும் நின்னுட்ட... இப்டி பயந்து வேற போயிருக்கியே... என அன்பாய் கேட்க....

நான் காண்பது கணவா இல்லை நெனவா என மூவரும் அவரை ஜூம் வைத்து பார்க்க.... அவர் அப்போதும் அதே முகபாவத்துடன் இருக்க.... அன்கி உத்ராவை லேசாய் இடித்து... " பதில் சொல்லு டி " என எடுத்துரைக்க... அதை புரிந்து ஒண்ட நம் நாயகி...

உத்ரா : அ..து..மா..மா.. நா.. நா வந்...து... இ..ங்க...

சேகர் : ஏன் இவ்ளோ திக்குது...

மிரு : அது ஒன்னுமில்ல சித்தப்பா.. உத்ராக்கு லைட்டா தலவலி... காலைல இருத்ததே இப்டி தான் இருக்கா... அதான் விளையாட கூட்டீட்டு வந்தோம்... தெரியாம இங்க ஓடி வந்துட்டோம்.... என பயந்து கொண்டே கூற....

சேகர் : அதுக்கு நீ ஏன் டா பயப்புடுர... மாமா என்ன சொல்லிட போறேன்... இங்க ஓடி புடிச்சு விளையாண்டா யாரு கேக்கபோறா... என் மருமவளுக்கு இல்லாத இடமா... நீங்க நிம்மதியா விளையாடுங்க... நா கெளமம்புறேன்.... போய்ட்டு வரேன் அன்கிதா... வரேன் உத்ரா...

அன்கி : வாங்க மாமா...

சேகரநாதன் இவள்கள் நினைத்ததை போலல்லாம் இல்லை... மிகவும் அன்பானவர்... அமைதியானவர்... அனைவரிடமும் பாகுபாடின்றி அன்பாய் பழகுபவர்....

மிரு : என்னடி நடக்குது இங்க...

அன்கி : அதான் டி எனக்கும் தெரியல... மாமா இவ்ளோ சாஃப்ட்டா என்ன...

மிரு : தெரியலையே....

உத்ரா : நாம எங்க இருக்கோம்... என திடீரென சம்மந்தமே இல்லாமல் கேட்க....

ங என முளித்த இருவரும்.... " ஜமீந்தார் தோட்டத்துல " என கூற....அதை கேட்டதும் மொத்தமும் சரிந்து விழுந்தது உத்ராவின் மனதில்....

----------------------

சென்னை

பகலவன் மலைமகளின் மடியிலிருந்து சலிப்புடன் எழுந்து ஊர் உலகம் முழுவதையும் " என் தூக்கமே கெற்றுச்சு ... உங்களுக்கு என்ன தூக்கம் " என்று சிடுசிடுத்தவாறு வெரி கொண்டு வெயில் அனுப்பி அனைவரையும் எழ வைத்தான்....

காலை நேர அவசரத்திற்கு பஞ்சமில்லாமல் சரசரவென பாய்ந்துக் கொண்டிருந்தது வாகனங்கள் அந்த நெடுஞ்சாலையில்.... அதை சுற்றியிருந்த பல இடங்களிலும் ஒரே இரைச்சல்... புது கட்டிடம் கட்டும் வேலை நிகழ்வதால் இதே தொல்லை தான் அங்கு வசிக்கும் மக்களிடத்தில்...

தன் குருவிக்கூட்டுகளிலிருந்து இரைக்காய் வெளிவரும் பறவைகள் போல... வேலைக்காய் வெளி வந்த குடும்பத்து ஆண்கள்.... பறபறப்பய் அவரவர் அலுவலகத்திற்கு விரைந்தனர்.... விட்டால் கழுகின் இறெக்கையை கடன் வாங்கவும் தயங்கமாட்டர்கள் போலும்....

இவை அனைத்திற்கும் இடையில்.... சென்னையின் பறபறப்பிர்க்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதை போல் போர்வியினுள் தன்னை புகுத்தி கொண்டு உறங்கி கொண்டிருந்தான் அவன்....

தூக்கம் கலையாத அதே முகத்துடன் கேசமெல்லாம் கலைந்து மொத்த முகத்தையும் மறைத்து பேயை போல் அந்த அறையில் நுழைந்தாள் ஒரு பெண்....

தான் எழுந்து பத்து நிமிடம் கடந்தும் இன்னும் தூங்கும் அவனை கண்டு பொராமையில் உடலெல்லாம் எரிய... அருகிலிருந்த தண்ணீர் ஜக்கை ஒரே வீச்சில் அவன் மீது வீசிவிட்டு ஓடினாள்...

தண்ணீர் அபிஷேகத்தினால் அரக்க பறக்க எழுந்தமர்ந்தான் அந்த 24 வயது ஆறடி அழகன்... நம் கதாநாயகனின் தம்பி ஷியாம் கார்த்திக்....

கதவை பிடித்து சிரித்தவாறு தன் சிகை ஒதுக்கி குறும்பு நிறைந்த கண்களை வெளிகாட்டி அழகாய் சிரித்தாள் நம் நாயகனின் தங்கை தியாரா...

அவளை கண்டு காண்டான ஷியாம்.... " அடியே குட்டி பிசாசே " என கத்தியவாறே அவளை துறத்தி ஓடினான்... கத்தி கொண்டே ஓடிய தியா பிருந்தா பாட்டியின் பின் சென்று ஒழிந்து கொண்டாள்....

பாட்டி : என்ன டி பன்ற..

தியா : பாட்டி மா... அண்ணன் அடிக்க வரான்..... என அவர் முதுகின் பின் ஒழிந்துக்கொள்ள....

ஷியாம் : பாட்டி மா... தள்ளுங்க... இன்னைக்கு அவள நா சும்மா விட போறதில்ல... என கோழியை தண்ணியில் முக்கியது போல் இருந்தவன் கத்திக் கொண்டிருக்க....

பாட்டி : டேய் இரு டா இரு டா... தியாமா... உன் அண்ணன என்ன பன்ன... ஏன் இப்டி ஆவேசமா இருக்கான்...

தியா : நா ஒன்னுமே பன்னல பாட்டி... அம்மி அவன எழுப்ப சொன்னாங்க... அதான் லைட்டா தண்ணி தெலிச்சு விட்டேன்... என பிருந்தாவின் பின்னிருந்து எட்டி பார்த்து கூற....

ஷியாம் : ஆமா ஆமா... ஒன்ற லிட்டர் தண்ணிய என் மேல தெலிச்சு விட்ட... என கைகளை நீட்ட... அவன் கைக்கு... அடங்காமல் விளையாடிக் கொண்டிருந்த அவளின் கற்றை கூந்தலே சிக்க.... அதை லாவகமாய் பிடித்தவன் இழுக்க....

தியா :ஆஆ... டேய் எருமமாடே...விடு டா வலிக்கிது.... அம்மா.... என கத்த.... வீடே அதிர்ந்து போனதும்... ஓடி வந்தார் அம்ருதா...

அம்மி : என்னடி ஆச்சு... ஏன் டி இந்த கத்து கத்துர...

தியா : அம்மா... அண்ணா என் முடிய புடிச்சு இழுத்து என்ன அறஞ்சிட்டான்... என கண்ணத்தில் கை வைத்து நீலிக்கண்ணீர் வடிக்க....

ஷியாமோ அவளின் குற்றச்சாட்டிற்காய் தைரியமாய் காத்திருந்தவன்...." இழுத்து என்ன அறஞ்சிட்டான்... " என்று அவள் கூறி கேட்டதுமே... தானாய் அவன் கையிலிருந்து தியாவின் கூந்தல் நழுவி ஓட... இப்போது தப்புவது ஷியாமின் முறையானது... அம்மி அவனின் பக்கம் கோபமாய் திரும்ப...

ஷியாம் : அடியே பிசாசே... நா எப்போ டி அறஞ்சேன்....

தியா : இப்போ தான அறஞ்ச...

ஷியாம் : அம்மா நம்பாத.. உன் பொண்ணு பொய் சொல்றா... வேணா பாட்டி கிட்ட கேளு... என பாட்டியின் புறம் திரும்ப... நிச்சயம் தன் பேரன் பேத்தியின் கனல்கள் தன் புறம் திரும்பும் என உணர்ந்திருந்த அந்த அனுபவமிக்க ராசாத்தி எப்போதோ அங்கிருந்து பறந்திருந்தார்...

அம்மி : உனக்கு எத்தன தடவ சொல்லீர்க்கேன்... வயசு பொண்ண அடிக்க கூடாதுன்னு... கேக்கவே மாட்டல்ல...

ஷியாம் : அய்யோ.. நீ சொல்றதுக்கு முன்னாடில இருந்தே நா அவள அடிச்சதில்லையே.. அடிச்ச மாரி அவ தான சீனையே க்ரியேட் பன்னுவா...

இதற்கு அம்மியிடமிருந்து பதில் வராது தோசை கரண்டியுடன் முன்னேற....

ஷியாம் : நாம சொன்னது கேக்கலையா... என குழப்பமாய் கேட்க...

அவன் காதருகில் எக்கிய தியா... அது முடியாமல் போகவும்... சலித்தவாறு அவனுக்கு கேட்குமென....

தியா : ப்ரதர்.. அதுக்கு வெளிய சொல்லனும்.. மனசுக்குள்ள சொல்லிகிட்டா கேக்காது... என நக்கலாய் முனுமுனுக்க....

அப்போது சத்தமாய் கூறுகிறோமென மைண்ட் வாய்சில் பேசியது அவனுக்கு புரிய வந்தது...

ஷியாம் அம்மியை பீதியுடன் காண... அவனை காக்கவே வந்தது அந்த தொலைபேசி அழைப்பு... அதை கண்டு அம்ருதா திரும்பவுமே.... தியாவை நன்கு கிள்ளிவிட்டு சோபாவில் தள்ளிவிட்டுவிட்டு மாடிக்கு ஓடினான் ஷியாம்.... தியா இப்போதும் " அம்மா... டேய் உன்ன சும்மா விட மாட்டேன் டா.." என கத்தியவாறே அவனை துறத்திக் கொண்ட ஓடினாள்..

அண்ணன் தங்கை இடையில் எப்போப்பாரு இதே போல் சண்டை தான்.... ஷியாம் இப்போது மருத்துவராய் ஒரு பன்னாட்டு மருத்துவமனையில் பணி புரிந்து வருகிறான்... நம் தியா நான்காம் ஆண்டு மருத்தும் பயில்கிறாள்....

--------------------------------------------

லண்டன்

நேரமில்லாமல் அவரவர் பணியிற்காய் அந்த மிகப்பெரிய இன்டர்நெஷ்னல் நிறுவனத்தில் மிக பறபறப்பய் செயல் பட்டு கொண்டிருந்த பல வெள்ளையர்களின் இடையில்.... பார்த்த உடன் தமிழனென கண்டறியும் மாநிரத்துடனும்.... தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் மீசையுடனும்... ட்ரிம் செய்த தாடியுடனும்... கைககளா டம்புல்சா என சந்தேகிக்கும் பலமுடையவனாகவும்.... அனைவரின் கவனத்தையும் தன் புறம் நேரத்திற்கு ஒரு முறை ஈர்க்கும் வித்யாச ஈர்ப்புடனும் ஒரு தனி சேரில் மும்மரமாய் வேலை பார்த்து கொண்டிருந்தான் நம் நாயகன் ஆதித்...

அவனை சுற்றியிருந்த பலரும் அவனை கவனித்தலும் அவன் வந்த நாளிலிருந்து எவரையும் கவனித்ததில்லை.... அவனை மொய்க்கும் கண்களில் சிலது அவன் அழகையும் ஸ்டைலையும் மொய்க்க விரும்ப.... மற்றதுகளோ... அவன் அமைதியை கண்டு ஏதோ பயத்துடனும்... சிலது அவனது பதவியை கண்டு அதிர்ச்சியுடனும் இருந்தது...

ஏனெனில் அந்த இன்டர்நெஷ்னல் கம்பெனியில்.... வெள்ளையர்கள் மட்டுமே பணிபுறியும் கிளை அது... அதில் மற்ற நாட்டவனாய்... ஒரு தமிழனாய் அதுவும் அனுபவமற்ற ஒரு இளைஞன் அமர்ந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தித்குள் முக்கியது...

தீரா : தமிழன்னா என்ன கேவலமா போச்சா உங்களுக்கு..😡

தன் கேசத்தை கோதி எழுந்தமர்ந்த ஆதித்... அவனை மொய்க்கும் ஈக்களை கண்டும் காணாமல் எழுந்து நேராக அந்த இன்டர்நெஷ்னல் கம்பெனியின் சீயிஓவின் அறைக்குள் நுழைந்தான்.... மற்றவர்கள் இந்த இரெண்டு வாரத்தில் அவன் செய்வதை எல்லாம் கண்டு அதிர்ந்ததை போலவே இன்றும் இதை கண்டு அதிர்ந்தனர்...

ஏனெனில் ஆதித் இந்த கம்பெனியில் வேலையில் அமர்ந்து இரண்டு வரமே கடந்திருந்தது.... அவன் முன்பிருந்த கம்பெனியில் அவனை தாங்க இயலாமல் இங்கே அனுப்பி வைத்துவிட்டனர் என்ற விஷயமும் அனைவரும் அறிந்ததே.... இந்த இரண்டு வாரத்தில் ஊளியனாய் அவன் செய்யும் வேலைகளை விட அனைவரும் பயந்து நடுங்கும் சீயிஓ முன்னே தைரியமாய் செய்யும் வேலைகள் அதிகம்....

பயமில்லாமல் அவனுக்கு தோன்றியதை அவன் செய்ய என்றும் தயங்கியதில்லை.... இன்று சீயிஓவின் அறைக்குள் அனுமதியன்று உள்ளே நுழைந்தவனின் வரவிற்காய் அனைவரும்.... வழி மேல் விழி வைத்து காத்திருக்க.... அவர்கள் எதிர்பார்த்தவனின் வருகை தான் அங்கு கிடைக்கவில்லை.... அதற்கு பதில்.... 14ம் மாடியிலிருந்து 20 ஆம் மாடியான இந்த தளத்திற்கு லிஃப்ட் வழியே ஓட்டமும் நடையுமாய் வந்தான் ஒரு ஆறடி அழகன்...

தமிழனுக்கே உறிதான முருக்கு மீசையுடன்... மடித்துவிட்ட முழுகையுடன்.... ஸைடைலாய் இருக்கும் அவன் நடையுடனும் சீயிஓவின் அறைக்குள் எந்த அனுமதியுமின்றி ஆதித்தை போலே உள்ளே நுழைந்தான் அவன்....

-----------------------------------------------------

பித்து பிடித்தவளை போல் நின்ற உத்ரார... தோட்டத்திலிருந்து சட்டென எதிர்திசையில் ஓட தொடங்கினாள்...
இவள் எத்திசையில் ஓடுகிறாள் என்பதை கவனித்ததும் அவளை துறத்தி வந்த தோழிகளின் ஓட்டம் தானாய் நின்றது...

அன்கி : வா டி.. அவ அங்க தான் போறா.. நாம வீட்டுக்கு போகலாம்...

மிரு : அவ ஏன் அங்க போறான்னு தெரியல... நாம பின்னாடியே போனாலும் கண்டபடி திற்றா...

அன்கி : அவளுக்கு விடிவுகாலம் வரும் டி... கவலப்படாத...

மிரு : அதுக்கு கான்... நானும் காத்திருக்கேன்.... என அன்கியுடன் அவளின் வீட்டிற்கு நடையை கட்டினாள்....

உத்ரா எங்கு செல்கிறாள்....

யாரந்த புதியவன்...

பொருத்திருந்து பார்ப்போம்....

நீ... நான்...

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro