Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

01 நீ... நான்...

ஹலோ... நான் தியாரா.... தியா.... நான் ஒரு குட்டி பாப்பா ங்க...எனக்கு 16 வயசாகுது... சாரி ஆவப்போது.... இன்னும் நாள் இருக்கு... நான் இலெவென்த் படிக்கிறேன் பா...எனக்கு நெரையா ப்ரெண்ட்ஸ் இருக்காங்க...... என் குடும்பத்த பாத்தீங்க ன்னா... கண்டிப்பு ன்னா என்னன்னு கேக்குரது மட்டுமில்லாம அப்பப்ப திற்றதுக்கு வார்த்த சொல்லிக் குடுக்கர அப்பா தேவராயன்.... அன்பான அப்ரம் என்ன திட்டிக்கிட்டே இருக்குர அம்மிங்குர என்னோட மம்மி... அம்ருதா..... அப்ரம் என் கூட பொறந்த என் கொரங்கு அண்ணனுங்க... என் மேல பாச மழைய கொட்டோ கொட்டுன்னு கொட்டுவானுங்க... அப்பப்போ மண்டைலையும் கொட்டுவானுங்க.... ஒருத்தன் காலேஜ் பிஏ பைனல் இயர் படிக்கிறான்.... படிச்சது இரெண்டு வார்த்த அதையும் தல கீழ படிச்சிவச்சிர்க்கான் என் அண்ணன்...😁😁 ( இது மட்டும் அவன் காதுல கேக்கட்டும் என் நிலம ஊ ஊ தான்... ) இன்னோருத்தன் அதே காலெஜ் ல எம்பி.பி.எஸ் பர்ஸ்ட் இயர் படிக்கிறான்.... எம்பி.பி.எஸ் புல் பார்ம் கேளுங்குள அவன்ட்ட கண்ணு வெளிய வந்து விழுவுர மாரி முளிப்பான்...கடசி வர பதிலே சொல்லமாட்டான்.... (அடியேய் உனக்கு தெரியுமா ன்னு உன் கிட்டையே கேற்ற போறாங்க டி ...... அடுத்த டாப்பிக்குக்கு ஓடு.... )
என் நண்பிகல பாத்தீங்கன்னா.... அதல்லா அப்ரமா சொல்றேன்....

ஒருவன் : ஏய் குட்டி பிசாசே போ அந்த பக்கம்...

ரதி : இரு டா போறேன்....

ஹாய் மக்களே....நான் ஷியாம்..ஷியாம் கார்த்திக்.... தோ போச்சில்ல ஒரு குட்டி பிசாசு அதோட இரெண்டாவது அண்ணன்... இந்த வர்ஷம் தான் பா எம்பிபீஎஸ் பர்ஸ்ட் இயர் ஜாய்ன் பன்னீர்கேன்... நா ரொம்ப ஜாலி டைப்... என் தங்கச்சிக்கு அன்பான அப்ரம் ஹிட்லர் அண்ணன்... எனக்கும் மேல ஒருத்தன் இருக்கான்.... ப்பா சுத்த படிப்ஸ்.. இரெண்டு வாயாடிங்க கூட பொறந்துட்டு அவன் எங்கள்ள பாதி கூட வாய திறக்க மாட்டாங்க.... படி படி ன்னு உசுர வாங்குவான்... அவன யார் படிக்க வேணாம்னது... என்ன தான படிக்க வக்க வேணாம்ங்குர.... எல்லார் வீட்லையும் பாத்தா அம்மா புள்ளை பக்கம் அப்பா மக பக்கமும் நிப்பாங்க...இங்க பாத்தீங்கன்னு வைங்கிலேன்...எங்கள பெத்த தாய்குளமும் எங்க அப்பாவ பெத்த தாய்குளமும் அவன் பக்கம் நின்னா...எங்க அப்பாவும் தாத்தாவும் அவ பக்கம் நிப்பாங்க....நடுவுல ஒருத்தன் இருக்குரதையே மறந்துருவாங்க....

அம்ருதா : போதும் டா இன்ட்ரோ....டைம் ஆச்சு...கெளம்பு போ...

ஷியாம் : என்ன பொலம்பக்கூட விட மாட்டீங்களே...

அவன் : என்ன இங்க சத்தம்?? ஷியாம் படிக்கலையா நீ??? தியா... உன் டெஸ்ட் நோட் எங்க???

தியா : இப்ப தெரிஞ்சிர்க்குமே... இவன் யாருன்னு...

நான் ஆதித்தன்... நீங்களாம் யாரு... என்ற கரரான குரலை கேட்டு...

தீரா : அச்சச்சோ.. இன்னுமா எல்லாரும் இங்க இருக்கீங்க... ஓடுங்க பா... அவன் வந்தா... நம்ம கதி அதோ கதி தான்...

ஆதி : தீரா...

தீரா : அச்சச்சோ வந்துட்டான்... அன் என்ன டா ஆதி???

ஆதி : படிக்கலையா நீ...???

தீரா : அடப்பாவி நானுமா...

ஆதி : நீயும் ஸ்டூடென்ட் தான போய் படி...

தீரா :நா இங்க இருந்தா என்ன இவன் எக்ஸமே எழுத சொல்லுவான்... நா எஸ்கேப்பு...

தியா : சாப்ட்டுட்டு போடி...

தீரா : அப்ரமா சாப்ட்டுக்குறேன் போடி....

குடும்பத்தலைவன் தேவராயன் சோபாவில் அமர்ந்து செய்தி தாள் வாசித்துக் கொண்டிருக்க.... மற்றொரு சோபாவில்... " கண்ணுக்குள்ள நிக்கிர என் காதலியே " என அவர்கள் முன் இருந்த டீவி பாட்டை பாட... மாடர்ன் முதிய ஜோடி... ஒருவரையொருவர் இடித்து இடித்து ஆடிக் கொண்டிருந்தது... அவர்களே ஆதி ஷியாம் தியாவின் தாத்தா பாட்டி... ராஜேந்திரன் மற்றுற் பிருந்தா.... அவர்களின் அன்பு மருமகள் மகாலட்சுமியாய் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு... அவர்களுக்கு தேனீர் கொடுத்து விட்டு சமையலறையில் நுழைந்தார் அம்ருதா....

அனைவரும் கிளம்பி கீழ் வர... சுட சுட இட்லி பரிமாறப்பட்டது.... அம்ருதாவின் பூ கரங்களால்... அனைவரும் உண்டு முடிக்க... சரியாய் தியாவின் பள்ளி வாகனம் வந்து நிற்க... அரக்க பறக்க ஓடியவள்.... " போய்ட்டு வரேன் " என பொதுவாய் கத்திவிட்டு.... அவள் அண்ணன்களிடம் தனியாய்.... " பாத்து போய்ட்டு வாங்க அண்ணாஸ் " என கத்திவிட்டு ஓடினாள்...

ஆதி ஷியாம் : நீயும் பாத்து போய்ட்டுவா... என பதிலுக்கு கத்தினர்....

ஆதி அவன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப.... ஷியாம் அவனின் நண்பனை அழைக்கவென அவன் நண்பன் வீட்டிற்கு சென்றான்...

.....................
நினைவுகளில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தவனை உலகிற்கு கொண்டு வந்தது தென்றல் காற்றின் தீண்டல்.... தன் சிகை தென்றல் காற்றினால் நெற்றியில் நடனமாடிக் கொண்டிருக்க.... கண்களோ அணைகட்டி மூடியிருக்க.... உள் மனமோ... சில வருடங்கள் முன்பே தொலைந்திருந்த நிம்மதியை வலை வீசி தேடிக் கொண்டிருக்க.... தலை வலி வேறு பின்னி எடுக்க.... அவன் மனம் ஒருவளுக்காய் ஏங்கி தவித்தது.... அதை உணர்ந்துக் கொண்ட அவன் மூளை வெகுவாய் சினம் கொண்டு அவனை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தது... தன் கரத்தால் கேசத்தை அழுந்த கோதியவன்... தீரைசேலைகளின் இடுக்கிலிருந்து வந்த சூரிய ஒளியின் ஊந்துதலால் இருகியிருந்த தன் கண்களை திறந்தான்.... 26 வயது ஆணழகன்... மற்றும் நம் கதாநாயகன்.... ஆதித்தன்....

ஆறடி ஆணழகன்.... கட்டுக்கோப்பான தேகம்... இருகியிருந்த இதழ்... நெற்றியில் " எனக்கு உன் அனுமதி தேவையே இல்லை " என அவனின் அனுமதி இல்லாமலே தைரியமாய் நடனமாடி அலைபாயும் கேசம்.... தீப்பொறி போன்ற கண்கள்... என பெண்கள் கண்டால் மயங்கி விழுந்தாலும் கண்டுக்கொள்ளாமல் ஈர்த்திழுக்கும் அழகுடையவன்....

அவன் செவிகளை வந்து வந்து தீண்டியது ஒரு மென் குரலின் ஆதன் ஆதன் என்னும் அழைப்பு... அதை செவி சாய்க்க விரும்பாதவன் எழுந்து தீரைசேலைகளை ஒதுக்கி விட்டு பால்கெனியில் நின்று அக்காலை வேளையை இரசிக்களானான்.... அது மற்றவர்களுக்கு மட்டுமே... அவன் கண்களோ... அக்காளை வேளையை விட்டு விட்டு ஏதோ ஓர் இலக்கை தேடி கொண்டிருந்தது... ஆனாலுமே அவ்வழைப்பு அவனை தீண்டுவதை நிறுத்தவில்லை....

மெல்ல மெல்ல அவனின் மனநிலை மாறியது... மனநிலை மாறியது அவ்வழைப்பிலிருந்து தப்பித்ததினாலே என இவன் நினைத்திருக்க... அவன் நிலையை மாற்றியதே அவ்வழைப்பு தான் என என்று உணர்வாணோ....

16:09:2019
26:01:2020
27.02.2020

நீ... நான்...

ாய் இதயங்களே... அடுத்த அத்யாயம் தர தாமதமாகும்... இன்னைக்கு என் தோழிக்காக தான் இந்த அத்யாயம்.. ரொம்ப நாள் களிச்சு வட்டி வந்துருக்கா... அடுத்த யூடி முடிஞ்சளவு சீக்கிரமே குடுக்க ட்ரை பன்றேன்... எனக்கு ஆதரவளிக்க மறந்துராதீங்க பா...

முதல் முதல்ல காதல் கதை எழுதப்போறேன்.... இறைவா... என்னையும் இந்த கதைய படிக்க போறவங்கையும் நீ தான் பத்திரமா பாத்துக்கனும்.....

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro