நட்புக்காக!
ஒரு நல்ல நண்பன், நூறு உறவினர்களுக்கு சமம் என்பார்கள்.. ஆனா நமக்கு வாய்க்கிறதெல்லாம்..!?🤣🙃
ஆனால் வாட்பேடில் உங்களோடு நட்புப் பாராட்டும் நல்லுள்ளங்களுக்கு ஒரு அங்கீகாரம் தருவதற்காக, ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று விருதுகள்!!!
● வாட்பேட் நட்புவட்டம் 2021 (வாட்பேடில் சந்தித்து நட்பாகிய நண்பர் குழு ஒன்று)
● நண்பேன்டா 2021 (வாட்பேட் வாசகர்களால் மிகச் சிறந்த நண்பனென்று தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர்).
● தமிழ் வாட்பேடின் 'செல்லப்பிள்ளை' 2021 (இந்த வருடத்தில் அதிக நண்பர்களை சம்பாதித்த ஒருவர்)
ஒருவர் எத்தனை விருது வகையில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்!! "நட்புவட்டம்" விருதிற்கு மட்டும் குழுவாகப் பங்குபெறல் வேண்டும். மற்றவற்றிற்கும் நண்பர்கள் துணை வேண்டும்.
மூன்றிலும் பங்குபெற விரும்பும் அன்பர்கள், தங்கள் நண்பர்களையும் இங்கே tag செய்யவும். என்ன விருதிற்காக என்பதை, மேலே தரப்பட்டுள்ள வகைக்கு நேரே கமெண்ட் செய்யவும்.
போட்டியாளர்களுக்கு விதிமுறைகள் வழக்கமானவை தான். இந்த விருதுப் புத்தகத்தை உங்கள் "reading list"ல் சேர்த்துவிட்டு, ஆதரவுக்காக இரண்டு நபர்களை(போட்டியிடுவோரைத் தவிர்த்து) tag செய்யவும்.
மேலும், உங்களுக்குத் தெரிந்த நல்ல நட்பான மனிதர்களையும், இதில் கலந்துகொள்ளச் சொல்லலாம்...
என்னைக் கேட்டால்.. நான்கூட ஒருவரை அழைக்க விரும்புகிறேன்..
MohanaUdayakumar அவர்களே.. எங்கிருந்தாலும் வரவும்!! 😁🤩🥰
சென்ற வருடத்தில்தான் வாட்பேடில் சந்தித்தேன் இவரை, இப்போதுவரை அற்புதமான உந்துதலாக இருந்து என்னை எழுத வைக்கிறார் இச்சகோதரி! இதுபோல உங்களையும் ஊக்குவிக்கும் நண்பர்களை அழைத்துச் சொல்லுங்கள் இவ்விருதைப் பற்றி!!
நட்புடன்,
தமிழம்💫
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro