நிரல்
வணக்கம் வணக்கம் வணக்கம்!
என்னடா விருது விழாவை ஆரம்பிச்சு வச்சுட்டு ஆள் அட்ரஸ் காணாம போயிட்டேன்னு திட்டிக்கிட்டு இருக்கற மக்களுக்கு ஒரு பலத்த மன்னிப்போடு இங்கே மீண்டும் வருகிறேன்!!
I'm very elated and proud, to announce, that the Event is Onnn!!!!!
ஆம் மக்களே! நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த(???) தமிழம் விருதுகள் 2021 மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்குகிறது!!! இந்த முறை எந்த சுணக்கமும் இருக்காதுன்னு எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொண்டு, கற்பூரம் காட்டி கடையைத் தொறக்கறோம்!😅🤣😂
நிகழ்ச்சி நிரல்.
சிறந்த தமிழ்க் கதைகளுக்கான தேடல்.
ஜூன் 25: புதுப் படிவங்கள் வெளியீடு.
ஜூன் 25- 30: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூன் 30: விண்ணப்பத் தேதி முடிவடைகிறது.
ஜூலை 1: போட்டியில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் விபரம்.
ஜூலை 31: வெற்றியாளர்கள் அறிவிப்பு.
கஜினி மாதிரி பழசெல்லாம் மறந்துட்ட சில போட்டியார்களுக்காக, மீண்டும் ஒருமுறை அறிவிப்பு.
என்னென்ன விருதுகள்?
சிறந்த கதைகள் 2021!
● காதல் கதை: மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?? 2021ன் சிறந்த காதல் கதையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாவலுக்கு, தமிழம் விருது ஸ்டிக்கரும், எழுத்தாளருக்கு சான்றிதழும்.
● நகைச்சுவைக் கதை: வயிறு குலுங்கச் சிரிக்கவைத்து, வாசகர்களைக் கட்டிப்போட்ட சிரிப்புச் சித்திரங்களில், சிறந்த நகைச்சுவைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாவலுக்கு, தமிழம் விருது ஸ்டிக்கரும், எழுத்தாளருக்கு சான்றிதழும்.
● ஹாரர் கதை: 2021ன் சிறந்த அமானுஷ்ய கதையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாவலுக்கு, தமிழம் விருது ஸ்டிக்கரும், எழுத்தாளருக்கு சான்றிதழும்.
● மர்மம்: 2021ன் சிறந்த ஸஸ்பென்ஸ், திரில்லர் கதையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாவலுக்கு, தமிழம் விருது ஸ்டிக்கரும், எழுத்தாளருக்கு சான்றிதழும்.
● பெண்ணியம்: பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, சமுதாய செய்தியோடு எழுதப்பட்ட சிறந்த நாவலுக்கு, தமிழம் விருது ஸ்டிக்கரும், எழுத்தாளருக்கு சான்றிதழும்.
● அறிவியல் புனைவு: கணினி மனிதர்கள், எந்திரர்கள், அயல்ஜீவிகள் என்று கற்பனையைத் தூண்டும் சிறந்த அறிவியல் கதையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாவலுக்கு, தமிழம் விருது ஸ்டிக்கரும், எழுத்தாளருக்கு சான்றிதழும்.
● மாயாஜாலம்: தேவதைக் கதைகள் முதல், கிரேக்க கடவுளர்களின் கதைகள் வரை, கண்முன்னால் அந்த மாய உலகைக் கொண்டுவரும் அழகிய மாயக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாவலுக்கு, தமிழம் விருது ஸ்டிக்கரும், எழுத்தாளருக்கு சான்றிதழும்.
அவ்ளோதான் கதைகளுக்கு.
மீதியெல்லாம் கதைக்காரர்களுக்கு!😉😍😘
சிறந்த கவிஞர் , சிறந்த வாசகர், சிறந்த இளம் முனைவர், சிறந்த பாடகர்னு, ஏகப்பட்ட ஐட்டங்கள் வச்சிருக்கோம் இந்த 12b ஃப்ளாட்ல!🤣🤣
முந்தைய அத்தியாயத்தில அதன் விபரங்கள் இருக்கும். மேற்சொன்ன கதைகளுக்கான தேர்வு மட்டும் தான் கூகுள் படிவங்கள் மூலமா நடைபெறும். பிற கேட்டகரிகளுக்கு, இங்கேயே நேரடியா போட்டி நடைபெறும்.
அடுத்தடுத்த அப்டேட்களில், அடுத்தடுத்த போட்டிகளுக்கான விபரங்கள் வெளியிடப்படும்.
என்ன டவுட்னாலும் தயங்காமக் கேளுங்க!!!
அன்புடன்,
தமிழம் விருதுகள் குழு.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro