சிறந்த கவிஞர் 2021
இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ். அவை மூன்றையுமே தங்கள் கவிதைகளில் குழைத்து, வார்த்தை விளையாட்டில் வாழ்க்கைக் கதைசொல்லும் சொற்சிற்பிகளுக்காக, தமிழம் வழங்கும்...
சிறந்த கவிஞர் 2021 விருது!
ஹைக்கூவாக இருக்கலாம்... பக்கங்களை மீறும் புதுக்கவிதையாக இருக்கலாம்... மரபுகளோடு எழுதும் வெண்பாவாகக் கூட இருக்கலாம்.. ஏன், பாரதியைப் போன்ற வசன கவியாகக் கூட இருக்கலாம்.
கவிதைகள் என்றாலே அழகுதானே??
உங்களுக்குத் தெரிந்த கவிஞர்களை இங்கே இழுத்து, போட்டிக்குப் பெயர்கொடுக்கச் சொல்லவும்!
போட்டிக்கு நிற்க விரும்பாத கலைஞர்கள், "no thanks" என்று கமெண்ட் செய்துவிட்டு விலகிக்கொள்ளலாம்.
போட்டிக்கு வரும் ஜாம்பவான்களே, உங்கள் கவிதைக்குக் கைதட்ட, உப கவிகளை அழையுங்கள் இங்கே! உங்களுக்கு ஆதரவு தருவதற்காக இரண்டு நண்பர்களை இங்கே tag செய்யவும்.
மேலும், தமிழம் விருது புத்தகத்தை உங்களது "reading list"இல் சேர்க்கவும்.
முதல் கட்ட தேர்வுகள் முடிந்ததும், தேர்வாகும் போட்டியார்களின் பட்டியல் இந்த புத்தகத்திலேயே வெளியிடப்படும்.
வெற்றிபெறும் சிறந்த கவிஞருக்கு, தமிழம் விருதுகள் வழங்கும் ஒரு சான்றிதழும், இப்புத்தகத்தில் அவரது பெயர் பதிப்பும் கிடைக்கும்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
தமிழம்💫
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro