அழைப்பு
மீண்டுமொரு அன்பான, இதமான, மென்மையான வணக்கம். நேற்று மாலையிலிருந்து விடாமல் பெய்துகொண்டிருக்கும் மழையை பால்கனியில் தூறல்படாத இடத்தில் அமர்ந்து மடியில் ஒரு தலையணையும், காதில் ரெஹ்மானின் இசை ததும்பும் ஹெட்ஃபோனும் வைத்துக்கொண்டு உங்களிடம் பேசிக்கொண்டிருப்பது, உங்கள் மது.
விழா என்று வைத்தால், அதற்கு முறையாக அழைப்பு வைக்க வேண்டுமல்லவா? மஞ்சள் தடவிய பத்திரிக்கையை, தாம்பூலத் தட்டில் பூ,பழம், வெற்றிலை பாக்கோடு வைத்து, மேளதாள வாத்தியம் முழங்க வந்து உங்கள் அனைவரையும் வரவேற்க வேண்டுமென்பதுதான் என் ஆசையும்... ஆனால் பெய்யெனப் பெய்யும் மழையைப் பார்த்தால் அரை அங்குலம்கூட நகரத் தோன்றுவதில்லையே!😅
எனவேதான் இந்த வெர்ச்சுவல் அழைப்பு!
வாய்வார்த்தையாக அழைத்தது போதுமென, ஒரு புதுமையான முறையால் அழைக்கிறோம்... உங்களை, உறவுகளை, உற்றாரை, ஊர்மக்களை! வாட்பேடின் ஆகச்சிறந்த அழைப்பு அம்சமான tag எனப்படும் நுண்ணியல் அழைப்பிதழைக் கொண்டு!
Tag: சிறுவயதில் தொட்டு விளையாடும் விளையாட்டிற்கு இந்தப் பெயர் உண்டு. இப்போது வளர்ந்துவிட்டோமல்லவா? கைபேசித் திரையின்மூலம் உங்கள் நண்பர்களைத் தொடுவதற்கு, ஒரு '@' உபயோகப்படுத்தினால் போதும்!!
யாரைத் தொட்டு அழைப்பது??
அதற்கும் சில சுவாரசியமான விபரங்கள்: (ஒவ்வொரு எண்ணிற்கு நேராகவும் tag செய்யவும்)
1) வாட்பேடில் நீங்கள் முதன்முதலில் சந்தித்து, பேசி, நண்பரான ஒருவரை இங்கே tag செய்யவும்!
2) இன்றுவரை வாட்பேடில் உயிருக்குயிரான நண்பர்களாக இருப்பவர்களை இங்கே அழைக்கவும்!
3) யாருடைய கதையை முதன்முதலில் வாசித்தீர்கள்? அவரை இங்கே அழைத்து, கதையைப் பற்றி இரண்டு பாராட்டுக்களைச் சொல்லவும்.
4) 2020ல் கைபேசியைக் கையை விட்டு வைக்காமல் மும்முரமாக வாசித்த கதை யாருடையது? அவரை இங்கே அழைக்கவும்!
5) உங்கள் @ல் ஐந்தாவதாக இருக்கும் நபரை இங்கே அழைக்கவும்.
6) வளர்ந்துவரும் எழுத்தாரளாக உங்களுக்குத் தோன்றும் ஒரு இளம் திறமையாளரை இங்கே அழைக்கவும்.
7) நீங்கள் எழுத்தாளராக இருந்தால், உங்கள் கதையை முதல் முதலாக வாசித்து, நட்சத்திரம் தந்தவரை இங்கே அழைக்கவும்.
8) நீங்கள் எழுதிய நுணுக்கமான பாயிண்ட்டைக் கூடக் கவனித்துப் பாராட்டும் ஒரு உண்மையான வாசகரை இங்கே அழைத்து நன்றி கூறலாம்!
9) உங்கள் நலம்விரும்பி என்று நீங்கள் நினைக்கும் ஒரு நபர்.
10) நீங்கள் நலம்விரும்பியாக இருக்க விரும்பும் ஒரு நபர்.
11) இவருடைய கதைப் படித்தால், உதட்டில் ஒரு குறுஞ்சிரிப்பு கேரண்ட்டி, என்று கூறுவமளவு ஒருவர்.
12) இவருடைய கமெண்ட் ஒன்றைப் படித்தாலே அன்றைய நாள் முழுக்க சிரிப்பு மனதில் இருக்கும் என நீங்கள் நினைப்பவர்.
13) கமெண்ட்டில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, அட்டகாசமாக உங்களை ரசிக்க வைத்தவர்கள்.
14) கடைசியாக, யாரெல்லாம் இந்த விருது விழாவில் கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவர்கள் அனைவரும்!!!
உங்கள் அழைப்புகள் வெகு தூரங்களுக்கு சென்று சேருமென நம்புவோம்! நாலாபுறமும் இருந்தும் வாசகர் வெள்ளம் திரளட்டும், காத்திருக்கிறோம்!!!
நன்றி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro