தமிழ்
எண்ணிலடங்கா அமுதசுரபி என் தாய்த்திருதமிழ், என்றும் வற்றாத
சொல்வளமிக்க இளமைத்தமிழ்!
கவிஞனுக்கு நண்பன்,
கலைஞனுக்கு தோழன்,
அன்புக்கு அன்னை,
அறிவுக்குத் தந்தை,
உண்மைக்கு சகோதரி,
குரு கொண்ட ஆற்றலாய்,
உணர்வுகளுக்குப் பல்லுறவு
கொண்ட பல்சுவைத்தமிழ்
எங்கள் பைந்தமிழ்!
மரணித்த கலைஞர்களையும்,
உருவத்தில் வாழவைக்கும்
உறுதிகொண்ட உயிர்த்தமிழ்
என் தாய்த்தமிழ்!
ஏர்முகம் கொண்ட மலைகளாய்,
பசுமையடர்ந்த காடுகளாய்,
நளினம் கொஞ்சும் நதிகளாய்,
எண்ணற்ற இயற்கையாய்,
தமிழர்களின் கனவுகளிலும்,
கவிஞர்களின் நினைவுகளிலும்
நீங்காது வாழ்பவள் எங்கள் கலைத்தமிழ்!
மனத்தில் காணும் அழகை,
எழுத்தில் வைக்க மறந்தாலும்,
நினைக்கும் தருணம் எண்ணத்தில்
துணையாய் வந்து நிற்பது,
எங்கள் மரபுத்தமிழ் மொழியே!
எழுத்து எம்முடையது என்று மார்தட்டினாலும்,
தடுத்து அது எம்பற்றியது என உரைக்கும் உரிமைத்தமிழ்
எங்கள் வீரத்தமிழ்!
எண்ண அலைகளில் வண்ணம்பூசி,
வீசி விளையாடும் கவிதைத்தமிழ்
எங்கள் இலக்கியத்தமிழ்!
அளவில்லா ஆனந்தம் உச்சரிப்பில்,
நிகரில்லாப் பேரின்பம் அவள் மொழியழகில்...
எழுத்தை நிறைவுற மனமில்லை எனக்கு! இதுவல்லவோ என் தமிழ் மொழியின் சிறப்பு!
எங்கள் தமிழ் மனது பிடிக்காத போதும்,
எங்கள் கவிதை படிக்காத போதும்,
தமிழ்க்குழந்தை எங்கள் எண்ணங்களில் என்றும்
தவழுகிறாள் என்ற பெருமையோடு
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro