அத்யாயம் - 2
ஒரு மணி நேர போராடத்திற்க்கு அங்கிருந்த நர்ஸ், டாக்டர், ஆயா, ப்யூன் என்று அனைவரையும் மடக்கி போலீஸிடம் கேஸ் செல்லாமல் பார்த்துக்கொண்டனர்.
"ஏண்டா ஒவொன்னும் ஒவ்வொரு ரகமால இருக்கு?" தன்னை சுற்றி பார்த்து நொந்துகொண்ட ஹரி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த சிவாவை ஒரு மிதி மிதிக்க அந்த கட்டிலே ஒரு ஆடு ஆடி நின்றது.
எங்கிருந்து தான் வந்ததோ அந்த நர்ஸ் ஆண்ட்டி, "என்ன சார் பண்ணுறீங்க பேஷன்ட் தூங்கிட்டு இருகப்ப இப்டியா அவரை டிஸ்டர்ப் பண்ணுவீங்க? டாக்டர் ரவுண்ட்ஸ் வரப்ப பாத்தா எங்களை தான் திட்டுவாங்க. வேற எதாவது இடத்துல அடி பட்ற போகுது"
அரசு சம்பளம் வாங்குபவருக்கே உரித்தான திமிரும் அவர் பேச்சிலே தெரிய அவர் சென்றவுடன் மீண்டும் சிவாவுக்கு ஒரு எத்து பரிசாக கிடைத்தது, "தீஞ்சதும் தேஞ்சதும் உன்னால என்ன பேசுது" என்று பொருமினான் ஹரி.
"டேய் இவன தூக்கிட்டு போகலாம்டா கொசு கடி வேற தாங்கல" இப்பொழுது கார்த்தி புலம்ப டிஸ்சார்ஜ் பேப்பர்ஸ் மற்றும் பில்லுடன் வந்தான் ப்ரேம்.
"டேய் ஒரு ஐயாயிரம் தாங்கடா" என்றான் அவன்.
"என்னமோ குடுத்து வச்ச மாதிரி கேக்குற. போடா அங்குட்டு கடுப்ப கெளப்பாம" தன் கன்னத்தில் ஊசி குத்திக்கொண்டிருந்த அந்த கொடூர ஜீவனுக்கு கார்த்தி ஒரு அடி குடுக்க பாவம் அது ரத்தம் கக்கி இறந்தது.
"டேய் பில் ப்பே பண்ணா தாண்டா விடுவாய்ங்க" ப்ரேம் இருவரையும் ஆச்சிரியமாக பார்த்தான்.
"அப்ப ப்பே பன்னிரு மச்சி ஏன் கேக்குற?" எதுவுமே எனக்கு தெரியாது நான் ஒரு ஒன்றரை மாத குழந்தை என்பது போல் முகத்தை வைத்து கூறினான் ஹரி.
"நேத்து... அண்ணே ஒரு கோக், அண்ணே இன்னொரு பீர்... இன்னொரு பீர்ன்னு... கேட்டு கேட்டு வாங்கி குடிச்சது மறந்து போச்சா? ஒரே நாள்ல என்ன ஆண்டி ஆகிட்டு பேச்ச பாரு... ஒழுங்கா காசு தாங்கடா" பொறுமையை பிடித்து வைத்துக்கொண்டு கேட்டான் ப்ரேம்.
தன்னுடைய பாண்ட் பாக்கெட்டினுள் கைவிட்ட ஹரி, "நீங்க கூப்பிட ஒடனே நம்ம சிவாக்கு என்னமோ ஏதோன்னு பதடத்துல வந்தேனா பர்ஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன்"
"ம்ம்ம் உருட்டு. உன் வாய், உன் இஷ்டத்துக்கு நீ உருட்டுடா. டேய் கார்த்தி காசு தாடா"
திரு திருவென முழித்த கார்த்தி, என்ன கூறுவதென்று தெரியாமல் முழித்த பொழுது ஹரியை பார்க்க ஹரி தன்னுடைய கழுத்தில் இருந்த செயினை காட்டி தன்னுடைய ஆள் காட்டி விரலை சிவாவை நோக்கி காட்ட அதை கற்பூரமாக பற்றிய கார்த்தி,
"இதோ சிவா கழுத்துல இருக்க செயினை எடுத்துக்கலாம் மச்சி அஞ்சே நிமிஷம் அடகு வச்சிட்டு வர்றேன் மிச்ச பணத்தை வச்சு பில் பெ பன்னிரலாம். இவன் கூறுகெட்டு போய் கைய அறுத்துட்டு கிடப்பான் இதுக்கு நாம ஊறுகாயா கழட்டுடா அந்த செயினை"
கார்த்தியின் கை வேகமாக மயக்கத்திலிருக்கும் சிவாவின் கழுத்திற்கு செல்ல அவன் கையை ப்ரேம் தட்டி விட்டான்,
"இப்ப அவன் இப்டி இருக்கதுக்கு காரணமே நாம தான். எவ்ளோ கஷ்ட பட்டு நம்ம கிட்ட சொன்னான் வழக்கம் போல கலாய்ச்சு தள்ளிட்டோம்?
இப்ப கத்தி கொஞ்சம் ஆழமா இறங்கி இருந்தா என்ன பன்னிருப்போம்? எப்பா நெனச்சாலே பதறுது. விளையாட்டு தனம் இருக்கலாம்டா ஆனா அது மட்டுமே இருக்க கூடாது. காசு இருந்தா தாங்க இல்லனா நான் வெளிய அரேஞ் பன்..."
அவன் கையில் அமைதியாக தன்னுடைய எ.டீ.எம் கார்டை திணித்து ஒரு வார்த்தை பேசாமல் மீண்டும் தான் அமர்ந்திருந்த அதே இருக்கைக்கு சென்று அமர்ந்தான் ஹரி.
ப்ரேமை போலவே கார்த்தியும் ஹரியும், சரி சமமாக பயத்துடன் தான் இருந்தனர். ஆனால், அதை வெளியில் காட்டிகொல்லாமல் அவர்கள் புலம்பும் வகை அல்ல இவர்கள் இருவரும் தங்களை வெளிக்காட்டி கொல்லாது இயல்பாக அந்த பிரச்னையை கடக்க நினைப்பவர்கள்.
அதை அறிந்தாலும் இந்த முறை அவர்கள் அந்த எல்லையை தாண்டிய உணர்வு எழவும் தான் ப்ரேம் பொங்கி எழுந்தான்.
'இத மொதயே செஞ்சிருக்கலாம்ல?' என்ற பார்வையுடன் பார்த்தவன்,
"எல்லாத்தையும் பேக் பண்ணுங்க இன்னும் பத்து நிமிசத்துல இவன் கண் முழிச்சிருவானாம் கிளம்பலாம்" என்று பிரேம் கூற,
அவன் கையிலிருந்த பில்லை வாங்கிய கார்த்தி, "பில் நா பெ பண்ணிக்கிறேன் நீ பேக் பண்ணு" என்று நகர்ந்தான்.
சரியாக பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு கண் விழித்த சிவாவை ஒருவரும் கண்டு கொள்ளவில்லை, மருத்துவமனையிலிருந்து கிளம்பியதிலிருந்து அவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு வரும் வரை இதே நடக்க அவர்களைப் பார்க்கவோ பேசவோ துணிவின்றி தரையை மட்டுமே வெறித்துப் படி மௌனம் காத்தான் சிவா.
ஹரி மட்டுமே கோய்ம்பத்தூரை சேர்த்தவன். கார்த்தி ஊட்டியும், ப்ரேம் திண்டுக்கல்லும், சிவா மதுரையையும் சேர்த்தவர்கள்.
பதினொன்றாம் வகுப்பிற்கு கார்த்தி, ப்ரேம், சிவா, கோவை வர ஹரியுடன் நட்பு ஏற்பட்டு கல்லூரி, வேலை என்று கோவை அவர்கள் இருப்பிடம் ஆனது.
ஆக கார்த்தி, ப்ரேம், சிவா மூவரும் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தானாகச் சமைத்து வாழ்கின்றனர் ஒரு சில நேரங்களில் ஹரியின் வீட்டிற்குச் செல்வர்.
இல்லையெனில், ஹரியின் தாய் இவர்களுக்கு விருந்தே அனுப்பி வைப்பார்.
வீட்டினுள் நுழைந்ததும் சோபா இல்லாத வரவேற்பறையில் ஆங்காங்கு நால்வரும் அமர நிசப்தம் மட்டுமே அங்கு குடிகொண்டது.
ஆளுக்கொரு அலைபேசியுடன் பேச்சை தவிர்த்துக்கொண்டிருந்த நிலையில் தான் அமைதியை சற்றும் விரும்பாத கார்த்தி, "ஹரி வாடா பப்ஜி ஆடலாம்" என்று எழ போக அவர்களை சிலையாக்கியது சிவாவின் குரல்,
"அவ இல்லாம என்னால யோசிச்சு கூட பாக்க முடியலடா" ஒரு விசும்பலுடன் கூறினான்.
தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சிவாவின் அருகில் வந்து அமர்ந்தான் ப்ரேம், "சரிடா போ அவா அப்பாகிட்ட பேசி கல்யாணம் பண்ணிக்கோ" விட்டெதெரியாக அவர்களுக்கும் இதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லாதவாறு பேசினான்.
"என்னடா இப்டி பேசுற யமுனாக்கு இன்னும் நாலு நாள்ல கல்யாணம்டா அவ அப்பா கிட்ட பேசவே முடியாது"
"என்னது நாலு நாள்ல கல்யாணமா? இத இன்னும் மூணு நாள் கழிச்சு எங்ககிட்ட சொல்லிருக்கலாம்ல?" என்றும் கோவமே படத்தை ஹரிக்கே கோவம் வந்தது.
"டேய் எனக்கே ஒரு வாரத்துக்கு முன்னாடி தாண்டா தெரியும்?" தன்னுடைய தவறை இப்பொழுது நினைத்து வருந்தினான் சிவா, 'முன்னரே இவர்களிடம் கூறி இருக்க வேண்டுமோ?'
"ஒரு வாரத்துக்கு முன்னாடியே தெரிஞ்ச நொன்னைக்கு அப்பயே எங்ககிட்ட சொல்லிருந்தா என்னவாம்? இப்ப தா உனக்கு எங்ககிட்ட நொட்டனும்ன்னு தோணுச்சா?" வாயில் இருந்து வர துடித்த கேட்க முடியாத வார்த்தைகளை கடினத்துடன் உள்ளே தினித்தான் கார்த்தி.
"டேய் இருங்க டா..." இருவரையும் அடக்கிய ப்ரேம், சிவாவிடம் திரும்பி, "இப்ப நீ என்ன எதிர் பாக்குற?" என்றான்.
எச்சில் விழுங்கியவன் தைரியத்தை வரவழைத்து, "டேய் பொண்ண கடத்திடலாமா?"
அடுத்த நொடி தனக்கு அருகில் கிடந்த நாற்காலியை எடுத்து, "அடிங்க..." அவனை ஓங்கி அடிக்க வந்த கார்த்தியைப் பாதியிலேயே நிறுத்தினான்.
ஹரி, "பேச்ச பாத்தியா இன்னைக்கு இவன கொல்லாம விட மாட்டேன் நானு. பேசுறான் பாரு பேச்சு... அவளோட அப்பன் ஆளுங்கட்சி எம்.எல்.எ நியாபகம் இருக்கா? கொன்னு குழில பொதச்சிடுவான். கடத்த போறானாம்ல கடத்த"
"இப்ப நீ கத்துனா ஒன்னும் ஆக போறது இல்ல. நடக்குறது பத்தி பேசலாம். அந்த உன்கிட்ட சொல்லுச்சா அது இன்னும் உன்ன லவ் பண்ணுது, இல்ல இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு?" மீண்டும் சிவாவிடம் வந்தான் ப்ரேம்.
"ஆமா அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையாம்" அமைதியாகக் கூறினான் சிவா.
"டேய் த்ரிஷ்டி பொம்மை அந்த பிள்ளைக்கு கல்யாணத்துல இஷ்டம் இருக்கா இல்லையான்னு பிரச்னை இல்ல உன்ன இன்னும் லவ் பண்ணுதா அத மட்டும் சொல்லு?" - ஹரி
"என்ன இன்னும் லவ் பண்ற நால தான மச்சி கல்யாணத்துல இஷ்டம் இல்ல?" அவனை ஒரே மாதிரி முறைத்தனர் மூவரும்.
"இந்த பேச்சு மயிருக்கெல்லாம் ஒன்னும் கொறச்சல் இல்ல. இத்தனை நாள் சொல்லாம இப்ப வந்து எதுக்கு சொல்ற. நீயே பொய் பொண்ண தூக்கிறலாம்ல?
அதுவும் துறை நம்மகிட்ட சொல்ல மாட்டாரு இவரு கைய அறுத்துட்டு இருக்குறத பாத்து நாமளா இவர்கிட்ட வந்து கேக்கணும். அப்டி என்ன தான்டா கிடக்க போகுது ஊமை கொட்டானா இருந்து?" வெடித்தான் ஹரி.
தன் மேல் முழு தவறு இருப்பதை அறிந்து அமைதியாய் மட்டுமே இருக்க முடிந்தது சிவாவினால்.
"சரி டா பொண்ண தான கல்யாணம் பண்ணனும் நாளைக்கே போகலாம் அந்த பொண்ணோட அப்பன்கிட்ட பேசலாம்... ம்ம்ஹ்ம்ம் நீ பேசு நாங்க கூட இருக்குறோம். அந்த ஆளு சரின்னு சொல்லட்டும்.
இந்த கடத்துறது எல்லாம் சரிப் பட்டு வராது. பெரிய இடம் அது. மாட்டுனா கஞ்சா, கொலை கேஸ்ன்னு ஆயுசுக்கும் உள்ளேயே இருக்க வேண்டியது தான்" ப்ரேம் கூற ஹரி, கார்த்தி இருவரும் சரி எனத் தலையை ஆட்டினர்.
"டேய் அது சரி வராதுடா அவளோட அப்பாகிட்டப் பேசி தானே அவன் முடியவே முடியாதுன்னு சொல்லி, எங்களுக்குள்ள பிரேக்அப் ஆச்சு அவன் ஸ்டேட்டஸ் விட்டு இறங்கி வர மாட்டிக்கிறான்" - சிவா.
"நிறுத்து. இதுக்கு மொத பதில் சொல்லு. எப்ப நீ அவளோட மறுபடியும் பேச ஆரமிச்ச?"
சந்தேகமாய் கேள்வி கேட்ட கார்த்தியை முறைத்த சிவா, "என்ன டா நம்பிக்கை இல்லையா? நான் பொய் சொல்றேன்னு நெனைக்கிறியா?"
"லாஜிக் இல்லாம பேசாத சிவா, எம்.எல்.எ பொண்ண தூக்குறது சாதாரண விசியம் இல்ல. படத்துல நடக்குற மாதிரி எல்லாம் நிஜ லைப்ல பண்ண முடியாது. இங்க பாரு"
அவர்கள் நால்வரையும் காட்டிய ப்ரேம், "நம்ம நாலுபேர்ல ஒருத்தனுக்கு கூட சிக்ஸ் பேக் இல்ல ஏன் சண்டைக்குக் கூடப் போக முடியாது. ஒரு நல்ல சைகார்டிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போறோம் உன்னோட மனச நல்லா தேத்தி விடுவாங்க.
கொஞ்ச நாள் கஷ்டமா தான் இருக்கும் அதுக்கு அப்றம் நீ உன் லைப்ப பாத்துட்டு நிம்மதியா போ... அந்த பொண்ணுக்கும் அதோட லைப் புடிச்சு வாழ ஆரமிச்சிடும்"
அதில் கடுப்பான சிவா, "இந்த அட்வைஸ் மயிரெலாம் எங்களுக்கு வேணாம் எனக்கு யமுனா தான் வேணும், ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?" கத்தினான்.
"யார்ரா இவன் தேஞ்ச டேப் ரெக்கார்டர் மாதிரி சொன்னதையே திரும்பத் திருப்ப சொல்லிட்டு இருக்கான்..."
இங்கே இருவரும் தீவிர வாக்குவாதத்தில் இருக்க மறுபுறம் ஹரி, கார்த்தி இருவரும் தனி வாக்கு வாதத்தில் இருந்தனர்.
அதில் எரிச்சலுற்ற ப்ரேம், "டேய் அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க, இந்த மர மண்டையனுக்கு புரிய வைங்க" என்று ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.
சிவாவிடம் செல்லாமல் நேராக ப்ரேமிடம் வந்த கார்த்தி, "மச்சி பொண்ண கடத்த போகலாமா?"
அவ்வளவு நேரம் தன்னுடைய கைப்பேசியைப் பார்த்து அமர்ந்திருந்த ப்ரேம், கார்த்தியின் கேள்வியில் தலையில் கைவைத்துக் கொண்டான். அங்கோ சிவாவிற்கு முகம் முழுவதும் பல்லாய் இருந்தது.
"டேய் ஏண்டா நான் சொல்றத கேக்கவே கூடாதுன்னு இருக்கீங்களா?" பல்லைக் கடித்துக் கேட்டான் ப்ரேம்.
"டேய் நாம வேணாம்னு சொல்லி இந்த லூசு திரும்ப கைய அறுத்துக்குட்டா என்ன பண்ணுவ?" - கார்த்தி
"ம்ம்ம் சாவட்டும்னு விட வேண்டியது தான்" குறையாத எரிச்சலுடன் ப்ரேம் முகத்தை திருப்பிக்கொண்டான்.
கார்த்தி ஹரியைப் பார்க்க, அவன் கண்களை மூடி திறந்து, 'நான் பாத்துக்குறேன்' என்று ப்ரேம் அமர்ந்திருக்கும் நாற்காலிக்குக் கீழே அமர்ந்து...
"அவன் இது வரைக்கும் வாய தொறந்து நம்மகிட்ட ஒரு பைசா வாங்குனது இல்ல எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தனியா நின்னு சமாளிச்சிருக்கான். இப்ப மொத தடவ நம்மகிட்ட ஒன்னு வாய் விட்டு கேக்குறான்னா அவனுக்கு அது எவ்ளோ முக்கியம்ன்னு நாம புரிஞ்சுக்கனும்டா.
ஏதோ அடுத்தவன் மாதிரி விட்டுட்டு போகமுடியுமா நம்மளால? சத்தியமா முடியாது. லேசா கைய வெட்டிட்டு அவன் கெடந்ததுக்கே நமக்கு இங்க அல்லு விட்டுச்சு. போகலாம்டா போயி என்ன தான் அந்த எம்.எல்.எ பண்றான்னு பாக்கலாம்" என்ற பிரேம் மேலும்,
"நிச்சயமா அவன் பொண்ண தர மாட்டான் ஸ்டேட்டஸ், கெளரவம், ஜாதின்னு பாப்பான். அவிங்கட எல்லாம் காசு தான் பேசும் இவன் போய் 'உயிருக்கு உயிரா லவ் பண்றேன், உருகி உருகி காதலிக்கிறேன், ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு' சொன்னா எல்லாம் கேக்க மாட்டாங்க...
அவன் அப்பன் வந்தாலும் அவனால ஒன்னும் பண்ண முடியாத மாதிரி செஞ்சிட்டு வர்றோம். நமக்கு தெரிஞ்ச நாலு கிறுக்குத்தனம், கேனைத்தனம் எல்லாத்தையும் யூஸ் பண்ணி தூக்கிறலாம்.
நம்மளும் அட்வெண்ச்சர் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. ஒரு ஆடு தானா வந்து தலையை குடுத்துருக்கு போய் ஒரு ஆட்டம் போட்டுட்டு அளப்பரைய காட்டிட்டு வந்துரலாம்" படு சீரியசாக பேசியவன் பொழுதுபோக்கில் வந்து முடித்தான்.
"என்னமோ பண்ணி தொலைங்க நான் சொன்னா கேக்கவா போறீங்க. முடிவு பன்னிட்டு ஏண்டா வந்து சமாதானம் படுத்துற?"
உள்ளுக்குள் சமாதானம் ஆனாலும் வெளியில் கஞ்சி போட்ட சட்டையாய் விறைப்பாய் நின்றான் ப்ரேம். அதை அறிந்துகொண்ட ஹரி சிவாவிடம் திரும்பிச் சிறு முறுவலுடன் கண்ணடிக்க அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி இருந்தது.
"சரி டா கல்யாணம் எங்க?" ஆர்வமாய் கேட்டான் கார்த்தி.
"மதுரை டா"
"சரி கெளம்பலாமா?" - துள்ளலுடன் கேட்டான் ஹரி.
"மச்சி பிளான் போடலையே ஐடியா சொல்லுங்க டா" ஆர்வமாய், ஆசையாய் கேட்டான் சிவா.
அவன் முகத்திலிருந்த ஒளிவட்டம் அவனுடைய நண்பர்களுக்கும் தொற்றிக்கொண்டது போலும்.
தன்னுடைய சட்டை காலரைத் தூக்கிவிட்டு தொண்டையை செருமி சட்டை கையை மடித்துவிட்டு,
கார்த்தி, "கேன் ஐ ப்ரோசீட்? (Can I proceed?)" என்க, அந்த குரலிலிருந்த போலி திமிரும், தெனாவெட்டும் அவர்களுக்குப் புரிந்தாலும் அவன் என்ன தான் கூறுகிறான் என்று அவன் பேச்சை கேட்கத் தயாராகினர்.
"சொல்லுடா" என்றான் சிவா சிரிப்புடன்...
வேறு வழி... சிங்கத்திடமிருந்து தந்திரமாய் தப்பிக்க ஓநாய்க்குக் குடை பிடித்துத் தானே ஆக வேண்டும்.
"எ பென் ப்ளீஸ் (A Pen please)" கமல் ஹாசனை போலே மிமிக் செய்ய முயற்சி செய்தாலும் அதுவும் கேவலமாகவே வந்தது. அவனை முறைத்துக்கொண்டு ஒரு பேனாவை நீட்டினான் சிவா.
"பேப்பர் எங்க மேன்? உன் அப்பனா வந்து குடுப்பான்?"
தன்னுடைய அளவை தாண்டியதும் தெரியாமல் ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலிருந்தவன் கையில் ஒரு கதித்ததைத் திணித்தான் சிவா. அவன் தரையில் அமர்ந்ததும் மற்ற மூவரும் வட்ட வடிவில் அமர்ந்தனர்.
'கோயம்பத்தூர்' என்று எழுதியவன் அடுத்து ஏதோ எழுத வந்து பாதியிலேயே நிறுத்தி சந்தேகமாய் கண்சிமிட்டி சிவாவைப் பார்த்து, "மச்சி நாம எதுல போறோம்?" என்றான்.
'பயபுள்ள ஏதோ பெருசா பிளான் போட்ருச்சு' என்றெண்ணிய ப்ரேம் சிவாவைப் பார்க்க,
அவன், "ஹரி அவன் அப்பா கிட்ட கார் வாங்கிட்டு வருவாண்டா. இல்லனா எ.சி ஸ்லீப்பர் பஸ்ல டிக்கெட் புக் பண்ணிறேன். என்னடா ஹரி கார் கிடைக்குமா?" ஹரி எல்லா பக்கமும் தலை ஆட்டிவைக்கச் சிவாவிற்கு அப்பாடா என்றிருந்தது.
மறுப்பாய் தலையை ஆட்டிய கார்த்தி, "இதெல்லாம் சரிப்பட்டு வராது, மச்சான் ட்ரிப்பை கேன்சல் பண்ணு"
ஆச்சிர்யத்தின் உச்சநிலைக்குத் தள்ளப்பட்டான் சிவா, "டேய் என்னடா என்ன எதிர்பார்த்து இப்டி பேசுற?" அவன் கையை பிடித்துக் கேட்டான்.
"அப்றம் என்னடா வாழ்க்கைல இது வரைக்கும் ஒரு தடவ கூட நாங்க ஏரோப்லேன்-ல போனது இல்ல எங்களுக்கும் ஆசை இருக்காதா? வானத்துல இருந்து நாம படிச்ச ஊற, நாம வளந்த ஊற, பாக்கணும்னு எங்களுக்கும் ஏக்கம் இருக்காதா?
உனக்காக உயிரைப் பணயம் வச்சு, தியாகம் பண்ண தயாரா இருக்குற மூணு கன்னி பசங்களுக்கு உன்னால இது கூட பண்ண முடியாதா? என்னடா நான் சொல்றது சரி தான?" என்று ஹரி, ப்ரேமை பார்க்க அவர்களும் தங்கள் பங்கிற்கு சிங் சாங் அடித்தனர்.
"யா ஐ அக்ரீ வித் ஹிம் (Yeah I agree with him)" என்று தோள்களை ஆசுவாசமாகக் குலுக்கி ஹரி சொல்ல...
"யா ஐ டூ வாண்ட் டு எக்ஸ்ப்ளோர் தி ஸ்கை அபவ் தி கிளௌட்ஸ் (Yeah I too want to explore the sky above the clouds)" என்று கார்த்திக்குக் குடை பிடித்தான் ப்ரேம்.
'போச்சு ஹனிமூன்க்கு சேத்து வச்ச காசு எல்லாம் இவிங்களே கரைச்சிடுவாங்க போல. இவனுங்களுக்கு ஒரு கேடு வர மாட்டிகித்தே'
மனதில் தாளித்துக்கொட்டியவன் தன்னுடைய அலைபேசியை அவர்களிடம் தூக்கிப் போட்டு, "புக் பண்ணி தொலைங்கடா சாவு க்ராக்கிகலா"
ஹரியின் காலுக்கடியில் விழுந்த அலைபேசி ஹரி கைக்குச் செல்லும் முன் மற்ற இருவரும் அந்த அலைபேசி இருந்த இடத்தில் இருந்தனர், "மச்சி நல்லா எ.சி சீட் பாத்து போடுடா"
ஆசையாய் கேட்ட கார்த்தியை முறைத்த ஹரி, "பன்னாடை பிலைட்ல எல்லா இடத்துலயும் எ.சி இருக்கும். பர்ஸ்ட் கிளாஸ் லாஸ்ட் நேரத்துல புக் பண்றனால கிடக்கிறது கஷ்டம் சோ நாம இப்ப எகானமி கிளாஸ் பார்க்கலாம் நண்பர்களே"
"மச்சி பர்ஸ்ட் கிளாஸ் பாருடா இல்லனா, பிசினஸ் கிளாஸ் அதுவும் இல்லனா மட்டும் எகானமி கிளாஸ் பாக்கலாம்" அலைபேசியினுள் ஓடிவிடும் அளவிற்கு மண்டையை அதில் நுழைத்திருந்தான் ப்ரேம்.
"டேய் பரணிக்கா தலையா மண்டைய எடுடா" என்று அவனை விளக்கி விட்டு கார்த்தி அதில் நுழைந்தான்.
"சிவா உன் நல்ல நேரம்..."
ஹரி முடிக்கும் முன்பே "டிக்கெட் இல்லையா?" ஒரு நப்பாசையில் கேட்டான் சிவா.
"இல்ல பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டே இருக்கு" அடுத்த நிமிடம் அங்கு ஒரு சிறிய கூத்தே நடந்தது.
கார்த்தி ஒரு குத்து பாட்டிற்கு ஆட, ப்ரேம் அவனுக்கு பிளாஸ்டிக் நாற்காலியில் தாளம் தட்டிக்கொண்டிருந்தான்.
சிவாவிற்கு தான் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்தது என்றாகிவிட்டது.
ஆனாலும் இனி இவர்களை நம்பி தானே அவன் வாழ்க்கை இருக்கிறது.
ஒருவழியாக ஆடி ஓய்ந்த கார்த்தி மூச்சு வாங்க, "சரி லெட்'ஸ் ப்ரோசீட் வித் தி பிளான் (Let's proceed with the plan)" என்று அந்த காகிதத்தை மீண்டும் எடுத்து அதில் கோவைக்கு அருகில் ஒரு பறக்கும் காகத்தை வரைந்தான்.
அவனது தோளைச் சுரண்டி, "என்ன இது?" என்றான் ப்ரேம்.
முன் பற்களைக் காட்டி, "பிலைட் வரைய தெரியலடா அது தான் காக்கா... பறந்து போறோம்ல?"
அவனை பார்த்து காரி துப்பிய ஹரி, "த்து... மேலே சொல்லு" என்றான்.
"நாளைக்கு காலைல மொத பிலைட்ல கோவா-கு போறோம்..."
தலையில் அணுக்குண்டைத் தூக்கி எரிந்தது போன்று இருந்தது சிவாவிற்கு, "டேய் சனியன் புடிச்சவனே நிறுத்துடா..." என்று அலறினான்.
"ஏண்டா லேண்ட் ஆகுறதுக்கு முன்னாடியே அபசகுனமா பேசுற?"
"நீ இது வரைக்கும் புடுங்குன ஆணி போதும் நிறுத்திக்கோ" - சிவா
"அநியாயம் பண்ணாதடா நம்மளோட பத்து வருஷ பிளான் கோவா போறது. அதுவும் நம்மள்ல ஒருத்தன் கல்யாணம் ஆனாலும் அதுக்கு போறது வேஸ்ட் மாப்பிள்ளை. உன் ஆளோட கல்யாணத்துக்கு இன்னும் மூணு நாள் இருக்கு அதுல வெறும் ஒரு நாள் மட்டும் நாம, நம்ம லைப்ப வாழலாம்.
நம்ம ஆசைப்படி பேச்சிலர் லைப் ஒரு நாள்... கோவா பீச்ல பிகினி போட்ட வெளிநாட்டு பிகர்கல ஆசை தீர ஜொள்ளு விட்டு சைட் அடிச்சிட்டு அங்கையே கண்ணு முட்ட முட்ட சரக்கு அடிச்சிட்டு அடுத்த நாள் காலைல மறுபடியும் கோவால இருந்து மதுரைக்கு பிலைட் புடிச்சு போய்டலாம்" - கார்த்திக்
"டேய் அறிவுகெட்ட தனமா பண்ணாதடா அங்க நிலைமை எப்படி இருக்குதோ நாம போய் பாத்தா தான் தெரியும் நீ வாட்டுக்கு கோவா, ஜெர்மனி-னு டூர்கு பிளான் போட்டுட்டு இருக்க?" நேரம் காலம் தெரியாமல் பிடிவாதம் பிடிக்கும் கார்த்தியை அதட்டினான் ப்ரேம்.
"இங்க ஆடுற ஆட்டம் பத்தலயா உனக்கு அங்க வேற போய் ஆடணுமா?" - ஹரி
"டேய் நீ பேசாதடா கோவா ஐடியா எனக்கு குடுத்ததே நீ தான்"
'பிக்காளி பய போட்டு குடுத்துட்டான்', ஹரி அசட்டு வழிய, சிவா அவனைப் பார்த்து முறைத்தான்.
"ரெண்டு பேரையும் அப்டியே கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனாலும் போவேன் தவற கோவாக்கு போக மாட்டேன். வாழ்க்கைல விளையாடாதீங்க டா" மிரட்டலுடன் கத்தினாலும் இறுதி வார்த்தையில் அவர்கள் மூவருக்கும் பொதுவாகத் தரையில் சாஷ்டாங்கமாய் காலை பிடித்துக் கெஞ்சினான்.
அவன் முதுகில் ஒரு எத்து விட்ட ஹரி, "சரி நாளைக்கு மதுரைக்குப் போகலாம் எந்திரி" என்று எழுப்பிவிட்டவன் ஒரு பக்கம் டிக்கெட் பதிவு செய்ய ஒரு ஓரமாய் போக.
கார்த்தி தன்னுடைய செயல்திட்டத்தை மீண்டும் அடுக்க ஆரமித்தான். "மொத நாளைக்கு காலைல மதுரைக்கு போறோம். வீட தேடி கண்டு புடிச்சு உன்னோட மாமனார அந்த ஆளு கட்டிருக்குற வேஷ்டியை வச்சே கோழியை அமுக்குற மாதிரி அமுக்கி உருட்டுக்கட்டையால நடு மண்டைல போடுறோம்..."
"ம்ம்ம் அவரோட ப்ளாக் கேட்ஸ் உன்ன எ.கே 47 வச்சு உன் நெத்திலயே போடுவான் பரவால்லயா?" - ப்ரேம்
உள்ளுக்குள் ஒரு உதறல் விட அதை வெளியில் காட்டிகொல்லாமல் சிவா கழுத்தில் கைப் போட்டு, "உன் மாமனார் மேல மட்டும் கை வைக்க கூடாதுடா அவரு தான் உனக்கு அப்பா மாதிரி. போறோம் வீடு மேப்ப கண்டு புடிச்சு பொண்ணோட ரூம்குள்ள நைட் போயி தூக்கிட்டு வந்தர்றோம்"
அவனை இடைமறித்த ப்ரேம், "அதெல்லாம் சரி வராது. எப்படியும் அந்த பொண்ணு விசியம் வீட்டுல தெரிஞ்சிருக்கும் அவரு கண்டிப்பா வீடு முழுக்க ஆளு செட் பண்ணிருப்பாரு முக்கியமா நைட் இருக்கும்"
நீண்ட யோசனைக்குப் பிறகு மீண்டும் முன் வந்த கார்த்திக், "ஒன்னு பண்ணலாம் வீட்டுக்கு கொசு மருந்து அடிக்கிற மாதிரி போயி அதுல மயக்க மருந்து கலந்து விட்ரலாம் எல்லாரும் மட்டையாகிடுவாங்கல்ல? அப்ப பொண்ண தூக்கிடலாம்?"
"கேனை மாதிரி பேச கூடாது அவளோ பெரிய ஆளோட வீட்டுல கொசு மருந்து அடிக்க விடுவாங்களா?" கிறுக்குத்தனத்தை குத்தகைக்கு எடுத்திருந்த கார்த்தியைப் பார்த்து அசிங்கமாய் திட்டினான் சிவா.
"ம்ம்ம் அதுவும் சரி தான்" தாடையைத் தடவியவாறே யோசிக்க வேறு யோசனை வர மறுத்தது.
"அந்த பொண்ண வெளிய வர சொல்லி அதாவது கோவில் குளம்னு எங்கையாவது வர வச்சு கூட்டிட்டு வந்துரலாம்?" - ப்ரேம்
"ம்ம்ம் அப்டியே அவளை தனியா இந்த நேரத்துல அனுப்பி வச்சிட்டு தான் அடுத்த வேலை பாப்பாங்க அவ வீட்டுல" இருவரையும் மாறி மாறி பார்த்த சிவாவிற்குத் தலையை எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது.
"ப்ராஜெக்ட் ஹெட் என்ன காப்பாத்து டா இவிங்க தொல்லை தாங்க முடியல சாவடிக்கிறானுக" இறுதியாக சிவா நின்றது ஹரியிடம்.
சிறு சிரிப்புடன் அவன் அருகில் வந்த ஹரி, "மச்சி டோட்டல் இருபதாயிரம் டா நாளைக்கு மதியம் 3 மணிக்கு பிலைட். ரிட்டன் அப்ப இருக்குற நிலைமையை பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்"
சிவாவிடம் அவன் கைப்பேசியைக் கொடுத்தவன் தீவிர வாக்குவாதத்திலிருந்த ப்ரேம், கார்த்தியை அமைதிப் படுத்தி கார்த்தி வைத்திருந்த அதே காகிதத்தை எடுத்து கோவை மதுரை என எழுதி அதற்கு நடுவில் ஒரு வளைவு வரைந்தவனை ஆர்வமாய் பார்த்து நின்றனர் மூவரும்.
"நம்ம பிளான் என்னனா பிலைட்ல போயி அங்க ஒரு நல்ல இடமா பாத்து செட்டில் ஆகுறோம்..." ஒரு வீடு போல் வரைந்து அதைக் காட்டினான்.
சரி என்று தலை ஆட்டிய மூவரும் அவன் மேலே செல்ல காத்திருக்க அந்த காகிதத்திலிருந்து கண்ணை எடுக்காது பார்த்திருக்க அவனிடமிருந்து அதற்குமேல் அமைதி மட்டுமே வர ஹரியின் முகத்தைப் பார்க்க ஹரியோ அவர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்தான், "சரி டா அப்றம்?" என்றான் ப்ரேம்.
"அவ்ளோ தாண்டா தெண்டம், அங்க போயி மதத்தை யோசிக்கலாம் அங்க இருக்கிற சுச்சுவேஷன் பொறுத்து" என்றதும் மூவருக்கும் அதுவே சரி என்று பட்டது.
துள்ளலுடன் கார்த்தியும், ப்ரேமும் தங்களது ஆடைகளை மூட்டை கட்ட தயாராக சிவாவிற்குத் தான் நேரம் கடக்கக் கடக்க மனதிலிருந்த பீதி முகத்திலும் அப்பட்டமாய் தெரிய ஆரமித்தது அதைச் சிறிது கண்ட ஹரி,
"போச்சு உன்னோட சந்தோசமெல்லாம் போச்சு கடைசியா ஒரு நாள் சந்தோசமா வெளிய கூட்டிட்டு போகலாம்னு நெனச்சோம் நீயே வேணாம்னு சொல்லிட சரி விடு நாளைக்கு ஆபீஸ்க்கு போய்ட்டு ஹல்ப்-டே லீவு சொல்லிட்டு போகலாம். வர்ரேண்டா. யமுனா கிட்ட தைரியமா இருக்க சொல்லிரு"
எச்சிலைச் சிரமத்துடன் விழுங்கிய சிவா வரவழைத்த புன்னகையுடன், "ம்ம்ம் சரி டா. நான் பேசுறேன்"
அந்த சரியிலிருந்த மாற்றத்தைப் பசியிலிருந்த ஹரி கவனிக்காமல் வீட்டிற்கு விரைந்தான் அவனுடைய அன்னையின் கைப்பக்குவத்தில் தயாரிக்கப் பட்ட உணவை ஒரு பிடி பிடிக்க.
******************************
"மச்சி எங்கடா இவன் போனான் இன்னும் அரைமணி நேரத்துல பிலைட். தர்த்ரியம் புடிச்சவன் எந்த சிக்னல்ல யார்கூட கடலை போடுறனோ" வீட்டிற்குச் சென்று லக்கேஜ் எடுத்து வருவதாகக் கூறிய ஹரியைத் தான் மூவரும் எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றனர்.
"தோ பார்ரா அத நீ சொல்றியா அவனுக்கு இதெல்லாம் கத்துக்குடுத்ததே நீ தானேடா" கார்த்தி தலையில் அசால்டாக ஒரு அடியை போட்டு ஹரிக்கு அழைத்தான் ப்ரேம்.
"எது சைட் அடிக்கிறது, கொரங்கு சேட்டை பண்றது எல்லாம் என்ன பாத்து அவன் கத்துக்குட்டானா? அவன் பொறந்ததுல இருந்தே வெளஞ்சவன் டா ஏதோ என்கூட சேந்து இருக்கனால வெளிய தெரியிது..."
தானாகப் புலம்பினான் கார்த்தி மனம் ஆறாமல். அவன் சொல்வதும் சரி தான் ஹரி எப்பொழுதும் குறும்புத் தனம் நிறைந்தவன் ஆனால் வெளியில் அமைதியாக இருப்பதால் அவனைப் பற்றி யாருக்கும் தெரியாது.
"டேய் எங்கடா இருக்க எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?"
மறுமுனையில் ஏதோ சொல்ல, "டேய் ரெண்டு மணி நேரமா இதையே தான் சொல்ற உண்மைய சொல்லு வீட்டுக்குப் போய்க் குப்புறப் படுத்து தூங்கிட்டியா?"
ப்ரேமிடமிருந்து கைப்பேசியைப் பிடுங்கிய சிவா, "டேய் என் வாழ்க்கைல விளையாடாதடா தயவுசெஞ்சு வா" என்று இணைப்பைத் துண்டித்திருந்தான்.
சலிப்புடன் தன்னுடைய மொபைலை பின் பாண்ட் பாக்கெட்டில் வைத்து, "நல்லவேளை அம்மா வந்து எழுப்பி விட்டாங்க இல்லனா ஓசில யாரு நம்மள ஏரோபிலேன்ல கூட்டிட்டு போயிருப்பா?" தாய்க்கு மானசீகமாக நன்றியை கூறினான் ஹரி.
அலுவலகத்தில் தேவையான அனைத்தையும் பட்டியலிட்டு சிவாவிடம் கொடுத்தவன் சரியாக இரண்டு மணிக்கு விமானநிலையம் வரக்கூறி வீட்டிற்குச் சென்றான்.
வீட்டில் நுழைந்ததுமே உறக்கம் கண்ணைக் கட்டிக்கொண்டு வரச் சங்கடம் இல்லாமல் நடு வரவேற்பறையில் குப்புறப் படுத்து உறங்கினான். ஒரு கால் மணிநேரத்திற்கு முன்பாக தான் வெளியில் சென்ற அவன் தாய் வந்து அவனை அடித்துத் துவைத்து அனுப்பிவைத்தார்.
"டேய் வந்துட்டான்னு நெனக்கிறேன்" என்ற ப்ரேம் சிவாவைத் திரும்பிப் பார்க்க அவனோ விமானநிலையம் என்றும் பாராமல் தரையில் லக்கேஜ் அருகே அமர்ந்து ப்ரேமுடைய பதிலுக்காகக் காத்திருந்தான்.
அவன் அமர்ந்திருந்த விதத்தைப் பார்த்த உடனே சிரிப்பு வெடிக்க, "இவன் என்னடா காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுக்கிறவன் மாதிரி ஒக்காந்துருக்கான்?" என்றான் சிரிப்புடன்.
"ம்ம்ம் நம்மள எல்லாம் நம்புனா பிச்சை தான் எடுக்கணும்..." கார்த்தி நேர்மையாய் கூற சிவாவும் பேசலாமா பேச வேண்டாமா என்ற முடிவில் இறுதியாக ஆமாம் என்று தலையையும் அசைத்தான்.
அதே நேரம் அங்கே விமான நிலயத்தினுள் வந்த ஹரி தன்னுடைய காரில் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்த, 'ஆலுமா டோலுமா...' பாட்டிற்கு தன் அமர்ந்தவாறே ஆடிக்கொண்டே கண்ணில் தெரிந்த முதல் இடத்தில் பார்க் செய்து, வீட்டில் அவசர அவசரமாக காரில் தூக்கிப் போட்ட பொருட்களை ஒரு பையில் எடுத்துப் போட்டுக்கொண்டிருக்க அவன் காரின் கண்ணாடி தட்டப்பட்டது.
திரும்பிப் பார்க்கச் சிகப்பு நிற டாப் மட்டுமே தெரிய முகம் தெரியவில்லை. கண்ணாடியை இறங்கியவன் சற்று குனிந்து அந்த பெண்ணை பார்த்தான்.
வட்ட முகம், சிறிதும் இல்லாமல் பெரிதும் இல்லாமல் அழகாகவே இருந்தது அந்த கண்கள், கிளி போல் இல்லாவிடினும் கிள்ளவே தோன்றிய மூக்கு, சிறிதளவு சாயம் பூசிய இதழ்கள், பளிச்சென சிவந்த நிறம். தனுஷ் கூறுவது போல் சீரியல் கதாநாயகி அளவிற்கு இருந்தாள்.
பளிச்சென்ற சிரிப்புடன், "ஹாய்" என்றான்.
அவளோ கண்களில் கனலை வைத்துச் சிவக்க சிவக்க பார்த்தாள். காரணம் அவன் பார்க் செய்த இடத்தில் தன்னுடைய வண்டியை பார்க் செய்ய நினைத்து முதலில் வண்டியை அவ்விடத்தில் உள்ளே செலுத்தப் புதிதாக வண்டியை ஓட்டி பழகிக்கொண்டிருப்பவளுக்கு அந்த சிறிய இடத்தில் ஒரே செலுத்தில் வண்டியை லாபகரமாக செலுத்தத் தெரியவில்லை.
வண்டியை பின்னே செலுத்தி மீண்டும் முன்னே செலுத்தவிருந்த அந்த சில நொடி இடைவேளையில் அப்பொழுது தான் வந்த ஹரியின் கார் சிரமமே இல்லாமல் அழகாக வண்டியை அந்த இடத்தில் நிறுத்தி இருந்தான்.
ஐயோ பாருங்களேன் இந்த பொண்ணோட பேர சொல்லல. நமது கதாநாயகர்களுடைய மண்டையைக் கிறுக்கு பிடிக்க வைக்கப் போகும் நபர். பெயர் அபர்ணா. அவளுடைய குர்தியின் நிறத்தில் அடிக்கடி மூக்கு மாறும் அவ்வளவு கோவம் வரும் அவளுக்கு.
"ஏங்க நீங்க இந்த குர்த்திய அன்லிமிடெட்ல தானே எடுத்தீங்க சூப்பர் பாருங்களேன் நான் கூட இங்க தான் இதே டாப்ப எடுத்தேன்" என்றான் ஆச்சிர்யப்படும் முகபாவனையோடு.
அவன் கூற்றில் அதிர்ச்சியுற்றவள் அவனைப் பார்த்து, "என்ன?" என்றாள் வேகமாக.
உடனே கையை எங்கோ காண்பித்து தலையை ஆட்டி, "அம்மாக்கு... அம்மாக்கு..." என்றான் சிரிப்புடன்.
அவன் செய்கையே சிரிப்பைத் தர, தன்னுடைய கோபத்தை எங்கோ எடுத்துச் சென்ற அவன்மேல் இன்னும் கோபம் வந்தது, "யோவ் என்னையா நெனச்சிட்டு இருக்க நீ?"
"அத ஏங்க கேக்குறீங்க இது வரைக்கும் யாரையுமே நெனக்கல" அவன் வருத்தத்துடன் கூற அபர்ணாவிற்கு கோவம் இன்னும் கோபுர உச்சியைத் தொட்டது.
"டேய் கேனை பயலே நானும் அப்ப இருந்து பாத்துட்டு இருக்கேன் லூசு மாதிரியே பண்ணிட்டு இருக்க. நான் ஒன்னு கேட்டா நீ ஒன்னு சொல்ற பைத்தியமாடா நீயி"
அவள் கேனை லூசு என்று எதுவும் அவன் காதில் விழவில்லை டா போட்டுக் கூறவே கொதித்தெழுந்தான், "ஏய் யாரை பாத்து டா சொல்ற" என்று காரின் கதவை திறந்து வேக வேகமாக வெளியில் வந்தவன்,
"ஆமாடி நான் லூசு தான் பைத்தியம் புடிச்சா கண்ணுல தெரியிறவங்கள எல்லாம் ரெத்தத்த உறிஞ்சி கொன்னுடுவேன் அதுக்கு இப்ப என்னங்கிற?" என்றான் சரிக்குச் சரியாக அவளுடன் மல்லுக்கு நின்று.
"டேய் உங்க குடும்பமே லூசா இருந்துக்கோங்க அத பத்தி எல்லாம் எனக்குக் கவலை இல்ல, இப்ப இந்த டப்பா வண்டிய"
காரில் ஒரு எத்து விட்டு, "வெளிய எடு நான் பார்க் பண்ணனும்" என்றாள் திமிராக.
அவர்களை விநோதமாகப் பார்த்தவாறே சிலர் கடந்து செல்ல, சிலர் சற்று தூரம் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்... ஆனால் அவையெல்லாம் அவர்களுக்குப் பெரிதாகப் படவில்லை.
"அடிங்க என்கிட்டையே என் குடும்பத்தையே பத்தி பேசுறியா? செவுனி கிழிஞ்சிடும் பாத்துக்க. அப்றம் என் கார பத்தி டப்பா கிப்பான்னு பேசுன உன்னோட ஓட்ட கார சல்லி சல்லியா நொறுக்கிடுவேன்"
அனாவசியமாகச் சண்டைக்குச் செல்லவே மாட்டான் ஹரி அப்படிச் சென்றால் அது நிச்சயம் அவன் நண்பர்களுக்காக அல்லது அவன் தன்மானத்தைச் சீண்டியதாகவே இருக்கும்.
"எதுடா ஓட்ட காரு? அறுவது லட்சம் அது உன் வண்டி மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் வாங்கல" என்றாள் அபர்ணா.
அவள் தந்தை அரசியல்வாதி பணம் கொட்டிக்கிடந்தாலும் சுயமாய் நான்கு காசு பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பீக் பாயிண்ட் என்ற நிறுவனத்தில் ஒன்றான மென்பொருள் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறாள்.
"உன் அப்பன் காசுல தான வாங்கிருப்ப"
"நான் எதுக்குடா என் அப்பா காசுல வாங்கணும் மாசம் ரெண்டு லட்சம் சம்பளம் வாங்குறேன் பீக் பாயிண்ட்ல..." அந்த நேரம் ஹரிக்கு மீண்டும் அழைப்பு வந்தது... இப்பொழுது கார்த்தி.
கார்த்தியின் எண்ணைப் பார்த்ததும் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி, உடனே அழைப்பை ஏற்று,
"மச்சி பார்க்கிங் வாயேன் ஒரு குழாயடி சண்டை ஆன்கோயிங் ஜாலியா இருக்குடா" என்று இணைப்பை உடனே துண்டித்தவன் மீண்டும் அபர்ணாவைப் பார்க்கும் பொழுது முகம் பழைய கோவத்தை வாடகைக்கு வாங்கி இருந்தது.
"இந்த பெருமை பீத்தலுக்கு கொறச்சல் இல்லை வண்டிய எல்லாம் எடுக்க முடியாது"
சுற்றும் முற்றும் பார்த்து ஒரு மூலையை காட்டி, "தோ அங்க இடம் இருக்கு பாரு போய் பார்க் பன்னிக்கோ உன் அறுவது லட்சம் காச எவனும் எடுக்க மாட்டான்" என்று மீண்டும் தன்னுடைய பொருட்கள் எடுப்பதிலேயே மும்முரமானான்.
"ஏன்மா சண்டை போட்டுட்டு இருக்க? வேற எங்கையாவது வண்டிய நிறுத்தேன்"
ஒரு நடுத்தர வயதுடையவர் கூற, அவரை திரும்பி பார்த்து முறைத்தவள், "எனக்கு தெரியும் உன் வேலைய பாத்துட்டு போயா"
அதற்குமேல் இந்த சரோஜாவிடம் பேசாமல் அவரும் செல்ல அங்கிருந்த வேறு எவருக்கும் அவர்கள் சண்டையினுள் வர தைரியம் இல்லாமல் போனது.
ஏதோ சத்தமாக அடிக்கும் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தல் அவள் கையில் வைத்திருந்த ஐபோன்-ஐ வைத்து காருடைய கண்ணாடியைப் பலமாகத் தட்டிக்கொண்டிருந்தாள்.
"ஐயையோ போச்சு போச்சு என்ன பண்ற" என்று அலறினான்.
அவனைப் பார்த்து வெற்றி புன்னகை சிந்தியவள், "நல்லா கதறுடா இந்த ஐபோன் என்ன பண்ணாலும் உடையாதாம் அதான் டெஸ்ட் பண்ணிட்டு இருக்கேன். உன் கண்ணாடியை ஒடக்காம விட மாட்டேன் இன்னைக்கு. ஒழுங்கா வண்டிய எடுத்துட்டு வேற எங்கயாவது கொண்டு போய்டு"
அந்த நேரம் ஹரியின் தலையில் இரண்டு தட்டு தட்டி வேடிக்கை பார்ப்பவனை இழுத்து வர பார்க்கிங்கிற்கு வந்த அவன் நண்பர்கள் மூவருக்கும் அதிர்ச்சி... அந்த குழாயடி சண்டையைச் செய்பவனே அவன் தான் என்று.
உடனே இருவருக்கும் நடுவில் சென்று நின்ற கார்த்தி, அபர்ணாவைப் பார்த்து முகம் முழுதும் புன்னகையோடு ஹரி புறம் திரும்பி கோவத்தைக் காட்டினான்.
"என்னடா இது?" என்றான் பல்லைக் கடித்து.
"மச்சி நா வாடுக்கு வண்டிய நிறுத்துனேன்டா அதுக்கு இந்த பஜாரி வந்து ஜங்கு ஜங்குன்னு குதிக்கிது"
"டேய் யாரடா பஜாரின்னு சொல்ற நீ தாண்டா ஜங்கு ஜங்குன்னு குதிச்சிட்டு இருக்க காண்டாமிருகம் வாயா"
"ஆமா நாங்க காண்டாமிருகம் இவுங்க கிளேபாட்ரா கொள்ளு பேத்தி போடி தீஞ்ச மூக்கி"
"டேய் கறிச்சட்டி, என் மூக்கை பத்தி நீ சொல்றதுக்கே தகுதி இல்லடா ஆளையும் மூஞ்சையும் பாரு டோங்கிரி"
இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக்கொள்ள நண்பர்கள் மூவருக்கும் இவனை விட்டுச் சென்றால் தான் என்ன என்று தோன்றியது.
"டேய் நிறுத்துங்கடா ரெண்டுபேரும். பிலைட்டுக்கு நேரமாச்சு"
அபர்ணாவிடம் திரும்ப ப்ரேம், "ஏன்மா நீயும் தான் ஏன் இப்டி பிடிவாதமா இருக்க அவன் தான் வண்டிய நிறுத்திட்டான்ல நீ வேற எங்கையாவது போய் நிறுத்த வேண்டியது தான. பொம்பள புள்ளைக்கு எதுக்கு இவ்ளோ பிடிவாதம்" என்றான் மெதுவாக ஆனால் அழுத்தமாக.
"ஏன் இத அவனை பாத்து சொல்ல வேண்டியது தான... பொம்பள புள்ளன்னா எங்களுக்குப் பிடிவாதம் இருக்கக் கூடாது உங்களுக்கு மட்டும் டன் டான்னா இருக்கலாமோ?" என்றாள் சற்றும் இழைக்காத குரலில்.
"அதான?" சம்மந்தமே இல்லாமல் அவளுக்கு ஒத்து ஓதினான் கார்த்தி.
கோரஸாக அவனைப் பார்த்த ஹரியும், ப்ரேமும், "என்ன மேன் பண்ற நீ?" என்றனர்.
"பெண்கள் நம் நாட்டின் கண்கள் நண்பர்களே" என்றான் அபர்ணாவைப் பார்த்துச் சிறு சிரிப்புடன்.
"டேய் நீ ஜொல்லுலேயே ஜிலேபி சுட நாங்க ஆள் இல்ல" என்ற ஹரி வேகமாக தன்னுடைய பொருட்களை எடுத்து அவளைப் பார்த்து,
"ஆளையும் மண்டையும் பாரு" என்று விமான நிலையத்தை நோக்கி நடக்க கார்த்தி அபர்ணாவைப் பார்த்து, "கார் சாவி தர்றிங்களா நான் வேணா பார்க் பண்ணி தர்றேன் உங்களுக்கு எதுக்கு சிரமம்?"
அவனைப் பார்த்துச் சிரித்தவள், "ஐயோ நீங்க இப்டி இருக்கீங்க அவங்க கூட எல்லாம் சேராதிங்க"
முகத்தை சோகமாக வைத்து, "ஏன் அந்த சோக கதையை கேக்குறீங்க இவனுக கிட்ட ஒரு அஞ்சு லட்சம் கடன் வாங்கி வச்சிருக்கேன் அத அடைக்கிற வரைக்கும் அடிமையா தான் இருக்கனும்"
பின்னாலிருந்து அவன் சட்டையை பிடித்து இழுத்தச் சென்ற ஹரி, "மச்சி அப்ப நீ எனக்கு அஞ்சு லச்சம் தரணுமா?" என்றான் மெதுவாக குறும்பு உதடுகளில் மின்ன.
"ம்ம்ம் நெனப்பு தான். மொத என்கிட்டே வாங்குன மூணு லட்சத்தை தாடா"
நெஞ்சில் கை வைத்து, "என்ன வார்த்தை கேட்டுட்டே மாப்பிள்ளை? உனக்கு எவ்ளோ வேணாலும் நீ பிச்சை போட்டு குடுத்த வண்டிய யூஸ் பண்ணிக்கோ... இனி அத நீ தொட்டா நா என்னனு கேக்க மாட்டேன்" வெளி ஆள் பார்த்தல் நிச்சயம் நம்புவர் ஹரியின் நடிப்பை.
"டேய் டேய் நடிக்காதடா நான் போட்டு வக்கிர பெட்ரோல்ல நீ ஊர் சுத்துவ இதுல இந்த நடிப்பெல்லாம் தேவையா?"
'இப்பயாச்சும் காசு தர்றேன்னு சொல்றானா பாரு' என்ற ரீதியில் கார்த்தி அவனை பார்க்க ஹரி தான் வேறு செயல்திட்டம் தீட்டி இருந்தானே.
"மச்சி யோசிச்சு பாரேன் நீயும் அந்த பொன்னும் என் வண்டில ஜாலியா ஊர் சுதுவிங்களாம்"
"அப்றம் ராசா வண்டி நம்பர் ப்ளேட் மட்டும் தான் நீ காசு குடுத்தது மத்தபடி வாங்குறதுல இருந்து, ஹெல்மெட், பெட்ரோல், சைடு ஸ்டாண்ட் மொத கொண்டு என் காசு. இவரு வண்டியாம்ல" என்று கார்த்தி ஹரியை பார்த்து முறைக்க...
"ஆமா... அந்த பொண்ணு உனக்கு புடிச்சிருக்கா மாப்பிள்ளை?" கார்த்தியை திசை திருப்ப ஹரிக்கா பாடம் தேவை?
"ஆப்வியஸ்லி" நெஞ்சை நிமிர்த்தி காலரை உயர்த்தி காட்டினான் கார்த்தி. வண்டியையும் மறந்து போனான்
"மச்சி அந்த பொண்ணு வேணாடா நம்ம மதுரைக்கு போய் மீனாட்சி மாதிரி மீன்விழியாள் ஒருத்திய தூக்கிட்டு வந்துடலாம்" என்று நண்பனை சமாதானம் செய்தவாறே உள்ளே அழைத்துச் சென்றான்.
"இல்லடா உள்ளூர்ல இருக்க பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிட்டா மாமனார் வீட்டுல போய் ரெண்டு நாள் நல்லா டேரா போடலாம்ல?"
அவன் கழுத்தில் ஒரு பையை போட்டவாறே சத்தமாக சிரித்து, "மாமனார் வீட்டு காசுல வாழுறவன் முதுகெலும்பு இல்லாதவன் டா. வா பைலட் நம்ம இல்லாம கிளம்ப மாட்டானாம். அப்ப இருந்து கார்த்தி கார்த்தின்னு பைலட் கத்திட்டு இருக்கான்"
"சரி உன் பக்கத்துல அழகான பொண்ணு ஒக்காந்தா நாம சீட் மாத்திக்கணும் டீலா?" என்று கையை காட்டி சத்தியம் கேட்க ஒரு நிமிடம் யோசித்த ஹரி, "இந்த ஒரே ஒரு தடவ தான்" என்ற நிபந்தனையோடு சத்தியம் செய்து வைத்தான்.
- தூக்றோம்
Plzzzzzzzzzzz Comment down... Plzzzzzzzzzzz
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro