அத்தியாயம் - 8
"மச்சான் கைல ஏதாவது ஆயுதம் வச்சிருக்கியா?"
மீண்டும் ஏதாவது கிறுக்கு வேலை செய்யத் தான் ஹரி கேட்கிறான் என்றெண்ணிய வெற்றி, "இந்தா பாருங்கலே தங்கச்சி ஆசைபட்டுச்சே அதுக்கு இத்தனை நாள் இல்லாத சந்தோசம் அதோட வாழ்க்கையை அது நெனச்ச மாதிரி வாழட்டும்ன்னு ஒரே நோக்கத்துல தான் உங்களுக்கு இவ்ளோ தூரம் இறங்கி வந்து உதவி பண்றேன். நீங்க என்னனா டீன்-ஏஜ் பசங்க ஊறி சுத்தி பாக்க வந்த மாதிரி கொரலி வித்தை காமிச்சிட்டு இருக்கீங்க" ஏக கடுப்பில் அவர்களை மிரட்டினான்.
ஆனால் கார்த்தியோ அவன் இடையில் விளையாட்டாகக் கிள்ளி, "குசும்பு மச்சான் உனக்கு. உன் கல்யாணத்துக்கு ரூட் போட்டுட்டு தங்கச்சிய காரணம் சொல்ற. சரி விடு வெளிய நம்ம கல்யாணம் பத்தி பேசவே வெக்கமா தான் இருக்கும்"
கார்த்தி கழுத்தோடு கை போட்டு, "அதாவது கார்த்தி... நாம நாலு பேருக்கு நல்லது செஞ்சா மேல இருக்கவன்..."
வெற்றி பேச்சைக் குறுக்கிட்டு, "மேல இருக்கவன் நமக்கு நல்லது செய்வான் அதான?"
"அது தான் இல்ல. இனிமே இவனுகளுக்கெல்லாம் நல்லது செய்வியானு நம்மள செருப்பாலேயே அடிப்பான்" வெற்றி பேசியதன் பொருளை உணர்ந்துகொண்ட கார்த்தி பூனை போல் அவன் கையை எடுத்துவிட்டு இரண்டடி தள்ளியே நின்றான்.
"சும்மா இருடா கார்த்தி. ஏங்க ஏதாவது பொருள் இருந்தா உங்கள வச்சு மிரட்டி வெளிய போக கேட்டோம்" நண்பனிடம் தொடங்கி வெற்றியிடம் வந்து முடித்தான் ப்ரேம்.
"இந்த நாலுல நீ மட்டும் தான் கொஞ்சம் தெளிவு"
குனிந்து தலையைச் சொறிந்தவாறே மெதுவாக, "ஆமா இவரு சாணக்கியன் அசிஸ்டன்ட் பாதி இந்தியாவ கைக்குள்ள வச்சிருக்கான்" கார்த்தி புலம்பினான்.
"கேட்டுச்சுடி" கார்த்தியை முறைத்து மீண்டும் ப்ரேமிடம் திரும்பினான், "என்ன வச்சு நீங்க வெளிய போக வேணாம் அப்றம் என் அப்பன் எனக்கு சோத்துல விஷத்தை வச்சு குடுத்துடுவான். இன்னும் பத்து நிமிசத்துல உங்களுக்கு சாப்பாடு வரும் அப்ப இந்த கத்திய வச்சு மெரட்டிட்டு வெளிய போய்டுங்க"
ப்ரேம் கையில் ஒரு கத்தியைக் கொடுக்க, அதை ப்ரேம் முன்னே கார்த்தி வாங்கிக்கொண்டு, "மாப்பிள்ளை பிளான் எக்சிக்யூட் பண்ணிடலாமா?"
"வாய் மட்டும் இல்ல உன்னெலாம் நாய் கூட மதிக்காது. இந்த வீட்டுக்கு முன்னாடி இருக்க தொட்டில தான் நீங்க கொண்டு வந்த பை இருக்கு. தப்பிச்சிட்டு எப்படியாவது பதினோரு மணிக்குள்ள வீட்டுக்குள்ள வந்து யமுனாவை கூட்டிட்டு போய்டுங்க. அதுக்கு மேல மொத்த மாப்பிள்ளை வீட்டுகாரங்களும் வந்துடுவாங்க. பிரச்சனை சிக்கல்ல தான் முடியும் சொல்லிட்டேன்" அதன் பிறகு ஆயிரம் அறிவுரைகளைக் கூறி அவன் சென்றான்.
வெற்றி கூறியது போலவே சிறிது நேரத்தில் வீட்டின் கதவைத் திறந்து இவர்கள் காலை உணவைக் கொண்டு வந்தான்.
"உங்க அய்யாக்கு பெரிய மனசு தா ண்ணே. கடத்தி வச்சிருந்தாலும் பிரியாணி, இட்லி, தோசை-னு வாங்கி குடுக்குறாரு" ஆசையாய் உணவு பொட்டலத்தைத் திறக்கப் போன கார்த்தியின் முதுகில் ஒரு போடு ப்ரேம் போட்ட பிறகே அவர்கள் திட்டம் நினைவு வந்து கதவின் பக்கம் சென்றான்.
"சாப்பிட்டு சொல்லுங்கலே தண்ணி இப்ப கொண்டு வர்றேன்" மீண்டும் வாசல் நோக்கி நடக்கவிருந்தவரை கார்த்தி நின்ற தோரணை தடுத்தது.
"வழிய விடுலே" என்றார் அந்த மனிதர் கறாராக. கார்த்தி கண்கள் அந்த மனிதருக்குப் பின்னால் வந்த ஹரியைப் பார்த்தது. கார்த்தியின் பார்வை சென்ற திசை நோக்கி அவர் திரும்ப எத்தனிக்க அதற்குள் ஹரி அவர் கழுத்தில் கத்தியை வைத்திருக்க கைகளையும் திமிறிக்கொண்டிருந்த அவர் உடலையும் மற்ற மூவரும் இணைந்து பிடித்துக்கொண்டனர்.
"மாப்பிள்ளை கத்தி பிடிக்க கை எல்லாம் நடுகுதுடா" பேச்சிலே அவன் நடுக்கம் புரிந்தது மற்ற மூவருக்கும்.
"நேத்து என் கழுத்துல கத்தி வச்சப்ப குளு குளுன்னு இருந்துச்சுல புடிடா மொட்ட கஜினி"
"அப்றம் சண்டை போடுங்கடா. அண்ணே ப்ளீஸ் கொஞ்ச நேரம் கோ-ஆப்ரேட் பண்ணு" அந்த அடியாளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் ப்ரேம்.
"கோத்தா விடுங்கடா என்ன"
"கார்த்தி கதவை திற" கார்த்தி வேகமாக சென்று கதவை திறக்க, தங்கள் கூட்டாளியை இவர்கள் கழுத்தில் கத்தியை வைத்துக் கூட்டி வரவும் வெளியில் அப்பொழுது தான் உணவருந்தி கையை கழுவிக்கொண்டிருந்தவர்கள் பார்வையே அவர்கள் வியப்பைக் கூறியது.
"மாரி புடிடா அவனுகள" ஒருவன் கத்த, "யோவ் யாராவது பக்கத்துல வந்திங்க இந்த ஆள் கழுத்துல தான் கத்தி இறங்கும்" சிவா வேகமாக சென்று அவர்கள் உடமைகள் மொத்தத்தையும் எடுத்துக்கொண்டான்.
அவர்கள் நொடிகள் தயங்க அதை சாதகமாக்கி முன்னேற முயன்ற நண்பர்களில் ப்ரேமின் பின்னந்தலையில் ஒரு தேங்காய் மட்டை கொண்டு அடிக்க அப்படியே கால் இடறி கார்த்தியின் கையில் ஒரு கை பற்றி ஒரு கையால் தலையைப் பிடித்து வலியில் கத்தினான்.
"மாப்பிள்ளை வலிக்கிதுடா" கண்ணின் ஓரம் ஒரு துளி நீர் துளிர்த்து கன்னத்தில் வழிந்தது.
அவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்த ஹரிக்கு நண்பனின் கண்ணீர் ஏதோ செய்ய கோவத்தில் கையிலிருந்த கத்தியைச் சற்று இறக்கி தன் கையை பற்றியிருந்த அந்த அடியாளின் கையில் சற்று ஆழமாக கத்தியால் வெட்டு ஒன்று நொடியில் கொடுத்திருந்தான், கார்த்தியோ ப்ரேமை அடித்தவனின் வயிற்றிலே ஓங்கி ஒரு எத்து விட அவன் வந்த வேகத்திலே கீழே விழுந்து கிடந்தான்.
"யோவ் என்ன எங்களை பாத்தா சொம் பயலுகனு நெனச்சீங்களா? நீ அமைதியா இருக்குற வரைக்கும் தான் நாங்க அமைதியா இருப்போம், தேவையில்லாம மேல கை வச்சீங்க அப்றம் நடக்குறதே வேற. ஒழுங்கா வழிய விட்ருங்க"
பன்னிரண்டு மணி நேரம் அவர்களுடனே இருந்தவர்களுக்கு நண்பர்களின் சிரித்த முகமே காட்சி கிடைத்திருக்க அவர்கள் கோவத்தைப் பார்த்து அதன் தீவிரம் உணர்ந்து மற்றவர்கள் அமைதியாகி வழியை விட்டனர். ப்ரேமின் கையை பிடித்த கார்த்தி அவனை மெதுவாக அழைத்துச்செல்ல எந்தவிதமான சந்தேகமும் இன்றி தோட்டத்தின் பின் வழியாக ஹரி அவர்களை அழைத்துச்சென்றான்.
கண்ணிற்கு எட்டிய தூரம் வரை எவரும் இல்லை என்று உறுதி செய்தபின்னர் அந்த நபரை ஒரு மரத்தின் அருகே அமரவைத்து மறவாது மன்னிப்பையும் கூறி தான் விடைபெற்றனர்.
அவர்கள் உண்மையான நோக்கத்தினை எவரும் அறியாததால் மீண்டும் முத்துவின் தோட்டத்திற்கே சென்று அந்த ஊரின் ஒரு மருத்துவரை அழைத்து வந்து பிரேமிற்கு சிகிச்சை அளித்தனர்.
"ஏண்டா நீ செத்தா உன் பைக் எனக்கு, உன் செருப்பு எனக்கு-னு ஒன்ன விட்டு வைக்க மாட்டீங்க அது ஏண்டா அவனுக என்ன அடிச்சதும் அப்டி கோவம் வந்துச்சு?" இதழில் மெல்லிய சிரிப்புடன் அலைபேசியில் மூழ்கியிருந்த நண்பர்களிடம் கேள்வி எழுப்பினான்.
"இவன் எல்லாத்தையும் பழசாக்கி வச்சிட்டு சாவானம் அத நாங்க விட்றணுமா?" - ஹரி
"உன்ன அடிக்க, கொல்லுற உரிமை எல்லாம் எங்களுக்கு மட்டும் தான் இருக்கு. இதெல்லாம் பாத்துட்டு உன் மேல பாசம் இருக்குனு எல்லாம் நனைச்சிட கூடாது. நாளைக்கே வண்டி, போன், கார் எல்லாம் வாங்கி வை நாங்களே விஷம் குடுத்து போட்டு தள்ளிறோம்"
கார்த்தி கூறியதைச் சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட ப்ரேம், "சரி வேலைய பாக்கலாமா?"
"நீ ஒன்னும் வர வேணாம் நாங்க பாத்துக்குறோம்" சிவா ப்ரேமை ஓய்வெடுக்கக் கூறி ஒரு பையை மூட்டை கட்டினான்.
"அது சரிப்பட்டு வராது சிவா தலைல அடி எல்லாம் பெருசு இல்ல. யமுனாவை கூட்டிட்டு எப்பிடிடா தப்பிக்கிறதுனு தான் பாப்போம் அந்த நேரத்துல வந்து என்ன தனியா ரிஸ்க் எடுத்துட்டு கூட்டிட்டு எல்லாம் போக முடியாது"
"இப்ப உன்ன யாரு கூட்டிட்டு போவோம்னு சொன்னது. உயிர் மேல ஆசை இருந்தா நீயா வாடா-னு விட்டுட்டு தான் போயிருப்போம்"
ப்ரேமை கலாய்த்த ஹரி முத்துவின் பூட்டியிருந்த கதவில் 'நன்றி' என்ற ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு வந்து தன்னுடைய பையிலிருந்து நால்வருக்கும் ஒரு பையைக் கொடுத்தான்.
"மாப்பிள்ளை கிபிட் எல்லாம் வாங்கியிருக்க போல" ஆசையாக அந்த பையைப் பிரித்துப் பார்த்த கார்த்திக்குப் பேரதிர்ச்சியாக உள்ளே ஒரு பர்தா இருந்தது, "என்னடா பர்தா குடுக்குற? இத வச்சு நாம என்ன பண்றது?"
"நாம தப்பிச்சது இன்னேரம் இவன் மாமனாருக்கு தெரிஞ்சிருக்கும் ரிஸ்க் எடுக்க வேணாம். இது தான் சேப். வேகமா கிளம்பலாம்" தலை வழியாகப் பர்தாவை அணிந்துகொண்டு ப்ரேம் கூறினான்.
அவனைப் பார்த்து வாயைப் பிளந்த கார்த்தி, "என் தெய்வத்துக்கே மாறு வேசமா?" ராகம் பாட ப்ரேம் முறைத்ததிலேயே அமைதியாகிவிட்டான்.
"மாப்பிள்ளை அப்ப பாண்ட் போடாமயே வரவா? வெயில் ஜாஸ்தியா இருக்குல்ல" பாண்ட் ஜிப்பில் கை வைத்துக் கேட்டான் கார்த்தி.
"கழட்டிக்கோ மாப்பிள்ளை ஆனா நாமன்னு தெரிஞ்சு அவிங்க நம்மள தொரத்துப்ப இத நாங்க எல்லாம் கழட்டிடுவோம் நீ மட்டும் ஜட்டியோட தான் ஓடணும். உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனா எங்களுக்கு நோ ப்ராப்லம்"
"நோ நோ நோ நோ... ஊருக்குள்ள பொண்ணுங்க எல்லாம் இருப்பாங்க நான் ரெண்டு பாண்ட் கூட போட்டுட்டு வர்றேன். ஒன்னு உருவிட்டா ஒன்னு இருக்கும்ல" பல்லைக் காட்டிக்கொண்டே அவனும் அணிந்து தயாராகினான்.
"ஓகே இப்ப நெக்ஸ்ட் டாஸ்க். லேடீஸ் வாய்ஸ்ல பேசுங்க பாப்போம்"
"உயிரே உயிரே... தப்பிச்சு எப்படியாது ஓடிடு" வடிவேலைப் போல் கார்த்தி பாட, "யு ஆர் செலக்டட்" சிரித்துக்கொண்டே ஹரி கூறினான்.
அதே போல் மற்ற மூவரும் பேசப் பேசிய வாக்கிலே ஒரு கடை முன் நின்று ஒரு பத்து கோன் வாங்கினர். "நாம பார்லர்ல இருந்து மருதாணி போட போறோம் சரியா?" - ஹரி
"இன்னைக்கு நிச்சயம் வச்சிட்டு இன்னுமா மருதாணி போடாம இருக்கும்?" - கார்த்தி.
"அப்ப அவிங்க சொந்தக்காரங்களுக்கு ப்ரீ சர்வீஸ் குடுக்க வந்தோம்ன்னு சொலலாம்டா" - ஹரி
"ஓ அப்ப சரின்னு கைய நீட்டிட்டா நீ போட்டு விட்ருவியா?" - கார்த்தி
"ரெண்டு பூவ வரைஞ்சு வச்சிட்டு வேண்டியது தான்" - ஹரி
"ஒன்னாவது படிக்கிறப்ப கூட பூ வரையாம காக்கா வரைஞ்ச முரட்டு சிங்கள்டா நான். என்ன போய் பூ வரைய சொல்றியா?" - கார்த்தி
"செருப்பு பிஞ்சிடும் உனக்கு. அவனுக கூட இவ்ளோ கேள்வி கேக்க மாட்டாங்கடா மூடிட்டு வந்துடு" ப்ரேமின் கோவத்தில் இருவரும் அமைதியாகிவிட ஒருவாறு பதினொன்றைத் தாண்டி தான் வீட்டிற்கு வந்தனர்.
காவலுக்கு இருந்தவர்கள் நால்வரும் பார்த்த அணிந்திருக்கப் எதற்காக வந்துள்ளனர் மற்றும் பெயரை மட்டும் கேட்டனர், "இது சுப்புலக்ஷ்மி, இது பாக்கியலட்சுமி, இது அன்னலட்சுமி நான் வீரலக்ஷ்மி" நால்வருக்கும் பெயர் ஒரே வீச்சில் ஹரி பெண் சொல்லி முடிக்க அந்த ஆண் இவர்களைச் சந்தேகமாகப் பார்த்தான்.
"ஓ சாரி எங்க ஹஸ்பன்ட் எல்லாரும் ஹிந்தூஸ் சோ அவங்க எங்களுக்கு இப்டி தான் செல்லப்பேர் வச்சிருக்காங்க. நல்லா இருக்குல்ல? என்னங்க எப்படி வச்சிருக்கீங்கன்னு நாங்க கேட்டா நீங்க தான் எங்க வீடு மஹாலக்ஷ்மின்னு சொல்லுவாங்க ஐயோ ஒரே ஷய்யா போய்டும் என்னங்கடா"
கார்த்தி கூறிய கதையை முதலில் சிரிப்புடன் கேட்ட அந்த காவலாளி அவன் கூறிய டா-வில் மீண்டும் குழம்பிப் போய் நின்றான்.
"ஓ அகைன் சாரி நாங்க எங்களையே டா டா டா-னு தான் சொல்லி கூப்புடுவோம். வி ஆர் சோ ஸ்வீட்ல?" பர்தாவிற்கு வெளியில் இல்லாத முடியைக் காதோரம் ஒதுக்கி ஒதுக்கிப் பேசினான் கார்த்தி.
"சரிம்மா சரிம்மா" என்றானே தவிரக் கதவைத் திறக்கவில்லை அவன், மாறாக ஒரு வெட்கம் அவனிடத்தில்.
காவல்துறையினர் எவரும் அங்கு இல்லை அந்த கிராமத்து மனிதர் இவர் மட்டுமே காவலுக்கு இருக்க, "உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கே பாட்டு கிளாஸ் எதுவும் போறிங்களா?" பச்சையாக அவன் வழிவதை அனைவரும் புரிந்துகொண்டனர்.
"ஆமா காக்கா கிட்ட போறான். மரத்துல இருந்து அது பாட கீழ இருந்து இவன் பாட ஒரே கூத்தா இருக்கும்" ஹரி சரியாக கார்த்தியின் காலை வாரினான்.
"காக்காவா?" பின்னால் திரும்பி ஹரியை முறைத்தவன் மீண்டும் அந்த காவலாளியிடம், "அக்ச்சுவலி அவங்க பேர் வேற தான் பட் காக்காவா இருந்தாலும் அதோட குரலும் ஒரு தனி ராகம் தானே அதுக்கு தான் அவங்க பேர அப்டி வச்சிருக்காங்க. நீங்க வேனா உங்க நம்பர் தாங்களேன் நாம நைட் போன்ல டீட்டைலா பேசலாம்" கிரக்கமான குரலில் கூறி இறுதியாக கார்த்தி கண்ணடிக்க அந்த மனிதர் மொத்தமாக வீழ்ந்து தான் போனார்.
உடனே தன்னுடைய எண்ணை அவனிடம் கொடுத்து கதவைத் திறந்துவிட உள்ளே சென்ற பின், "ஏண்டா இப்பலாம் நீ ஆம்பளைங்களையும் விட்டு வைக்கிறது இல்லையா?" ப்ரேம் கார்த்தியை முறைத்துக் கேட்டான்.
"இல்ல மாப்பிள்ளை அடுத்து நமக்கு ஒரு மாசத்துக்கு அடிமை சிக்கிட்டான் அதுக்கு தான் கொஞ்சம் வழிஞ்சேன் இனி இருக்கு கச்சேரி"
சிரித்துக்கொண்டே நால்வரும் உள்ளே செல்ல சரியாக ஸ்பீக்கரில்,
நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும்
பொண்ணும்தான் பேறு
விளங்க இங்கு வாழனும்
பாட்டை கேட்டு கண்களை மூடி எரிச்சலைக் கட்டுப்படுத்திய சிவாவைச் சீண்ட, "கரெக்ட் மச்சி பொண்ண தூக்க முடியலைன்னா கண்டிப்பா 'ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்' பாடிட்டு மாசார வாழ்த்திட்டு தான் நாம கெளம்புறோம் சரியா?" கார்த்தியைக் கொலை வெறியில் பார்த்தான் சிவா.
"டேய் தீவெட்டி முண்டமே..."
"ஓகே இப்ப நம்ம முதல் டாஸ்க் வெற்றி எங்கன்னு தேடணும்" சண்டையைத் தடுக்க ப்ரேம் இடைபுகுந்து பேசினான்.
"அதெல்லாம் வேலைக்கு ஆகாது. ஆளுக்கு ஓரு பக்கம் போகலாம் நாலுபேரும் யமுனா, வெற்றி ரெண்டு பேரையும் தேடுறோம். யார் கிடைச்சாலும் ஒடனே கால் பண்ணுங்க. சிவா யமுனாவை பாத்த ஒடனே டூயட் ஆடிட்டு இருக்காத எங்களுக்கு கால் பண்ணு"
பூம் பூம் மாடு போல் தலையை ஆட்டி நால்வரும் நாலா திசைக்கும் பிரிந்து சென்றனர். பர்தா அவர்களுக்கு வசதியாக இருக்க அதிகம் யாரும் அவர்களைக் கேள்வி கேட்கவில்லை. இடையே அபர்ணாவைப் பார்த்த கார்த்திக்குப் புன்னகை ஒரு பக்கம் வந்தாலும் ஓடிச் சென்று அவள் தலையில் 'நங்' என்று சத்தம் வரும்படி கொட்ட வேண்டும் என்றே தோன்றியது.
ஆனால் முகத்தை வெட்டி கோவத்தைக் கட்டி வேகமாக நடந்தவனைப் பார்த்த பலர், 'இவள் பெண் தானா?' என்ற பார்வையிலே பார்த்தனர்.
காரணம், குரலையும் உடையையும் மாற்றிக்கொண்டவன் நடையைச் சிறிதும் மாற்றாமல் அவன் உயரத்திற்கு வேக வேகமாகவே நடந்தான். எங்குத் தேடியும் நால்வருக்கும் யமுனா, வெற்றி என எவரும் கண்ணில் படாமல் போக மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வந்தனர்.
அப்படி வரும் பொழுது சற்று தூரத்தில் கார்த்தி வெற்றியைப் பார்த்துவிட்டான். அவன் தந்தையோடும் வேறொரு ஆணுடன் நின்று பேசிக்கொண்டிருந்தவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
ஹரி, ப்ரேம், சிவா மூவரும் ஒன்று கூடிப் பேசிக்கொண்டிருக்க ஒரு திசையில் வெற்றியும் மற்றொரு திசையில் நண்பர்கள் மூவரும் இருந்தனர். இவர்களைச் சென்று அழைத்து வருவதற்குள் வெற்றி எங்காவது சென்றுவிட்டால்? ஆக நின்ற இடத்திலே நின்று அவர்களை அழைத்துக்கொண்டு வெற்றி மீது ஒரு கண் வைத்திருக்கலாம் என்று அங்கேயே நின்று ஹரிக்கு கைப்பேசியில் அழைத்தான்.
பின்னால் வேறு ஸ்பீக்கர் காதை கிழித்து அடுத்த கிராமம் வரை தன ஒலியைப் பரப்பிக்கொண்டிருந்தது.
ஹரி அழைப்பை எடுத்து காதில் வைக்க, "மச்சான் வெற்றி பாத்துட்டேண்டா..." என்றான் ஹை பிட்ச்சில்.
கார்த்தி கூறிய எதுவும் ஸ்பீக்கர் கத்தியதில் ஹரிக்குக் கேட்காமல் போக, "என்னடாஆஆஆ சொல்ற? ஒண்ணுமேஏஏஏஏ கேக்ககககலஅஅஅ"
"மச்சான் வெற்றிடா இங்க தான் இருக்கான் உனக்கு லெப்ட் சைடு பாரு..." கார்த்தி மீண்டும் கத்தினான்.
இப்பொழுதும் ஹரிக்குக் கேட்காமல் போக, "டேய் கட் பண்ணிட்டு மெசேஜ் பண்ணு" ப்ரேம் கூறவும் அவனுக்கு ஒரு செய்தியை அனுப்பிவிட்டான், "இங்க பேசு" என்று.
சரி என்று கார்த்தியும் தான் இருக்கும் இடத்தை முதலில் கூறிவிட அவர்கள் கார்த்தியைப் பார்த்துவிட்டனர். பிறகு வெற்றி இருக்கும் இடத்தை கூறி மெசேஜ் அனுப்பச் சென்ற நொடி அவன் கைப்பேசி இரண்டு நாள் உணவில்லாது உயிரைவிட்டு மேலோகம் சென்றடைந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த தருணம் வேறு வழியே இல்லை என்று மீண்டும் அவர்களைப் பார்த்து தன்னுடன் வருமாறு சைகை செய்தான். அவர்களுக்கு அது புரியாமல் போக உச்சக்கட்ட கோபத்தில் சென்ற கார்த்தி, "அடேய் செவிட்டு முண்டங்களா இங்க வாங்கடா கேனை கூ..."
கார்த்தியின் சத்தமான சொற்களும், அதே நேரம் வீட்டிலிருந்து ஓடிவந்த அங்கு பணிபுரியும் பெண்ணின் "அய்யா... யமுனா பாப்பா லெட்டர் எழுதி வச்சிட்டு எங்கையோ போயிடுச்சுங்கயா" என்ற ஒரு குரலும், நொடியில் நின்றிருந்த பாட்டுச் சத்தத்தில் வீட்டிலிருந்த மொத்த மக்களுக்கும் கேட்டுவிட்டது.
"என்னது யமுனாவ காணமா?" ஹரி, சிவா, கார்த்தி, ப்ரேம் நால்வரும் ஒன்றாக கத்தினர் ஆச்சிரியம் தாளாமல்.
அந்த இடமே சலசலபில் மூழ்கியது. நெடுஞ்சேரனுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது, ஒரு பக்கம் மகள் சென்ற செய்தி மற்றொரு பக்கம் அவருக்கு நன்றாக பரிட்சியமான கார்த்தியின் குரல். காலையில் அவர்களைத் தப்பிக்கவிட்டு பேச்சு வாங்கிய ஆட்கள் பர்தாவிலிருந்து ஆண் குரலில் பேசியவனை மட்டுமல்லாது மற்ற மூவரையும் சரியாகக் கண்டுகொள்ள,
உடனே நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு தொண்டையை செருமி, "ஹாஹா... பாருங்க எனக்கு கோல்டு புடிச்சிகிடுச்சு. கேன் ஐ கெட் எ கப் ஆப் ஹாட் காபி? (Can I get a cup of hot coffee?)"
அலட்டிக்கொண்டு கேட்க அதற்குள் நிலைமையைப் புரிந்த ஹரி, "டேய் சிவா யமுனா நிஜமா உன்ன தான் லவ் பன்னாலா?" என்றபடியே கார்த்தி இருக்கும் திசை நோக்கி நடந்தனர்.
"டேய்..." சிவாவிற்குப் பேச்சே வரவில்லை யமுனாவைப் பற்றிக் கேட்டதிலிருந்து.
"அப்றம் ஏண்டா உன்ன விட்டுட்டு வேற ஒருத்தன் கூட ஓடி போயிருக்கு?" என்றவர்கள் கார்த்தியை அடைவதற்கு முன்னர் இருந்த ப்ரொஜக்டாரையும் ஸ்பீக்கரையும் இயக்கிக்கொண்டிருந்தவனிடம் ஒரு பென் டிரைவ் ஒன்றைக் கொடுத்து, அதோடு ஒரு இரண்டாயிரம் பணத்தையும் கொடுத்து, "ஜி இத இப்படியே போடுங்க"
"என்னங்க இது?" என்றான் அவன் புரியாமல். அதற்குள் ஹரி பர்தாவை வேக வேகமாக கலட்டி தூக்கி எரிய ப்ரேம், சிவாவும் அதை அவிழ்த்தனர்.
"சொன்னா கேளுங்க ஜி ரொம்ப எமெர்ஜென்சி" என்று கார்த்தியை நோக்கி வேகமாகச் சென்றுவிட்டனர். சரியாக அவனை வளைந்திருந்த அடியாட்கள் சிலரைத் தள்ளிவிட்டு அவன் அருகில் சென்று நின்றனர் மூவரும். அந்த நேரத்தில் சரியாக நெடுஞ்சேரன் வந்து சிவாவின் சட்டையைப் பற்றி, "எங்கடா என் பொண்ணு?"
"சார் எனக்குத் தெரியாது சார்" சிவா மிரட்சியுடன் கூறினான்.
"ப்பா என்னப்பா நடக்குது இங்க? இவன் தான சிவா?" அந்த இடத்தில் வந்த அன்பின் கண்ணில் க்ரோதம் தந்தையை விட அதிகம் இருந்தது.
"ஆமா தம்பி, யமுனா எங்கன்னு தெரியல கேட்டா தெரியலன்னு சொல்றான்"
"வேற எங்கையாவது வச்சு விசாரிக்க வேண்டிய விதமா விசாரிச்சா பதில் சொல்லிட போறான்" - அன்பு தந்தைக்கு உதவ, இவர்களுக்கு உதவ முடியாத நிலையில் இயலாமையான கண்களுடன் அங்கும் இங்கும் பார்த்து முழித்து நின்றான் வெற்றி.
"யோவ் எங்களைக் குறை சொல்லிட்டே இருக்கீங்க நீங்க பாத்துருக்க மாப்பிள்ளை உங்க தங்கச்சிக்கு புடிச்சிருக்கானு கேட்டியா நீ?" ப்ரேம் எகிறிக்கொண்டு வந்தான்.
"டேய் நான் பாத்த மாப்பிள்ளைக்கு என்னடா குறை? இவன மாதிரி அவன் ஒன்னும் பஞ்ச பரதேசி இல்ல" மக்களைத் துச்சமாகப் பார்க்கும் பார்வை இப்பொழுது சிவாவின் மீதும் வெளிப்படையாகக் காட்டினார் நெடுஞ்சேரன்.
"நீ பாத்த மாப்பிள்ளையோட லட்சணத்தை அங்க பாருயா பரணிக்கா தலையா" என்று ப்ரொஜக்டாரை காண்பித்தான் ஹரி.
ஹரி கூறிய திசையில் மொத்தமாக அங்கிருந்த அத்தனை மனிதர்களும் பார்க்க, அதில் யமுனாவிற்குப் பார்த்த மாப்பிள்ளை ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்தான். இதே போல் பல படங்கள் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதும், மதுவின் வீரியத்தில் இருப்பதும் ஓடியது.
இதன் இடையில் அனைவரும் அந்த படங்களின் ஆச்சிரியத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கி இருக்க மெதுவாக ஹரியின் கையை சுரண்டி, "உங்க வேலை தானா இது? ஓடிருங்க டா" என்றான் வெற்றி.
நண்பர்களைப் பார்க்க மூவரும் படத்தைப் பார்ப்பது போல் வாயைப் பிளந்து பார்த்து நின்றனர், அவர்களைத் தலையில் மெதுவாகத் தட்டி பூனை போல் மெல்ல பின் வாங்கினர். அதைத் தொடர்ந்து ஒரு காணொளி.
அதில் நெடுஞ்சேரன் ஏதோ ஒரு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக்கொண்டே தன்னுடைய பி.ஏ-விடம், "எனக்கு தெரியும்யா இந்த ஊருக்கு ரோடு போட கவர்மேன்ட் காசு குடுத்து ஒரு வாரம் ஆச்சு. அதுக்குன்னு இப்படியே நான் போடுங்கடானு சொல்லிட்டா இந்த ஊருல இருக்குற ஒரு பையன் என்ன மதிப்பானா? அலையட்டும் இன்னும் கொஞ்ச நாள்..."
அதிர்ச்சியிலிருந்து வெளி வந்த அன்பு, "யாரை கேட்டுயா நீ இந்த வீடியோ ப்லே பண்ற அமத்து" எகிறினான் படத்தை ஓட்டியவனிடம்.
அதற்குள், "ஏன் தம்பி உங்க அப்பா வரலாறு பத்தி நாங்க தெரிஞ்சிடுவோம்ன்னு பயமா?"
"ஏங்க அதுல இருக்குறது எல்லாம் நம்புறீங்களா? அப்பா உங்களுக்காக எவ்ளோ உதவி பன்றாரு?" தந்தைக்காக இறங்கி வந்து பேசினான் அன்பு.
"அத தான் நாங்க இப்ப பாத்துட்டோமே தம்பி..." வேறு ஒரு நபர் நக்கலாகச் சிரித்தவாறு அன்பிடமிருந்து பார்வையை நெடுஞ்சேரனுக்கு கொண்டு சென்றார், "இப்ப தெரியுதே இந்த சொத்துக்கு மதிப்பு"
"என்னையா நக்கலா? பஸ் வசதியே இல்லாத ஊருக்கு நீங்க போய் கலெக்டர்கிட்ட மனு குடுத்து குடுத்து இருவது வருஷம் வந்திங்க. என்ன நடந்துச்சு? என் மாப்பிள்ளை வந்து தான உங்களுக்கு பஸ், பாலம்-னு கட்டி குடுத்தாரு, அதெல்லாம் மறந்து போச்சா?" நெடுஞ்சேரனின் சகோதரி கணவன் உதவிக்கு வர இப்படியே பேச்சு நீண்டு கொண்டே சென்றது.
"அய்யா பின்னாடி எவனோ வைக்கப்போர்ல தீ வச்சிட்டாய்ங்க" மூச்சு வாங்க ஒருவன் ஓடி வந்து கூறினான்.
தப்பித்துச் சென்று நால்வரும் காலையில் சென்ற மாதிரியே தோப்பின் வழியாகச் செல்லலாம் என்று செல்லும் நேரம், "நில்லுங்க" என்ற மூச்சு வாங்கும் அபர்ணாவின் குரல் கேட்டு கண்களை மூடி தலையை ஆட்டிய கார்த்தி, "அழகா பொறந்தது என் தப்பா?" சலித்துக்கொண்டே திரும்பினான்.
ஆனால் அபர்ணாவோ பார்வை முழுதும் ஹரியின் மேல் தான் வைத்திருந்தாள். "என்னையா நீவாட்டுக்கு போற, எனக்கு பதில் சொல்லிட்டு போ" உரிமையாக அவனிடம் சண்டைக்கு நின்றாள்.
"என்னங்க என்னமோ உங்கள ஏமாத்தி வயித்துல புள்ள குடுத்த மாதிரி பேசுறீங்க?" கார்த்திக்குச் சிரிப்பு தான் வந்தது அவள் பேச்சில்.
அதற்கு ஹரியை மட்டுமே பார்த்து முறைத்து, "கொஞ்சம் விட்ருந்தா இந்த சொறி மூஞ்சி அய்யனார் அதையும் பண்ணிருப்பான்" இப்பொழுது அதிர்ச்சி மூவருக்கும்.
ஏற்கனவே அவசரத்திலிருந்தவர்களுக்கு இவள் பேச்சு இன்னும் பயத்தைக் கொடுத்தது, கார்த்தியோ கண்கள் வெளியில் வந்து விழும் அளவு கண்ணை விரித்து, "என்னடா நடக்குது இங்க? கேப்ல கெடா வெட்டி பிரியாணியை சாப்ட்ருக்க போல" எலியும் பூனையுமாக இருந்தவர்கள் எப்படி இப்படி என்ற வியப்பு தான்.
"அவன்கிட்ட ஏன் கேக்குறீங்க நான் சொல்றேன். இவன் என்ன கிஸ் பண்ணிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி அப்டியே கெளம்புறான்?" அப்படியே ஆடிப்போனர் மூவரும், பேச்சு வரவில்லை, அபர்ணா பக்கம் இருந்த தலையை திரும்பி ஹரியை பார்த்தனர்.
அவனோ நொடியில், "மச்சி என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தான?" இல்லை என்று மூவரும் தலையை ஆட்டினர், "நான் அப்டி எல்லாம் பண்ணுவேனா? நான் அமைதியா தாண்டா இருந்தேன் இந்த பொண்ணு தான் முதல கன்னத்துல ஒரு இச்சு வச்சுச்சு" அபர்ணா பக்கம் பந்தைத் தள்ளிவிட்டான் ஹரி.
பிளந்திருந்த வாயை உடனே மூடி கார்த்தி, "ஏன்மா நீ முத்தம் குடுத்துட்டு என் நண்பன் மேல பழியை போடுற. நான் கூட அவனை ஒரு நிமிஷம் சந்தேகப்பட்டுட்டேன். மன்னிச்சிரு பிள்ளை"
"டேய் சூனா பானா அவன் சொல்றத முழுசா கேளுடா"
சரி கோப்போம் என்று கார்த்தி ஹரியைப் பார்க்க அவனோ வெட்கத்துடன், "யாரவது நமக்கு ஒன்னு செஞ்சா அத திருப்பி டபுலா தரணும்ன்னு மை மம்மி சொல்லி குடுத்தாங்க அது தான் நானும்..." முழுதாக கூறாமல் மேலும் வெட்கப்பட்டான்.
இதை எல்லாம் கேட்ட கார்த்தி, "உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்... தங்கமே ஞயான தங்கமே. என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே..." சோகத்தில் மூழ்கி மூழ்கிப் பாடினான்.
"அட ச்சீ நிறுத்துடா, ஏன்மா அவனே உன்ன வந்து பாப்பான் இதெல்லாம் பேசுற நேரம் இல்ல நாங்க போகணும்" என்று வம்படியாக கார்த்தியையும் ஹரியையும் இழுத்துச் சென்றான் ப்ரேம்.
செல்லும் வழியில் இப்பொழுது கார்த்தி நின்று தங்கள் பையிலிருந்து தீப்பெட்டி எடுத்து தங்கள் எதிரிலிருந்த வைக்கப்போரில் போட அது மள மளவென பற்றி எறிந்தது.
"இத ஏண்டா எரிச்ச?" பதறிக்கொண்டு கேட்டான் ப்ரேம்.
"நேத்துல இருந்து ஆளுக்கு மெரட்டுறானுங்க, அடிக்கிறானுங்க அது தான் கொஞ்சம் சேதாரம் பண்ணிட்டு போகலாம்" என்று கூறி தோப்பில் வழி சென்றனர். முதலில் வேகமாக நடக்க உடலிலிருந்த களைப்பு, பசி எல்லாம் இணைந்து அவர்கள் வேகத்தைக் குறைத்தது.
திடீரென தங்கள் பின்னால் ஆட்கள் வரும் சத்தம் கேட்க திடுதிடுவென ஓட்டம் பிடித்தனர். தோப்பை தாண்டி ஊர் மட்டுமே இருக்க அங்கு தான் ஓடினர். சிறிது தூரம் ஓடிய பிறகு தான் கார்த்தி இன்னும் பர்தாவை அவிழ்க்கவில்லை என்ற எண்ணமே ஹரிக்கு வந்தது.
"பர்தாவை கழட்டிட்டு ஓடிடா கார்ட்டூன் நாயே"
அப்பொழுது தான் தன்னை பார்த்தவன் ஓடிக்கொண்டே, "மறந்துட்டேன் மாப்பிள்ளை" என்று ஓடிக்கொண்டே தலை வழியாகப் பர்தாவைத் தூக்கி அவிழ்க்கப் பார்த்தால் முடியவில்லை, முகத்தை முழுதும் துணியே மறைத்திருக்க எதிரில் வந்ததும் தெரியாமல் ஒரு சுவரில் மோதி மூக்கிலும் தலையிலும் அடிபட்டு வலியில் கத்தி நின்றுவிட்டான்.
"இவன் ஒருத்தன் ப்ரேமு இவன அப்டியே விட்டுட்டு போய்டலாமா அடுத்த பஸ்ல வரட்டும்" - ஹரிக்கு இந்த நிலையிலும் சிரிப்பு தான் வந்தது கார்த்தியின் நிலையைப் பார்த்து.
"டேய் பட்டன் கழட்டாம அவுத்துட்டேன் போல இப்ப திருப்பி போடவும் முடியலடாஆஆஆ" கதறினான் கார்த்தி.
உடனே மற்ற மூவரும் அதை கிளிக்காத குறையாக அவிழ்த்துப் போட்டு ஓடினர் ஓடினர் ஓடிக்கொண்டே இருந்தனர். எங்கு மீண்டும் மீண்டும் அதே தெருக்கள் தான், இல்லை இவர்களை வளைத்துப் பிடித்து மடக்கிவிடுவர் நெடுஞ்சேரனின் அடியாட்கள், இவர்களோடு அன்பு மற்றும் வெற்றியும்.
அந்த அடியாட்களை முக்கால்வாசி வழிநடத்திச் சென்றது அன்பு தான், "ஆளாளுக்கு கைல ஒரு அருவாளோட சுத்துறானுங்கடா நமக்கு குழந்தை குட்டி வேணும்னா உசைன் போல்ட் வேகத்துல ஓடிடுங்கடாஆஆஆ..." அந்த கூட்டத்திலிருந்து தப்பித்து ஊரை விட்டுச் செல்லும் மார்க்கத்தை அவர்களுக்குக் கூறி மீண்டும் கூட்டத்தில் ஐக்கியமானான் வெற்றி.
அதைப் பயன்படுத்தி நால்வரும் ஊரைவிட்டு பொட்டல் காடு போல் காய்ந்து வரைந்திருந்த நிலத்திற்கு வரச் சிவாவின் கைப்பேசி மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்க எரிச்சலுடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவனுக்கு யமுனாவின் குரல் கேட்டது, "சிவா" என்ற மெல்லிய குரல். ஓடிக்கொண்டிருந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.
"யமுனா?" இன்னும் சந்தேகம் தான் அவனுக்கு.
"ஆமா சிவா நான் யமுனா தான். நீ வருவன்னு நான் ரொம்ப எதிர்பாத்தேண்டா. ஏன் என்ன தேடி வரல நீ? அந்த அளவுக்கு நான் என்ன பெருசா தப்பு பண்ணிட்டேன்?" பேசப் பேச அவள் குரல் இலகிக்கொண்டே வந்து இறுதியாக அழுதுவிட்டாள்.
"அலுக்காத யமுனா ப்ளீஸ்... உன்ன தேடி நான் உன் ஊர்ல தான்டி இருக்கேன்" அவள் அழுகையில் தன்னுடைய ஆற்றாமையையும் கலந்து கொண்டிருந்தான் சிவா.
இவன் பேசியதைக் கேட்டு கோவமாக கார்த்தி கைப்பேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு, "இந்தாம்மா நீ எங்க இருக்க உன்ன தேடி நாங்க வந்தா நீ எங்கையோ ஜாலியா போயிட்ட இங்க உன் அப்பன், அண்ணன் எல்லாம் தெரு தெருவா தொரத்துறானுக" பொரிந்து தள்ளினான்.
"நான் சிவாவ தேடி தான் கோயம்பத்தூர் போய்ட்டு இருக்கேன்"
"என்னது கோயம்பத்தூர் போறியா?" வட்டமிட்டு நால்வரும் கோரஸாக கேட்டனர்.
"ஆமா பிலைட்ல இருக்கேன்" அவர்கள் அதிர்ச்சியில் யமுனாவின் குரல் இன்னும் குறைந்து போனது.
"டேய் என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க ஒருத்தன் தங்கச்சிய கூட்டிட்டு ஓடுன்னு சொல்றான், இன்னொருத்தன் அருவாளை எடுத்துட்டு ஊரையே சுத்தி காமிக்கிறான், இங்க அவிங்க தங்கச்சி ஒரு போன் கூட பண்ணாம ஊருக்கு போய்ட்டா. இவன் என்னனா கை அறுத்துட்டு சாகப்போறேன்னு மெரட்டுறான். என்ன எங்க மூணு பேரையும் பாத்தா உங்களுக்கு இளிச்ச வாயனுக மாதிரி தெரியாதா?" பொருமினான் கார்த்தி.
"அன்பு உங்களுக்கு ஹெல்ப் பண்ணுச்சா?" அவ்வளவு நேரம் பேசியதில் அவள் அதை மட்டுமே எடுத்துக்கொண்டாள்.
"கிழிச்சான். எங்களைப் போட்டுத் தள்ள பிளான் போட்டுக்குடுத்தாதே உன் அன்பு நொண்ணன் தான்" - ஹரி.
"அண்ணா பொய் சொல்லாதீங்க என்ன வீட்டை விட்டு தப்பிக்க வச்சு டிக்கெட் போட்டு கொடுத்ததே அன்பு தான்"
நால்வருக்கும் தாங்க முடியாத அதிர்ச்சி, "ஏன்மா நாங்க பொய் சொல்ல போறோம்? எங்கள விசாரிக்க வேண்டிய விதமா விசாரிக்கணும்ன்னு சொன்னான்"
"ஐயோ அண்ணா அம்மா மேல சத்தியமா சொல்றேன் எங்க ஊர்ல இருந்து கார்ல அனுப்பிவிட்டான். நான் லவ் பண்றது அவனுக்கும் அப்பாகும் தான் தெரியும், அப்பாகிட்ட சொல்லி அவர் கேக்கல. எப்படியாவது தப்பிச்சிடணும்னு யோசிச்சிட்டு இருந்தப்ப அன்பு அண்ணா தான் வந்து என்ன அனுப்பி வக்கிறேன்னு சொல்லுச்சு. ரீசன், எங்க வீட்டுல வேலை பாக்குற ஒருத்தவங்க பொண்ண அவன் லவ் பண்றன். சோ என்ன புரிஞ்சிட்டு அனுப்பிவிட்டான்"
"நின்னு பேச நேரமில்லை கார்த்தி, எப்படியாவது இந்த ஊர்ல இருந்து தப்பிக்கும்" என்று ப்ரேம் மூவருக்கும் நினைவுபடுத்த ஹரி அப்படியே தரையில் அமர்ந்துவிட்டேன் மூச்சு வாங்க. நெற்றியில், கழுத்தில் எல்லாம் வியர்வை வழிந்து அவன் அணிந்திருந்த டீ-ஷர்ட் பாதி ஈரமாகியிருந்தது.
"முடியலடா மாப்பிள்ளை. சில்லுனு ஒரு சர்பத் வாங்கிட்டு வாயேன்" தலையைத் தூக்கி சிவாவிடம் கேட்டான்.
"மண்டை கோளாறு உள்ளவன் லூசு பய..." சிவா அழுகாத குறையாக இடத்தைவிட்டு நகர மாட்டேன் என்று வாதம் செய்யும் ஹரியைப் பார்த்துப் புலம்பினான்.
"எதுக்கு மாப்பிள்ளை தம்பிய அலைய வைக்கணும்? நானே உனக்கு வாங்கி தர தான வந்துருக்கேன்" இவர்களை நோக்கி நெடுஞ்சேரன் வர அவர் பின்னால் கருப்பு பூனைகளும் சில காவல்துறையிரணும் வந்தனர்.
"டேய் ஹரி வாடா ஓடிறலாம்" அவனை எழுப்ப முயன்று தோற்றுத் தான் போனான் கார்த்தி. தன் கையை பிடித்து இழுத்த கார்த்தியையும் உடன் இழுத்து அருகிலே அமரவைத்தேன் ஹரி.
"ஹரி வாடா போய்டலாம்" - ப்ரேம்
"எனக்கு மட்டும் ஏண்டா நேத்துல இருந்து squid game குள்ள இருக்குற மாதிரியே தோணுது. உண்மைய சொல்லுங்கடா கொரியால தான இருக்கோம்?"
ஹரியோ அவனைக் கண்டுகொள்ளாமல் கருப்பு பூனை ஒருவனிடம், "ஷூ எல்லாம் பள பளனு இருக்கு என்ன ஷூ பாலிஷ் யூஸ் பண்றீங்க?" அவன் கால்களையே ஆராய்ந்து கேட்டான்.
"ஹரி..." சிவா பீதியில் பேசினான்.
"பயப்புடாத மாப்பிள்ளை. உன் மாமா உன்ன மாப்பிள்ளையா ஏத்துக்கிட்டார் அதுனால தான் இவ்ளோ பாசமா நின்னு பேசுறாரு. என்ன சார்?" ஹரி நெடுஞ்சேரனை இழுக்க அந்த நேரம் அன்பு, வெற்றி, அபர்ணா என அனைவரும் அவ்விடத்தில் வந்து சேர்ந்தனர்.
"என்ன மாப்பிள்ளை நின்னு பாத்துட்டு இருக்க நாலுபேரையும் அடிச்சு தூக்கிட்டு வா பொண்ண அரை மணி நேரத்துல கண்டுபுடிச்சிடலாம்" அபர்ணாவின் தந்தை கண்களில் தீ பறக்கப் பறக்க காவல்துறையினரை ஏவினார்.
தங்களை நோக்கி காவல்துறையினர் வர கார்த்தி ஹரியைப் பார்த்து முறைத்து, "எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா?" என்றான் முகத்தை அஸ்டகோலமாக வைத்து. அவன் பேசியதில் வாய் விட்டு ஹரி சத்தமாகச் சிரிக்க நெடுஞ்சேரனுக்கும் அபர்ணாவின் தந்தைக்கும் கோவம் தலைக்கு ஏறியது.
"இந்த ஊர்லயே உங்களுக்கு சமாதி கட்டுறேண்டா" ஆக்ரோஷமாகப் பேசிய நெடுஞ்சேரனை பார்த்து இன்னும் அதிகம் சிரித்தான், அபர்ணாவிற்கு அவன் அருகில் சென்று தலையை உடைக்கலாம் போன்ற வெறி வந்தது, 'சிரிக்கும் நேரமா இது?' என்று.
அவன் சிரித்துக்கொண்டே இருக்க அவர்கள் பின்னால் கூட்டமாக பத்து வாகனம் வந்து வரிசையாக நின்றது, அதிலிருந்து அடியாட்கள் போலும் இல்லாமல் பாடி கார்ட்ஸ் போலும் இல்லாமல் கலந்து செய்த கலவையாகப் பலர் இறங்கி வந்து நின்றனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் நண்பர்கள் நால்வருக்குக் காவல் போல் நின்றதைப் பார்த்து அனைவருக்கும் புருவத்தில் முடிச்சு விழுந்தது தான் மிச்சம்.
அடுத்த நிமிடம், 'ஸ்விஸ் ஸ்வாஷ் ஸ்விஸ் ஸ்வாஷ் ஸ்விஸ் ஸ்வாஷ்' மொத்த கிராமத்தையும் அதிர வைக்கும் சத்தோடு தரையிலிருந்து புழுதியை எல்லாம் கிளப்பிக்கொண்டு புதிதாக மிளிரிய ஹெலிகாப்டர் ஒன்று வந்து நின்றது.
அதிலிருந்து கோட் சுய்ட் அணிந்து மிடுக்காக, நிமிர்வாக, கண்கள் அங்கிருந்த அனைவரையும் ஆராயும் பார்வையோடு வந்து இறுதியாகக் கீழே அமர்ந்திருந்த ஹரியிடம் வந்து நின்றார். அந்த மனிதரைப் பார்த்த ப்ரேம் சிவா கார்த்திக்கு நிம்மதியாக இருக்க நெடுஞ்சேரன், அன்பு, அபர்ணாவின் தந்தைக்கு வியப்பாக இருந்தது.
இந்தியாவின் முதல் இருபது இடங்களில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் தங்கள் கிராமத்திற்கு வந்திருக்க அவர் ஏதோ தொழில் சார்ந்த காரியமாகத் தான் வருகை புரிந்துள்ளார் என்றெண்ணிய நெடுஞ்சேரன் ஹரி, சிவாவை எல்லாம் டீலில் விட்டு அவரிடம் சென்றார்.
அபர்ணாவிற்கு தன்னுடைய அலுவலகத்தில் இதுவரை யாரும் அதிகம் பார்த்திராத அவள் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளியை நேரில் பார்த்தது ஆச்சிரியம். ஆம் அபர்ணா வேலைசெய்யும் நிறுவனமான பீக் பாயிண்ட் அவருடைய குழுமங்களில் ஒரு புள்ளி மட்டுமே.
"சார் என்ன விசயமா வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சா உதவி பண்ண ஈஸியா இருக்கும்" என்றார் நெடுஞ்சேரன் பவ்யமாக.
அவரோ நெடுஞ்சேரனை பொருட்டாகக் கூட மதிக்காமல் ஹரியை நோக்கித் தான் நடந்தார். அவன் அருகில் வந்தவரின் கையை பிடித்து தன் பக்கத்தில் அமரவைத்த ஹரியைப் பார்க்க அங்கிருந்த எல்லோருக்கும் ஆச்சிர்யதிக்கு மேல் ஆச்சிரியம்.
"எப்பா ஒரு சர்பத் கேட்டா வாங்கி தர மாட்டிக்கிறாய்ங்க ப்பா"
'என்னது அப்பாவா?' ஒரு நாள் இந்த ஆச்சிரியம் போதுமடா சாமி என்று இருந்தது நெடுஞ்சேரனுக்கு.
"ப்பா பாருங்க எங்களை தொரத்தி தொரத்தி அடிச்சு கை கால் எல்லாம் வீங்கி போய் இருக்கு" இன்னும் இரண்டு பிட் சேர்த்து போட்டான் கார்த்தி.
"ஏன் ப உன்கிட்ட தான் கன் இருக்குல்ல எடுத்து நெத்தில சுற்றுக்கலாம்ல?" என்றார் அவரும் அவர்களுக்குச் சாதகமாக.
இங்கு நெடுஞ்சேரனுக்கு அடி வயிறே கலங்கியது, "சார் எதுக்கு கன் எல்லாம். பேசி... பேசிக்கலாம் சார்" என்றார் உதறலாக.
"கன் மறந்து வீட்டுல வச்சிட்டு வந்துட்டேன் ப்பா. இப்ப நீயாச்சும் எனக்கு சில்லுனு ஏதாவது வாங்கி தர போறியா இல்லையா? கைல வேற காசு இல்ல"
தந்தையை ஹரி மிரட்ட அவரும் சிரித்துக்கொண்டே "பாலா பசங்களுக்கு குடுக்க ஏதாவது ஏற்பாடு பண்ணு" தன்னுடைய பி.எ விடம் கூறி எழுந்த ஹரியின் தந்தை முகம் முற்றிலும் மாறி இருந்தது, நெடுச்சேரன் அருகில் வந்தவர், "என் பசங்க மேலயே கை வச்சதுக்கு இந்நேரம் நீ இருந்த இடம் தெரியாம அழிச்சிருப்பேன் ஆனா சிவாவுக்காக மட்டும் தான் அமைதியா நிக்கிறேன். ஒழுங்கா ரெண்டுபேருக்கும் நீயே கல்யாணம் பண்ணி வச்சிட்டு இல்லனா அடுத்து வர்ற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல" என்றார் அழுத்தமாக.
"எப்பா அந்த ஆளுகிட்ட ஏன் பேசிட்டு இருக்க? பொன்னே இன்னேரம் கோயம்பத்தூர் போயிருக்கும்" அவர் திரும்பிப் பார்க்க நால்வரும் வரிசையாக அமர்ந்து ஏதோ குடித்துக்கொண்டிருக்க அவர்களுக்கு மேல் ஒருவர் பெரிய குடை பிடித்துநின்றார்.
"என்னடா சொல்ற மகனே?"
"ஆமா ப்பா வந்து ஒக்காரு ஆரம்பத்துல இருந்து சொல்றேன்" தந்தையை அழைத்து அருகில் அமர்த்தியவன் நேற்றிலிருந்து நடந்த அனைத்தையும் கூறினான்.
அதை எல்லாம் சிரித்துக்கொண்டே கேட்டவர் கார்த்தியின் தோளில் செல்லமாக இரண்டு அடி போட்டு, "அதுக்கு தான் சொன்னேன் இவன ஆரம்பத்துலையே கூட்டிட்டு போக வேணாம்னு சொன்னேன்"
"ப்பா நான் பெருசாலாம் பண்ணலாபா ஒரே ஒரு தீக்குச்சி தான் வச்சேன் அது அப்டி எரியும்ன்னு யாருக்கு தெரியும்?" என்றான் கார்த்தி பல்லைக் காட்டி. "சரி உங்க சாப்பர் தாங்க" என்றான் கார்த்தி உரிமையாய்.
"டேய் எனக்கு முக்கியமான மீட்டிங் ஆந்திரால இருக்கு, இவன் கூப்டான்னு தான் வந்தேன் ஈவினிங் மீட்டிங் போகனும்டா" என்றார் அவரும் சிரித்த முகத்துடன்.
"ஒன்னு பண்ணுங்க இங்க இருந்து ஏர்போர்ட் அரைமணி நேரம் தான். வேகமா போய் கிடைக்குற முதல் பிலைட்ல போங்க. உங்கள விட எங்களுக்குக் கல்யாண வேலை இருக்கு" என்றான் ப்ரேம்.
"அடங்க மாட்டீங்கடா. ஆனா கல்யாண வேலை எல்லாம் நீங்க பாக்க வேணாம். நெடுஞ்சேரன் பாப்பாரு. என்ன நெடுஞ்சேரன் பாப்பிங்க தான?" தன்னை பார்த்துக் கேட்ட மனிதரிடம் நொடி தாமதிக்காமல் எல்லா பக்கமும் தலையைத் தலையை ஆட்டினார்.
"அவ்ளோ தான் ப்ராப்லம் ஓவர். நீங்க கார் எடுத்துட்டு ஊருக்கு போங்க"
அவர் இடையில் விளையாட்டாகக் கிள்ளிய கார்த்தி, "என்ன டாடி குசும்பு அதிகமாகிடுச்சு போல? நாங்க சாப்பர்ல போனதே இல்ல, ஒழுங்கா வண்டிய வச்சிட்டு போங்க" என்று கார்த்தி தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே மற்ற மூவரும் ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்திருந்தனர்.
"மாப்பிள்ளை டாட்டா" என்ற சத்தத்தில் தான் அவர்களைப் பார்த்து வேகமாக ஓடி ஏறிக்கொண்டான்.
"சேட்டை அதிகம் பண்ண்ணாதிங்கடா" தந்தையாய் எச்சரித்து அனுப்பிவைத்தார். அடுத்த சில நொடிகளில் அந்த ஹெலிகாப்டர் கிளம்பிவிட வியர்வையிலும் பயத்திலும் நினைத்திருந்தார் நெடுஞ்சேரன். அங்கு ஹெலிகாப்டரில் அமர்ந்த நால்வரும் தூக்கக் கலக்கத்தில் உறங்கிவிட பைலட் தான் எழுப்பிவிட்டான், "வி ஹாவ் ரீச்ட் யுவர் டேஸ்டினேஷன் சார் (We have reached your destination)" என்று.
கண்களை கசக்கிக்கொண்டே நால்வரும் இறங்கிச் சோம்பல் முறித்து கண்களைத் திறக்க அவர்கள் ஒரு கட்டிடநின் மேல் இருப்பது தெரிந்தது ஆனால் கண்களுக்கு எட்டிய தூரம் வரை ஆங்காங்கு தான் சில கட்டிடங்கள் இருந்தது, "என்னடா கோயம்பத்தூர்ல கடல் எல்லாம் வந்துருக்கு" ஆச்சிரியாமாய் வந்த கார்த்தியின் குரலில் தான் முழுதாக தூக்கத்திலிருந்து விழித்தனர் ப்ரேமும் சிவாவும்.
"ஐயோ இது கோயம்பத்தூர் இல்லடா. அப்ப யமுனா?" படபடக்க ஹரியைப் பார்த்து கேள்வி எழுப்பினான் சிவா, அவன் கவலை அவனுக்கு.
"யமுனா ஆவது ஜமுனா ஆவது, நாம கோவாஆஆஆ ல இருக்கோம்டா" அதிர அதிர ஹரி காத்த அனைவருக்குமே மகிழ்ச்சி ஓட்டிக்கொண்டது.
"கோவா கோவா...கோவா" பேசி முடிக்கும் முன்பே சட்டையைக் கழட்டிக் குதித்துக்கொண்டு ஓடினான் கார்த்தி, அவனுக்குப் பின்னால் மற்ற மூவரும் ரெக்கை இல்லாமல் பறந்தனர்.
முற்றும்...
கடைசி வரைக்கும் தூக்கல
- Bookeluthaporen
கதை தான் முடிஞ்சிடுச்சே... இப்பயாவது ப்ளீஸ் silent ரீடர்ஸ் கொஞ்சம் கதை பத்தி கருத்து சொல்லிட்டு போங்க... Please
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro