Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

5

இதோ அதோ என்று அன்று ஞாயிற்று கிழமையும் வந்து விட காலையில் எழுந்த கெளதம் என்ன உடை போடுவது என்று சற்று குழப்பமாய் பார்த்துக்கொண்டிருந்தான் .casualsil செல்லலாமா அல்லது formalsil செல்லலாமா என்று .பின் எதற்கு கேசுவல்ஸ் என்று நினைத்தவன் ஒரு கருப்பு நிற pantum வெள்ளை நிற சட்டையும் எடுத்து போட்டுக்கொண்டவன் அலை அலையை புரண்ட கேசமதை லேசாய் கோதி விட்டு தனது அறையில் இருந்து கிளம்பி விட்டான் .

அவர்கள் அனைவரும் ஒரு பிரபலமான அசைவ உணவகத்தில் சரியாக பன்னிரண்டு மணிக்கு ஆஜர் ஆகி இருந்தனர் .கௌதம் அரை மணி நேரம் லேட்.அங்கு வந்த பின் திவ்யாவிற்கு அழைப்பு விடுக்க அவளோ உள்ளிருந்து வந்தவள் அவனை அழைத்துக்கொண்டு அவர்கள் புக் செய்திருந்த ஒரு பன்னிரண்டு பேர் அமர கூடிய டேபிளிற்கு அழைத்து சென்றாள்.அங்கே சென்றதும் கௌதமின் கண்கள் ஜான்வியை தேட அவளோ வெள்ளையும் கருப்பும் stripes இருந்த டி ஷர்ட் மற்றும் கருப்பு நிற jeansil அவளின் தோள் வரை புரண்டிருக்கும் சுருட்டை முடியை ஒரு ரப்பர் பாண்டில் அடக்கி ஹை போனி போட்டிருக்க அவள் பேசும்பொழுது அவள் தலை ஆடுவதற்கேற்ப அந்த முடியும் ஆடியது .அவனிற்கு அந்த காட்சி ஏனோ சிறு வயதில் பார்க்கும் டோரா கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்த தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் .

ஜான்வியோ ஜீவிதாவிடம் மிகவும் சுவாரஸ்யமாக தான் நேற்று பார்த்த ஷிஞ்சான் எபிசொட் பற்றி பேசிக்கொண்டே பிரியாணியை அமுக்கிக்கொண்டிருந்தாள்.

திவ்யா"அப்பறோம் கைஸ் இது தான் என் friend கெளதம் சிவில் என்ஜினீயராக ஒர்க் பன்றான் ."என்று கூற அவனோ பெயரிற்கு ஒரு புன்னகையை சிந்த ஜான்வியோ அவனை பார்க்க கூட இல்லை .

பின் கெளதம் ஜான்விக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து விட அப்பொழுதே வந்த பத்ரி ஜான்வியின் எதிரில் இருந்த இருக்கை கிடைக்காமல் போனதிற்கு சற்று வருந்தினாலும் கௌதமிற்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான் .

திவ்யா "ஓகே கெளதம் என்ன சாப்பிடுற ?"என்க

அவனோ ஜான்வி பிரியாணியை ரசித்து ருசித்து குழந்தையை போல் முகபாவம் காட்டி சாப்பிடுவதை பார்த்து சிரித்தவன் "எனக்கு பிரியாணியை சொல்லிடு திவி "என்க அவளோ அவனை வினோதமான பார்த்தல் ஏனென்றால் கெளதம் அவ்வளவாக பிரியாணியை விரும்ப மாட்டான் .

இன்று என்ன புதிதாக என்று யோசித்தவள் அவன் ஜான்வியை பார்த்து ஏதோ காமெடி சேனலில் வரும் கதாபாத்திரத்தை பார்த்து சிரிப்பதை போல் சிரிப்பதை பார்த்தவள் அவள் பிரியாணி சாப்பிடுவதை பார்த்து சிரித்துக்கொண்டாள் .

.திவ்யா "என்னடா கெளதம் உனக்கு பிளாக் அண்ட் வைட் காம்பினேஷன் அவ்ளோவா புடிக்காதே இன்னைக்கு என்ன speciallaa போட்ருக்க ?"என்க

அவனோ "சும்மா தோணுச்சு போட்டேன் "என்க

திவ்யாவோ ஜான்வியை ஓரக்கண்ணால் பார்த்தவள் "தோணுச்சுனு போட்டியா இல்ல தொடர்பா இருக்குமேன்னு போட்டியா ..."என்று ராகமாய் இழுக்க அவனோ எப்பொழுதும் இவ்வாறு பெண்களோடு கலாய்த்து பேசினால் ஒரு முறை முறைப்பான்.

அவளை பார்த்து திவ்யா அந்த முறைப்படி எதிர் பார்த்து அவனை சீண்டிட அவனோ casuallaai சிறு சிரிப்புடன்" அதெல்லாம் ஒன்னும் இல்ல திவி சும்மா இரு "என்று கூற திவ்யாவுக்கோ ஒரு நிமிடம் எதிரில் இருப்பது தனது நண்பன் தானா என்று சந்தேகமே வந்து விட்டது .

பத்ரியோ  கௌதமிற்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து அவளை பார்த்தபடி சாப்பிட ஜான்வியோ கையில் இருந்த forkகை அவன் கண்ணிற்கு நேராய் குத்தி விடுவேன் என்பது போல் பாவனை செய்தவள் உண்ணுவதை மட்டும் நிறுத்தாமல் இருக்க கௌதமிற்கு அவளின் செயலில் சிரிப்பு தான் வந்தது .

அவன் இவ்வாறு அவளை கவனித்தபடி சாப்பிடுவதை பார்த்த திவ்யா பிரவீனிற்கும் ஜீவிதாவிற்கும் கண் காட்ட அவர்களும் புரிந்து கொண்டனர் இன்றைய பலி ஆடு கௌதமும் ஜான்வியும் தான் என்று.எப்பொழுதும் நண்பர்கள் அனைவரும் கூடி விட்டால் சம்மந்தமே இல்லாத இரு ஆணையும் பெண்ணையும் சம்மந்த படுத்தி விளையாட்டிற்காக கிண்டலடித்து கும்மாளமிடுவார்கள் .இருவரையும் இணைத்து நண்பர்கள் கலாய்க்க ஆரம்பிக்க ஜான்வியோ அவனின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை .

அவனின் வெள்ளை சட்டை கருப்பு pant formalsai பார்த்து பழம் என்று நினைத்து விட்டாள் பாவம் 🤭🤭.

ஜீவிதாவிடம் திரும்பியவள் "ஏய்ய் வாய மூடுங்கடி "என்க

அவளோ "ஏய்ய் என்னடி வம்ப போச்சு சும்மா ஒரு ஜாலிக்கு தான கலாய்க்குறோம் ப்ரவீனயும் என்னையும் வச்சே நீ எல்லாம் கலாய்ப்ப இன்னைக்கு மட்டும் என்னவாம் ?"என்க

ஜான்வியோ "அடியே அது அவன் நம்ம நண்பன் டி புருஞ்சுக்குவான் எதிர்ல இருக்கறவன் அப்டி தான் நெனைப்பான்னு நமக்கென்ன தெரியும் "என்க

அவளோ "அவரே அமைதியா சிரிச்சுட்டு தான் சாப்டுட்டு இருக்காரு நீ ஏன் பொங்குற? "என்க

ஜான்வியோ "வேணாம்டி ஆளு பாக்கவே பாடி பில்டர் மாறி இருக்கான் அடுச்சுட கிடுச்சுட போறான் "என்க

அவளோ "அடுச்சா உன்ன பிடிச்சு நடுவுல இழுத்து விட்ருறேன் "என்றவள் அவள் பணியை செவ்வனே செய்ய ஜான்வியோ இது திருந்தாது என்பதை போல் தன் முகத்தை ஒரு கையால் மறைத்தவள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை (சோறு முக்கியம் பாஸ் ).

இவ்வாறு ஒரு மணி நேரமும் ஓட்டி தள்ளியவர்கள் சாப்பிட்டு விட்டு பில் கட்டுவதற்கு திவ்யா தனது கார்டை உள்ளே வைத்தாள்.இன்று அவளுடைய ட்ரீட் என்பதனால்.

சென்ற வேகத்தில் திரும்பி வந்த அந்த வெயிட்டர் "mam your card is not getting accepted "என்க

திவ்யாவோ "வாட் என்றவள் பில்லிங் செக்ஷனிற்கு செல்ல மற்ற நண்பர்களும் சேர்ந்து சென்றனர் .

ஜான்வியும் அவர்களுடன் வந்தவள் அந்த பில்லிங் செக்ஷனில் இருந்த மேஜையை எதார்த்தமாய் பார்க்க அங்கு சக்கரை கோட்டிங் நிறைந்த ஜீரகத்தை பார்த்தவளிற்கு சாப்பிட ஆசை வந்தது .

அவள் அதை எடுத்து வாயில் போடுவதற்காக ஸ்பூனை எடுக்க அதே நேரத்தில் அந்த ஸ்பூனை கௌதமின் கையும் பற்றி இருந்தது .ஒருநிமிடம் திகைத்தவள் கையை சட்டென்று விலக்கிக்கொள்ள அவனோ ஒரு பார்வை அவளை பார்த்து விட்டு தான் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு வைத்து ஸ்பூனை அதிலேயே மீண்டும் வைத்துவிட்டான் .

அதை ஓரக்கண்ணால் பார்த்தவள் வேகமாய் இரண்டு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுகொண்டு சென்று விட்டாள் அந்த புறம் .அப்பொழுதும் அவர்களை கலாய்த்து தள்ளினர்.ஜான்வி இன்னமும் அவனின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை அவளிற்கு சங்கோஜமாய் இருந்தது முன் பின் தெரியாத ஒருவனை வைத்து இப்படி கிண்டல் அடிப்பது .

அவனோ கண்டு கொள்ளவே இல்லை தோளை குலுக்கி விட்டு சென்று விட்டான் .அதன் பின் அனைவரும் அவரவர் இருப்பிடத்திற்கு சென்று விட கௌதமும் அவனின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்.அவன் வந்ததும் அவனிற்கு திவ்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது .எடுத்து காதில் வைத்தவன் "என்ன திவி ?"என்க

அவளோ "என்ன ஆச்சுடா இன்னைக்கு உனக்கு ?"என்று கேட்டாள்

அவனோ குழம்பியவன் "ஏன் எனக்கென்ன நல்லா தான இருந்தேன் ?"என்க

அவளோ "டேய்ய் டேய்ய் நடிக்காத டா .நீ பொண்ணுங்க பேர எடுத்தாலே என்ன எரிச்சு போட்ருறவன் மாறி பார்ப்ப இன்னைக்கு என்னனா நா அவளை வச்சு அந்த ஓட்டு ஓட்டுறேன் நீ என்னனா ஈஈ னு இளிச்சுட்டு இருக்க.என்ன sightingaa ?"என்று கேட்க

அவனோ "அட ச்செய் உன் புத்தி இப்டி தான் போகுமா ?"என்க

அவளோ சுத்தமாகவே குழம்பி விட்டாள் "அப்பறோம் என்னடா ?"என்க

அவனோ சிரித்தவன் "திவி இப்போ ஒரு குழந்தை சேட்ட பண்ணா பார்க்கேள உனக்கு என்ன feel வரும்?ஒரு மாறி relaxedaa feel பண்ணுவ crctaa .அந்த பீல் தான் எனக்கு அவளை பார்க்கேள எல்லாம் வருது .உண்மை தான் பொண்ணுங்கள பாத்தாலே அலறுவேன் தான் ஆனா இவளை என்னவோ புடுச்சுருக்கு ஒரு குட்டி பாப்பா மாறி "என்க

அவளோ இவனை பற்றி தெரிந்தும் இவனிற்கெல்லாம் காதல் வந்திருக்குமோ என்றெண்ணி கேட்ட தன் மடத்தனத்தை எண்ணி தானே நொந்துகொண்டாள்.

திவ்யா "சரி டா எப்பா அப்டியே இருந்துட்டு போகட்டும்.அவ போன் நம்பர் எதுவும் வேணுமா "என்று கேட்க

அவனோ "எதற்கு ?"என்றானே பார்க்கலாம் திவ்யா நொந்துவிட்டால்

திவ்யா"ஆங் பூஜ போடுறதுக்கு டா. உன்ன போய் மனுஷ பிறவியா நெனச்சு கேட்டேன் பாரு என்ன சொல்லணும் "என்று விட்டு வைத்து விட்டாள் .அவனோ சிரித்துக்கொண்டவன் அதன் பின் உறங்க சென்று விட்டான் .

அறைக்கு வந்த ஜீவிதாவோ ஜான்வியிடம் திரும்பியவள் ஆழம் பார்க்கும் விதமாய் "ஏன் ஜானும்மா இந்த லவ் பத்தி என்ன நெனைக்குற ?"என்க

அவளோ "அதை பத்தி நா எதுவும் நினைக்கல டி ஆனா ஒன்னு மட்டும் தெரியும் லவ் கிவ்வுனு ஏதாச்சு பண்ணேன் ஏன் அம்மா அப்பா என்ன உப்பு கண்டம் போடறாங்களோ இல்லையோ என் தம்பி என்னை தோலை உரிச்சு தொங்க விட்ருவான் .ஆமா நீ ஏன் இதெல்லாம் கேக்குற ?"என்க

அவளோ இன்று ஜான்வியும் அளவிற்கு அதிகமாய் புதிய ஒரு ஆடவனுடன் இணைத்து வைத்து பேசியது அவளுள் ஏதேனும் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக்குமோ என்று நினைத்து கேட்க அவளின் பதிலே இல்லை என்று உணர்த்திவிட்டது.

ஜீவிதா"சும்மா தான் டி கேட்டேன் ."என்றவள் தனது படுக்கையில் சென்று படுத்து விட ஜான்வியோ அவளை பார்த்து பெருமூச்சு விட்டவள் "இவளை புருஞ்சுக்கவே எனக்கு தனி மூளை வேணும் போல "என்று நினைத்தவள் நினைவடுக்கில் இன்று இவர்கள் கலாய்த்து தள்ளியது ஒரு வித அசௌகரியத்தை தர இனி அந்த பாடி பில்டெர மட்டும் பார்க்கவே கூடாது இறைவா என்று வேண்டிக்கொண்டு உறங்கினாள். பாவம் அவள் அறியவில்லை கடவுள் எப்பொழுதோ அவளின் பிரார்த்தனைகளை muteil போட்டு விட்டார் என்று.

வாழ்க்கை இவர்களுக்கு பலவித ஸ்வாரஸ்யங்களான அனுபவத்தை அள்ளித் தர காத்திருக்க அடுத்த சந்திப்பில் இவளின் மனநிலை எப்படி இருக்குமோ பார்ப்போம் . 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro