25
அவளை அனுப்பி வைத்து விட்டு பேருந்தில் பயணித்த கௌதமின் நினைவுகள் எங்கும் ஜான்வியை நிறைந்திருந்தாள்.எப்போ அவளை காதலிக்க ஆரம்பிச்சேன் ?முதல் தடவ அவளை சின்ன குழந்தை மாதிரி பலூன் வாங்கிகிட்டு இருந்தப்பவா ?அவள் பண்ணுற சேட்டையை பாக்குறதுக்காகவே அந்த டீ கடைக்கு பொய் உக்காருவேனே அப்போவா?முதல் தடவ பாக்கேல என்ன நிமிர்ந்து கூட பாக்காம சாப்டுட்டு இருந்தாலே அப்போவா ?இல்ல பேய் படத்துக்கு பயந்து என் கைய புடுச்சுக்கிட்டு இருந்தாலே அப்போவா ?
எதுக்காக அவளை பாக்கணும் அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் அப்டினு எனக்குள்ள அவளுக்கான தேடல் இருந்துகிட்டே இருந்துச்சு ?
என்று யோசித்தவன் தனது கைப்பேசியில் இருந்த அவளின் சிரிப்பு நிறைந்த குழந்தை முகத்தை பார்த்தவன் அதை வருடியவாறு "என்னவோ பண்ணிட்ட டி என்ன .எனக்குள்ளேயே இறுகி இருந்த என்ன தானாவே உன்னோட எல்லாத்தையும் பகிர்ந்துக்க வச்ச ,உன்னோட ஒரு வார்த்தைல நீ எல்லாம் செய்ய வச்ச , நா என்னடா வாழ்க்கைனு நெனைக்குறப்போ எல்லாம் உன்னோட சேட்டையால தான் உயிர்ப்போடயும் துடிப்போடயும் இருக்க வச்ச "என்று நினைத்தபடி அவளது வதனத்தை தொடுதிரையில் வருடிக்கொண்டிருந்தவனின் கை பட்டு அவள் புகைப்படம் மாறி அவனும் அவனின் தந்தையும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வர சட்டென்று முகம் மாறியது கௌதமிற்கு .
என்ன செய்துகொண்டிருக்கிறேன் .அனாதையா இருக்க வேண்டிய என்ன எடுத்து வளர்த்து படிப்பு குடுத்து அவரோட மகன்னு அடையாளத்தை குடுத்து வளர்த்த என் அப்பாவுக்கு துரோகம் பண்ண போறேனா இப்போ வந்த இந்த காதலுக்காக?என்று புத்தி சொல்ல
மனமோ "அப்போ ஜான்வியை விட்டு குடுக்க போறியா ?அவளை இன்னொருத்தனுக்கு சொந்தமா உன்னால பாக்க முடியுமா ?"என்று கேட்க உடனே அவன் மனம் பதிலளித்தது முடியாது என்று .
மனசாட்சி "உங்க அப்பாவுக்கு செய்ற துரோகமா ஏன்டா இதை நெனைக்குற ?எந்த காலத்துல இருக்க நீ ?காதலிக்கிறது ஒன்னும் தப்பு இல்ல உன்னால அவளை தவிர்த்து யார் கிட்டயும் ஒழுங்கா பேசவே முடியாது நீ அவளை மறந்துட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிருவியா ?"என்று கிண்டலடிக்க
அதன் தலையில் தட்டியவன் என்ன ஆனாலும் என் ஜானுவை விட்டு தர மாட்டேன் என்று கூறி சமாதானம் அடைந்தான்முதல் முறையாய் மனதில் துளிர்விட்டிருந்த காதலும் அந்த நேசத்தை நெஞ்சில் விதைத்தவளின் நினைவும் சுகமாய் சிகை கோதிய தென்றலும் அவனிற்கு நிம்மதியை தர மோஹனக் கனவுகளுடன் கண் மூடி உறங்கினான் கௌதம்.
இவன் இங்கு இப்படி இருக்க ஜான்வியோ ஜீவிதாவிடம் புலம்பி தள்ளிக் கொண்டிருந்தாள் "ஜீவி அவன் ஏன் டி இப்டி சொன்னான் ?அப்போ நா loveah சொன்ன accept பண்ண மாட்டானா ?"என்று கேட்டவள் ஜீவி ஏதோ கூற வரும்முன் அவளே "ஏன் accept பண்ண மாட்டான் ?அவனுக்கு என்மேல கண்டிப்பா லவ் இருக்கு இல்லேனா யார்கிட்டயும் எதையும் ஷேர் பண்ணாதவன் டெய்லி என்கிட்டே எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு என்ன பாக்குறதுக்காகவே இவ்ளோ மெனக்கெட்டு ஒவ்வொரு தடவையும் வருவானா ?"என்று அவளே பதிலும் கூறிக் கொண்டாள் .
ஜீவிதா கடுப்பானவள் "ஜான்வி அரை மணி நேரமா நீ இதையே தான் வேற வேற மாடுலேஷன்ல சொல்லிக்கிட்டு இருக்க "என்று கூற
ஜான்வியோ சோகமாய் ஆனவள் "லூசு மாறி பேசுறேன்ல ?first லவ் ஜீவி அவனோட செய்கையெல்லாம் பாத்து நீங்களே எத்தனை தடவ சொல்லிருப்பீங்க லவ் பண்ரானோனு தோணுதுன்னு ?ஆனா அவன் இப்டி சொல்லேல எங்க கிடைக்காம போயிருவானோனு பயமா இருக்கு டி "என்று கூறும் பொழுதே குரல் அவளிற்கு உடைந்து விட்டது .
ஜீவிதாவிற்கு பாவமாய் இருந்தது "நீ ஏன் ஜான்வி overthink பண்ணுற ?may be அவர் இன்னும் realise பண்ணாம இருக்கலாம்ல உன்ன மாறி .நீ realise பண்ணியே ஒரு நாள் தான் ஆகுது ஆனா அதுக்குள்ள இவ்ளோ insecurity "என்று கூற
ஜான்வியோ "தெரிலடி உள்ளுக்குள்ள என்னவோ பயமாவே இருக்கு "என்று கூற
ஜீவிதாவோ "ஒன்னும் இல்ல எல்லாம் நல்லா நடக்கும் . கடவுளே நீ பொலம்புனதுல சொல்லவே மறந்துட்டேன் "என்று கூற
ஜான்வி "என்னடி ?"என்க
ஜீவிதா சிறு வெட்கத்துடன் "எனக்கு கல்யாணம் fix பண்ணிட்டாங்க டி "என்று கூற ஜான்வியோ இன்பமாய் அதிர்ந்தாள் .
ஜான்வி "ஹே பைத்தியமே சொல்லவே இல்ல நீ காலைல இருந்து என் கூடவே தான இருந்த ?"என்று கேட்க
ஜீவிதா "பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கெடைக்காது டி நல்லா யோசுச்சு பாரு நீ என் கூடவா இருந்த ?"என்று கேட்க
ஜான்வி அசடு வழிந்தவள் "ஹீஹீ சரி விடு டி மாப்பிள்ளை யாரு ?"என்க
அவளோ "ஆதித்யா டி.சென்னைல ஒர்க் பன்றாரு lectureraah "என்க
ஜான்விக்கு இந்த ஆதித்யா என்ற பெயரை கௌதம் அடிக்கடி கூறியது நினைவில் வந்தது .ஒரு முறை இருவரும் கல்லூரி வாழ்வை பற்றி பேசிக்கொண்டிருக்கையில் ஜான்வி "அத்து காலேஜ்லயும் இப்டி தான் terror pieceaah இருந்தியா?"என்று கேட்க
கௌதமோ சிரித்தவன் "அதெல்லாம் இல்லடி நான் ,திவ்யா, என்னோட three years சீனியர் ஆதி அண்ணா இன்னும் ஆறு பேர் எல்லாம் ஒரு குரூப்பா ஜாலியா இருந்தோம் .அப்பறோம் அண்ணா ME முடுச்சுட்டு ப்ரோபஸ்ஸோர் ஆயிட்டாங்க ஆளாளுக்கு ஒரு ஒரு தேசைல போய்ட்டோம் .ஆனா ஆதி அண்ணா இப்போ வரைக்கும் எனக்கு ரொம்ப கிளோஸ் "என்றது நினைவில் வர
ஜான்வி "ஹே ஆதி அண்ணா *** காலேஜ்ல படிச்சாங்களா என்று கேட்க ஜீவிதா "ம்ம் ஆமாடிஇரு போட்டோ அனுப்புறேன்" என்று கூறி புகைப்படத்தை அனுப்ப அதில் சாக்ஷாத் ஆதித்யாவே இருப்பதை கண்ட ஜான்வி மனதிற்குள்ளே குத்தாட்டம் போட்டுக் கொண்டால் கௌதமும் அங்கு வருவானென்று .
நாட்கள் அதன் போக்கில் நகர ஜீவிதா மற்றும் ஆதித்யா இருவரும் தொலை பேசியிலேயே காதலை வளர்த்தார்கள் என்றால் ஜான்வியும் கௌதமும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலை மறைத்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்கள் .இன்னும் மூன்று நாட்களில் திருமணம் என்று இருக்கும் நிலையில் நாளை கௌதமின் பிறந்த நாள் .ஜீவிதாவின் பெற்றோர்களுக்கு சொந்தங்கள் ஆதரவு அவ்வளவாக இல்லாத காரணத்தால் அவளின் திருமண வேலைகளை முக்கால் பாகம் இழுத்து போட்டுக் கொண்டு செய்தது அனைத்தும் ப்ரவீனும் ஜான்வியும் தான் .
அன்று மாலை ஜீவிதாவை அழகு நிலையத்திற்க்கு அழைத்து செல்வதற்காக ஜான்வி வந்திருந்தாள்.ஜீவிதாவின் அன்னை "அடடே வாடா ஜான்வி ஏதாச்சு சாப்பிடுறியா ?"என்க
அவளோ "அதெலாம் வேணாம் அம்மா இப்போ தான் full கட்டு கட்டிட்டு வரேன் அவ எங்க ?":என்க
அவர் பதில் சொல்வதற்குள் ஜீவிதாவே வந்துவிட்டாள் "sorrydi sorrydi நைட் தூங்க லேட்டா ஆயிருச்சா அதான் "என்று அசடு வழிய ஜான்வியோ எப்பொழுதும் நடப்பது தான் என்று நினைத்து தலையில் அடித்தவள் அவளை அழைத்துக் கொண்டு அழகு நிலையத்திற்கு சென்றாள்.அவளிற்கு புருவம் திருத்துதல் ,தேவை அற்ற முடி அகற்றுதல் ,பாசில் போன்றவை செய்து முடித்த பின் அவர்களையே திருமணத்திற்கும் புக் செய்து விட்டு முன் பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்தனர் தோழிகள் இருவரும் .
ஜான்வி "experience certificate வாங்கிட்டியா டி ?"என்க
ஜீவிதாவோ "இல்லடி நாளைக்கு தான் நோட்டீஸ் period முடியுது நாளைக்கு போய் தான் வாங்கணும் "என்று கூறினாள் .அவளை வீட்டில் விட்ட ஜான்வி பின் தனது வீட்டிற்கு கிளம்ப மழை சட சடவென்று பெய்ய ஆரம்பித்து விட்டது .நேரம் வேறு எட்டை தாண்டி விட இதற்கு மேல் ஒதுங்கி நின்றாள் மிகவும் தாமதமாகி விடும் என்பதை உணர்ந்தவள் மழையோடு மழையாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் .
உடல் ஒட்டிய துணியுடன் தலை முழுதும் தொப்பலாய் நனைந்திருக்க குளிரில் நடுங்கியபடி வந்தவளை எதிர்பார்த்து காத்திருந்ததை போல் துண்டுடன் அவள் அருகில் வந்தார் ஜான்வியின் அன்னை "மழை தான் அதிகமா பேயுதுல்ல ஒதுங்கி நிக்க வேண்டி தான ஜான்வி "என்று கேட்டவாறு அவர் தலையை துவட்ட
அவளோ நடுங்கியபடி "அது....லேட் ஆய்ரும்னு தான்மா "என்று கூற
அவரோ அவள் தலையிலேயே காட்டியவர் "ஏன் சின்னு வீட்ல தான இருக்கான் அவன் கூட்டிட்டு வர மாட்டானா ?"என்க
அவனோ "ம்மா ஏன் அவளை வந்ததும் திட்டுறீங்க" என்றவன் அவள் புறம் திரும்பி "போய் ட்ரெஸ்ஸ மாத்துடி "என்று கூற அவளும் உடை மாற்றி வந்தவள் அப்பொழுதே அலை பேசியை வண்டியிலேயே விட்டு வந்ததை நினைவு கூர்ந்தாள் .
வேக வேகமாய் வண்டி பார்க்கிங்கிற்கு ஓட அவளின் அலை பேசியோ அந்த வண்டியின் முன்னாள் இருந்த pouch போன்ற அமைப்பில் தண்ணீருக்குள் கிடந்தது .
அட கடவுளே என்று எடுத்தவள் அதை restart செய்யப் பார்க்க பாவம் அது அப்பொழுதே தண்ணீரில் தன் உயிரை விட்டிருந்தது ."ஐயோ நாளைக்கு அத்து பர்த்டே வேற இப்டி ஆயிருச்சே "என்று நினைத்தவள் நாளை காலை உடனே சென்று வேறு மொபைல் வாங்க வேண்டும் என்று நினைத்தபடி உறங்கி போக கௌதமோ இரவு முழுவதும் தனக்கு வந்த அழைப்புகளை எல்லாம் துண்டித்து விட்டுக் கொண்டிருந்தான் தன்னவளின் வாழ்த்தை தான் முதல் முதலில் கேட்க வேண்டுமென்று .இரவு முழுவதும் உறங்காமல் அலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தவன் சூரிய கதிர் கண்ணை கூச அப்பொழுதே மணியை பார்த்தான் அது எட்டு மணி என்று கூறியது .
"என் பிறந்தநாள் கூட மறந்து விட்டதா ஜானு உனக்கு" என்று நினைத்தவனுக்கு அவனது முன் கோப புத்தி மூளையை மழுங்கடிக்க இனி யாரும் வாழ்த்து கூறினால் என்ன இல்லை என்றால் என்ன என்று போனினை சுவிட்ச் ஆப் செய்து போட்டு விட்டான் .
ஜான்வி பன்னிரண்டு மணி அளவில் புதிய போன் வாங்கிவிட்டு அப்படியே ஜீவிதாவை அழைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு சென்றவள் அதை on செய்ததும் கௌதமின் எண்ணிற்கு அழைப்பு விடுக்க அதுவோ சுவிட்ச் off என்று வந்தது .அன்றைய நாள் முழுதும் அப்படியே கரைய இருபது முறை அழைத்து விட்டால் ஜான்வி அப்பொழுதும் சுவிட்ச் ஆப் என்று தான் வந்தது .
கௌதம் அன்றைய நாள் வேலை வேலை என்று கழிய ஒன்பது மணி போல் வந்தவன் அப்பொழுதே தனது கைபேசியை அணைத்து வைத்து நினைவில் வர "ப்ச் கோவத்துல சுவிட்ச் ஆப் பண்ணி போட்டுட்டேன் எல்லாரும் கால் பண்ணிருப்பாங்களே "என்று நினைத்து அதை உயிர்ப்பித்தவன் மனுதலில் ஆதித்யா மற்றும் திவ்யாவின் அழகிய தமிழ் வார்த்தைகளால் அர்ச்சனையும் பிறந்தநாள் வாழ்த்தையும் கெட்டவன் பின் அனைவருக்கும் நன்றி கூறியபடி இருக்க ஆயுத ஐந்தாவது நிமிடத்தில் ஜான்வியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது .
அவள் எண்ணை கண்டதும் முகம் இறுக அழைப்பை துண்டித்து விட்டவன் மீண்டும் மீண்டும் அழைப்பு வரவும் எடுத்ததும் பொரிய துவங்கிவிட்டான்"இப்போ எதுக்கு டி நை நானு கால் பண்ற ?நேத்து nightla இருந்து பைத்திய காரன் மாறி உன்னோட கால் வரும்னு நைட் முழுக்க தூங்காம உக்காந்திருந்தேன் தெரியுமா ?இப்போ எதுக்கு கால் பண்ற ?"என்று கேட்க
ஜான்வியோ துளிர்ந்த கோபத்துடனும் அழுகையுடனும் உடைந்த குரலில் "சும்மா சும்மா கத்தாத கௌதம் .நேத்து மழைல போன் நனைஞ்சு போச்சு .புது போன் வாங்கிட்டு மத்யானத்துல இருந்து 25 தடவ கால் பண்ணிட்டேன் switch off ."என்று கூற
அவனோ வழக்கம் போல் தனது மடத்தனத்தை எண்ணி வருந்தியவன் "அது ஜா..."என்க
அவளோ "பேசாதடா எப்போ பாரு உன் பக்கம் மட்டும் யோசிக்குற என்னோட சைடு என்ன இருக்கும்னு யோசிக்கவே மாட்டேங்குற இனி நானா பேசுற வர நீ என்கிட்டே பேசாத "என்று கூறி வைத்து விட்டாள்.
அவன் மீண்டும் மீண்டும் அழைக்க அவள் முதலில் கோபத்தில் cut செய்தவள் அவன் விடாது சாரி ஜானுமா மெசேஜ் செய்யவும் உருகி தான் போனாள்.தான் overreact செய்துவிட்டோமோ என்று அவளிற்கு தோன்றினாலும் ஏனோ அவன் எப்பொழுதும் அவளின் புறம் உள்ள நியாயங்களை யோசிப்பதே இல்லை என்ற கோபத்தில் கத்திவிட்டு வைத்து விட்டாள்.
ஜான்வி "அவசரப்பட்டு கோவப்பட்டுட்டோமே மறுபடி கால் பண்ணா கெத்து போய்டுமோ "என்று யோசிக்க மனமோ இன்னும் ரெண்டு நாளுல வந்துருவான்ல அப்போ பாத்துக்கலாம் அதுமட்டுமில்லாம அவனை அலைய வைக்குறதும் நல்லா தான் இருக்கு என்று நினைத்து நான் கோவமா இருக்கேன் என்று ஒரு பேபி ஸ்டிக்கரை அனுப்பி விட்டு தூங்கி விட்டாள்.
அவனோ அவளின் கள்ளத்தனம் அறியாமலா இருப்பான்.அவள் அனுப்பிய ஸ்டிக்கரை பார்த்து சிரித்தவன் "மேடம் கெத்து போய்டுமாமாம் இப்போ கால் எடுத்து பேசிடா மவளே அலைய விடா பாக்குற கவனிச்சுக்குறேண்டி "என்று நினைத்து அவளின் புகைப்படத்தில் இப்பொழுது வழமையாகி போன பழக்கமாய் உறங்கும் முன் ஒரு முத்தம் வைத்தவன் சுகமாய் உறங்கி போனான் .
அவனின் இந்த குணமே நாளை அவர்களை பிரிக்க போகிறதென்பதை அறிந்திருந்தால் இந்த குணத்தை முன்னே மாற்றி இருப்பானோ ?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro