22
தான் கௌதமின் மேல் கொண்ட காதலை ஜான்வி உணர்ந்திருக்க கெளதம் அங்கு பேருந்து நிலையத்திலிருந்து தான் தங்க book செய்திருந்த oyo அறைக்கு வந்தவன் இருந்த அயர்வில் அப்படியே மெத்தையில் விழுந்தான்.
ஒரு மாதமாக ஓவர் டைம் பார்த்தது அதன் பின் அப்படியே இந்த பயணம் அவனை அலைக்கழித்து இருந்தது.ஒரு மாதம் முன் நடந்த நிகழ்வுகள் கன் முன் தொன்றியது.அவனின் தமக்கைக்கு குழந்தை பிறந்து நான்கு மாதம் கழிந்து இருக்க அன்று ஞாயிற்று கிழமை காலையில் எழுந்து வந்தவனை வரவேற்றது என்னவோ வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்த வீட்டு உரிமையாளர் தான்.
அவரை பார்த்து முருவலித்தவன் தான் தந்தையை என்ன என்பதை போல் பார்க்க அதற்குள் அந்த உரிமையாளர் பேசத்துவங்கினார்."இதோ பாரு கெளதம் உங்க குடும்பம் இது வரைக்கும் எந்த சண்டை சச்சரவும் இல்லாம இருந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் இத்தனை வருஷமா வாடகை கூட எத்தாம வச்சிருந்தேன். ஆனா உங்க அம்மா உன் அக்கா வலைகப்புக்காக என்கிட்ட 50 ஆயிரம் ரூபா கடனா வாங்கி ஆறு மாசம் ஆச்சு .இன்னும் வட்டியும் குடுக்கல அசலும் குடுக்கல ."என்க அவனிற்கோ இது புதிய செய்தி.
எதற்காக கடன் வாங்கினார் நான் தான ஒரு லட்சம் கொடுத்தேனே என்று நினைத்தபடி அவரை பார்க்க அவரோ அலட்சியமாக நின்று இருந்தார்.அந்த உரிமையாளர் மேலும் தொடர்ந்தார்"என் பொண்ணுக்கு அடுத்த மாசம் college fees கட்டணும் பா வட்டி கூட வேணாம் அசல் மட்டும் கட்டிரு "என்று கூறிவிட்டு செல்ல அவனுக்கோ தலைவலியே வந்து விட்டது.
அவனின் தமக்கையின் திருமணத்திற்காக எடுத்த லோன் இன்னும் ஓடிக்கொண்டிருக்க அவன் கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் கணிசமான வருமானத்தில் சேர்த்து வைத்த ஒரு லட்சத்தை ஐந்து மாதத்திற்கு முன் வாங்கி விட்டார்கள்.அதன் பின் பிரசவம்,குழந்தைக்கு செய்முறை என்று சம்பலப்பணம் அதிலே செலவாகி விட .இப்பொழுது தான் அங்கு பிரட்டி இங்கு பிரட்டி இருபதாயிரம் வரை சேர்த்து வைத்தான்.அவன் சம்பளம் முப்பதாயிரம் தான்.அவனின்
தந்தை ஓய்வூதியம் பத்தாயிரம் தான்.இன்னும் வீடு செலவுக்கு பத்தாயிரம் வேண்டுமே என்று யோசித்துக்கொண்டு இருந்தவன் அப்படியே கிளம்பி அலுவலகம் வந்து அடைந்தான்.அவனின் அன்னையிடம் என் என்று கேட்க வில்லை.கேட்டாலும் பதில் வரப்போவதில்லை
என்ன செய்வது என்று யோசித்தபடி வந்தவன் அப்பொழுதே overtime செய்யலாம் என்று நினைவு வர தனது முதலாளியிடம் சென்று நின்றான்.அவர் மற்றவர்களிடம் கடுமையாக இருந்தாலும் கௌதமின் நேர்மையலும் அவனின் உழைப்பாலும் அவனிடம் நல் மதிப்பு வைத்திருந்தவர் அவனிடம் சற்று இயல்பாக பேசுவார்.
அவன் அனுமதி கேட்டு உள்ளே நுழைய அவரோ ஒரு சிறு புன்னகையுடன் "வாங்க கெளதம் என்ன வேணும்"என்று கேட்க அவனோ"அது sir இந்த மாசம் எனக்கு ஒரு 10 thousand extra வேணும் சோ நா overtime பார்க்குரேன் sir.project details தரீங்களா?"என்று கேட்க
அவரிற்கு சற்று கவலை நேர்ந்தது ஏனெனில் அவன் பார்ப்பது field work .காலையிலிருந்து நாள் முழுதும் வெயிலில் நின்று வேலை பார்ப்பதே உடலை வாட்டி எடுத்து விடும் இதில் overtime வேறா என்று நினைத்தவர்"கௌதம் நீங்க personal loan எடுத்துக்கலாம் .எதுக்கு overtime பாக்குறீங்க ?"என்க
அவனோ சிரித்தவன்"இன்னொரு லோன் எடுத்தா emiகே மொத்த சம்பளமும் போய்டும் sir "என்று கூற அவரும் தலை அசைத்தார்.
அன்றிலிருந்து காலை ஒன்பதில் இருந்து இரவு பத்து வரை அங்கு வேலை பார்த்து விட்டு பரிட்சைக்கு படித்துவிட்டு இரவு ஒரு மணிக்கு தான் உறங்குகின்றான்
.அந்த முழு நேர வேலை பலுவிலும் அதன் மன அழுத்தத்தில் அவன் மனம் தேடும் ஒரே ஆறுதல் ஜான்வியிடம் பேசும் அந்த பத்து நிமிடம் தான்.அவன் மன வலியை போக்க அவள் தேவை,அவனை சிரிக்க வைக்க அவள் தேவை,அவனின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள அவள் தேவை,அவனின் மகிழ்ச்சிக்கு அவள் தேவை எனில் அதற்கான காரணத்தை அவன் உணரவும் இல்லை அதை உணர்ந்து கொள்ள அவன் நினைத்ததும் இல்லை.(இவன் எத்தனை updateoh🙄🙄)
அவன் அயர்வாய் படுத்து இருக்க அவளை நாளை காணப் போகிறோம் என்ற உணர்வும் பல நாள் களைப்பும் சேர்ந்து அவனை ஆழ்ந்த உறக்கத்தில் அழைத்து சென்றது. நேரம் யாருக்கும் நிற்காமல் ஓட அவன் துயில் களைந்து எழுந்து பார்க்கையில் மணி இரவு பன்னிரண்டு.
அடித்து பிடித்து எழுந்தவன்"அய்யோ இவளோ நேரம் தூங்கிட்டேன்."என்று நினைத்து எழுந்தவன் பசி வயிற்றைக் கிள்ள "இப்போ ஒரு கடையும் இருக்காது "என்று நினைத்தவன் தன் பையை பார்க்க அதில் ஒரு biscuit packet இருந்தது.
அதை பார்த்தவன் இதழ்களில் ஒரு சிறு புன்னகை வந்தது. நினைவுகள் அவன் ஜானுவிடதில் சென்றது.ஒரு நாள் கெளதம் வெளி ஊரிற்கு செல்ல வேண்டி அனைத்தையும் எடுத்து வைக்க ஜான்வி அவனிற்கு அழைத்தாள்.உதட்டில் தோன்றிய புன்னகையுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்"சொல்லு ஜானு"என்க
அவளோ"நாளைக்கு ஊருக்கு போகனும்னு சொன்னியே எல்லாம் எடுத்து வச்சுட்டியா அத்து?"என்க
அவன்"இப்போ தான் எடுத்து வச்சேன்"என்க
அவளோ"அத்து மறக்காம ரெண்டு biscuit packet எடுத்துக்கோ. போற எடத்துல நேரத்துக்கு சாப்பாடு கிடைக்குமான்னு தெரியாது ."என்க
அவன் அவளின் அக்கறை வார்த்தைகளில் புன்னகைத்தான்"சரி ஜானு"என்று.அன்றிலிருந்து எப்பொழுதும் ஒரு biscuit packet அவனுடன் இருக்கும் பல சமயங்களில் அவனை பசியில் இருந்து காப்பதும் அது தான்.
அதை பிரித்து சாபிட்டவன் அப்பொழுதே நாளை எங்கு எப்பொழுது சந்திக்கலாம் என்று கூற மறந்ததை நினைவு கூர்ந்தான்.தன் தலையில் தட்டிக் கொண்டவன் அவளிற்கு அழைக்கலாமா வேண்டாமா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தி பின் அவளிற்கு அழைத்து விட கான்வியோ தான் காதலை உணர்ந்த மகிழ்ச்சியில் அவனை காணப் போகும் ஆவலில் நேரமே உறங்கியவள் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் யாரென்று பார்க்காமல் எடுத்து விட்டு தூக்க கலக்கதிலேயே "தாங்கள் அழைக்கும் நபர் தூங்குவது பிஸியாக உள்ளார் காலையில் அழைக்கவும் டொய்ங் டொய்ங் "என்று குழரிய படி கூற
அவனோ அவள் குழரியபடி பேசியதில் சத்தமாய் சிறிதவன் "sorry ஜானு நாளைக்கு பேசுறேன்"என்று வைக்க
போக அவனின் குரலிலும் ஜானு என்ற அழைப்பிலும் தூக்கம் பரிபோக எழுந்து அமர்ந்தாள் வேக வேகமாக "ஹே அத்து வச்சுறாத"என்று கூற
அவனோ சிரித்தபடி "இல்லடா தூங்கு
. sorry நல்ல தூக்கத்துல இருந்த போல disturb பண்ணிட்டேன்"என்க
அவளோ புன்னகைத்து "அதெல்லாம் ஒன்னும் இல்லை சொல்லு"
அவனோ"நாளைக்கு 1கு exam முடியும் நீ 2கு காந்தி பார்க் வந்துருறியா?என்க
அவளும் "சரி "என்று கூற
அவனோ " சப்பிட்டுட்டு வா ஜானு.நான் exam முடிந்ததும் பக்கத்திலேயே சாப்டுருவேன். ஆமா நாளைக்கு என்ன ரீல் விட போற?"என்க
அவளோ சிரித்தவல்"ஜீவி இருக்க பயமேன் நாளைக்கு அவ கூட வெளிய போறேன்னு சொல்லிட்டு உன்ன பார்க்க வந்துருவென்"என்க
அவனோ புன்னகைத்து செல்லமாய் திட்டினான் "கேடி சரி போய் தூங்கு நேரமாச்சு good night"என்று கூற
அவளோ"mm நாளைக்கு நல்லா பண்ணுடா ஆல் the best".என்று கூறி அழைப்பை துண்டிக்க
அவனும்"ஓகே ஜானு"என்று கூறி வைத்தான்.அவன் வைத்தபின்னும் சற்று நேரம் தனது அலைபேசியை பார்த்தவள் ஒரு சிறு சிரிப்புடன் விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்
நிலவு மகள் என்றும் போல் இன்றும் தனது காதலனால் கதிரவனின் கண்களில் அகப்படாமல் மறைந்திட இன்றாவது தன் நிலவுக்காதலியை காண முடியாதா என்ற ஏக்கத்துடன் ஆதவன் உதித்து உலகத்தை சுற்றி பவனி வர துவங்கினான் .காலையில் எழுந்த ஜான்வி கௌதமிற்கு" ஆல் தி பெஸ்ட் "என்று குறுஞ்செய்தி அனுப்பியவள் அவனிற்கு பிடித்த அடர் நீலத்தில் ஒரு சல்வார் அணிந்து முதலில் தோள் வரை இருந்து இப்பொழுது நடு முதுகு வரை வளர்ந்து இருக்கும் தனது முடியை நடுசில் ஒரு கேட்ச் கிளிப் மட்டும் இட்டு அதை விரித்து விட்டிருந்தாள்.தன்னை ஆளுயரக் கண்ணாடியில் இத்தோடு ஆயிரமாவது முறையாக பார்த்துக்கொண்டவள் பின் அப்பொழுதே நினைவு வந்தவளாய் ஜீவிதாவிற்கு அழைத்தாள் .
ஜீவிதா சமயற்கட்டு மேடையின் மேல் அமர்ந்து அவளின் அன்னை கொடுக்க கொடுக்க தோசையை உண்டு கொண்டு இருந்தவள் தனது அலை பேசி சினுங்க ஏழாவது தோசையை வாயில் அமுக்கியவாறு அதை எடுத்து காதில் வைத்தாள் "சொல்லுடி குட்டி சாத்தான் என்ன? "என்க
ஜான்வியோ "அது,.... ஜீவி அவரு ரெண்டு மணிக்கு காந்தி பார்க் வர சொல்லிருக்காரு சோ வீட்ல வந்து நாம வெளிய போற மாதிரி என்ன கூட்டிட்டு போறியா? "என்க
அவளோ குழப்பமாய் "அவரா எவரு?"என்க
அவளோ "அதான் டி உன் அண்ணன்"என்க
ஜீவிதாவோ மேலும் குழம்பினாள் "நா என் அம்மாவுக்கு ஒரே புள்ள எனக்கு எது அண்ணன் "என்று கேட்டபடி தண்ணீரை குடிக்க
ஜான்வியோ கடுப்பானவள் "என் லவர் உனக்கு அண்ணன் தான ?கெளதம் ரெண்டு மணிக்கு வர சொல்லிருக்கான் காந்தி பார்க்குக்கு "என்று கூற ஜீவிதாவோ குடித்த தண்ணீரை மொத்தமாய் துப்பிவிட்டாள் .
ஜீவிதா சிரிப்புடன் "ஹே ... tubelight ஒரு வழிய வெட்டி வெட்டி எரிஞ்சுட்டியா?"என்று கேட்க
அவளோ வெட்கப்புன்னகை செய்தவள் "ம்ம் "என்று சொல்ல
ஜீவிதாவோ "ஹே அடியேய் வெக்கப்படுறியா கடவுளே இந்த கண்றாவியை ச்செய் கண் கொள்ளா காட்சியை என்னால பாக்க முடியலையே "என்று அவளை கிண்டல் அடிக்க துவங்க
ஜான்வியோ "மூடிட்டு இன்னும் ஒரு மணி நேரத்துல வீடு வந்து சேரு நாம அப்டியே கொஞ்ச நேரம் வெளிய சுத்திட்டு அப்டியே அவனை பாக்க போகலாம் "என்க
ஜீவிதா "நீ அவரை பாக்க போயிருவ நானு ?"என்று அதிமுக்கிய கேள்வியை கேட்க ஜான்வியோ
coolaaga "சிம்பிள் நீ அப்டியே அலை பாயுதே மாதவன் மாறி தெரு தெருவா சுத்திகிட்டு இரு நா அவன் கெளம்புனதும் கூப்பிடுறேன் பத்திரமா மறுபடி என்ன கூட்டிகிட்டு வந்து வீட்ல விட்டுரு "என்று கூற
ஜீவிதா "எல்லாம் என் நேரம் அம்மா பிரவீன் கிட்ட சொன்னியா ?"என்க
அவளோ சிறிது குரல் குறைவாக "இல்லடி அவன் கிட்ட சொல்லல எப்படி எடுத்துப்பான்னு தெரில."என்று கூற ஜீவிதாவும் அதை ஆமோதித்தாள் .பிரவீன் ஆதிக்கு அடுத்ததாய் ஜீவிதாவின் எதிர்காலத்தை பற்றிய அக்கறை கொண்டவன் .அவனிற்கு முதலில் இருந்தே கௌதமின் மேல் அவளிற்கு வேறு விதமான எண்ணங்கள் வளருவதில் உடன்பாடு இல்லை.
பின் ஜான்வி "ஜீவி அவனுக்கும் என்ன புடிக்கும்ல ?"என்று ஒரு வித தவிப்புடன் கேட்க
ஜீவிதாவோ "என் cute ஜான்வியை யாருக்கு தான் புடிக்காது .அவர் நடந்துக்குறதுலாம் பார்த்த interest இருக்குற மாறி தான் இருக்கு கண்டிப்பா ஓகே ஆயிடும் "என்று கூற ஜான்வியும் குழம்பிய முகம் தெளிவடைய ஒரு பாட்டை சிறிய குரலில் பாடியபடி கீழே இறங்கி வந்தாள்.
அவள் முகத்தில் இருக்கும் சிரிப்பின் ஆயுள் எத்தனையோ?
முன்னோட்டம்:
மாடியில் தடுப்பு சுவற்றை ப்ரவீன் பொறுமையின்றி தட்டிக்கொண்டிருக்க பின்னால் சிறு சிரிப்புடன் வந்த ஜீவிதா "என்னடா திடீர்னு வீட்டு...."என்று கூறி முடிக்கும்முன் தன் கையை அவளை அரைவதற்காக ஓங்கி இருந்தான் ப்ரவீன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro