2
ஒரு வார காலம் முடிந்திருக்க மூன்று நண்பர்களும் ரயிலில் தனது பயணத்தை தொடங்கி இருந்தனர் .அன்று வழக்கம் போல் ஜான்வியும் ஜீவிதாவும் லூட்டி அடித்த படி வந்து கொண்டிருக்க ப்ரவீனோ எங்கோ வெறித்த பார்வையோடு சோகம் ததும்பும் முகத்தோடு அமர்ந்திருந்தான் .
முதலில் அதை கவனியாமல் இருந்த இரண்டு பெண்களும் பேச்சின் ஊடே "டேய்ய் மண்டகசாயம் "என்று கூப்பிட அவன் அப்பொழுதும் அசையாமல் எதிரில் இருந்த பர்தயே வெறித்துக்கொண்டிருந்தான் .ஏதோ சரி இல்லை என்று உணர்ந்த ஜான்வியும் ஜீவிதாவும் அவனின் இரு புறமும் சென்று அமர்ந்து கொண்டவர்கள் "என்னடா என்று கேட்க
அவனோ தலையை கையில் தாங்கியவன் "ரேஷ்மி பிரேக் up பண்ணிக்கலாம் னு சொல்லிட்டு போய்ட்டா "என்க இருவருமோ உட்சபட்ச அதிர்ச்சியில் இருந்தனர் .
அவர்கள் அறிந்திருந்தனரே தனது நண்பன் எப்படி மூன்று வருடங்களாக அந்த பெண்ணை தன உயிர் மூச்சென நினைத்து வாழ்ந்தான் என்று .ரேஷ்மி அவர்களின் பிரிவு தான் .பிரவீனிற்கு முதல் நாள் பார்த்ததிலிருந்து ரேஷ்மியின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது .
அது காலப்போக்கில் காதலாக மாற முதல் வருடம் முடியும் தருவாயில் தனது காதலை கூறினான் .அவளும் ஒப்புக்கொள்ள மூன்று வருடமும் தித்திக்கும் காதலுடன் அவளை உயிர்மூச்சென காதலித்து வளம் வந்து கொண்டிருந்தான் பிரவீன் .ஜீவிதாவிற்கும் ஜான்விக்கும் ஏனோ ரேஷ்மியை முதலிலிருந்தே
பிடிக்காமல் போனது .எனில் தனது விருப்பு வெறுப்புகளை தன் நண்பனின் மேல் திணிப்பவன் நல்ல நண்பனாய் இருக்க முடியாதல்லவா ஆதலால் ஜான்வியும் ஜீவிதாவும் மௌனமாகவே இருந்தனர் .
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் காதல் வாழ்க்கையில் திடீரென்று என் இந்த முடிவு என்று குழம்பியபடி தோழிகள் இருவரும் இருக்க பிரவீன் கூறிய பதில் இருவரையும் கொதிநிலைக்கே செல்ல வைத்தது.
பிரவீன் "எல்லாம் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு ஒரு மாசம் முன்னாடி அவ வீட்டுல அவளுக்கு ஒரு மாப்ள பார்த்தாங்க .அமெரிக்கா settled , அவளோட கேஸ்ட் ,அப்பா அம்மாவோட விருப்பம் சோ oknu சொல்லிட்டாளாம் .நா சொன்னேன் வீட்ல வந்து பேசுறேன்னு அவ எதுவுமே சொல்லாம போய்ட்டா.ஒரு வாரமா ட்ரை பண்ணேன் அவள்ட பேசுறதுக்கு பாக்குறதுக்கு நோ யூஸ்.இன்னைக்கு கால் பண்ணி நா காலேஜ்ல ஜஸ்ட் டைம் பாஸ்க்காக தான் உன்ன காதலிச்சேன் மத்தபடி எந்த பீலிங்க்ஸும் உன் மேல இல்ல இனி என்ன தொந்தரவு பண்ணாதனு சொல்லிட்டு வச்சுட்டா "என்று கூற
ஜான்வியோ"அவளை சும்மாவா விட்ட அவளை..... "என்று கூற ஜீவிதாவோ எதுவும் பேச முடியாமல் அமைதியாய் சிலையென சமைந்திருந்தாள்.
அவனின் மனநிலை தெள்ள தெளிவாய் அவளிற்கு புலப்பட்டது .டைம் பாஸ்ஸிற்கு காதலித்தாளா ?அவளின் பொழுது போக்கிற்கு அவளின் நண்பனல்லவா பலி ஆகி இருக்கின்றான் .எத்தனை கற்பனைகள் கொண்டிருந்தான் அவளுடனான வாழ்வை பற்றி .
சுமாராக படிப்பவன் விரைவில் வேலையில் சேர வேண்டுமென்பதற்காகவே தீவிரமாய் படிக்க ஆரம்பித்திருந்தானே.என்று நினைக்க நினைக்க அவளின் மனம் ரணமானது . ப்ரவீனோ கண்களில் வழியும் கண்ணீர் கீழே விழ அதை துடைக்கவும் மனமில்லாமல் அமர்ந்திருந்தான் .
ஜீவிதா அவன் தோளில் கை வைத்து அவன்
தலையை வருட அவனோ "செத்துரலாம் போல இருந்துச்சு டி அவ அப்டி சொல்லவும் .ஆனா அப்பா அம்மாக்கு நா ஒரே பையன் அவங்களுக்காக தான் எதுவும் பண்ணாம இருக்கேன் "என்க அவனை என்ன சொல்லி தேற்றுவது என்று இருவருக்கும் புரியவில்லை .
பின் அழுதழுது தானாய் சோர்ந்தவன் அங்கிருந்த lower birthil படுத்து உறங்கும் பொழுது மணி நள்ளிரவு மூன்று மணி ஆகி இருந்தது .அவனை படுக்க வைத்தவர்கள் எதிரில் இருந்த birthil அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர் .
ஜான்வி "எவ்ளோ maturedaah இருப்பான் பிரவீன் அவனையே இந்த லவ் இப்டி கோழை ஆகிருச்சே டி "என்க
ஜீவிதாவோ ஏதோ ஒரு யோசனையில் "ஆமா ஜான்வி காதல் ஒருத்தன பலமானவனாவும் ஆக்கும் அதே சமயம் பலவீனமானவனாவும் ஆக்கும் "என்க
ஜான்வியோ "ஷோபா இந்த கருமத்துக்கு தான் நா காதலிக்கவே கூடாது அப்டினு முடிவுல இருக்கேன் டி "என்க
ஜீவிதாவோ அவளை பார்த்து சிரித்தவள் "அதெல்லாம் பிளான் பண்ணி வர்ரதில்ல ஜான்வி தானா வரும் .காதலை எல்லாம் கட்டு படுத்த முடியாது .யாருக்கு வேணா யார் மேல வேணா எப்போ வேணா வரலாம் "என்க
ஜான்வியோ "ஆமா இத்தனை வருஷமா வராதது இப்போ வர போகுது போடி இவளே நாமெல்லாம் ஒன்லி sighting . ஆமா.... இவ்ளோ பேசுற நீயும் யாரையாச்சு லவ் பண்றியா ?"என்க ஜீவிதாவோ ஒரு மார்க்கமாய் சிரித்தாள் .
அவள் சிரிப்பை பார்த்த ஜான்வி "ஹ்ம்ம் ஏதாச்சு கேட்டா இப்டி சிரிச்சு வச்சுரு சரியான புரியாத புதிர் டி நீ "என்றவாறு தூக்கம் கண்களை சுழற்ற மேலே அப்பர் birthil சென்று படுத்துக்கொள்ள ஜீவிதாவோ சிறிது நேரம் எதையோ யோசித்து விட்டு தூங்கி விட்டாள் .
அடுத்த நாள் காலை அழகாய் புலர்ந்தது மூவரின் கனவு இடத்தில் .பெங்களூரு .ரயில் நிற்க மூவரும் தத்தம் உடமைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினர் .
பிரவீனின் முகத்தில் கூட சோக ரேகைகள் மறைந்து புத்துணர்ச்சி ஏற்பட்டிருந்தது .இது தான் அவன் எளிதில் எதற்கும் கலங்க மாட்டான் அப்படி கலங்கினாலும் அதை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு முன்னேறி சென்று கொண்டே இருப்பான் .
இருவரும் இறங்கி கொள்ள ஜான்வியோ பெட்டியை தூக்கியவாறு இறங்க சிரமப்பட்டாள்.பிரவீன் "அதான் எட்டலேல ஏன் தேவை இல்லாம ட்ரை பண்ற "என்றவாறு பெட்டியை தூக்கிக்கொள்ள
ஜான்வியோ வழக்கம் போல் முகத்தை சுழித்து ஒரு வெட்டு வெட்டியவள் "என்ன கலாய்க்கலேனா உனக்கு தூக்கம் வராதே" என்றவாறு இறங்கினாள் .
ஜீவிதாவின் அண்ணன் சதிஷ் அங்கு வந்து மூவரையும் அழைத்து செல்ல .முதல் platformல் இவர்கள் மூவரும் செல்ல எதிர் platformல் வந்திறங்கிய ரயிலில் இருந்து இறங்கினான் கெளதம் .இறங்கியவன் தனது தொலைபேசியை உயிர்ப்பித்து பிசாசு என்று இருந்த அந்த எண்ணை அழுத்த போக அந்த பிசாசே நேரில் வந்து நின்றது "ஹாய் கெளதம்" என்ற கூவலுடன் .
அந்த குரலை கேட்டு புன்னகைத்தவன் அவள் அருகில் சென்று அவள் தோளில் கையை போட்டுக்கொண்டான் "ஹே பிசாசு என்னடி இங்க வந்து கூட கொஞ்சம் உருண்டுட்ட போல "என்க
அவனின் மார்பளவு மட்டுமே இருந்த அவளோ "போடா மங்கி நா ஒன்னும் உருண்டை இல்ல chubby "என்றவள்
பின் அவன் முன் வந்து கையை விரித்து காட்டி பாவனையோடு கூறினால் "வெல்கம் டு பெங்களூரு "என்று .
அவள் திவ்யா கௌதமிற்கு சிறு வயது முதலே நெருக்கமான ஒரே பெண் தோழி மற்ற படி கௌதமிற்கு பெண்களிடம் பேச வேண்டுமென்றால் அல்ர்ஜி .
அவளின் செய்கையில் சிரித்தவன் "நா தங்குறதுக்கு ஏதாச்சும் ரூம் ஏற்பாடு பண்ணுனு சொன்னேனே பண்ணியா ?"என்க
அவளோ அவன் கையில் ஒரு file கொடுத்தாள்"பக்காவா பண்ணிட்டேன் சிங்கள் ஸ்டே ரூம்.உன் ஆபீஸ்ல இருந்து அரை மணி நேர ட்ராவல் தான் .monthly ரெண்ட் three தோஸண்ட்."என்றவள் மணியை பார்க்க அதுவோ எட்டு என்று காட்டியது .பின் அவனிடம் திரும்பியவள் "சரிடா எனக்கு டைம் ஆயிருச்சு.cab புக் பண்ணிருக்கேன் "என்றவள் தனது கைபேசியை எடுத்து பேசினால் "ஹலோ பையா திவ்யா நேம் லோ cab புக் மாடி எல்லித்தீரா(அண்ணா திவ்யா பேருல cab book பண்ணிருக்கேன் வந்துடீங்களா ?)"என்க
அவள் பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்த கார் வந்திருந்தது .அவனிடம் திரும்பியவள் "இந்த அட்ரஸ்ல கொண்டு போய் விட சொல்றேண்டா நீ இறங்கிரு .காசு கொடுக்காத நா ஆல்ரெடி பே பண்ணிட்டேன்.தப்ப நெனச்சுக்காத கூட அவரலைனு இன்னிக்கு ஆபீஸ்ல முக்கியமான வேல இருக்கு லீவு போட முடியாது ."என்றவள் பின் அவனை ஏற்றிவிட்டு விட்டு சென்று விட்டாள்.
அவனும் அந்த காரில் ஏறி அமர்ந்து சீட் பெல்ட்டை போட
அவன் கண்களோ அந்த இடத்தை அளவெடுத்து .அலைபாய்ந்து கொண்டிருந்த அவன் கண்கள் திடீரென ஓர் இடத்தில் நிற்க அவனின் இறுகிய இதழ்கள் புன்னகையை தத்தெடுத்து .அங்கே ஒரு ஓரத்தில் இருந்த ஹைட்ரஜன் பலூன் கடையில் ஒரு இருபது வயது மதிக்க தக்க பெண் இரண்டு பலூன்களை வாங்கிக்கொண்டிருக்க அவளின் அருகில் நின்றவளோ தலையில் அடித்துக்கொண்டிருந்தாள்.
நொடியில் அவர்களை அந்த கார் கடந்து விட கௌதமின் மனதில் அந்த முகம் தெரியா பெண்ணின் குறும்புத்தனம் ஒரு இதமான மனநிலையை ஏற்படுத்தியிருக்க அவனின் இதழ்களில் சிறிதாய் விரிந்த புன்னகை ஒட்டிக்கொண்டது .
இங்கு ஜீவிதாவோ புலம்பிக்கொண்டே தலையில் அடித்துக்கொண்டிருந்தாள் "அடோயேவ் அரை ஆதி உன் அக்கப்போருக்கு ஒரு அளவில்லாம போயிருச்சுடி .என் அண்ணனும் அவனும் cab புக் பண்றதுக்கு போயிருந்தா நீ இங்க சின்ன புள்ள மாறி hydrogen பலூன் வாங்கிட்டு இருக்க.ஆளு தான் வளரல ஆசையுமா "என்க
அவளோ வெக்கமே இல்லாமல் சிரித்தவள் "ஏய்ய் வீட்ல திருவிழா போகேல இதை வாங்கி குடுங்கன்னு கேட்டா அசிங்கமா திட்றான் டி என் தம்பி ,அந்த பனை மரம் அதான் இங்க பார்த்ததும் வாங்கணும் போல இருந்துச்சு வேணுனா நீயும் ஒன்னு வாங்கிக்கோ நா காசு தரேன் "என்க
அவளோ தலையிலேயே அடித்துக்கொண்டவள் "திருந்தாதது "என்று முணுமுணுத்துக்கொண்டாள் .
பின் cab வந்துவிட முதலில் இவர்கள் இருவரையும் ஒரு ஒர்கிங் வுமன் ஹோஸ்டேலில் இறக்கி விட ஜீவிதா இருவருக்குமான அறையின் சாவியை வாங்கிக்கொண்டு ஜான்வியுடன் நடந்தாள்.பின் அவர்களுக்கு இன்னும் பத்து கட்டிடங்கள் தாண்டி இருந்த ஒரு மேன்ஷனில் பிரவீன் தங்கிக்கொண்டான் .
மூவரும் தத்தம் அறைக்கு சென்றவர்கள் குளித்து தயாராகி தங்களின் அலுவலகமான காக்னிசன்ட்டினுள் பத்து மணி அளவில் நுழைந்தனர் .மூவருக்குமே அங்கிருந்த அலுவலகத்தை பார்த்து.
பரந்து விருந்து வானத்தை முட்டுமளவு கண்ணாடிகளாலேயே இழைத்து பாதையின் இரு புறமும் சிறு சிறு செடிகளுடன் ஒரு குட்டி நகரத்தை போல் இருந்தது .உள்ளே சென்றவர்கள் தங்களின் ப்ளாக்கை தேடி உள்ளே செல்வதற்குள் விழி பிதுங்கி நின்றுவிட்டனர் .
அங்கே அவர்களை போலவே ட்ரைனிங்கிற்காக இருபது பேர் ஒரு conference ஹாலில் அமர்ந்திருந்தனர் .அவர்களின் ட்ரைனீர்கள் சற்று நேரத்தில் வந்து இருபது பேரை இரண்டு டீம்களாக பிரித்து விடுவார்கள் என்று கூறி இருந்தனர் .முதலில் வழுக்கை விழுந்த ஒரு கோட் சூட் அணிந்தவர் வந்து முதல் பத்து பேரை அழைத்து சென்று விட எஞ்சிய பத்து பேரில் அந்த மூன்று நண்பர்களும் இருந்தனர் .
ஜான்வியோ மெளனமாக ஜீவிதாவின் காதருகில் குனிந்தவள் " இப்போ தான் டி பொண்ணுங்கள்லாம் ஏன் ஐ டி வேலைக்கு போகணும்னு ஆசை படுறாங்கனு தெரியுது "என்க
ஜீவிதாவோ அவளை குழப்பமாய் பார்க்க ஜான்வியோ சுற்றி ஒரு பார்வையை செலுத்தியவள் "ஆந்திரா ,கேரளான்னு ஒவ்வொருத்தனும் எப்படி இருக்கான் பாத்தியா"என்க
ஜீவிதாவோ அவளை திட்டவும் முடியாமல் தலையில் அடித்துக்கொள்ளவும் முடியாமல் அவளை முறைத்தவள் "மூடிட்டு உக்காரு கொஞ்ச நேரம் "என்க அவர்களின் பேச்சை நிறுத்தியது ஒரு பெண்ணின் குரல் "ஹலோ everyone வெல்கம் டு காக்னிசண்ட் "என்று அங்கே அவர்களின் முன் புன்னகை முகமாய் கோட் சுத்திட்டு நின்றிருந்தாள் திவ்யா .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro