8
அவன் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் கத்திகொண்டே எம்பி குதித்தவன் சைந்தவியை தேட அவள் மயங்கி சரிவதை கண்டவன் "சதுஉஉ"என்ற கூவலுடன் அவள் இருக்குமிடம் நோக்கி ஓடினான்.
அதற்குள் அவளை சுற்றி மாணவர்கள் சூழ்ந்து விட அவர்களை விளக்கியவன் .அவள் தலையை தன் மடியில் ஏந்தியவன் "சது சது என்னாச்சுடி பாரு"என்றவன் சுற்றி நின்றவர்களை விலகுமாறு கூறி காற்றுக்கு வழி விட செய்தான்.
பின் அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க அப்பொழுதும் அவள் எழுந்திருப்பதாய் இல்லை .பின் இனியும் தாமதிக்க கூடாது என்றெண்ணியவன் அவளை தன் இருக்கைகளில் ஏந்திக்கொண்டு தங்கள் கல்லூரியுடன் இணைந்திருக்கும் மருத்துவமனைக்கு அவளை தூக்கி கொண்டு ஓடினான்.
அங்கே அவசர பிரிவில் அவளை அனுமதித்தவனின் சிந்தனையில் ஓடியது ஒன்று மட்டுமே "என் சதுக்கு எதுவும் ஆக கூடாது "அந்த நிமிடம் அவன் சற்று நேரத்திற்கு முன் ஈட்டிய வெற்றியோ ,இல்லை இது மயக்கம் தான் அவள் எப்படியும் மீண்டு விடுவாள் என்ற எண்ணமோ அவனுக்கு துளியும் இல்லை அவன் மனதில் இருந்த ஒரே எண்ணம் சைந்தவி.அவனுக்கு மற்ற நண்பர்களிடம் கூற வேண்டும் என்பது கூட தோன்றவில்லை அவ்வழியே எதற்கோ வந்த சரன்னும் ஷ்ரவனும் வித்யுத் அங்கே பதட்டமாக நிற்பதை பார்த்தவர்கள் செவிலியரிடம் விசாரித்தவர்கள் சைந்தவியை பற்றி அறிய அவன் அருகில் சென்று "மச்சி என்னாச்சுடா சையுக்கு" என்று அவனை உலுக்க அவனோ சுரணை அற்றவனாய் அந்த அறை வாசலையே நோக்கி கொண்டிருந்தான் .
சற்று நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவரிடம் வேக வேகமாக ஓடியவன்"டாக்டர் என் சைந்தவிக்கு ஒன்னும் இல்லேல .நல்லா தான் இருந்தார் திடீர்னு மயங்கிடா நா என்னென்னவோ பண்ணேன் அவ எந்திரிக்கவே இல்ல அவளுக்கு ஒன்னும் இல்லேல .அவளுக்கு எதுவும்னா என்னால தாங்க முடியாது "என்று அவன் போக்கிற்கு பிதற்ற சரணிற்கும் ஷ்ரவனிற்கும் எதற்கும் கடுமையாய் கலங்காமல் இருக்கும் வித்யுத் சாதாரண மயக்கத்திற்கு இப்படி பயப்படுவதை பார்க்க வினோதமான இருந்தது .
மருத்துவர்"வித்யுத் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் அவளுக்கு ஒன்னும் இல்ல ஆனா இன்னும் கொஞ்சம் லேட் பண்ணிருந்தா கிரிட்டிகல் ஆயிருக்கும் அவ சாப்டதுலயோ குடுச்சதுலயோ ஒரு மயக்க மருந்து கலக்கிருக்காங்க அவ மயங்கிருந்தா கூட ஒன்னும் ஆய்ருக்காது அவ கிட்ட தட்ட 1 மணி நேரமா மயக்க உணர்வை கட்டுப்படுத்திட்டே இருந்துருக்கா இன்னும் கொஞ்ச நேரம் கட்டு படுதீருந்தா she would have gone into கோமா "என்க அவனுக்கோ ஒரு நிமிடம் இதயத்துடிப்பே நின்றுவிடுவது போல் இருந்தது .
பின் அவரிடம் திரும்பியவன் "இப்போ எப்படி இருக்கா "என்று வினவ
அவரோ "இப்போ கண் முழுச்சுடா பாரு"என்று அவர் கூறி முடிக்கும் முன் அவன் அறைக்குள் சென்றிருந்தான் .
சரணிற்கும் ஷ்ரவனிற்கும் முதலில் வித்யுதின் செயல் புதிராய்இருந்தால் இப்போது சைந்தவியின் செயல் புதிராய் இருந்தது ஷ்ரவன் "ஏன்டா சரண் என்னைக்காவது சையு நாம சொன்ன எதுக்காவது தன் உடம்ப வருத்தி ஒரு செயலை செஞ்சுருக்காளா?"என்று வினவ
சரணோ "இல்லடா அவளால முடிலேனா ஒடனே back ஆப் பண்ணிருவா இவ்ளோ ஸ்டரைன்லாம் பண்ணிக்க மாட்டா அண்ட் இவனும் என்னடா எதுக்கும் அசாராதவன் இவ்ளோ டென்ஷனாகுறான் "என்று கேட்க
சரண் "தெரியலையேடா ஆனா ஏதோ இருக்கு "என்று வினீஷாவிற்கும் பூஜாவிற்கும் தகவல் சொன்னவர்கள் வெளியே காத்திருக்க உள்ளே சென்ற வித்யுத் அவள் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருப்பதை பார்த்தவன் கண்களில் கண்ணீர் திரையிட "சது "என்றவன் அவளை ஓடி சென்று இறுக்கமாய் அணைத்து கொண்டான் .
வெளியே காத்திருந்த நண்பர்கள் அவர்கள் இருவரும் வந்ததும் உள்ளே செல்ல உள்ளே சென்று அவனும் அவளும் கட்டி பிடித்து கொண்டிருப்பதை பார்த்தவர்கள் வாயில் ஈ போகும் அளவிற்கு பிளந்து விட்டனர் ஏனெனில் சைந்தவி இது வரை சரணையோ ஷ்ரவனையோ தோளில் கை கூட போட விட்டதில்லை அருகில் அமர்வாள் எல்லாம் செய்வாள் ஆனால் அணைக்கவோ தோளில் கை போடவோ விட்டதே இல்லை.அப்படிப்பட்ட அவளும் அவனது தோலை சுற்றி கை போட்டிருப்பதை பார்த்தவர்கள் அப்படியே அதிர்ந்து விட்டனர்.
சைந்தவி "டேய்ய் என்னடா என்னாச்சு ஏன் இவ்ளோ நடுங்குற"என்று அவன் முகத்தை பார்த்து பேசுவதற்காக அவனை விளக்க முற்பட
அவனோ இன்னும் இறுக்கமாக அவளை அணைத்துக்கொண்டவன் "ரொம்ப ரொம்ப பயந்துட்டேன் சது நீ அப்டி விழவும் எனக்கு என்ன பண்றதுனே தெரில.ஒரு நிமிஷம் என் மூச்சே நின்றுச்சு"என்றவன் அவளை விளக்கி "ஏண்டி மயக்கம் வந்துச்சுனா மயங்கி தொலைய வேண்டியது தான ஏண்டி கட்டுப்படுத்திட்டு இருந்துருக்க இன்னும் கொஞ்ச நேரம் கட்டுபடுதீருந்தன்னா கோமாகு போயிருப்பன்னு டாக்டர் சொன்னாரு தெரியுமா அப்டிலாம் ஆய்ருந்தா என்னாகும்" என்று அவன் கேட்க
அவளோ சிரித்து கொண்டே "என்ன கொஞ்ச நாள் என் torture இல்லாம உன் காது நிம்மதியா இருந்துருக்கும் "என்று அவள் கூற
அவள் தலையில் ஓங்கி கொட்டியவன் "எல்லாமே விளையாட்டுதான் இல்லை உனக்கு அப்டி ஏதாவது ஆய்ருந்தா என்னால நெனைக்க கூட முடிலடி "என்றவன் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவள் கையில் விழ பதறியவள்
அவன் முகத்தை நிமிர்த்தி "ஹே ஒன்னும் இல்லடா இதுக்கெல்லாம் போய் அழுற அதான் குத்து கல்லாட்டம் ஒக்காந்துருக்கேன்ல .நா அப்போவே மயங்கிருந்தா நீ கேம் வேலையான்றுபியா groundah விட்டு வெளிய வந்துருப்ப அப்போவே .நீ என்னைக்கும் யார்ட்டயும் தோக்க கூடாதுடா அதான் கட்டு படுத்திட்டு உக்காந்திருந்தேன்.உனக்காக இது கூட பண்ண மாட்டேனா "
என்றவளை மீண்டும் அணைத்துக்கொண்டவன்"உனக்கு ஒன்னுனா என் உயிரேஹ் போற மாறி இருக்குடி ஏன்னு தெரில "என்று மனதில் நினைத்தவன் பின் திரும்பி பார்க்க அங்கோ அவர்கள் நண்பர்கள் படையே நின்றிருந்தனர் .
அவன் பார்க்கும் திசையை பார்த்த சைந்தவி "ஹே நீங்கலாம் எப்போடா வந்தீங்க "என்று கேட்க
பூஜா "எப்போ வந்தீங்களா நாங்க வந்து 10 நிமிஷம் ஆச்சுடி இப்போ தான் கவனிக்குறியா "என்க
அவளோ"சத்தியமா இப்போ தாண்டி கவனிக்குறேன் .இந்தா இவன் தான் ரொம்ப பயந்துட்டான்."என்று அவனை காட்ட அவனோ சிறு சிரிப்புடன் அவர்களை நோக்க ஷ்ரவனும் சரணுமோ அவனை முறைத்துக்கொண்டிருந்தனர் .இவனுங்க என் இப்டி முறைக்குறானுங்க என்று நினைத்தவன் ஏதோ நினைவு வர முகத்தில் ரௌத்திரம் கொப்பளிக்க வினீஷாவிடம் திரும்பியவன் "வினீஷா இவளை நீங்க இங்க இருந்து பார்த்துக்கோங்க நா இப்போ வந்துருறேன் "என்றவன் செல்லப்போக அவன் கையை பிடித்த சைந்தவி "எங்க போற என்க?"
அவனோ "இதோ வந்துருறேன் "என்று கூறி விட்டு போக அவன் பேச்சில் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவள் சரணையும் ஷ்ரவனயும் அழைத்தவள் அவனை பின் தொடருமாறு கூறினாள் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro