Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

11

அவன் கூறுவதை கேட்டவளுக்கு பேச்சு வரவில்லை .மழை கொட்டுவதை உணரும் நிலையிலும் அவள் இல்லை உறைந்தார் போன்று அப்படியே நின்றுவிட்டால்.அவன் தோளை தொட்டதும் தான் சுய உணர்வை அடைந்தாள்.

அவளுக்கு அவன் மீது கோபமும் வரவில்லை இது வரை எத்தனையோ பேரிடம் இல்லை என்று கூறியவளால் அவனிடம் இல்லை என்றும் கூற முடியவில்லை .எதுவும் பேசாதவள் விறுவிறுவென scooty உடன் நடக்க சிறிது தூரத்தில் அவளது scooty puncture ஆனது .அவள் பின்னோடே வந்தவன் அவள் scooty puncture ஆகி என்ன செய்வதென்று தெரியாமல் காலின் கீழே இருந்த தண்ணீரை எத்தி கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு இதழில் புன் முறுவல் பூக்க அவள் அருகே சென்று வண்டியை நிறுத்தியவன் ஹா ரணை அடிக்க அவளோ அவனை பார்த்து பின் சடாலென்று தலையை குனிந்து கொண்டாள்.

அவள் கையை பின்னி பிசைந்து கொண்டிருக்க அவள் பதட்டமாய் இருப்பதை உணர்ந்தவன் அவளை சகஜமாக்கும் பொருட்டு "வீட்டுக்கு போகனும்னு ஐடியா இருக்குறவுங்க வந்து ஏறலாம் "என்க

அவளோ "எங்களுக்கு போய்க்க தெரியும் என்று விட்டு அங்கு இருந்த பேருந்து நிறுத்தத்தில் போய் நிற்க

அவனும் ஓகே என்று விட்டு சென்று விட்டான் .அதற்கும் அவனையே வறுத்தெடுத்தாள் சைந்தவி .

சைந்தவிக்கு இருட்டென்றாலும் இடி சத்தம் என்றாலும் சிறுவயதிலிருந்தே மிகுந்த பயம். இப்பொழுது பெய்த மழையில் மாலை நேரமும் இரவை போல் இருந்து விட சற்று நேரத்தில் வெட்டிய மின்னலில் சாலை ஓரத்தில் எறிந்த விளக்குகளும் அணைந்துவிட்டது .

கணேஷா கணேஷா என்று முனங்கியவள் பின் இடி சத்தத்தில் மேலும் பயந்து போனால். சற்று நேரத்தில் அவள் அருகில் வித்யுத் வந்து நிற்க அவனை அந்த பைக் வெளிச்சத்தில் தீயென முறைத்தவள் வீம்பாய் அந்த இடத்திலேயே நின்றாள் .பின் கேட்ட இடி சத்தத்தில் கெத்தாவது ஒண்ணாவது என்றுவேக  வேகமாய்  அவள் scootyai பூட்டியவள் ஆட்டோமெட்டிக்காக அவன் வண்டியில் பின்னே அமர்ந்து அவன் தோளில் கை வைத்து அவன் bikeil பின்னேஅமர்ந்து கொண்டாள் உடல்நடுக்கத்துடன் .

அவள் செய்கையை கண்டவனுக்கு சிரிப்பு அதிகமாக வர கண்ணாடியை அவள் முகம் தெரியுமாறு வைத்தவன் விசில் அடித்து கொண்டே சற்று வேகம் குறைவாக அவளுடன் அந்த மழையில் நனைந்து கொண்டே அந்த நேரத்தை அணு அணுவாய் அனுபவித்து கொண்டே வந்தான்.

அவள் வெகு நேரமாக பேசாமல் இருப்பதை கவனித்தவன் மனதில் "என் சதுவா இது இவ்ளோ silentaah இருக்கா இருக்கக்கூடாதே"என்று நினைத்தவன் "என்ன சது இவ்ளோ சைலெண்டாஹ் வர ஏதாச்சும் பேசுடி நீ பின்னாடி உக்காந்துருக்கியா இல்லயானே தெரில "என்று கூற

அவளோ அவனை ஒருமுறை பார்த்தவள் மனதில் "இவன் என்ன தெரிஞ்சு பேசுறானா தெரியாம பேசுறான் asaultaah லவ் யூனு சொல்லிட்டு இப்போ பேசுன்னா எனக்கு வார்த்தை வந்தா தான நா பேச முடியும் "என்றவள் யோசனையோடு இருக்க அவனும் அதற்கு மேல் அவளிடம் வம்பு செய்யாமல் அவள் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் .

வண்டி நின்றதை கூட உணராமல் சிந்தனையில் இருந்தவளை உணர்வு பெற வைக்க வேண்டி அவன் தோளை பற்றி இருந்த அவள் கையை அவன் பற்ற அதில் விழித்தவள் என்ன என்று நோக்க அவனோ "வீடு வந்துருச்சு சது" என்க இறங்கியவள் அமைதியாய் பையை எடுத்து கொண்டு உள்ளே செல்ல முற்பட

அவள் கையை பிடித்தவன் "சது நா உண்ட ஒரு நிமிஷம் பேசணும் .என்றவன் அவள் மௌனமாய் நிற்க அதை சம்மதமாய் எடுத்து கொண்டவன் தொடர்ந்தான் "சது இது உனக்கு வேகமா தெரியலாம் ,இல்ல friendunu சொல்லிட்டு லவ் சொல்றானேன்னு என்மேல தப்பான impression கூட வந்துருக்கலாம். ஆனா யோசிச்சு பாரு பார்த்ததும் வரது பெரு காதலா தெரிஞ்சு புரிஞ்சு வரதுக்கு பேர் தான காதல் .அப்டி உன்ன புருஞ்சுக்கனும்னா நா மொதல்ல உன்ட்ட friendaah தான பழக முடியும் ?"என்று வினவ

அவளோ ஒன்றும் கூறாமல் அப்படியே இருந்தால் பின் அவனே தொடர்ந்தான் "சது எனக்கு உன்கூட இருக்கேல ரொம்ப சந்தோஷமா இருக்கு ,என்னோட கவலை எதுவும் உன்கூட இருக்கேல என்ன பாதிக்குறதே இல்ல ,உன்னோட சிரிச்ச முகத்தை பாக்கேல என் இதழும் சிரிப்புல தானா விரியுது உனக்கு ஒன்னுனா என் மனச யாரோ கிழிக்குற மாறி இருக்குடி .இது என் வாழ்க்கை முழுசும் வேணும்னு நினைக்குறேன் சது ஆனா இது என் விருப்பம் மட்டும் தான் .நா உன்ன காதலிக்குரேன்றதுக்காக நீயும் என்ன காதலிக்கனும்னு அவசியமே இல்ல .உன்ன கட்டாயப்படுத்தவும் மாட்டேன் .கட்டாயப்படுத்தி காதல் வராது .இன்னும் 1 வாரம் நமக்கு ஸ்டடி holidays இருக்கு அதுக்கப்ரம் எக்ஸாம் ஆரம்பிக்க போது .நல்லா யோசிச்சு இந்த 1 வீக்ல எப்போ வேணாலும் உன் முடிவை சொல்லு .உனக்கு ஓகேனா உன்ன loveraah பாப்பேன் இல்லேனா எப்போவும் போல உன் friend வித்யுத்தாஹ் உன்னோட இருப்பேன்.negativeaah சொன்னா உன்ன ஹர்ட் பண்ணிருவேனோனு(ஆசிட் அட்டாக் ,மேலும் காதலை நிராகரிப்பதாக பெண்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளை தான் அவன் அப்டி சொல்றான் ) நினைக்காத சது உன்ன ஹர்ட் பண்ணா அத விட 100 மடங்கு வலிய நா அனுபவிப்பேன் காதலிச்ச பொண்ண ஹர்ட் பண்றவன் அவளை காதலிக்கவே இல்லனு அர்த்தம் .முடிவு உன் கைல வெயிட் பண்றேன் " என்றவன் அவளிற்கு தெளிவாக தன் மனதில் இருப்பதை முடிந்த அளவுக்கு புரியவைத்தவன் நேராய் தன் வீட்டிற்கு சென்றான் .

அங்கே sofaavil ஒரு 50 வயது மதிக்க தக்க ஆணும் ஒரு 45 வயது மதிக்க தக்க பெண்ணும் அமர்ந்திருந்தனர் .அவனை கண்டதும் சிரித்து கொண்டிருந்தவர்கள் முகத்தை கடுமையாகியவர்கள் அவன் என்றும் நுழையும் அறைக்குள் செல்ல போக அந்த ஆண் "எங்கே இவ்ளோ நேரமா போயிடு வந்துருக்க ?"என்று கேட்க

அவனோ "அது உங்களுக்கு தேவை இல்லாதது "என்று பதில் கூறியவன் உள்ளே செல்ல போக

அந்த பெண்"ஹே என்ன திமிரா இதை எல்லாம் வேற யார்ட்டயாச்சும் வச்சுக்கோ எங்கே போயிடு வரன்னு கேட்டா ஒழுங்கா சொல்லுடா"என்க

அவன் "எது டாவா ஹலோ மேடம் இங்க என்ன கேள்வி கேக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல .நா இங்க இருக்குறதுக்கான ஒரே கரணம் என்னனு உங்களுக்கு நல்லாவே தெரியும் .அண்ட் நா ஒன்னும் சும்மாவும் இல்ல i am paying you more than what you deserve to be here .தேவை இல்லாம என்ன சீண்டுற வேலையெல்லாம் விட்ருங்க "என்று படபடவென பொறிந்தவன் அவன் என்றும் நுழையும் அறைக்குள் நுழைந்தான் .

இருள் சூழ்ந்திருக்க ஆங்காங்கே கேட்ட பீப் சத்தம் அங்கே சில சாதனங்கள் இருப்பதை உணர்த்தியது .ஒரு புற சுவர் கண்ணாடியால் அமைந்திருக்க அதில் தொங்கிய திரை சீலை அவ்வப்போது விலகி மெல்லிய நிலவொளியை அவ்வறையில் கசிய விட அங்கே ஓர் கட்டிலில் ஒருவர் படுத்திருப்பதை ஊகிக்க முடிந்தது .

அவ்வறையில் நுழைந்தவன் மின் விளக்கை போட நம்மால் அக்கட்டிலில் இருக்கும் பெண்ணின் உருவத்தை பார்க்க முடிந்தது .அன்று அவன் வைத்திருந்த புகைப்படத்தில் இருந்த பெண்மணி இளமை பருவத்தில் இருந்தால் எப்படி இருந்திருப்பாரோ அப்படியே அவரின் நகலாக ஓர் உருவம்.வெள்ளை நிற டாப்பும் வெள்ளை பேண்டும் போட்டு அவள் கூந்தல் கீழே விரிக்கப்பட்டிருக்க சாந்தமான முகத்துடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தால் அவள் .

அவள் அருகில் சென்ற வித்யுத் அந்த கட்டிலில் ஒரு ஓரத்தில் அமர்ந்தவன் அவள் கைகளை பற்றி அவள் தலை முடியை கோதியவன் "அதிதி குட்டி இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா .சின்ன பிள்ளைல ஞாபகம் இருக்கா அம்மா வேணுன்னா அம்மா வேணுன்னானு நீ அப்பப்போ அழுவ .எனக்கு உன்ன எப்படி சமாதானம் படுத்துறதுனு தெரியாம உன்ட்ட அம்மா சீக்கிரமே ஒரு நாள் நம்ம வாழ்க்கைல ஏதோ ஒரு உருவத்துல வருவாங்கடா அப்டினு சொல்லுவேன் நீயும் அம்மா வருவாங்கன்னு நம்பிட்டு தூங்குவ.ஆனா இப்போ நா விளையாட்டுக்கு சொன்னது உண்மையாயிருக்கு டா.எப்போவும் உன் பக்கத்துல நா வந்து உக்காந்துட்டு உன்ன பார்த்துட்டே இருந்துட்டு போவேன் ஒழிய உன்ட்ட நா பேசுனதில்ல .பேசவும் எனக்கு தோணாது .இன்னைக்கு உன்ட்ட பேசணும்னு தோணுதுடா .என்றவன் சைந்தவியை கண்டது முதல் இன்று தன் காதலை அவளிடம் கூறியது வரை கூறியவன் அவளிடம் ஏதேனும் அசைவு தெரிகிறதா என்று பார்க்க அவளோ நிர்மலமாய் இருந்தால் .பின் தொடர்ந்தவன் போதும்டா அதிதி நீ 3 மாசமா தூங்குனது .அண்ணனுக்கு உன்ன தவிர யாரும் இல்லனு நெனச்சுட்டு இருக்கேல இவ கெடச்சுருக்காடா.நமக்கு நம்ம அம்மா திரும்ப கெடச்சுருக்காடா.என்று கூற அவள் கண்களில் இருந்து மெல்லிய கோடாய் கண்ணீர் வந்தது .

அதை துடைத்தவன்" அவ என்ன ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலேனாலும் அவ தாண்டா என் லைப் .இன்னைக்கு உன்ட்ட பேசுனதுக்கப்ரம் ரொம்ப reliefaah இருக்குடா அதி குட்டி சீக்கரம் அண்ணாக்காக எந்துருச்சு வாடா " என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு தன் அறையில் சென்று நிம்மதியாக உறங்கி விட்டான் .

இங்கே அவன் பேசிச்சென்றதும் அவளுக்குள் எத்தனையோ குழப்பங்கள் .மௌனமாய் வீட்டிற்குள் வந்தவள் அவள் அம்மா அழைப்பதையும் அவள் அப்பா அவளுக்கு பிடித்த ரசகுல்லாவை அவள் வாய் முன் நீட்டியதையும் அவள் தம்பி அவளை "பூசணி என்னாச்சுடி "என்று கூறியதை கூட காதில் வாங்காதவள் உடையை கூட மாற்றாது அப்படியே தன் மெத்தையில் விழுந்தாள்.

அவள் மனதில் முதல் நாளிலிருந்து இப்பொழுது வரை இருந்த வித்யுத் கண் முன் வந்தான்.அவளுக்காக எத்தனையோ தன்னுள் மாற்றியிருக்கிறான்.அவளுக்காக தான் நேற்று யாரையும் அடிக்கும் குணம் இல்லாதவன் வெறி பிடித்தவன் போல் வினையை தாக்கி இருந்தான்.இப்பொழுது கூட அவளின் முடிவுக்கு மதிப்பு கொடுத்து உன் காதலை கொடுக்கவில்லை என்றாலும் உன் நட்பை மட்டும் கொடுத்தால் போதும் என்று விட்டு சென்றிருக்கிறான் .

அது மட்டுமல்லாது எத்தனையோ பேரிடம் இல்லை என்று கூறியவளால் இன்று அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லையே வெட்கமா அச்சமா தெரியவில்லை அவளுக்கு.நேற்று அவன் ஜெயிக்க தன்னை தானே வருத்திக்கொண்டதை இன்று யோசித்தால் அவளுக்கே அவள் நடவடிக்கை புதிராய் இருந்தது.ஆண்களிடம் 2 அடி தள்ளி நின்று பேசுபவள் இன்று சகஜமாக அவன் தோளில் கை போடும் போது தடுக்காதது பதட்டமாக இருக்கையில் அவன் கை கோர்த்து கொண்டது .மேடை ஏறும் வரை இல்லாத தைரியம் அவனை கண்டதும் வந்தது அனைத்தும் அவளுக்கு ஒன்றை உணர்த்த ஆனால் அவள் மூளையோ நான் எப்படி அப்படி என்று அதை ஏற்க மறுத்தது .

யோசித்து யோசித்து தலை வலியே வந்துவிட கண்ணை மூடியவள் ஆழ்ந்து உறங்கி விட்டால் .யாரோ தன் தலை முடியை கோதும் உணர்வில் விழித்தவள் அவள் அப்பா அங்கே நின்றிருக்க எழுந்து அமர்ந்தவள் "அப்பா என்னாச்சுப்பா ?"என்க

அவரோ "உனக்கென்னாச்சும்மா வந்ததும் கூப்பிட கூப்பிட காதுலயே வாங்காம வந்துட்ட இப்போ பார்த்தா நனைஞ்சு ட்ரெஸ்ஸஹ் கூட மாத்தாம அப்டியே படுத்திருக்க ?"என்க

அவளோ "ஒன்னும் இல்லப்பா தலை வலிக்குது அதான் தூங்கிட்டேன் "என்க 

அவளை கூர்ந்து நோக்கியவாறு வேறு எதையோ மகள் முதல் முதலாய் தன்னிடம் மறைப்பதை உணர்ந்தவர் அவளே கூறட்டும் என்றெண்ணியவர் "சரிமா கொஞ்சம் சாப்பிட்டு படு" என்க

அவளோ "இல்லப்பா இன்னைக்கு சாப்பாடு வேணாம் நீங்க போங்க குட் nightpa "என்றவள் மீண்டும் கட்டிலில் சரிய அவளை ஒருமுறை பார்த்தவர் பின் எழுந்து சென்று விட்டார்.

அவர் சென்றதும் உள்ளே வந்த ஹரி விக்னேஷ் அவளை எழுப்பியவன் "என்னடி பிரச்னை "என்க

அவளோ "என்ன? என்ன பிரச்னை ?ஒன்னும் இல்லையே "என்று மழுப்ப

கதவை தாளிட்டு வந்தவன் "அக்கா உன்னால அப்பா அம்மாட்ட கூட ஒரு விஷயத்தை மறைக்க முடியும் ஆனா என் கிட்ட மறைக்க முடியாது .என்ன பிரச்னைன்னு சொல்லு என்னால முடுஞ்சா சொலுஷன் சொல்றேன்"என்க யாரிடமாவது தன் குழப்பத்தை கூற நினைத்தவள் தன் தம்பியிடம் தன் மனப்போராட்டத்தை கூறினால் .

சிறிது நேரம் அவள் முகத்தை கூர்ந்து நோக்கியவன் "இதை நீ எப்போவோ புரிஞ்சுருந்துருக்கணும் ரொம்ப latedi நீ "என்க

அவளோ புரியாமல் விழிக்க

அவன் "ஒரு 10 days முன்னாடி நாம pizza சாப்டுட்டு இருந்தோம்ல அப்போ ஏதோ 3 பொண்ணுங்க அவரை சைட் அடிச்சாங்கன்னு எங்களை முன்னாடி அனுப்பிச்சுட்டு நீ அந்த பொண்ணுங்கள போய் திட்டிட்டு வந்திள"என்க

அவளும் "ஆமாம் ஆனா உனக்கெப்படி தெரியும் ?"என்று வினவ

அவனோ" ரொம்ப நேரமாச்சே நீ உள்ள போய் அதான் பாக்க வந்தேன் .என்றவன் அன்னைக்கு ஏன் நீ பொசஸிவ் ஆனனு நீ யோசிக்கவே இல்லையா??"என்க

அவளோ "இல்லை" என்றால்

பின் "இன்னைக்கு கூட அவரு உன்ன லவ் பன்றேன்னு சொன்னப்போ நீ இல்லனு சொல்லாம பேசாம தான வந்துருக்க "என்க

அவளும் ஆமாம் என்று மண்டையை ஆட்டினாள் .

"அவரு எதுலயும் தோற்க கூடாதுனு நெனச்சு உனக்கு நீயே ஆபத்தை தேடிர்ந்துருகியே இது மாறி ஷ்ரவனுக்கோ சரனுக்கோ நீ பண்ணிருக்கியா??"என்க

அவள்" இல்லை" என்றால்.

"அவரோட இருக்கேல securedaah பீல் பண்ற மாறி இது வரைக்கும் யார்ட்டயாச்சும் feel பண்ணிருக்கியா?" என்க

அவளோ" இல்லை" என்றால்.

பின் சிரித்தவன் அவளை சென்று அணைத்தவன் "you are in லவ் அக்கா .எல்லாத்தையும் தெளிவா புருஞ்சுக்குறவ இதுல ரொம்ப கொழம்பி போயிருக்க "என்க

அவளோ "நா எடுத்த முடிவு சரியாடா?"என்று கேட்க

அவனோ "நா பழகுன வரைக்கும் சொல்றேன் ரொம்ப நல்லவரு தான் .நம்ம வீட்லயும் அப்பாக்கும் அம்மாக்கும் அவரை ரொம்ப புடிக்கும் அண்ட் என் அக்கா ஒருத்தர இவ்ளோ தூரம் நம்புறா அவ முடிவு சரியா தான் இருக்கும் .தைரியமா உன் முடிவை சொல்லு அவர்ட்ட .அப்பறோம் அக்கா இனிமே அவரை நா வித்யுத்ன்னு பேர் சொல்லி கூப்பிட கூடாதோ மாமான்னு வேணா கூப்பிடட்டுமா ?"என்க

அவன் கூறியதில் வெட்கம் வர தலையணையை தூக்கி அவன் மண்டை மீதே இருந்தவள் "போடா நீ வேற "என்று சிரித்து கொண்டே கூற

அவனோ "ஆஹா அக்கா என்ன வேணா படு ஆனா வெட்கம் மட்டும் படாத பாக்க முடில" என்றவன் அடுத்த தலையணை தாக்குவதற்குள் வெளியே ஓடிவிட

அவன் சென்றதும் தெளிவு பிறக்க முகம் பொலிவாகி சிரித்தவள் "ஐ லவ் யூ too டா ரோபோ "என்று கூறியவள் தலையணை கட்டி பிடித்து கொண்டு உறங்கினால் நாளை அவனை பார்த்து தன் முடிவை கூற வேண்டும் என்று எண்ணி கொண்டே .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro