8.
யாரு அவங்க?
காரில் கிளம்பியதும் வருணை பார்த்துக் கேட்டாள் திவ்யா.
"Friends " வண்டி ஓட்டுவதில் படு கவனமாய் இருப்பது போல இவள் முகம் பார்க்காமலே சொன்னான்.
"ஆனா, ஏன் நீ அவங்கள பாத்ததும் Nervous ஆன மாரி இருந்த "
ஒனக்கு அவனுங்க விஷயத்துல தான் Doubt வரணுமா மனதிலே அவளை அர்ச்சித்துக் கொண்டு,
இல்ல, அவங்களும் வெளிய போக கூப்டாங்க. உன்னோட படத்துக்கு வர்ரதா இருந்ததால வேற வேல இருக்கு. வர முடியாதுனு சொன்னேன். அதான் தியேட்டர்ல பாத்ததும் கொஞ்சம் Tension ஆகிட்டாங்க.
"ஓ..." என்றவள் வெளியே பார்வையை படர விட்டாள்.
இருட்டத் தொடங்கியிருந்தது. கண்ணாடியை கீழே இறக்கி விடவும் குளிர் காற்று வந்து முகத்தை தொட்டுச் சென்றது. உள்ளுக்குள் ஏதோ ஒரு உற்சாகம், இதழில் சிறு புன்னகை வரவ அந்த சூழ்நிலையை ரசித்த படி வந்தவள், வெளியே Ice cream வண்டியை கண்டதும் தன்னையும் மறந்து " வருண் Ice cream சாப்டலாமா? " என்றாள் அவன் பக்கம் திரும்பி. அவள் முகத்தை திரும்பிப் பார்த்தவன் மறு பேச்சின்றி காரை ஓரமாய் நிறுத்தினான்.
அவள் வேலைக்கு சேர்ந்து இன்றுடன் பத்து நாட்கள் ஆகிறது. இந்த பத்து நாட்களில் வருண் வலிய சென்று பேசியது தவிர அவளாக நண்பன் என்ற எந்த உரிமையும் எடுத்துக் கொண்டது கிடையாது. இன்று அவளே வந்து Ice cream கேட்டது புதிதாய் இருந்தது. அதுவும் எப்போதும் கண்களை எட்டாத அந்த போலியான புன்னகை இன்று இல்லை. பள்ளி நாட்களில் தினமும் காலையில் அவனை வரவேற்கும் அதே புன்னகையை பார்த்தது போலிருந்தது
வருண் காரில் சாய்ந்த படி நிற்க அவன் எதிரே Ice cream உடன் நின்றாள் திவ்யா. Ice cream ஐ சுவைத்த படி அங்கும் இங்கும் பார்வையை அலைய விட்டுக் கொண்டிருந்தாள். இடையே காற்று வீச கண் மூடி அதை ரசித்தவளிடம் சிறு சிலிர்ப்பு.
"சில்லுன்னு இருக்கு இல்ல ..." என்று வருணை பார்த்தவள், " ஏன் இன்னும் சாப்டாம இருக்க? " என்றாள் அவன் கையில் உருகிக் கொண்டிருந்த Ice cream ஐ பார்த்து.
அதுவரை தன்னை மறந்து அவள் முக பாவனைகளை ரசித்துக் கொண்டிருந்தவன், அவள் அழைப்பில் நிகழ்வுக்கு வந்து தானும் சாப்பிடத் தொடங்கினான்.
ஹாஸ்டல் வாசலில் அவளை இறக்கி விட்ட போதும் அவள் இதழில் அந்த புன்னகை ஒட்டி இருந்தது. அவள் மகிழ்ச்சி அவனுக்கும் மன நிறைவு தர அவளிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.
குளித்து உடைமாற்றிக் கொண்டு கட்டிலில் வந்தமர்ந்த போதும் அந்த மனநிலை மாறாமல் இருந்தது. வருடக் கணக்காய் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது துடைத் தெறியப் பட்டு அந்த வெறுமை பழகிப் போனதில் இந்த உணர்வு புதிதாய் இருந்தது. கடந்த மூன்று தினங்களின் நிகழ்வுகள், அவள் வெறுமைக்கு முற்றுப் புள்ளி உண்டு எனவும் வாழ்க்கை அவளுக்காகவும் சந்தோஷங்களை மீதப் படுத்தி வைத்திருப்பதாயும் உணர வைத்தது.
விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டாள். உறக்கம் இல்லை. Hand free ஐ காதில் மாட்டிவிட்டு play list ஐ ஓட விட்டாள். சில பாடல்கள் கேட்டவுடன் பிடிக்கும். இன்னும் சில இரண்டு மூன்று முறை காதில் விழுந்ததும் மனதில் ஒட்டிக் கொள்ளும். இப்படி ஐம்பதுக்கு மேல் பாடல்கள், அவள் பிறக்கவும் முன்னர் வெளிவந்ததிலிருந்து புதிதாய் எல்லோரும் முணுமுணுக்கும் பாடல்கள் வரை அவள் Play list இல் அடக்கம். ஒரு காலத்தில் மனக் காயத்துக்கு மருந்தாய் இருந்த பாடல்கள், இப்போது அவள் மனநிலைக்கு துணையாய் இருந்தன. கண்களை மூடி அந்த வரிகளில் கரையத் தொடங்கினாள்.
இதயத்தை ஏதோ ஒன்று,
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே
கடலலை போலே வந்து,
கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே
இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே
இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro