4.
அலாரம் அடித்ததில் விழிப்புக் கண்டவள் அதனை அணைத்து விட்டு எழுந்து உட்கார்ந்தாள். இன்னும் கொஞ்சம் உறங்க வேண்டும் போலிருந்தது. இன்னும் பத்து நிமிடம் தூங்கலாம் Timer On செய்ய மீண்டும் போனை கையில் எடுக்க அன்றைய தேதி கண்ணில் பட்டது. காவ்யாவின் பிறந்தநாள். அன்று அந்த கோர விபத்து மட்டும் நடக்காமல் இருந்து இருந்தால், அம்மா, அப்பா, காவ்யா எல்லோரையும் இழந்து விட்டு இப்படி அனாதையாய் இருந்திருக்க வேண்டாம். போனவர்கள் இவளையும் கூடவே கூட்டிக் கொண்டு போயிருக்கலாம். இவளை மட்டும் தனியே விட்டு விட்டு எல்லோரும் நிம்மதியாய் கண்மூடி விட்டார்கள்.
எப்போதும் உள்ளே இருந்து அரிக்கும் தனிமையும் வெறுமையும் இன்றவளை முழுதாய் ஆட்கொண்டதை போலிருந்தது. அழத் தோன்றவில்லை. இப்போதெல்லாம் அவள் அழுவதே இல்லை. கடைசியாய் அழுது சில வருடங்கள் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருந்தது. அரை மணி நேரம் அப்படியே இருந்திருப்பாள். பின்னர் எழுந்து குளித்து விட்டு இயந்திரத்தனமாய் தயாராகி அலுவலகம் கிளம்பினாள்.
வருண் அவளுக்கு முன்னரே வந்திருந்தான். இவள் அறையினுள் நுழைந்ததும் அவன் Good morning சொல்ல, அவன் முகத்தை பார்க்காமலே பதில் சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள்.
வருணுக்கு அவள் மாற்றம் தெரியவில்லை. வேலையாய் இருந்தவன் சிறிது நேரத்தில் அவளை அழைத்தான்.
"திவி ... திவி ... " அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே எழுந்து அவளருகில் போனான். திவி ... இப்போதும் அவன் அழைப்பு அவள் கருத்தில் எட்டவே இல்லை. கையில் இறுக்கமாய் பற்றியிருந்த பேனா, அதிலே அவள் பார்வை நிலைத்திருந்தது. அவள் அமைதி இவனை பயமுறுத்த "திவி ..." அவள் தோளை பற்றி உலுக்கினான்.
"ஆ... " அப்போது தான் சுய நினைவுக்கு வந்தது போல எழுந்து நின்றாள். பேயரைந்தாற் போல முகம்.
என்னாச்சு டி? Are you okay?
"ம்ம் ... " மூச்சு வாங்கினாள்.
எவ்ளோ நேரமா கூப்டறேன். ஏன் இப்டி இருக்க?
ம்... Sorry ... நா கவனிக்கல.
எதாவது Problem ஆ?
இல்ல ...எ ... எதுக்கு கூப்ட?
அவளிடம் நேற்று கொடுத்த பைலை கேட்கத்தான் அவன் அழைத்தது. ஆனால் அவள் இருந்த நிலையில் எதையும் கேட்காமல், "Water bottle இருக்கா? " என்றான்.
ம்ம் என்றவள் Hand bag இலிருந்த பாட்டிலை எடுத்து நீட்டினாள். கைகள் லேசாக நடுங்கியது. அதை திறந்து அவளிடமே கொடுத்தவன் குடி என்றான். புரியாமல் அவனை பார்த்து,
ம்ம்? என்றவளிடம் " உக்காரு, இத மொதல்ல குடி " என்று அவளை பிடித்து அமர்த்தி தண்ணீரை நீட்டினான்.
தண்ணீர் குடித்து விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். பயமா, குழப்பமா, கவலையா? அவள் முகத்தில் இருந்த உணர்ச்சிகளை அவனால் ஊகிக்க முடியவில்லை.
என்னாச்சு?
ஒஒ ... ஒன்னும் இல்ல.
ஒடம்பு சரியில்லையா? ஹாஸ்டல் போறியா?
இல்ல. வேணாம். நா ... நல்லா தான் இருக்கேன்.
எதையும் சொல்ல மாட்டேன் என்று பிடிவிதமாய் மறுப்பவளிடம் என்ன கேட்பது?
" சரி, போய் Face wash பண்ணிட்டு வா "
அவன் சொன்னதற்கு தலை ஆட்டி விட்டு எழுந்து போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள்.
அதற்குப் பிறகு வருண் எதுவும் கேட்கவில்லை. அவளும் வேலையில் கவனம் செலுத்த முயன்றாள். நேரம் அப்படியே கடந்தது. எப்போதும் போல அவளுக்கும் சேர்த்து உணவை வரவழைத்தவன்,
"திவி ... வா சாப்டலாம் " என்றான்.
முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வந்து அமர்ந்தவள் சாப்பிட்டு விட்டு போனாள்.
மாலை இருவருமாய் அலுவலகத்திலிருந்து கிளம்பினார்கள். பாதையை வெரித்த படி வந்தவள், வருண் காரை நிறுத்தியதும் அவனை பார்த்து விழித்தாள். அது அவள் ஹாஸ்டல் இல்லை.
அவளிடம் எதுவும் பேசாமல் இறங்கி அவன் பக்கமாய் வந்தவன் கதவை திறந்து அவள் கையை பிடித்து "வா " என்றான். எதுவும் புரியாமல் இறங்கிக் கொண்டவள் மறுக்காமல் அவனுடன் நடந்தாள். கடற் கரை. லேசாக இருள் பரவத் தொடங்கியிருந்த நேரம் இதமான குளிர் காற்று வீசியது.
அவள் கையை பற்றிய படியே கொஞ்ச தூரம் நடந்தவன், ஓரிடத்தில் அவளை அமரச் சொல்லி விட்டு தானும் அமர்ந்தான். அவள் கை அவன் பிடிக்குள் தான் இருந்தது.
"ஏன் Upset ஆ இருக்க திவி? " அவள் முகத்தை பார்த்த படி கேட்டான்.
இன்னைக்கி காவ்யாவோட Birthday ..
அவனிடம் இருந்து பார்வையை விலக்கி கடலை பார்த்தாள்.
எல்லாருமே என்ன விட்டுட்டு போய்ட்டாங்க வருண்... அந்த Accident ல நானும் செத்து போயிருக்கலாம். என்ன மட்டும் அனாதையா விட்டுட்டு எல்லாரும் போய்ட்டாங்க.
புரியுது திவி... நானும் அம்மாவ இழந்தவன் தான், எனக்கு உன் கஷ்டம் எனக்கு புரியுது. ஆனா அந்த Incident நடந்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. எவ்ளோ நாளக்கி தான் இப்டியே இருப்ப?
"என்னால முடியலயே ..." சொல்லும் போதே குரல் நடுங்கியது.
"என்னால எதுலயுமே Connect ஆக முடியல. யார்டயும் Close ஆ பழகவும் முடியல. எதுலயுமே சந்தோஷ பட முடியல. " சொல்லி விட்டு பற்களால் கீழுதட்டை அழுத்திக் கடித்து அழுகையை நிறுத்த முயன்றாள். ஆனால் அதில் தோற்றுப் போனவள் உடைந்து அழுதாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro