Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3.


பழைய கதைகளை பேசிவிட்டு, மறக்காமல் அன்று அவள் செய்ய வேண்டிய வேலைகளையும் சொன்னான் வருண். அதை உள்வாங்கிக் கொண்டு தன் இருக்கைக்கு வந்தவள் வேலையில் கவனம் செலுத்தினாள்.  

ஒரு கட்டத்திற்கு மேல் களைப்பாக இருப்பது போல் தோன்ற தன் ஹான்ட் பாகிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தபடி வருண் பக்கம் பார்வையை திருப்பினாள். அவன் Laptop இல் கவனமாய் இருப்பதாய் தோன்றியது.  க்ளீன் ஷேவ், School யூனிபோம் ... பழைய வருணின் உருவம் மனதில் வந்தது.  படிப்பில் அவன் சுமார் ரகம்.  ஆனால் சேட்டையில் அவனுக்கு எப்போதும் முதலிடம். எப்போதும் துறு துறு வென்று திரியும், எல்லோரையும் வம்பிழுத்து எப்போதும் ஏதாவது சொல்லி சிரிக்க வைக்கும் வருணை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதுவும் அவர்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே அவன் அம்மா தவறி விட்டதால் அவளுக்கு அவன் மேல் ஒரு அக்கறை. இப்போது அவள் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறானே! இடையில் கொஞ்சம் வளர்ந்து விட்டானோ? 

திவ்யா பயங்கர யோசனையில் இருக்க வருண் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். அவனையே பார்த்த படி சிந்தனையாய் இருந்தவளுக்கு அவன் நிமிரவும் சங்கடமாய் போக, தண்ணீர் பாட்டிலை மூடி மேசையில் வைத்து விட்டு பைலை பார்ப்பது போல சமாளித்தாள். 

வருண் எதுவும் கேட்கவில்லை, சிறு புன்னகையுடன் மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான். 

Lunch break இல் திவ்யாவுக்கும் சேர்த்தே உணவை வரவழைத்தான் வருண். 

"அது ... வருண் ... நா ..." என்று திவ்யா இழுக்க,

"நீ எனக்கும் சேத்து Food எடுத்துட்டு வர்ரப்போ நா எப்பவாவது வேணாம்னு சொல்லி இருக்கேனா? " வருணின் கேள்வியில் அமைதியானாள் திவ்யா.

பொதுவாக சில கதைகள் பேசிய படி சாப்பிட்டு முடித்தார்கள். வருண் தான் அதிகம் பேசினான். அவள் பெரும்பாலும் ஒற்றை வார்த்தை பதிலாகவே கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது வருணின் போனுக்கு அழைப்பு வரவே அதை எடுத்துப் பேசினான்.

அடுத்த பக்கத்தில் என்னவோ சொல்ல "சரி நீ அவகிட்ட போன கொடு " என்றான்.

பின்னர், அவன் குரலில் மாற்றம்.

அச்சோ ... Sorry டா, என் செல்லத்த பாக்க நா இன்னக்கி கண்டிப்பா வரேன். என் அம்முக்கு என்ன வேணும் சொல்லுங்க.  வரும் போது வாங்கிட்டு வரேன். 

நிறையவே கொஞ்சி, கெஞ்சிவிட்டு போனை வைத்தவன் "சரியான வாண்டு " என்றான் திவ்யாவை பார்த்த படி. 

ஆரம்பத்தில் அவன் குழைவதை வித்தியாசமாய் பார்த்தவளுக்கு சிறிது நேரத்திலேயே புரிந்தது யாரோ குழந்தையிடம் பேசுகிறான் என்று. 

"யாரு? " என்றாள் திவ்யாவும் சிறு புன்னகையுடன்.

மினி,  ரோஹினியோட (வருணின் அக்கா) பொண்ணு . ரெண்டு நாளா அவள பாக்க வரலைனு ஒரே அழுகயாம். 

போனில் இருந்த மினியின் போட்டோவை எடுத்துக் காட்டினான். அழகான குழந்தை. மினியை பற்றி கொஞ்ச நேரம் பேசியவர்கள் திரும்பவும் தத்தமது இருக்கையில் போய் அமர்ந்தார்கள்.

அன்று வேலை நேரம் முடிந்ததும் திவ்யாவை தன் காரிலேயே ட்ராப் செய்தான் வருண். அவளை விட்டு விட்டு Super market போய் மினிக்கு சாக்லேட்ஸ் வாங்கிக் கொண்டு ரோஹினியின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான். அங்கே போய் மினியை சமாதானம் செய்து அவளுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.

ப்ரெஷ் ஆகி விட்டு வந்து அப்படியே கட்டிலில் விழுந்தான் .

எந்த திவ்யா ...? ஓஹ் அந்த திமிரு புடிச்ச பொண்ணு ...

ரோஹினியின் குரல்.  சாப்பிடும் போது திவ்யாவை பற்றி சொன்னதும் அவள் இதை தான் சொன்னாள்.  அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால் அதன்பின் வருண் அவளை பற்றி எதுவும் பேசவும் இல்லை. 

"திமிரு புடிச்சவ ..." 

தனக்குள் சொல்லிக் கொண்டான் வருண். 

School uniform, இரட்டை ஜடை ... கண் முன்னே வந்து நின்றாள் திவ்யா. அவனை பார்த்ததும் அவள் முகம் மலரும்.  Good morning வருண். அழகாய் புன்னகைப்பாள். 

அவள் இயல்பாகவே அதிகம் பேசாத ரகம். அவனுக்கு தெரிந்து school சேர்ந்ததிலிருந்து அவள் அங்கிருந்து விலகும் வரை நடந்த எல்லா Exam இலும் அவள் தான் first. அவளுக்கு நெருங்கிய தோழி மது மட்டும் தான்.  மது தவிர்த்து அவள் வேறு யாருடனும் அதிகமாய் பேசுவது கிடையாது.  ஆனால் வருணிடம் கொஞ்சம் நெருக்கம் காட்டினாள். அதிகப் படியான நாட்களில் அவன் வகுப்பறைக்குள் நுழையும் போதே அவனை வரவேற்பது திவ்யாவின் மலர்ந்த முகம் தான். 

சில நேரங்களில் எல்லோரையும் வம்பிழுப்பது போல அவளுக்கும் ஏதாவது செய்வான். அவளும் விளையாட்டாய் பதில் சொல்லி சிரிப்பாள்.  சில நாட்களில் வீட்டில் எதாவது ஸ்பெஷலாய் சமைத்தால் வருணுக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டு வருவாள்.  வருணுக்கு மட்டுமே அந்த விசேட கவனிப்பு. அப்போது புரியவில்லை ஆனால் இப்போது நினைத்துப் பார்க்க அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது. தாயில்லா பிள்ளை என்பதாலோ என்னவோ அவளுக்கு அவன் மேல் தனிப்பிரியம்.  அதை அக்கறை என்று கூட சொல்லலாம். 

ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரிடமும் அவள் திமிர் பிடித்தவள் என்ற பெயர் தான் எடுத்து வைத்திருந்தாள்.  படிப்பில் அவள் காட்டிய திறமை, அதிகம் பேசாத அவள் குணம் அவர்களை அப்படி நினைக்க வைத்திருக்கலாம்.  ஆனால் வருணுக்கு அப்படி தோன்றியதே இல்லை. "Good morning வருண் " புன்னகை பூத்த அவள் முகம் அதில் திமிர் இருப்பதாய் அவனுக்குத் தோன்றவில்லை.


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro