19.
ரோஹினியின் உதவியுடன் நடந்து வந்து சோபாவிலே அமர்ந்தான் வருண்.காலில் வலி குறைந்திருந்தாலும் நடக்கும் போது வலிக்கவே செய்தது. அமர்ந்ததுமே இவர்களுடன் உள்ளே வந்த ராமிடம் " மாமா என் போன் கார்ல இருக்கும். கொஞ்சம் எடுத்து தர்ரீங்களா? " என்றான். மூன்று நாட்களாக வருணின் கையில் போன் கிடைக்காதவாறு பார்த்துக் கொண்டாள் ரோஹினி. அவளுக்கு சுத்தமாய் பிடிக்காத திவ்யாவிடமிருந்து வருணை பிரித்து வைக்க ஏதோ அவளால் முடிந்ததை செய்துவிட்டாள். சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருந்த போனை முன்னே இருந்த coffee table இல் வைத்து விட்டு கண்மூடி சாய்ந்து அமர்ந்தான் வருண்.
போனை கொண்டு வந்து கொடுத்த கணவனை மனதினுள் கரைத்துக் கொட்டிய படி அவன் எதிரில் அமர்ந்தாள் ரோஹினி. தனியாக நடக்கவே சிரமப் படுகிறான். இதில் மருத்துவமனையில் தங்க மறுத்து தன் வீட்டுக்கும் வர மறுத்து இப்படி வீட்டில் வந்து நிற்கிறான். என்ன குறை இவனுக்கு? பார்க்க ஹீரோ போல இருக்கிறான். பணம், அந்தஸ்து எதிலும் குறை இல்லை. அவன் பழகும் எல்லோரிடமும் நல்ல பெயரும் மரியாதையும் சம்பாதித்து வைத்திருக்கிறான். He is an eligible bachelor. தன் தம்பியை நினைத்து அத்தனை பெருமை ரோஹினிக்கு. அப்படிப் பட்ட வருண் திவி, திவி என்று அவள் பின்னால் அலைய வேண்டுமா? என்ன தகுதி இருக்கிறது அவளுக்கு? குடும்பம் என்ற ஒன்றே இல்லை. ஒரு மனிதரிடம் வாயை திறந்து பேசக் கூட தெரியாது. ஆபிஸில் விசாரித்த வரை அவள் வேலையிலும் சுமார் ரகம். அப்படி இருக்க இவன் ஏன் திவ்யாவை இவ்வளவு தாங்குகிறான்? வருண் தினமும் திவ்யாவுக்கு Driver வேலை பார்ப்பது அவள் விசாரித்ததில் கிடைத்த மேலதிகத் தகவல். தினமும் இரவு சாப்பிட வருபவன் இப்போது வருவதில்லை. காரணம் என்னவென்று யோசிக்க அவ்வளவு திறமையெல்லாம் தேவையில்லை. ஆக்ஸிடன்ட் நடந்த போதும் திவ்யா தான் அவனுடன் இருந்திருக்கிறாள்.
வருணை பார்த்தவாறே ஆழ்ந்த யோசனையில் இருந்தவளை ராமின் தொடுகை நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
"ரூம்க்கு கூட்டிட்டு போய் படுக்க வை. "
ம்ம் என்றவள் வருணை கைத்தாங்கலாய் அவன் அறைக்கு அழைத்துப் போய் படுக்க வைத்தாள்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல சிவகாமி அக்காவோட பையன் வந்துருவான். அதுவரைக்கும் Bed லயே இரு. தனியா நடக்க Try பண்ணி எங்கயும் விழுந்து திரும்ப கைய கால ஒடச்சிக்காத. Dinner சமச்சி அனுப்பி விட்றேன்."
சரி என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவனிடம் வேறு எதுவும் பேசாமல் வெளியே வந்தவள் கணவனுடன் வீட்டுக்கு கிளம்பினாள். ஒரே தம்பி, இப்படி அடிபட்டுக் கிடக்கும் போது அவள் கூடவே இருந்து பார்த்துக் கொள்ள நினைத்தாள். ஆனால் வருண் அவள் வீட்டுக்கு வர முடியாது என்று சொல்லி விட்டான். அவள் உதவி தேவை இல்லை என மறுப்பவனை இங்கேயே தங்கி பார்த்துக் கொள்ளவும் அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் அப்படியே விட மனம் இல்லாமல் தான் அவனை கூட இருந்து பார்த்துக் கொள்ள ஆள் ஏற்பாடு செய்திருந்தாள். அகில், சிவா இருவரும் வருணுடன் தங்கிக் கொள்வதாய் சொல்லிவிட்டார்கள். ஆகவே ஆபிஸ் நேரம் தவிர அவர்களும் இருப்பார்கள் என்பதால் ரோஹினியின் தேவை இருக்காது. எது எப்படியோ வருண் வீட்டுக்கு வராததுக்கும் திவ்யாவே காரணம் என அடித்துச் சொன்னது அவள் மனம். திவ்யாவுக்காக தன்னையே தூரமாய் தள்ளி வைக்கிறான் என்ற எண்ணம் திவ்யாவின் மேல் இன்னும் வெறுப்பை அதிகப் படுத்தியது.
ரோஹினி கிளம்பிப் போகும் வரை கட்டிலில் சாய்ந்திருந்தவன், அவள் சென்று விட்டதும் மெல்ல எழுந்து போனை சார்ஜில் போட்டு விட்டு மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தான். அம்மா இறந்த பின் அம்மாவின் ஸ்தானத்தில் இருந்து அன்பும் அக்கறையும் காட்டியவள் தான் ரோஹினி. ஆனால் திவ்யாவை அவளுக்கு ஏனோ பிடிக்கவேயில்லை. வருண் பலமுறை கேட்டும் அவன் மொபைல் போன் அவன் கையில் கிடைக்கவில்லை. அகில், திவ்யாவை பற்றி பேச்செடுத்ததுமே அவனை அதற்கு மேல் பேச விடாமல் அனுப்பி விட்டாள், ஹாஸ்பிட்டலில் இருந்த வரை ராம், ரோஹினி இருவருமே மாறி மாறி உடன் இருந்தார்கள். ராகேஷ், அகில், சிவா என்று யாரும் அவனுடன் தனியே பேச விடாமல் ரோஹினி அங்கேயே இருந்தாள். இது எல்லாமே வருண் திவ்யாவுடன் பேசவோ அவளை சந்திக்கவோ கூடாது என்ற நோக்கத்தில் செய்தது தான் என்பது வருணுக்கும் தெரியும்.
ஆனால் அன்றைய நிகழ்வு! திவ்யாவிடம் சொல்லவும் கேட்கவும் அவனுக்கு என்னென்னவோ இருந்தது. அவளைப் பார்த்தே தீர வேண்டும் போல இருந்தது. இதற்கு மேலும் ஹாஸ்பிட்டலில் தாக்குப் பிடிக்க முடியாது என்று தான் வலுக்கட்டாயமாய் Discharge செய்து வீட்டிற்கு வந்திருக்கிறான்.வீட்டில் தனியே தன்னால் சமாளிக்க முடியுமா என்று யோசிக்கும் நிலையில் கூட அவன் இல்லை.
ரோஹினி இருப்பதனால் தான் திவி தன்னை பார்க்க வரவில்லையா? இல்லாவிடின் அன்றைய நிகழ்வினால் என்னைப் பார்க்கத் தயங்குகிறாளா? அந்த விபத்து மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் அன்றைய நாள் எத்தனை அழகாய் இருந்திருக்கும்? என எண்ணிய போதே உள்ளம் படபடத்தது. அதற்கு மேல் பொறுமை இன்றி மீண்டும் எழுந்து போய் போனை உயிர்ப்பித்தான். சில நிமிடங்கள் மட்டுமே சார்ஜ் ஏறி இருந்ததால் அதை கழற்றாமலே திவ்யாவுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.
"வருண்!"
அவள் குரல் கேட்டதிலே உள்ளம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.
"திவி ..."
வருண் எப்படி இருக்க? இன்னும் ரொம்ப Pain ஆ இருக்கா?
அதெல்லாம் இல்ல திவி, Discharge ஆகி வீட்டுக்கு வந்துட்டேன்.
அதைக் கேட்டதும் " நான் வீட்டுக்கு ..." என்று ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்தி, " வீட்ல யாரும் இருக்காங்களா உன் கூட? " என்றாள் தயங்கியபடி.
"Help க்கு ஒரு பையன் வருவான், அவன் இன்னும் வரல. அகிலும் சிவாவும் night தங்க வருவாங்க " என்றதுடன் " ரோஹினி அவ வீட்டுக்கு போய்ட்டா என்பதையும் சேர்த்து சொன்னான்.
"ஆஹ் Ok "
மீண்டும் வருண் பேச வாயெடுப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப் பட்டது. அதை உணர்ந்தவன் மீண்டும் அழைப்பதற்குள் வாசலில் " அண்ணா" என்ற குரல் கேட்டது. "உள்ள வா கணேஷ் " என்றதும் அறையை நோக்கி வந்தவன் நின்று கொண்டிருந்த வருணைப் பார்த்து " அய்யோ என்னண்ணா நின்னுட்டு இருக்கீங்க? உங்கள கட்டில விட்டே இறங்க விடக் கூடாதுன்னு ரோஹினி அக்கா சொல்லி இருக்காங்க " என்று வந்ததும் வராததுமாய் பதறினான்.
"ஒரு Important call, பேசிக்கிறேன்." என்று சொல்லி முடிப்பதற்குள் போனை பிடுங்கி மேசையில் வைத்தவன் "அதெல்லாம் சார்ஜ் ஆனதுக்கு அப்பறமா பேசுங்க இப்ப கட்டில்ல போய் உக்காருங்க" என்று வருணின் கையைப் பிடித்தான். நெலம தெரியாம இவன் வேற என்று முணுமுணுத்தபடி கட்டிலில் அமர்ந்தான் வருண்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro