Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

13.


வருண், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

ம்ம் சொல்லு திவி. 

இல்ல நேர்ல பேசணும். ஆபிஸ் போறப்போ  என்னையும் Pick up பண்ணிக்கிறியா ? போற வழில பேசிக்கலாம்.  

அவளிடம் சரியென சொல்லிவிட்டு போனை வைத்தவனுக்கு அவள் பதற்றமாய் இருப்பதாய் தோன்றியது. வழக்கத்தை விட வேகமாகவே கிளம்பி அவள் ஹாஸ்டலை அடைந்தான்.

பேசாமல் வந்து காரில் ஏறிக் கொண்டவள், அமைதியாகவே இருந்தாள்.  அவளாக பேசத் தொடங்குவாள் என்று எதிர்பார்த்தவன், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து,

"ஹேய் பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருக்க? என்னாச்சு?" என்றதும்,

"ப்ச்... " என்று முகத்தை சுருக்கியவள், "நேத்து Night மாமா Call பண்ணாரு"  என்றாள்.

சரி .. 

"Thursday பொண்ணு பாக்க வர கேக்குறாங்க. ஒனக்கு Okவானு கேட்டாரு."

இந்த Thursday வா?

ம்ம், நாளன்னைக்கி.

அப்ப நீ நாளைக்கே கெளம்பனும் ல?

கேள்வி கேட்டு சில நிமிடங்கள் பதில் இல்லாது போகவே அவள் முகத்தை பார்த்தான். நெற்றியை சுருக்கி உதட்டை பிதுக்கி உர்ரென்று அமர்ந்திருந்தாள் திவ்யா. 

ஹேய் இப்ப எதுக்கு Tension ஆகற? 

எனக்கு Nervous ஆ இருக்கு வருண். இப்ப கொஞ்ச நாளா தான் Life கொஞ்சம் நல்லா இருக்கு. இப்ப இதெல்லாம் தேவையா? சும்மா ஏன் Complicate பண்ணிக்கணும்?

தேவ தான் திவி. சும்மா தப்பா நடந்துடுமோனு பயந்துட்டு ஒன்னும் பண்ணாம இருக்க முடியாது. Lifeல கண்டிப்பா ஒரு Stage ல இருந்து இன்னொரு Stage போகணும்னா தைரியமா இந்த மாரி Decisions எடுத்து தான் ஆகணும். 

என்னதான் Advice மழையாய் பொழிந்து அடுத்த நாள் அவளை ரயிலேற்றி விட்டாலும், ஆபிஸ் வந்து அவள் இல்லாத அறைக்குள் நுழைய என்னவோ போலிருந்தது. அவள் தெளியாத முகமே மனதில் வந்து போய்க் கொண்டிருக்க, சிந்தனையாய் அமர்ந்திருந்தவனை திவ்யாவே அழைத்தாள். 

Hello 

Hello வருண் ...

தைரியமா இரு திவி. எதையும் யோசிச்சி குழம்பிக்காத. எல்லாம் நல்லா நடக்கும். நாளைக்கி அந்த பையன் ... உம் பேர் என்ன சொன்ன?

அன்பு 

ம்ம், அன்பு கூட பேச Chance கெடச்சா மனசு விட்டு பேசு. ஒனக்கு உண்மையா பிடிச்சா மட்டும் Ok சொல்லு. இல்லைனா பிடிக்கலனு சொல்லிடு.  சரியா? 

தெளியாத குரலில் " சரி " என்றாள். 

அடுத்து என்ன சொல்வது என்று வருண் யோசிப்பதற்குள் "நீ வேலைய பாரு வருண். Bye.  " என்றாள்.

ம்ம் ... Reach ஆனதும் மறக்காம Call பண்ணு. Travelling time ல பேசணும்னு தோணுனாலும் Call பண்ணு. தனியா Overthink பண்ணி Confuse ஆகாத. Take care.

போனை வைத்து விட்டு வெறுமையாய் இருந்த அவள் இருக்கையை பார்த்து விட்டு வேலையில் கவனம் செலுத்தினான்.

அலுவலகத்திலிருந்து கிளம்பும் போதே சிவாவுக்கு போன் செய்தவன், " டேய் அவன் கிட்ட பேசிட்டியா? " என்றதும், "Call பண்ணா வர முடியாதுன்னு எரிஞ்சி விழறான் டா, அகிலுக்கு வேற நல்ல நல்ல தமிழ் வார்த்தையா சொல்லி திட்டி வெச்சிருக்கான். " என்றான் சிவா.

சரி நீங்க ரெண்டு பேரும் Spotக்கு வந்துடுங்க. நா அவன கூட்டிட்டு வரேன். ஆபிஸ்ல இருந்து கெளம்பி இருப்பான்ல?

சார் ரெண்டு நாளா ஆபிஸே போகலயாம். வீட்ல தான் இருக்கான்.

சரி.  நா போய்  பேசுறேன்.

ராகேஷ் வீட்டினுள் நுழையும் போதே " வருண்,  வாப்பா " என்று வரவேற்றார் அவன் அன்னை ராஜேஸ்வரி. 

ராகேஷ் எங்கம்மா?

ரூம்ல தான்  இருக்கான், அவனுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. நேத்துல இருந்து வேலைக்கும் போகாம ரூம்க்குள்ளயே அடஞ்சிட்டு இருக்கான். பொறந்த நாள் அதுவுமா ஏன்டா இப்படி இருக்கேன்னு கேட்ட அப்பாவையே திட்டி வெளிய அனுப்பிட்டான்பா. 

வேதனையாய் ராஜேஸ்வரி சொல்லவும், சரிம்மா நா போய் பாக்கறேன். எதாவது Work stress ஆ இருக்கும். நீங்க Worry பண்ணிக்காதிங்க. என்று விட்டு ராகேஷ் அறைக்குள் நுழைய அங்கே கட்டிலில் குப்புறப் படுத்திருந்தான் ராகேஷ்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் " அம்மா என்ன Disturb பண்ணாதன்னு சொன்னேன்ல .. ச்ச இந்த வீட்ல மனுஷனுக்கு நிம்மதியே இல்ல " என்று தலையை மட்டும் உயர்த்தி புலம்பியவனை, கையில் கிடைத்த தலையணையை எடுத்து நான்கு சாத்து சாத்தினான் வருண்.

திடீர் தாக்குதலில் தடுமாறியவன் ஒருவாறு சுதாகரித்து எழுந்து அமர்ந்து வருணை முறைக்க,

டேய் எரும, ரெண்டு நாளா என்னடா பண்ணிட்டு இருக்க?

வருண் நீ இப்ப எதுக்கு வந்த? நா எங்கயும் வர மாட்டேன்னு அவனுங்க ரெண்டு பேருக்கும் சொன்னா புரியாதாமா? உன்ன எதுக்கு அனுப்பி வெச்சிருக்காங்க. பொறந்த நாள் ஒன்னு தான் இப்ப கொறச்சல். 

டேய் இப்ப எதுக்கு தேவதாஸ் ஆக Try பண்ற?

யாரு தேவதாஸ்? அதெல்லாம் ஒன்னும் இல்ல. 

ஆமா, இவர் சொல்லலனா எங்களுக்கு தெரியாது. ரெண்டு நாளா நீ பண்ணி வெச்சிருக்க கூத்துல அம்மா எவ்ளோ Upset ஆ இருக்காங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சியா?

அமைதியாய் இருந்தான் ராகேஷ். அவன் வீட்டுக்கு ஒரே பிள்ளை. எக்கச்சக்கமாய் செல்லம். அவனுக்கும் அம்மா, அப்பா, தாத்தா என்றால் உயிர். குறும்புத் தனமும் விளையாட்டுப் புத்தியும் அவனுக்கு இயல்பிலே இருந்தாலும் வீட்டில் உள்ளவர் பேச்சுக்கு மறுப்பாய் எதுவும் செய்ய மாட்டான். அப்படிப் பட்டவன் தான் இரண்டு நாளாய் அறைக்குள்ளே அடைந்து கொண்டு தன்னிடம் பேச வருபவர்களை முறைத்தும் திட்டியும் அனுப்பிக் கொண்டிருக்கிறான். (எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு)

Fresh ஆகிட்டு வா, அகிலும் சிவாவும் Wait பண்ணிட்டு இருப்பாங்க.  

இல்ல வருண் நா எங்கயும் ...

டேய் இப்ப நீயா வரியா, இல்ல அவனுங்களையும் வர சொல்லி உன்ன தூக்கிட்டு போகட்டுமா?

வந்து தொலைக்கிறேன்.

வருணை முறைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தான் ராகேஷ். அவன் தயாராகி வருவதற்குள் வருண் வெளியே வந்து ராஜேஸ்வரியுடன் பேசிக் கொண்டிருக்க, கிளம்பி வெளியே வந்தவன், அம்மாவை கண்டதும்,

"Sorry மா, கொஞ்சம் Disturbed ஆ இருந்தேன்.  அதான் கோவமா பேசிட்டேன்." என்று அவர் முன் தலை குனிந்தான். வாஞ்சையாய் அவன் தலையை வருடியவர் "போய்ட்டு வா " என்றார்.

இருவருமாய் அந்த Restaurant ஐ அடைய, வெளியே காத்துக் கொண்டிருந்த சிவா இவர்களை கண்டதும் கையசைத்தான். அவன் அருகில் வந்ததும்,

"அகில் வரல? " என்று ராகேஷ் கேட்க 

"உள்ள இருக்கான், வாங்க போலாம் " என்க மூவருமாய் உள்ளே நுழைந்தார்கள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro