12.
ஹேய் லூசு, டைம் ஆச்சு. என்ன பண்ணிட்டு இருக்க? வா போலாம்.
இப்போது கிளம்புவாள் என பதினைந்து நிமிடங்களாய் காத்திருந்தவன் பொறுமை இழந்து கேட்டான்.
"ம்ம்... அது ... நீ கெளம்பு வருண். நா வர Late ஆகும் ... இந்த மைல் அனுப்பிட்டு ... நா பஸ்ல போய்க்கிறேன்.
நீட்டி முழக்கி ஒரு வழியாய் சொல்ல வந்ததை சொல்லி விட்டு தயங்கிய படி வருணை பார்க்க அவள் எதிர்பார்த்தது போலவே முறைத்துக் கொண்டிருந்தான் அவன்.
கணனித் திரையை ஒரு முறை பார்த்தவன் " பஸ்ல போறதுக்கு இத விட Better excuse கெடைக்கவே இல்லையா? அடச்சீ கெளம்பு "
கொஞ்சம் நிதானமாய் யோசித்து வேறு எதாவது காரணம் சொல்லியிருக்கலாம். தன்னையே நொந்தபடி அவனுடன் கிளம்பினாள் திவ்யா.
எதுக்கு இப்டியெல்லாம் மடத்தனமா Try பண்ற? ரோஹினி சொன்னதெல்லாம் யோசிச்சி கொழப்பிக்காதன்னு சொன்னேன்ல!
"அது இல்ல வருண் ... அவங்க சொல்றதும் ..." பேச்சை தொடங்கி வருணின் முறைப்பில் வாயை மூடிக் கொண்டு கார் கண்ணாடி வழியே வெளியே ஏறிட்டாள்.
கார் வழக்கமான பாதையில் இல்லாமல் வேறு எங்கோ திரும்ப, கேள்வியாய் வருணை பார்க்க அவன் இவளை கண்டு கொள்ளாமல் தன் பாட்டில் வண்டியை செலுத்த " ஓவரா தான் பண்ற, ஆனா ஊனா னா உர்ருன்னு மொறக்கிறது, இல்லாட்டி திட்டுறது, உன்னெல்லாம் முடிய பிடிச்சி இழுத்து தலைல நங்கு நங்குனு நாலு கொட்டணும்." மனதினுள் அவனை அர்ச்சித்த படி, வருணையே முறைத்துக் கொண்டிருந்தாள் திவ்யா.
"என்னடி மொறைக்கிற?" பாதையில் கவனமாய் இருந்தவன் அவள் பக்கம் திரும்பாமலே கேள்வி கேட்க, " ஆ ... நா ஒன்னும் மொறைக்கலயே " என்று திரும்பிக் கொண்டாள்.
"பாக்காமலே மொறைச்சத கண்டு பிடிச்சிட்டான், விட்டா நாம மனசுல நெனச்சதையும் கண்டு பிடிச்சுடுவான் " படபடப்பில் அவள் சத்தமாகவே உளரி வைக்க,
"மனசுல என்ன நெனச்ச? " என்றான் வருண் காரை நிறுத்தி விட்டு அவள் பக்கமாய் திரும்பி.
இதை சிறிதும் எதிர்பாராதவள் கண்களை விரித்து ஆச்சர்யமாய் அவனை பார்த்து விட்டு " நா .... நான்... ஒன்னும் நெனைக்கலயே ..." என்றாள் ஈஈஈ இன்று இளித்து.
திவி... மரியாதையா சொல்லிடு ...
சத்தியமா ஒன்னும் நெனைக்கல வருண்.
இப்ப சொல்ல போறியா இல்லையா???!!!
"அது ... முடிய புடிச்சி இழுத்து தலைல நாலு கொட்டு கொட்டணும் " விட்டால் அழுது விடுவேன் என்பது போல அவள் பாவமாய் சொல்ல,
"ஓஹ்!! மேடம்க்கு அப்டி ஒரு ஆச வேற இருக்கோ!! எங்க, கொட்டு டி, கொட்டு ..." வருண் கராராய் சொல்ல உதட்டை பிதுக்கி அழத் தொடங்கினாள் திவ்யா.
உதட்டை பிதுக்கி, நெற்றியை சுறுக்கி, கண்ணீரை துடைத்து விட்ட படி குழந்தை போல விம்மியவளை உள்ளுக்குள் ரசித்தாலும் அவளை இன்னும் அழ வைக்கத் தோன்றாமல் " ஹேய்... சும்மா வெளையாட்டுக்கு பண்ணேன். இதுக்கு போய் அழற? திவிமா அழுவாதடா! " கண்ணீரை துடைத்து விட்டு அவனே சமாதானப் படுத்தினான்.
அழு மூஞ்சி, பீச்க்கு வந்திருக்கோம் டி. எறங்கு.
அவள் முகம் இன்னும் வாட்டமாகவே இருக்க, " சரி ஒனக்கு வேணும்னா நெஜமாவே ரெண்டு கொட்டு கொட்டிக்கோ " சொல்லிவிட்டு அவன் தலை குனிய, உண்மையிலேயே அவன் தலையில் கொட்டி விட்டு காரிலிருந்து இறங்கி ஓடினாள் திவ்யா.
இதை சற்றும் எதிர்பாராதவன், " அடிப் பாவி, Convince பண்ண சொன்னா நெஜமாவே கொட்டிட்டு போறா! " வலியில் தலையை தடவி விட்ட படி இவனும் அவளை துரத்த, பிடி கொடுக்காமல் ஓடியவள் ஒரு கட்டத்தில் களைப்பாய் தரையில் அமர்ந்தாள். எதிரில் வந்து நின்று முறைத்தவனை பார்த்து திவ்யா சிரிக்க அதில் அவனும் இணைந்து கொண்டான்.
கடல் அலைகளை பார்த்த படி இருவரும் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்கள் . பின்னர் அவன் போலாமா என்றதும் அவளும் சிறு தலை அசைப்புடன் எழுந்தாள்.
"பக்கத்துல ஒரு chinese restaurant இருக்கு. சாப்புட்டு போய்டலாம். "
உணவை முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி, வழக்கம் போல் அவளை ஹாஸ்டலில் இறக்கி விட,
"Bye " என்று விட்டு நடந்தவள் இரண்டு எட்டில் மீண்டும் திரும்பி "Sorry " என்றாள் சிறு புன்னகையுடன்.
"ம்ம் " என்று தலையை தடவிக் கொண்டவன் "மன்னிச்சி தொலைக்கிறேன். " என்றதும் அவள் சிரித்து விட்டு " Good night" என்றாள். அவனும் புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான். அவளை விட்டுப் பிரிய விரும்பாத மனதை ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்காமல் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.
"ஏன் சாப்புட வீட்டுக்கு வரல?!! " என்று திட்டிய ரோஹினியை சமாதானப் படுத்தி விட்டு போனை வைக்க அஞ்சனாவிடம் இருந்து அழைப்பு வந்தது. நேற்று பிறந்த நாள் விழாவிலிருந்து சொல்லிக் கொள்ளாமலே கிளம்பியதற்கு அவள் காரணம் கேட்க என்னென்னவோ சொல்லி சமாளித்து விட்டு, கொஞ்ச நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவன் திவ்யாவுடன் பேசத் தோன்றினாலும் நேரத்தை பார்த்து விட்டு, " இப்ப தூங்கி இருப்பா, Call பண்ணி Disrurb பண்ண வேணாம் " என்று மொபைலை வைத்து விட்டு படுத்தான்.
அங்கே விடுதி அறையில் போனை பார்த்த படி சிந்தனையாய் அமர்ந்திருந்தாள் திவ்யா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro