11.
அந்த Gift shop இல் இரண்டு தளங்களிலும் அலசி திருப்தியாய் ஒரு பரிசை தேர்வு செய்து Pack செய்து கொண்டு வந்தாள் திவ்யா. மினிக்கு பிறந்த நாள் என்று சொன்னதிலிருந்தே படு உற்சாகம் அவளுக்கு. அவள் மினியை இதுவரை நேரில் பார்த்ததே இல்லை என்றாலும் Vedio call பேசியே இருவரும் பயங்கர நெருக்கமாய் இருந்தார்கள்.
ஆர்வமும் உற்சாகமுமாய் அவள் ஒவ்வொன்றாய் பார்த்து தேர்த்து செய்ததை கூட இருந்து ரசித்துக் கொண்டிருந்தவன், அவள் " போலாமா? " என்றதும் சிறு தலை அசைப்புடன் கடையில் இருந்து வெளியே வந்தான் வருண். அவள் உற்சாகமாய் இருந்தாலே அந்த உற்சாகம் அவனையும் தொற்றி விடுகிறது.
காரை கிளப்பி இருவரும் ரோஹினி வீட்டை வந்து அடைந்தார்கள். பெரிய Party எல்லாம் இல்லை. வீட்டில் உள்ளவர்கள், ரோஹினியின் கணவன் ராமின் பெற்றோர் மற்றும் தங்கை அடுத்தது பக்கத்து வீட்டில் மினியின் வயதிலே ஒரு குழந்தை இருந்ததால் அவர்களுக்கு அழைப்பு, அவ்வளவு தான்.
இருவருமாய் வீட்டினுள் நுழைய "திவீ..." என்று தன் மழலை குரலில் கத்திய படி ஓடி வந்தாள் மினி. மினியின் செய்கையில் எல்லோர் கவனமும் இவர்கள் பக்கம் திரும்ப, திவ்யாவை அப்போது அங்கே எதிர்பார்க்காவிட்டாலும் பேருக்கு வாசல் வந்து அவளை வரவேற்றாள் ரோஹினி. திவ்யாவை மினி உள்ளே கூட்டிப் போக வருணை பார்த்து முறைத்து விட்டு ரோஹினியும் உள்ளே போனாள். அதற்குப் பின் திவ்யாவை பிடிக்கவே முடியவில்லை. மினி மற்றும் அவள் Friend அக்ஷயா வுடன் அவள் மாடியில் மினியின் அறைக்குப் போனது தெரிந்தது.
குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி விட்டாள், அவன் பார்வையில் இருந்து அவள் மறைந்த பின்னும் படிக்கட்டை பார்த்துக் கொண்டிருந்தவனை திசை திருப்பியது ராமின் தங்கை அஞ்சனாவின் குரல் .
"Hi "
"Hi " அவளை பார்த்ததும் சிநேகமாய் புன்னகைத்தான்.
Sir ரொம்ப Busy போல, இன்னைக்காவது கொஞ்சம் Early ஆ வருவீங்கன்னு எதிர் பாத்தேன்.
இல்லப்பா Office ல கொஞ்சம் Work, முடிச்சிட்டு கெளம்பவே Late ஆகிடுச்சு. இடைல திவி Gift வேற வாங்கணும்னு சொன்னா அதான்.
ம்ம் ... அவங்க Gift வாங்கிட்டு வரணும்னு தேவயே இல்ல. அவங்க வந்ததே மினிக்கு பெரிய Gift தான். திவ்யாவோட Phone பேசிட்டு இருந்தா அத்த நான் வீட்டுக்கு வந்தாலே கண்டுக்க மாட்டா.
ம்ம் அவங்க ரெண்டு பேரும் அவ்ளோ Close. இந்த Month ஓட Studies முடியுதுல்ல . என்ன Plan?
அஞ்சனாவுடன் பேசிக் கொண்டு இருந்தவன், ரோஹினி கேக் கட் பண்ண வர சொல்லவும் அங்கே சென்றான். ரோஹினி தான் மினியை தூக்கி வைத்துக் கொண்டு நின்றாள். திவ்யா அவன் கண்ணில் படவில்லை. கேக் வெட்டி ஊட்டி விட்டு எல்லாம் முடிய அப்போதும் திவ்யாவை காணாதவன், ரோஹினியை கேட்க, " அவ அப்பவே கெளம்பிட்டா " என்றாள் சற்று தாழ்ந்த குரலில்.
"கெளம்பிட்டாளா? Cake கூட Cut பண்ணாம ..." வருண் முடிக்கும் முன்னரே " மெதுவா பேசு வருண் " அவனை அதட்டினாள் ரோஹினி.
அத்த, மாமா எல்லாரும் இருக்காங்க. இன்னைக்கி போய் அவள கூட்டிட்டு வந்திருக்க!!
ஏன்? அவங்க இருக்கும் போது திவி வந்தா என்ன?
ஒன்னும் புரியாத மாதிரி பேசாத. அஞ்சனாக்கு ஒன்ன கேட்டுட்டு இருக்காங்க. நீ அவளோட வர்ரத பாத்ததுமே அத்த முகமே மாறிடிச்சு. அவ யாருன்னு கேட்டாங்க, உன் friend, அவ மினிக்கு ரொம்ப Close னு சொல்லி சமாளிச்சிட்டேன். ஆனாலும் அவங்க முழுசா சரி ஆகல. அதான் அவ கிட்ட சொல்லி கெளம்ப சொல்லிட்டேன்.
எரிச்சலாய் ரோஹினியை பார்த்து விட்டு திவ்யாவுக்கு போன் செய்தான் வருண். அந்த நேரத்தில் தனியாக கிளம்பி இருக்கிறாள்.
இரண்டு Ring இல் போனை எடுத்தவள், தயக்கமாய் ஹலோ என்றாள். சொல்லாமல் வந்ததுக்கு திட்டுவானோ என்ற பயம்.
"என்ன திவி, இந்த நேரத்துல தனியா போயிருக்க?"
"இல்ல வருண் ... அது .."
அவள் கிளம்பியதற்கு முழுக் காரணம் ரோஹினி, அவளை விட்டு திவ்யாவிடம் கோபப் பட்டு என்ன செய்ய?
Hostel reach ஆகிட்டியா?
இல்ல வருண், ஆட்டோ ரிப்பேர் ஆகிடுச்சி. Cab book பண்ணி இருக்கேன். இன்னும் வரல.
பொய் சொல்லி மாட்டிக் கொண்டாள் திரும்பவும் கோபப் படுவானோ என்ற பயத்தில் உண்மையே சொன்னாள்.
இப்போ எங்க இருக்க?
அவள் இடத்தை சொல்லவும் "இரு நா Five minutes ல அங்க இருப்பேன் " என்றவன் ரோஹினியை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, வெளியேறினான்.
அவள் இருக்கும் இடத்தை அடைந்து காரை நிறுத்தியவன், அவள் ஏறிக் கொண்டதும் கிளம்பினான். எத்தனை மகிழ்ச்சியாய் கிளம்பி வந்தாள், இப்போது அந்த உற்சாகம் முழுக்க வடிந்து அமைதியாய் இருந்தாள். வருணுக்கு அவளிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஹாஸ்டலை அடைந்ததும் அவள் சிறு தலை அசைப்புடன் இறங்கிக் கொள்ள, " திவி " என்றழைத்தான்.
ரோஹினி சொன்னத பெருசா எடுத்துக்காத. அவ Sometimes அப்டி தான், அடுத்தவங்க Hurt ஆவாங்கன்னு யோசிக்காம பேசிடுவா "
பரவால்ல வருண். நா எதுவும் நெனக்கல. Good night.
ரோஹினி வீட்டுக்கோ, தன் வீட்டுக்கோ போகத் தோன்றாமல் காரை நேராக அகில், சிவா தங்கி இருக்கும் இடத்துக்கு செலுத்தினான். வருண் அங்கே நுழையும் போது மெத்தையில் ராகேஷ் அமர்ந்து இருக்க அவன் எதிரிலே தரையில் சிவாவும், அகிலும் அமர்ந்திருந்தார்கள்.
வருணை பார்த்ததும் சிவா " வாடா " என்றான். வழக்கத்திற்கு மாறாய் மூவரும் அமைதியாய் இருப்பதாய் தோன்றியது. இருந்தாலும் அப்போது இருந்த மனநிலையில் அதைப் பற்றி யோசிக்காமல், " கடுப்பா இருக்குடா " என்று தொடங்கி திவ்யாவை வீட்டுக்கு அழைத்து சென்றது முதல் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான். அகிலும், சிவாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள " சரி விடு மச்சி, அக்காவும் எதோ ஒனக்காக தான் அப்டி பண்ணிட்டாங்க. திவ்யா புரிஞ்சிப்பா " என்றான் அகில். " இல்லடா, என்ன இருந்தாலும் வீட்டுக்கு வந்த Guest அ வெளிய போன்னு சொன்னது .... அதுவும் அவ எவ்ளோ Happy ஆ மினிய பாக்க வந்தா தெரியுமா? போகும் போது அப்டியே Dull ஆகிட்டா " . " சரிடா, திவ்யா நாளக்கி Office வருவால்ல, நீ அவ கிட்ட பேசு அவ சரி ஆகிடுவா " சிவா சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த ராகேஷ் கருத்தில் பட்டான்.
"இவன் ஏன் இப்டி இருக்கான்? " வருண் மற்ற இருவரையும் பார்க்க " அவனுக்கு ஊத்திகிச்சு " என்றான் அகில் மெதுவாய். அப்போது ராகேஷ் அகிலை திரும்பிப் பார்க்க "டேய் "என்று அகிலை அதட்டினான் சிவா. அகிலை முறைத்து விட்டு "நா வரேன்" என்று ராகேஷ் கிளம்பி விட "என்னாச்சு அவனுக்கு? " என்று கேட்டான் வருண்.
" பொண்ணு பாக்க போனான் இல்ல, அந்த பொண்ணே இவன்கிட்ட என்ன பிடிக்கலனு சொல்லிடுங்கனு சொல்லிடுச்சாம், இவனும் அப்டியே சொல்லிட்டு வந்துட்டான். இங்க வந்து ஒரே பொலம்பல் " என்றான் அகில்.
"அவனுக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருச்சு போல " சிவா சொல்லவும், "ம்ம், எல்லாத்தையும் Simple ஆ எடுத்துப்பான். ஆனா இன்னைக்கி கொஞ்சம் Disturbed ஆ இருக்குற மாரி தான் இருக்கு " வருண் சிந்தனையாய் சொன்னான்.
நண்பர்களுடன் பேசி விட்டு வந்தாலும் அன்று இரவு முழுக்க திவ்யாவின் சிந்தனையாகவே இருந்தது வருணுக்கு. இப்போது தான் கொஞ்சம் இயல்பாய் இருக்கிறாள். ரோஹினி சொன்னதை கேட்டு மீண்டும் பழைய படி தன்னை ஒரு கூண்டுக்குள்ளே அடைத்துக் கொள்வாளோ என்று தவிப்பாய் இருந்து. ஆனால் அடுத்த நாள் காலை அலுவலகம் சென்றதும் அவன் அவளிடம் எந்த மாற்றத்தையும் காணவில்லை. சகஜமாய் தான் இருந்தாள். ஆனாலும் மனம் பொறுக்காமல் அவளை அழைத்து,
"Sorry திவி, ரோஹினி பண்ணது பெரிய தப்பு தான். அவ சார்பா நானே .. " என்று சொல்லி முடிப்பதள்குள் "அதுல தப்பு எதுவும் இல்ல வருண், அங்க இருந்து கெளம்பறப்போ நானும் Upset ஆ தான் இருந்தேன். ஆனா ரூம்க்கு போய் நிதானமா யோசிச்சி பாத்தேன். அவங்க சைட்ல இருந்து அவங்க பண்ணது சரி. நீ அத நெனச்சி Worry பண்ணிக்காத. " என்றாள்.
ம்ம், வீட்டுக்குல்ல போகும் போது நா நோட் பண்ணல. கெளம்பும் போது தான் நீங்க பேசிட்டு இருந்தத பாத்தேன். அஞ்சனா செம்ம அழகுடா. ஒனக்கு Match இருப்பாங்க
அட இந்த ரோஹினிக்கு தான் பைத்தியம் பிடிச்சிருக்குன்னா நீ வேற கடுப்பேத்தாத திவி. அஞ்சனா சின்ன பொண்ணு. இப்ப தான் Final year படிக்கிறா.
அதான் College படிக்கிறால, நீ என்னமோ School பொண்ணு மாரி சொல்ற. Marriage னா ஒரு 2-5 Years gap இருந்தா தான் நல்லா இருக்கும்.
காலைலயே Advice மழையா பொழியாத, போ போய் வேலைய பாரு.
உதட்டை பிதுக்கி விட்டு எழுந்து போனாள் திவ்யா.
-------------------------------------------------------------------------------------------------------------------------
Hi! கதை பிடிச்சிருக்கா உங்களுக்கு? கிட்டத்தட்ட எல்லா Characters உம் அறிமுகப் படுத்திட்டேன். இன்னும் கதையோட போக்குல 2-3 பேர் வரலாம். நிறைய பேர் சைலன்ட்டா ரீட் பண்ணிட்டு போயிட்றீங்க. இன்னைக்கு ஒரு சேன்ஜ் ஆ இருக்கட்டும். So, இது வரை நடந்ததுல உங்களுக்கு பிடிச்ச சீன் எது? Main characters, supporting characters எல்லாம் சேத்து உங்களுக்கு ரொம்ப பிடிச்ச Character யாரு, அவங்கள ஏன் பிடிக்கும்னு Commentல சொல்லுங்க.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro