Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

10.


அன்று திவ்யாவும் வருணும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவள் போன் சிணுங்கியது. " சொல்லுங்க மாமா " என்ற படி அவள் பேச ஆரம்பிக்க அடுத்த பக்கம் ஏதோ சொன்னதில் இவளுக்கு முகம் வாடி விட்டது.

"இல்ல, எப்டியும் வேற வேல கெடச்சிரும்னு தான்..."

"...."

"அப்படி இல்ல மாமா ... நா ..."

"...."

ஏதோ சொல்லி சமாளிக்க முயன்று தோற்றுப் போனவள் இறுதியாய் "சரி " என்று வருணின் Office முகவரியையும் சொல்லி விட்டு போனை வைத்தாள்.

"என்னாச்சு? "

மாமா Work விஷயமா இங்க வந்திருக்காரு. என்ன தேடி பழைய Office போயிருக்காரு. அங்க யாரோ நா Manager Problem பண்ணதால தான் வேலைய விட்டுட்டேன்னு சொல்லிட்டாங்க போல. நா தங்கி இருந்த பழைய வீட்டுக்கும் போய் பாத்துட்டு நா அங்கயும் இல்லைனு தெரிஞ்சதும் ...

"நீ அவர்கிட்ட எதுவுமே சொல்ல மாட்டியா ? " திவ்யா சொல்லி முடிக்கும் முன்னே அவளை முறைத்தான் வருண்.

"வேலைய விட்டுட்டேன்னு சொன்னாலே அவர் என்ன பூனே வந்துட சொல்லி Force பண்ணுவாரு, இதுல இங்க ப்ராப்ளம்னு வேற தெரிஞ்சா ..." முகத்தை சுருக்கிய படி தலை குனிந்து அவள் தன் பக்கம் இருக்கும் நியாயங்களை சொல்ல,

"பைத்தியமா நீ!! " வருணின் குரலில் கோபக் கனல் தெரித்தது.

அவர் தான் ஒனக்கு கார்டியன். நீ எங்க இருக்க, என்ன பண்றன்னு அவருக்கு தெரிய வேணாமா? அந்த Manager அவ்ளோ Problem பண்ணிருக்கான். அத எதயுமே அவர்கிட்ட சொல்லாம இருந்திருக்க. அறிவிருக்கா ஒனக்கு??!! முட்டாள்.!!

அது நாள் வரை தான் வேலையில் கவனக் குறைவாய் இருந்தால் கூட ஒரு வார்த்தை சொல்லாதவன், இன்று இத்தனை கோபமாய் கத்த விக்கித்து போய் நின்றாள் திவ்யா.

யாருமே இல்ல, யாருமே இல்லைனு சொல்லி உன் மேல அக்கற உள்ளவங்களையும் தள்ளி வைக்கிற திவி... அந்த பொறுக்கி வீடு தேடி வந்து தொல்ல பண்ற அளவுக்கு போயும்.... ச்ச!! Idiot!!! உன் Safety பத்தி யோசிச்சியா?

"அதான், அந்த வீட்ட விட்டுட்டு ஹாஸ்டல்... " வருணின் முறைப்பில் அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

அதற்கு மேல் இருவருமே சாப்பிடவில்லை. கை கழுவி விட்டு தத்தமது இருக்கைகளில் வந்தமர, பாவமாய் அடிக்கடி வருணை பார்த்தாள் திவ்யா. இவளை முறைத்து விட்டு கீ போர்டில் தன் கோபத்தை காட்டிக் கொண்டிருந்தான் அவன்.

பின்னர் திவ்யாவை பார்க்க யாரோ வந்திருப்பதாய் அழைப்பு வர எழுந்து போனாள். ஏற்கனவே வருணிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவள் இப்போது தயாளனிடமும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

எனக்குத் தெரியும், உன் அத்தக்காரி உன்ன எவ்வளோ கொடும பண்ணான்னு. அதான் நீ ஒவ்வொரு காரணமா சொல்லி வெளிய தங்கினதுக்கெல்லாம் நா எதிர்ப்பு காட்டல. ஆனா, இங்க இவ்ளோ நடந்திருக்கு என் கிட்ட ஒரு வார்த்த சொல்லனும்னு கூட ஒனக்கு தோணல. ஒனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சி நீ நல்லா இருக்குறத பாக்கணும்னு தான் நான் எப்பவும் ஆச பட்டேன். எதுக்காவது கொஞ்சம் பிடி கொடுத்து பேசி இருப்பியா?  நா உன்னையும் என் பொண்ணா தான் நெனச்சிட்டு இருந்தேன் திவ்யா, ஆனா நீ மனசளவுல என்ன விட்டு ரொம்ப தூரமா இருக்கேனு புரிஞ்சிக்காமயே இருந்திருக்கேன்.

கண்கள் கலங்கி அமைதியாய் இருந்தாள் திவ்யா. அவளுக்கு மாமாவை எப்போதுமே பிடிக்கும். ஆனால் அத்தை, மீராவின் செயல்களால் அவரிடம் நெறுக்கம் காட்டாமலே இருந்து விட்டாள். திருமணத்தை தள்ளிப் போட்டது கூட அதில் எந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இல்லாமல் இருந்ததால் தான். ஆனால் அது மாமாவை கஷ்டப் படுத்தும் என்று நினைத்ததே இல்லை. 

குற்ற உணர்ச்சியாய் இருந்தது. அவரை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல் தலை குனிந்து நின்றாள். அந்த பக்கமாய் வந்த வருண் அவர் பேசியதை கேட்டுக் கொண்டு தான் இருந்தான். 

தயாளன் கிளம்பியதும் மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள். பேச மாட்டானா என்று அடிக்கடி அவனை அவள் பார்ப்பது தெரிந்தும் அவன் கண்டு கொள்ளவே இல்லை. அழுகையாய் வந்தது. வாஷ் ரூம் போய் அழுது விட்டு வந்தாள். 

அலுவலக நேரம் முடிந்து வருண் கிளம்ப அவன் பின்னாலே வந்தவள் அவன் காரில் ஏறியதும் தயக்கமாய் பார்த்த படி நிற்க, அவளாக வந்து ஏறிக் கொள்வாள் என அமைதியாய் இருந்தவன், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து  " எல்லாம் சொல்லணுமா ஒனக்கு!!  வண்டில ஏறு " முகத்தை பார்க்காமலே சிடு சிடுத்தான். ஹாஸ்டல் போய் சேரும் வரை இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

அடுத்த நாளும் அப்படியே கழிய ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் வருண் முன்னே வந்து அமர்ந்தாள் திவ்யா. அவன் கண்டு கொண்டதாய் இல்லை. தன் பாட்டுக்கு வேலையாய் இருக்க, உடைந்த குரலில், " Please வருண், பேசாம இருக்காத, கஷ்டமா இருக்கு " கெஞ்சினாள். அவள் குரலும் வாடிய முகமும் அவனை காயப் படுத்த, வருண் பேச ஆரம்பிக்க முன்பே அழத் தொடங்கினாள் திவ்யா. 

அவள் அவளுடைய பாதுகாப்பில் பொடுபோக்காய் இருந்தது தான் அவனுக்கு கோபம், ஆனால் அவளை அழ வைத்துப் பார்க்க நினைக்கவில்லை. திவ்யாவை பார்த்த நாளிலிருந்தே அவள் காயங்களுக்கு மருந்தாய் இருக்க நினைத்தவன் இப்போது அவனே அவள் அழுகைக்கு காரணமாகி விட, குழந்தை போல அழுது கொண்டிருந்தவளை பார்க்க முடியாமல் அவள் அருகே போய் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். 

ஹேய் திவி ... அழுவாத . அழுவாத டா, இனிமே பேசாம இருக்க மாட்டேன்.  

இவன் செயலில் அவள் விம்மல் இன்னும் அதிகமானது. அவன் வயிற்றை கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள். வருணும் அவளை அணைத்துக் கொண்டு அவள் தலையை வருடினான்.  

Sorry ... Sorry டா. எதோ கோவத்துல பண்ணிட்டேன். திவி ... Please அழுவாத. 

அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் அவள் அருகிலேயே ஒரு கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.  அவள் கன்னத்தை கையில் ஏந்தி கண்ணீரை துடைத்து விட்டவன், 

இனிமே அழக் கூடாது. சரியா?

அவன் கேள்வி கேட்கவும் சரியென தலை ஆட்டினாள். 

Sorry வருண், நா பண்ணது தப்பு தான். மாமாவும் ரொம்ப கோவமா பேசிட்டாரு. ஆனா நா இங்க Problem னு சொன்னா மாமா என்ன ஊருக்கு வர சொல்லி இருப்பாரு. அங்க போன அத்த ஏதாவது சொல்லி Hurt பண்ணிட்டே இருப்பாங்க. மாமாவும் Marriage பண்ணிக்க சொல்லி கேட்டுட்டே இருப்பாரு. அதான் ... தப்பு தான், இனிமே இப்டி பண்ண மாட்டேன். 

ம்ம்...  கல்யாணம் வேணாம்னு ஏன் நெனக்கிற? 

கேள்வி கேட்டு விட்டு பதிலை எதிர் பார்த்திருந்தவனின் பார்வையை தவிர்த்து தலை குணிந்தவள், 

எனக்கு பயமா இருக்கு வருண். யாருக்குமே என்ன பிடிக்கல. Marriage பண்ணிக்கிட்டு ஒரு வீட்டுக்கு போய் அவங்களுக்கும் என்ன பிடிக்காம போய்ட்டா ... Life ரொம்ப Complicate ஆகிடும்.  

அப்டிலாம் ஒன்னும் ஆகாது திவி. ஒன்ன யாருக்கும் பிடிக்காதுன்னு ஏன் நெனக்கிற.  உன்ன முழுசா புரிஞ்சிகிட்டவங்களுக்கு உன்ன கண்டிப்பா பிடிக்கும். உன்ன Marriage பண்ணிக்கிறவன் ரொம்ப Lucky.  உன் Life கண்டிப்பா நல்லா இருக்கும். நம்பு. 

அவனை நிமிர்ந்து பார்த்தவள் சரி என்பது போல தலை அசைத்தாள். 

நம்ம கூட படிச்ச Girls நெறய பேருக்கு இப்போ ரெண்டு மூனு கொழந்த இருக்கு. நீ இன்னும் Marriage க்கு பயந்துட்டு இருக்க. ம்ம்ம் ... இப்போ என்ன பண்ணனும்?

வருண் கேட்கவும் அவள் புரியாமல் விழிக்க, 

மாமாகிட்ட போன் பண்ணி Marriage க்கு Ok சொல்லு. மத்ததெல்லாம் அவரே பாத்துப்பாரு. 

அவன் சொன்னது போலவே தயாளனை அழைத்து சம்மதம் சொல்லி விட்டு இப்போதும் பாவமாய் வருண் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள். 

"சரி போய் Face wash பண்ணிட்டு வா " என்றான் அவள் கன்னத்தை வருடி.  சரியென தலை ஆட்டி விட்டு அவள் எழுந்து போகவும் தன்னை அறியாமலே அவளை பார்த்து புன்னகைத்தான் வருண். 

வளர்ந்த குழந்தை. மனதளவில் காயப் பட்டு அன்புக்காக மட்டுமே ஏங்குகிறாள். "நீ நல்லா இருக்கணும் திவி. கண்டிப்பா  நல்லா இருப்ப" மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro