1.
யோசனையாய் கட்டிலில் அமர்ந்து இருந்தவளின் அமைதியை கலைத்தது அவள் அலைபேசி. ஆர்வம் இல்லாமல் அதை எடுத்துப் பார்த்தவள் சுஜி என்ற பெயரை கண்டதும் போனை தேய்த்து காதில் வைத்தாள்.
ஹலோ
ஹேய் ... என்ன கெளம்பிட்டியா?
ம்ம் ... கெளம்பிட்டு தான் இருக்கேன்.
சரி, இந்த தடவ கண்டிப்பா கெடச்சிடும். தைரியமா போ . All the best.
"சரி ... Thanks சுஜி " என்றாள் ஆர்வமே இல்லாத குரலில்.
இவளின் குணம் தெரிந்ததால் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாதவள்,
Late பண்ணாம கெளம்பு. வந்து Call பண்ணு. Bye
Bye...
பைல், பர்ஸ், போன் ... எடுத்துக் கொண்டு கண்ணாடி முன்னே போய் நின்றவள், மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானப் படுத்திக் கொண்டு கிளம்பினாள்.
பஸ்ஸில் ஏறி ஜன்னலோரமாய் அமர்ந்து வெளியே வெரித்த படி வந்தவள் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி நடந்தாள். ஐந்து நிமிட நடை பயணம். அவள் தேடி வந்த கட்டிடம் கண்ணில் பட உள்ளே நுழைந்து, reception desk இல் இருந்த பெண்ணிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். அந்த பெண் காட்டிய திசையில் நடந்து அங்கே வரிசையாய் போடப்பட்டிருந்த கதிரைகளில் ஒன்றில் அமர்ந்தாள். இன்று அவளுக்கு நேர்முகத் தேர்வு. கொஞ்சம் ... இல்லை நிறையவே பதற்றமாய் இருந்தது. மூச்சை இழுத்து விட்டு தன்னை அமைதிப் படுத்த முயன்று கொண்டு இருந்தாள்.
அவள் முறை வர, கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள். கஷ்டப்பட்டு வரவழைத்த சிறு புன்னகையுடன் "Good morning " என்றதும் Laptop இல் கவனமாய் இருந்தவன் நிமிர்ந்து இவளை பார்த்தான். இவளை கண்டதுமே அவன் கண்கள் ஆச்சரியமாய் விரிய சற்றே அதிகப் படியாய் புன்னகைத்து Good morning என்றான். பரிச்சயமான முகம், அதில் அவன் காட்டிய ஆச்சரியம், அவனது புன்னகை எல்லாம் அவளை குழப்ப, அப்படியே விழித்துக் கொண்டு நின்றாள். இவள் நிலமை அவனுக்கு புரிந்ததோ என்னவோ, இன்னும் குழப்பாமல் அவளை அமரச் சொன்னான்.
அவள் Certificates ஐ பார்த்த படியே அவள் மேலும் ஒரு பார்வை வீசினான். பின்னர் இயல்பாய் நடந்தது நேர்முகத் தேர்வு. ஏற்கனவே இருந்த பதற்றத்தில் எங்கேயோ பார்த்தது போலிருந்த அவன் முகமும் அவளை குழப்ப, அவள் என்னென்ன பதில் சொன்னாள் என்பது அவளுக்கே நினைவில் இல்லை. ஆனால் திரும்பவும் வித்தியாசமாய் ஒரு பார்வை பார்த்தவன்,
"You are selected Miss Divya, நாளைக்கே வந்து Join பண்ணிடுங்க " என்றான்.
இதை அவளே எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடி அதிர்ச்சியாய் அவனை பார்த்தவள் உடனே தன்னை சமாளித்துக் கொண்டு,
"Thank you sir " என்று புன்னகைத்து விட்டு தன் பைலை எடுத்துக் கொண்டு எழுந்து நடந்தாள்.
"திவ்யா "
இரண்டாவது எட்டு எடுத்து வைக்க முன்னரே அவளை தடுத்தது அவன் குரல் . அவள் திரும்பிப் பார்த்ததும்,
"அதான் Interview முடிஞ்சிடுச்சே, இப்போ கொஞ்சம் Personal ஆ பேசலாமா? " என்றான் சீரியஸான குரலில்.
இப்போதும் அவள் பேயை பார்த்தது போல விழித்து வைக்க,
"ஹேய் லூசு திவி, என்ன சுத்தமா மறந்துட்டியா? " என்றான் சிநேகமாய் புன்னகைத்து.
"வருண் .... " தன்னை அறியாமலே அவன் பெயரை உச்சரித்தாள் திவ்யா.
"அப்பாடா, இப்பயாவாது ஞாபாகம் வந்ததே!! வா வந்து உக்காரு " அவன் அதே சிநேகப் புன்னகையுடன் இருக்கையை கை காட்ட, அதில் அமர்ந்து சங்கடமாய் விழித்தவள்,
"Sorry ... அது ... நா .... உங்கள இங்க எதிர் பார்க்கல, அதுவும் School days ல பாத்தது. இப்ப தாடி, மீசைனு ஆளே மாறி ... அதான் .... sorry ..." சொல்லிவிட்டு தலை குனிந்தாள்.
"Its okay, புரியுது ... " அவன் பேசத் தொடங்கவும் நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் " Sorry " என்றாள்.
"ஹேய் எதுக்கு இவ்ளோ Sorry? விடு அத..." பேச்சை மாற்றினான்.
Sudden ஆ உன்ன பாத்ததும் அப்டியே Shock ஆகிட்டேன். பாத்து ரொம்ப வருஷம் ஆச்சுல்ல?
"ம்ம் ... Last ஆ 10th படிக்கும் போது பாத்தது... நல்லா இருக்கீங்களா? " என்றாள் கொஞ்சம் இயல்புக்கு திரும்பியவளாய்.
ம்ம், நா Super ஆ இருக்கேன், நீ எப்டி இருக்க?
"இருக்கேன் " வார்த்தையில் விரக்தி தெரிந்தது.
அவளின் தற்போதைய நிலை அவனுக்கு தெரியாவிட்டாலும், அவள் கடந்த காலம் பற்றி சிறிது தெரிந்து வைத்திருந்ததால், அவளை அவனால் உணர முடிந்தது.
இரண்டு நிமிட அமைதி ... அவளுடன் நிறைய பேச வேண்டும் போலிருந்தாலும், நேரம் இடம் கொடுக்காததால் " சரி திவி, நீ நாளைக்கே வந்து Join பண்ணிடு, நாம மெதுவா பேசிக்கலாம்" என்றான்.
"சரி, Thanks வருண். " லேசான புன்னகையுடன் அவள் விடை பெற்றுக் கொள்ள, அவள் போவதையே பார்த்துக் கொண்டு இருந்தான் வருண்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro