துருவம் 1
உயிரும் உணர்வும் மின்னும்
இரு விழியின்
கருஞ் சூரிய குவியங்களின்
நுண் அசைவு ,
அழகியல்களும் அசந்துவிடும்
ஆச்சர்யங்களின் உச்சம்.
அழகான அதிசயங்கள் எல்லாம்
அவன் இரு விழியின் மிச்சம்.
வெண்மேக
விழிப்படலத்தில்
கருமைச் சூரியனாய்
மின்னும் கண்மணிகள்
இரண்டும்,
அவளைக் காதலில்
காணும் பொருட்டு
கீழிருந்து மேல் நோக்கி
நகரும் தருணம் ,
இமைக் கதிர்கள்
விசிறியாய் விரியும்.
மேல் இமை மடலினுள்
சூரியக் கருமணிகளின்
கால்வட்டப்பகுதி
சிறிதாய் மறையும் ,
அவிடத்தில் தான்
உலகின் ஒட்டுமொத்த
அழகியலும் உறையும்..
இது ஒரு வானியல்
நிகழ்வு அன்று
அவனின்
காணியல் நிகழ்வு..
அவன்
அவளைக் காணும்
நிகழ்வு சிறிது தான்
ஆனால் ,
அச்சிறு நிகழ்வில்தான்
அவன் விழிகளில்
அன்பும் ரசனையும்
அழகுப் பிரளையமாய்
உருமாறுகிறது ..
தன் சட்டை காலரைக் காற்றுக்காக சற்றே தூக்கிவிட்டு நாற்காலியில் இலகுவாகச் சாய்ந்து அமர்ந்து முழங்கை ஊன்றி கன்னத்தில் விரல் பதித்து சற்று தூரத்தே இருந்த அவளைக் காதலாய்ப் பார்த்துக் கொண்டிருபவன் துருவ் ..
துருவ் அமர்ந்திருப்பது வெட்டவெளியான படப்பிடிப்புத் தளத்தில் . தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இந்தப் திரைப்படத்திற்கான ஆர்ட் டிரைக்டர் சிற்பா வைத்தான் அவன்கண்கள் இமைச்சிறையில் அடைக்கிறது ...
துருவ் எப்பொழுதும் தயாரிப்பும் இயக்கமுமாக வேலையில் ஆழ்ந்திருப்பவன . தன் தந்தை ப்ரேம் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனத்தில் பிரேமோடு இணைந்தும் தனித்துமாக, விருதிற்காகச் சில படங்களும் , வியாபாரத்திற்காகச் சில படங்களும் என , குடும்பங்கள் முகம் சுழிக்காமல் பார்க்கும் அளவிற்கான தரமான படங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பவன்,
28 வயதை நிறைத்த இவன் காதலைக் கடக்காமல் காலத்தை கடந்துவிட முடியுமா என்ன .. அவள் இவன் விழிகளில் நுழைந்த கணத்திலிருந்து
இவனது ஹார்மோன்களில்
காதல் விளைந்து மணத்து கொண்டிருக்கிறது ..
கடந்த இருபது நாட்களாகத்தான் அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதிலும் இந்த ஒருவார காலமாகத்தான் அவள் வசம் தான் ஈர்க்கப்படுவதாய் உணர்கிறான்.. என்றாலும் வெறும் ஈர்ப்பு என்று விட்டுவிட இயலவில்லை அவனுக்கு .
அவன் மனம் எங்கும் அவள் நிறைந்து மணம் வீசுகிறாள். எளிமை திறமை அழகு மேலும் ஏதோ ஒரு தனித்துவமும் உணர்கிறான் அவளில்.. மாநிறம் தாண்டியதொரு இளமஞ்சள் நிறம் அவள். கன்னியமும் புன்னகையும் மின்னும் அவள் கண்களில் இவன் மீதான காதலையும் காணத்துடிக்கிறான் . இப்போதே தன் காதல் சொல்லிவிடத்தான் நினைக்கிறான் . என்றாலும் தற்போது இயலாது , நிலைமையை எண்ணி சொல்லாமல் தவிக்கிறான்.
ஆம் கள்வன் கையில் இருக்கும் சாவி போலானது இவன் நிலைமை ..
-------------------------------------------------------
சிற்பாவின் தந்தை ரஞ்சன் தென்இந்திய திரையின் தவிர்க்க முடியாத கலை இயக்குனர் . அவரது உதவியாளன் கார்த்திக்கும் தமிழ் திரையின் முக்கிய கலை இயக்குனர். கார்த்திக்கிற்கு தன் குரு ரஞ்சன் தான் எல்லாம்..
கல்லூரியில் படிக்கும் போதே பகுதி நேர வேலைக்காக கார்த்திக் ரஞ்சனிடம் வந்து சேர்ந்தான் . அப்பொழுது சிற்பாவும் அவள் தங்கை ஓவியாவும் பள்ளி படிக்கும் சிறுமியராக இருந்தனர். கார்த்திக் ரஞ்சனோடு வீட்டுக்கு வரும் போதெல்லாம் சிற்பாவும் ஓவியாவும்
அண்ணா அண்ணா எனக் கார்த்திக்கோடு
பழகி ஒட்டிக்கொள்ள, வீட்டில் ஒரே பையனாக வளர்ந்த கார்த்திக்கிற்கு இந்த தங்கைகளின் பாசம் நெகிழ்வைத்தர இருவரும் என் தங்கைகள் என்ற எண்ணம் அனிச்சையாகவே அவனது மூளையில் பதிந்து விட்டது.
கல்லூரி படித்துக்கொண்டிருந்த கார்த்திக்கிற்கு ரஞ்சன்தான் அவன் பார்க்கும் ரியல் ஹீரோவாகத் தெரிந்தான். ரஞ்சனின் தோற்றத்தை அப்பட்டமாக ரசிப்பான். ரஞ்சனின் உயரம் , அதற்கேற்ற எடை , கம்பீரநடை , தேவைப்படும்போது போடும் குளிர் கண்ணாடி , முழுக்கை சட்டை அணிந்து அதன் கையை மணிகட்டிற்கு மேல் மடித்து விடும் நேர்த்தி , தயாரிப்பாளர்களிடமும் , இயக்குனர்களிடமும் குழையாமல் வெட்டு ஒன்னு துண்டு இரண்டு என்பதையும் மிதமாக துல்லியமாக பேசும் சாதுர்யம் . கார் ஓட்டும் லாவகம் , புட்பாலில் ரஞ்சன் போடும் கோல்கள் . வீட்டிற்கு வந்தால்
தன் குழந்தைகளுடன் குழந்தையாய் விளையாடும் குதூகலம் , தன் காதல் மனைவியை சீண்டும் குறும்பு , மனைவிக்காக வாங்கும் காரிலிருந்து கைக்குட்டை வரை ஒவ்வொன்றிலும் காட்டும் மெனக்கெடல், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களின் குடும்பதின் குழந்தைகளுக்கு
கல்விக்கும் மருத்துவதற்கும் உதவுவது
என கார்த்திக் ரஞ்சனின் ஆளுமையை.. அழகியலை.. ரசித்ததோடு அவனை அறியாமலே ரஞ்சனிடம் வாழ்வியலையும் கற்றுக்கொண்டிருந்தான்.
ரஞ்சனுக்கும் கார்த்திக்கின் ஒழுக்கமும் கற்பனைத் திறனும் அதோடு வேலையில் அவனின் நேர்த்தியும் வியூகங்களும் என அனைத்தும் பிடித்துப் போனது . ரஞ்சனுக்கு கார்த்திக் மீதான அன்பும் அக்கறையும் நாளுக்கு நாள் அதிகரித்தது .
ரஞ்சன் தொழிலின் அனைத்து நுட்பங்களையும் கார்த்திக்ற்குக் கற்றுக்கொடுக்க , அது கார்த்திக்கிற்கு ரஞ்சன் மீதான அன்பையும் மரியாதையையும் பல மடங்கு பெறுக்கியது , ' இப்படி ஒரு குரு யாருக்கு கிடைப்பார்? ' நினைத்துப் பார்க்கயில் வியப்பே மிஞ்சும் அவனுக்கு.
பல வருட அனுபவத்தில் கற்கும் நுட்பங்களைப் புதியவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பறந்த மனம் மாவீரர்களின் அடையாளம் .
ஆம்! நுட்பங்களை கற்பித்தால் தம்மிடம் கற்றவர்களே தனக்குப் போட்டியாக வரக்கூடும் என்ற அற்பாமான கோழை குணம் இல்லாமல் அனைத்தையும் கற்றுத்தருவது வீரமன்றி வேரில்லை என்பது கார்த்திகின் எண்ணம்.
நாட்கள் செல்லச்செல்ல கார்த்திக் இன்னொரு ரஞ்சனாய் உருவெடுத்திருந்தான் ..
சிற்பா ME முடித்து IT யில் பணிபுரிந்து வர அவளுக்கு ஏனோ அந்தப் பணி அலுப்பையும் சலிப்பையும் தருவதாகக் கூறி தான் ஆர்ட் டைரக்டராக வேண்டும் என சிற்பா தன் IT துறையை விட்டுவிட்டு கலை இயக்கத்தை தேர்ந்தெடுக்கவும் ரஞ்சனும் கார்த்திக்கும் ஒரு சேர அதிர்ந்தனர்.
வீட்டில் சுகபோகமாக வளர்பவள்.. வெயிலையும் மழையையும் வீட்டுக்குள் இருந்து ரசிப்பவள்... நிதர்சனத்தில் அதன் கொடுமைகளைத் தாங்க மாட்டாள் .
அதோடு படம் தயாரிப்பில் கலை வடிவமைப்பு என்பது தயாரிப்பில் ஆரம்பித்து செட் வேலைகள் செய்யும் தின சம்பளக்காரர்கள் வரை முழுக்க முழுக்க ஆண்களின் களம் . ஆண்கள் வேலை பார்க்கும் இடத்தில் புதிதாக ஒரு பெண் வந்து வேலைகளை கவனிப்பது என்பதை அவர்கள் இடையூராகவும் அசெளகர்யமகவும் உணரவும் வாய்ப்புள்ளது. இதையெல்லாம் எப்படி இவள் எதிர்கொள்வாள். பொட்டல் காடு , மேடு, ஸ்டுடியோ.. என அலைந்து திரிந்தால் ஒரே மாதத்தில் ஆர்ட் டைரக்ஷன் வேலைக்கு ஒரு கும்பிடு போட்டு விடுவாள் என்பது ரஞ்சனின் எண்ணம் . ஆனால் இதை எல்லாம் சொன்னால் தன் தங்கமகள் கேட்க மாட்டாள் . அவளாகவே புரிந்து கொள்ளட்டும் என மகளை பார்த்த
ரஞ்சன் அவளைக் கார்த்திக்கிற்கு உதவியாளராக சேர்ந்துக்கொள்ளச் சொல்ல அதை கேட்ட சிற்பா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து தந்தையைக் கொஞ்சி வீட்டுப் போக..
கார்த்திக் ரஞ்சனைக் யோசனையாகப் பார்க்க.. " ரஞ்சன் ஒரு மாதம் கார்திக்குடன்
சிற்பாவை அழைத்துப் போகுமாறும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் " என்றும் கூற , கார்த்திக் சம்மதமாய் தலை அசைத்து , அவளைப் பணி அமர்த்தி இதோடு முழுதாக ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. அவளின் ஆர்வம் நாளுக்கு நாள் கூடியதே தவிர குறையவில்லை.. வெயிலும் மழையும் அவளை ஏதும் செய்யவில்லை. வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தாள்.
கார்த்திக் அலுவலகத்திற்கு வரும் முன்பே அவள் வந்து விடுவாள்.
கதைக்களம் பற்றிய குறிப்புகள் , அதற்கான கான்செப்ட் ஆர்ட் , ஷூட்டிங் ஷெட்யுள். ரா மெட்டீரியல் ஸ்டோரேஜ் , பிரசாஸ் பிளான். அதோடு படப்பிடிபிற்காகப் போடபட்டிருக்கும் செட்களை மழை வெயிலில் இருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடுகளுக்கு வானிலை குறித்து கவனம். என ஆரம்பித்து கார்த்திக்கின் லேப்டாபிற்கு சார்ஜ் போட்டு வைப்பது உற்பட அனைத்து அலுவல் பணிகளையும் அக்கறையுடன் செய்தாள்.
மேலும் செட்கள் போடப்படும் சைட்களுக்கு சென்று அங்கு நடக்கும் வேலைகளை கவனிப்பது ,
கதையின் கான்செப்டில் இருக்கும் ஆர்ட்களையும் செட்களையும் ஒப்புமை செய்து குறை கலைவது ,
அங்கு கீழே கிடக்கும் ஒரு சிறு ஆணியைக் கூட யார் காலிலும் குத்திவிடாமல் அப்புறப்படுத்துவது , வயதான வேலையட்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்வது , அதோடு அவர்கள் வயதிற்கேட்ப அக்கா , அண்ணா, தம்பி, அப்பா, அம்மா என உரிமையோடு அழைத்து அனைவரிடமும் அன்போடு பழகுவது..
என அவள் இருக்கும் சூழலை அழகாக தன் வயப்படுத்தி வேலைகளை முடிக்கும் திண்மை பெற்றிருந்தாள்.
கார்த்திக்கும் அவள் முழுவதுமாக தொழில் வயப்பாட்டிருபதை உணர்ந்து கொண்டான். என்றாலும் அவள் ஓய்வில்லாமல் வேலை செய்வதால் சற்று மெலிந்து விட்டது போல தோன்றியது அவனுக்கு . அவளின் எலுமிச்சை நிறம் கொண்ட முகம் கூட இப்பொழுது சற்றே அடர் நிறமாகிவிட்டது. இதை எல்லாம் பார்க்கும்போது அவன் தாயுள்ளம் வருந்தவே செய்கிறது.
வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது சில நாட்கள் கார்த்திக்கும் சிற்பாவும் ரெஸ்டாரன்ட்கு சென்று ஏதாவது உண்டுவிட்டு பிறகே வீட்டுக்குச் செல்வது வழக்கம் , அன்றும் அதே போல் ரெஸ்டாரென்ட்கு
சென்ற கார்த்திக் சிற்பாவை தன் அருகில் அமர்த்திப் பேசினான்..
" சிலருக்கு இலட்சியம் என்பது தனுக்கு பிடித்த வேலையில் முன்னேறி பணம் ஈட்டுவதாகவோ அல்லது எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையைப் பார்த்து நிறையப் பணம் ஈட்டுவதாகவோ இருக்கிறது என்றும் இதில் எப்படிப் பார்த்தாலும் பணம் ஈட்டுவதுதான் அடிப்படை நோக்கம் என்றும் , ஆனாலும் சிற்பாவின் நோக்கம் பணம் ஈட்டுவது இல்லை என்றாலும் இப்போது அவளுக்கு பணம் ஈட்டுவதற்கான அவசியம் இல்லை எனவும், ரஞ்சன் ஈட்டியது எல்லாம் அவளுக்கும் ஓவியாவிற்கும்தான் எனவும் இந்த வயதில் நன்றாக அனுபவிப்பதை விட்டுட்டு இப்படி கஷ்டப்பட வேண்டிய தேவை இல்லை " என்றும் கூறி அவளின் முகம் வருடும் கூந்தல் ஒதுக்கி விட்டு கரிசனமாக அவளைப் பார்த்தான்.
அவளோ அமைதியாக இருவிழி உயர்த்தி அவனைப்பார்த்து தான் கேட்பதற்கு பதில் சொல்லுமாறு கூறியவள் " நீங்க யாரு " என்பதாய்க் கேட்க..
சற்றே துணுகுற்ற கார்த்திக் புன்சிரிப்பில்
" சிற்பாவோட அண்ணன் " எனக்கூறவும்
சிற்பாவோ , சமாளிக்காமல் பதில் கூறுமாறு கார்த்திக்கிடம் வேண்டவும் கார்த்திக்கும் தான் " ஆர்ட் டைரக்டர் கார்த்திக் " எனக்கூற..
சிற்பா " சரி நான் யார்? " என்பதாகக் கேட்க..
கார்த்திக்கிற்கு இவள் கூறவருவது புரியாமல் இல்லை.. என்றாலும் அமைதியாக அவளைப் பார்த்து " நீ மிஸ் சிற்பா ரஞ்சன் " என்றான்..
சிற்பா " ஹ்ம்ம் .. உங்களுக்கு ஆர்ட் டைரக்டர்னு அடையாளம் இருக்கு... நான் இப்போ மிஸ் சிற்பா ரஞ்சன்.. அப்பறம் mrs.சிற்பா ---- எனக்கு அப்பாவும் , கணவனும்தான் அடையாளமா? சொந்தமா எனக்கான அடையாளத்தை எனக்கு பிடிச்ச துறையில் உருவாக்கிகணும்னு நினைக்கிறேன் " என்று அழுத்தமாகவோ.. கோவமாகவோ அவள் கூறவில்லை .. நீங்க மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுறீங்க நானும் சாப்பிடுவேன் என்பதுபோல் குழந்தையின் குறுங்கோபம் கொண்டு கோலிக்குண்டு விழிகள் கூர்ந்து கார்த்திக்கிடம் கேட்டுகொண்டிருந்தாள்.
அவள் வார்த்தைகளில் அழுத்தம் வெளிப்படாது , அணுகுமுறை புண்படுத்தாது அவளது எண்ணம் செயல்களில் தான் வெளிப்படும் . இதை எல்லாம் கார்த்திக் உணர்ந்தவன்..
அவளைப் பார்த்து மெலிதாய் சிரித்த கார்த்திக் , அவளைப்போன்றே விழிகளைக் கூர்ந்து " ஒரு ஊர்ல சிற்பானு ஒரு பறவை இருந்துச்சாம் , அதுக்கு ரொம்ப பெரிய சிறகுகள் இருந்துச்சாம் , அதுக்கு வானத்தை தொட்டுவிடனும்னு ஆசை இருந்துச்சாம் , அதே மாதிரி அந்த பறவையோட அண்ணா பறவைக்கும் தன் தங்கச்சி உயர உயர பறக்கனும் அதை பார்க்கணும்னு ஆசை இருந்துச்சாம் , ஆனா தங்கச்சி பறவை பறக்கும் போது அது போற இடத்தில் தண்ணீர் கிடைக்குமா.. உணவு சரியா கிடைக்குமா.. இல்லை வேற பெரிய பறவைகளால ஆபத்து ஏதும் வந்திடுமோ, மழை வெயில்ல சிற்பா பறவைக்கு ஏதும் ஆகிடுமோனு பயந்துச்சாம் , அதனால்தான் அந்த அண்ணா பறவை தயங்கியதாம் , அப்புறம் தங்கச்சி பறவை ஆர்வமா இருக்கதைப் பார்த்திட்டு அண்ணா பறவை தங்கச்சி பறவையோட இலட்சியதுக்கு துணை நிற்கனும்னு முடிவு பண்ணீருச்சாம் "
என்று அவளின் தொனியிலேயே சொல்லி தன் தங்கையை தோள்சேர்த்து செல்லப்புன்னகை சிந்த ..
சிற்பாவும் " அந்த தங்கச்சி பறவை அண்ணா பறவைக்கு தேங்க்ஸ் சொல்லுச்சாம் " என ஒரு சிறுமியின் தொனியில் ராகமாய் சொல்லி புன்னகைக்க..
இந்த இரண்டு பெருங்குழந்தைகளும் பேசிக்கொள்வதை, , சற்று தள்ளி இருந்த மேசையில் அமர்ந்திருந்த துருவ் கேட்டுக்கொண்டு மனதோடு சிரித்துக்கொண்டே.. சிற்பா யார் என பார்க்கும் ஆவலில் இயல்பாய் திரும்புவது போல திரும்பி பார்க்க.. கார்த்திக்கின் ஒருபுறம் தான் தெரிந்தது , கார்த்திக்கின் பக்கவாட்டில் அமர்த்திருந்த சிற்பாவின் முகம் தெரியவில்லை.
துருவ் கார்த்திக்கை இதற்குமுன் தொழில் நிமித்தமாகப் பார்த்திருக்கிறான்..
கார்த்திக்கைப் பார்க்கும் போது துருவிற்கு ' நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் ' என்கிற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வரும் . இது பெண்களுக்கு எழுதப்பட்ட வரிகள்தான் என்றாலும்.. தற்போது ஆண்களுக்கு இது அவசியம் என்ற எண்ணம் துருவுக்கு . ஆண்களிடம் நிமிர்ந்த நடை இருக்கிறது , ஆனால் அதில் நன்னடத்தை தான் இல்லை.. பார்வை நேராக இருக்கிறது அதில் நேர்மைதான் இல்லை என யோசிப்பான் .
ஆனால் கார்த்திக்கைப் பார்க்கும் போது அவனது தோற்றத்தில் ஒரு நம்பிக்கையும் நேர்மையும் உணரமுடியும் , அதனாலேயே கார்த்திக் மீது துருவிற்கு மரியாதை உண்டு , என்றாலும் இங்கே அவன் ஒரு அண்ணனாக தங்கையிடம் பேசும் செல்லப்பேச்சு துருவுக்கு புதிதாகவும்
இனிதாகவும் இருந்தது , துருவ் அவர்களைப் பற்றி சிந்தனையில் இருக்கும் போதே அவன் நண்பன் வந்து கவனம் கலைத்தான்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro