வலியின் புலம்பல்
காற்றின் மொழி தெரியும் விழிகளுக்கு
வலியின் தடம் தெரியாதது ஏனோ...
வாண் எங்கும் வெள்ளை மேகம் படர்ந்திருக்க...
என் விழி எங்கிலும் கண்ணீர் சுரந்திருக்க..
மனமோ எதையோ நினைத்து தவி தவிக்க....
என்ன செய்வேன் நான்....
யாரிடம் கேட்பேன்...
வலி கூற எவரையேனும் தேடினால்..
புலம்பல் என தாழ்த்துகின்றனரே...
குற்றம் சாட்டும் நீதிமன்றத்திலும்
என் வலிக்கு தீர்ப்பு உண்டோ....
சான்றோர் புறம் கூற... தட்டிக்களித்தவள்...
இன்று
சிறு அதட்டலுக்கும்
நொருங்கிவிடுவதேனோ....
- கிருக்கியின் கிருக்கல்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro