தங்கை
ஓராண்டு வித்யாசத்தில் எனக்கு ஒரே தங்கையாய் பிறந்த எங்கள் குட்டி மானே... உன் அழகான இளிப்பில் தொலைகிறது என் மனம்... உன் அக்கா என்ற அழைப்பை கேட்டு சிரித்தாலும் உன் முன் வந்தால் என் பெயரை கத்தி கொண்டு ஓடி வந்து அணைத்து கொள்ளும் போது உலகை வென்று விட்ட மகிழ்ச்சி உனக்கு... உன் குறும்பில் திலைத்த ஆனந்தம் எனக்கு... அவ்வப்போது உன்னை கண்டித்தாலும் ஈஈஈ என்று இளித்து விட்டு ஓடும் உன் குழந்தை தனத்தை கண்டால் வாய் விட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லையடி தங்கையே... வாய் விட்டு சிரித்தாலும் வாயிலே அடிப்பாய் என்று வாய் மூடி நிற்கிறேன்... நாம் பிறந்து காலம் கடந்தாலும் குழந்தையாகவே நடக்கும் உன்னை இரசிக்க நம் குடும்பத்திற்கு மொத்தம் இரு கண்கள் போதாது... வாழ்க்கை முழுவதும் உன் மண்டையில் கொட்டு வைத்து அடியே என அழைக்கும் சகோதரியாகவே இருக்க ஆசை கொள்கிறேனடி... என்றென்றும் உன் முகத்தில் உறைந்த புன்னகையுடன் வாழ வேண்டி வாழ்த்துகிறேன்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!!!
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro