ஒன்று
நிறத்தழகே நேரத்திலழகாய் வருபவளே..
காலை மாலை வருவது தெரிவதில்லை உன்னால்.. அதிகாலை அந்திமாலை வித்தியாசம் தெரிவதில்லை உன் முன்னால்..
ஏனடி கண் திறவும் முன் பிரவேசித்து திறக்கும் போது ஓடி விடுபவளே...
ஒற்றை நாளின் 24 மணி நேரம் கூட போதவில்லையடி உன்னால்..
ஒரு முறை உடனிருக்க சந்தர்ப்பமமைந்தால் ஒரு நிமிடம் கூட யுகமாய் தோன்றுகிறதே உன் முன்னால்...
கண் மூடாது..
இமை சேராது...
உயிர் பிரியாது
இந்நொடி
என்றென்றும்
எக்காலமும்
உறைந்து விடாதோ என என்னை எண்ண வைத்த மாயமவளே...
உன் கரம் பிடித்து நான் நிற்கும் அந்த ஒரு நொடி...
ஒரு நிமிடம்...
ஒரு மணி நேரம்...
ஒரு நாள்...
கிடைக்காதா ஒரு முறை???
- கிருக்கியின் கிருக்கல்...
DhiraDhi
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro