என் தோழியே (S1)
சின்னஞ்சிறு மீன் போன்ற
விழிகள் படபடக்க...
சுற்றியிருந்த பட்டாளத்தை
அவளின் அன்னை
கரத்தை பிடித்தவாறு
நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்
அவள்...
முதல் பார்வையில் எதையும் உணராத நாங்கள்...
சில மாதங்கள் களித்து பழகியதில் நட்பென்று கரம் கோர்த்தோம்...
ஒரு வருடம் கடந்த நிலையில் அடுத்த வருடம்...
சில நாட்களிளே தோழிகளில்
இருந்து உயிர் தோழிகளாய் மாறினோம்...
வாரம் ஒரு முறை
உடல் நலக்குறைவால் அவள்
படுக்கையில் படுத்துவிட....
துடித்துப்போனோம் நாங்கள்....
உயிர்தோழிகளாய் மாறிய
பின்னும் தயக்கம் அகலவில்லை....
அவ்வருடமும் கடக்க...
குழந்தைகள் நாங்கள் வளர்ந்து
அறிவை மேம்படுத்தினோம்...
உணவு உண்ணமாட்டேன் என
அவள் அடம்பிடிக்க....
அவள் பின்னே உணவுடன்
ஊட்டிக் கொண்டே நான் சுற்ற...
அழகாய் களிந்தது அந்த நாட்கள்...
பல குட்டி குட்டி சண்டைகள் வந்து போக...
மன்னிப்பு என்னும் வார்த்தையில்
மிட்டாய் காக சண்டையிட தொடங்கினோம்....
இன்றும் அவளுக்கு நான் தர வேண்டிய
மிட்டாய்கள் பாக்கி உண்டு...😜
கண்களிள் கண்ணீருடன்
எங்கள் தோழிக்கு வேறு பள்ளி
செல்ல வழி அனுப்பினோம்...
அதுவே எங்களை தாக்கிய
பெரும் புயலாய் நாங்கள் நினைத்திருக்க..
எங்களுக்காய் காத்திருந்த சுழலை அறியாமல் சேட்டைகளுடனும் எங்கள் மற்ற தோழிகளுடனும் மிக மகிழ்ச்சியாய் நாட்களை களித்தோம்...
அவ்வருடம் முடிய...
மொத்தமாய் மூன்று வருடங்கள் கடந்திருந்தது...
நாட்கள் அதன் போக்கில் செல்ல....
நட்புகூட்டம் பிரியவே விதியின்
விளையாட்டு தொடங்கியது...
பல இன்னல்களை கடந்தும்
எங்கள் அனைவரின் நட்பும்
விரிசலிடாமல் இருக்க....
அன்று வந்தது ஒரு
மாபெரும் நடுக்கம்...
அதிலிருந்து நான் பாதியாக
உடைந்தே விட...
என் மற்ற தோழிகளுடன்
என்னை தாங்கி நின்றாள் அவள்...
என் தோழிகளுக்கு நான்
ஒரு அண்ணை என்ற போது...
அவளுக்கோ நான்
என்றுமே மச்சி தான்....
சிறு சிறு சண்டைகளும்...
சிறிய முறைப்பும்...
பெரிய அனைப்பும்
என நகர்கிறது எங்கள் இருவரின் நட்பு...
நான் காயப்பட்டு அமைதியாய்
அமர்ந்துவிடும் சமயம்
என் அருகில் அமர்ந்து
"தலை வலிக்கிறதா"
என கேட்கும் அவளின் சோக
கேள்வியில்
என் முழு வலியும்
காணாமல் போய்விடும்...
இல்லாத காரியத்தை
நான் கூறியதாய் கூறி
என்னை அதிர்ச்சியடைய
வைத்து சிரிப்பாள் அவள்...
அவளின் அச்சிரிப்பிற்கே இல்லாத
அவ்வொன்றை இருப்பதாகவே
என்ன தொடங்கிவிட்டேன் நான்... 😜
காலம் செல்லும் பாதையை
நாம் அறியமுடியாத போதிலும்...
என் நட்பின் மேல் நான் கொண்ட
நம்பிக்கையில் உறுதியாய் கூறுவேனடி...
நம் நட்பு என்றுமே
முற்றுபுள்ளி இல்லாமல் தொடரும் என்று.....
காலம் போகும் போக்கில்
நான் நகரும் போது
நம் மற்ற தோழிகளுடன்
நீயும் உடன் வருவாயடி
தோழியே....
- உன் அன்பு தோழி....
அவள் வேறாரும் அல்ல இதயங்களே என் உயிர் தோழி Sabilah2802
Hiii guys.... en pinky avalukkaga oru kavithai eludha sonna...romba perusa thaa eludheerken.... same ithey maari en besties elara pathium kavitha eudha poren.... aduthaduthu athaan pa.... pudichiruntha sollunga😊
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro