என் தோழியே (J)
அழகே அமுதே.. என் வாழ்வில் நுழைந்த என் தேன்மெழுகே... என்னை விட பெரியவளாயினும்... உன் காதை திருகும் நொடி குழந்தையாய் மாறுகிறாயடி.... என் குழந்தையாக மாறிப்போன சமயம்.. என்னையும் உன் அன்னையாக்கினாயடி.... இன்ப துன்பமனைத்திலும் பங்கு கொண்டாய்... என் சினத்தை புரிந்துக் கொண்டு... தேவைவான தனிமை அளித்து விலகி நின்றாய்... யாருக்கடி வரும் இந்த அர்ப்புத வரம்... நான்கு வருடம் பழகிய தோழியானவளின் அறிவுரையை மதித்து உயிருக்கு சமமானதை உன் நலத்திற்காய் தள்ளி வைப்பது... தவறு செய்த குழந்தை அன்னை முன் நிற்பதை போல் என் அன்று நின்றாயே என் முன் கண்களை விரித்து.... உன் மகிவிற்காய் எதுவாயானும் செய்ய துடிக்கும் என் மனம்.... அதில் ஏற்படும் பின் விலைவு உன்னை பாதித்திடுமோ என்று நொடிக்கு நொடி தவிக்குதடி.... உன்னை கண்டிக்க வேண்டிய தோழிகளாகிய நம் கூட்டத்தில் நான் மட்டும் உன் புறம் நிற்பது உன் தவறை ஆதரிக்க இல்லையடி... உன் தவறின் பின் மறைந்ருக்கும் உன் ஆனந்தத்திற்காகவும்... நீ சிறு தவறு செய்தாளும்... அது பூகம்பமாகும் முன்னே மூடி மறைக்கமல் என்னிடம் கூறுவாய் என்ற அளவிலல்லா நம்பிக்கையால் தான டி....
- உன் தோழி...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro