✨திருடியே! மேரி மீ மேரி மீ-7✨
இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தாள் சீதா.
சொப்னாவை கூப்பிட கத்த முயன்றவளின் இதழோடு தன் இதழை அழுத்தி இருந்தான் யாதவ்.
இத்தனைக்கும் சீதா முகத்தை மறைத்திருந்த அந்த கருப்பு நிற முகத்திரையின் மேல்தான் அவன் உதட்டினால் அழுத்தி இருந்தான். ஆனாலும் அவன் உதட்டின் ஈரப்பதமும் வெப்பமும் அவன் வாசமும் இவள் உதட்டில் நன்கு அழுத்தமாகவே பதிந்திருந்தது.
என்ன இது புதுவிதமான உணர்வு...
நெஞ்சாங் கூட்டில் இருந்து இதயம் தெறித்து விழுந்துவிடுமோ? என்று அஞ்சும் அளவிற்கு பயங்கரமாக இதயம் துடிக்கும் சத்தம் அவளுக்கே கேட்பதாய்...
உடம்பில் உள்ள அத்தனை அணுக்களும் அவளின் மூளையுடன் சேர்த்து மயங்கி சரிந்தது போலும்... எந்தவித பிரதிபலிப்பும் இல்லாமல் விழி விரித்து அவனைப் பார்த்திருந்தாள் அந்த இளம் நங்கை.
உணர்ச்சி மிகுதியால் யாதவ்வின் கைகள் சீதாவின் மெல்லிடையை அழுத்த, அவ்வளவு நேரம் அவளை சூழ்ந்திருந்த அந்த மாய வலை அறுந்து விழுந்தது.
தன்னிலை தெளிந்தவள், தன்னை அட்டை போல் ஒட்டி இருந்தவனை
தன் பலம் கொண்ட மட்டும் மிதித்து தள்ளி, "டேய் எச்ச ...தெரு பொருக்கி நாயே என்னாடா பண்ற? என்னா யாருன்னு நெனச்சி இப்படி எச்சி பண்ண...ஒ***" என்று தனக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டியவள்,
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கண்களில் ரௌத்திரத்தை தேக்கியபடி எதிரில் நின்றவனை பார்க்க, அவனோ முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அவளின் செய்கை பார்த்தவாறு நின்றிருந்தான்.
'இவனான்ட பெரிய ரோதனையா போச்சே .. தொண்ட தண்ணி வத்த வத்த இந்தா கிழி கிழிக்கறே சொரணையே இல்லாம நிக்கான்.. சொரண கெட்ட பய' என்று நினைத்து நிமிர்ந்த சீதா அதிர்ந்தாள்.. யாதவ் இப்பொழுது ஒவ்வொரு அடியாக நிதானமாக எடுத்து வைத்தவாறு அவள் அருகில் நெருங்கி வந்தான்.
'இவனான்ட பார்வையே சரியில்லையே குறுகுறுன்னு பாக்கறானே..'என்று நினைத்து சீதா, அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பின்னோக்கி அடி எடுத்து வைக்க, இறுதியாக பின் இருந்த சுவற்றின் மீது மோதி நின்றாள் அவள்.
"இந்தா பாரு டா என்னான்ட ஏதாவது தப்பு பண்ண ட்ரை பண்ண பேஜாரா போயிடும் பாத்துக்கோ.. கொல பண்ணிடுவேன் உன்ன" என்று சீதா படபடக்க,
அவள் சொன்னதை அதை சிறிதும் கண்டு கொள்ளாத யாதவ் அவளின் முகத்தை மூடியிருந்த முகத்திரையை விலக்க முயல,
சீதா அவனை தள்ள முயன்று முடியாமல் போக,
தன் இறுதி ஆயுதமாக தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த, மினி மயக்க மருந்து ஸ்பிரேயை அவன் முகத்தில் அடித்திருந்தாள் சீதா.
அதை சற்றும் எதிர்பார்க்காத யாதவ், தான் விலக்கியதால் அரைகுறையாகத் தெரிந்த அவளின் பாதி முகத்தைப் பார்த்தவாறே மயங்கி சரிய, கோபத்தில் அவனைக் காலால் எட்டி மிதித்தவள்,
அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி மறைந்தாள்.
மறுநாள் காலையில் திருமணம் நல்லபடியாக நடப்பதற்காக விநாயகர் வழிபாடு நடக்க, இரு வீட்டு பெரியோர்களும் உறவினர்களும் அதில் கலந்து கொண்டனர். மணமக்களின் திருமண உடைகள் நகைகள் மாங்கல்யம் அனைத்தும் இறைவனின் முன் படைக்கப்பட்டது. இந்த சடங்கில் மணமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லாததால், நல்ல வேளையாக யாதவ் தேடப்படவில்லை.
உண்மையை சொல்ல போனால் யாதவ் மயக்கத்தில் இருந்து எழும்போது நன்றாகவே விடிந்திருந்தது.
தரையில் சுருண்டு கிடந்ததால் அவன் மேனி எங்கும் தூசாகவும் மண்ணாகவும் இருக்க, மற்றொருபுறமுமோ உடலெங்கும் அடித்து போட்டது போல வலித்தது.(சீதாவின் மிதி அப்படி)
நேற்று இரவில் நடந்ததெல்லாம் ஒவ்வொன்றாக நினைவு படுத்தியவன் இறுதியாக நடந்தது நினைவிற்கு வந்ததும் அவசரமாக எழுந்து தன்னறைக்கு திரும்பி வந்தபோது விநாயகர் பூஜையே முடிந்து இருந்தது.
அவனுடன் அவன் அறையில் தங்கி இருந்த பிரகாஷ், திரும்பி வந்தவனை சந்தேகமாய் பார்த்து,"யாதவ் நேத்து நைட்டு எங்க போன? நா இடையில தண்ணீர் குடிக்க எழுந்தப்ப நீ பெட்ல இல்லையே? எங்க போயிட்டு வர? ஏன் உன்னோட டி-ஷர்ட் எல்லாம் அழுக்கா இருக்கு?" என்று சற்று சந்தேகமாகவே கேட்க,
பிரகாஷை ஒரு பார்வை பார்த்தவன்," கபடி விளையாட போனேன்" என்று சொல்லிவிட்டு அவனின் பதிலை எதிர்பார்க்காது குளியலறைக்குள் சென்று விட,
"என்னது கபடியா?"
அவனின் பதிலில் மேலும் குழப்பம் ஆகி போனான் பிரகாஷ்.
விநாயகர் பூஜை முடிந்தவுடன் காலை உணவு அதன் பிறகு மெஹந்தி பங்க்ஷன் சங்கீத் பங்க்ஷன் மாலை நலங்கு என்று வரிசையாக நிகழ்ச்சிகள் எல்லாம் இருக்க, மண்டபமே பரபரப்பாக தான் இருந்தது.
சீதா பார்லர் பெண்களுடன் சொப்னாவை அலங்காரம் பண்ண அவளது அறைக்கு செல்ல, அங்கோ அவளின் வெளிநாட்டு தோழர் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள் .
சீதாவிற்கு சிறு ஆர்வம் உள்ளுக்குள் அரிக்க ஆரம்பித்தது.
இந்தக் கூட்டத்தில் தானே அழகு சிலையின் காதலன் இருப்பான் என்று...
எனவே கூட்டத்திலிருந்தவர்களை சற்று கூர்மையாக பார்க்க ஆரம்பித்தாள்.
அதன் பலனாக சொப்னாவின் அமெரிக்கா தோழன் ஒருவன் சீதாவை ஆர்வமாக பார்க்க ஆரம்பிக்க, 'இது என்னங்கடா கொடுமையா போச்சு'என்றும் மனதிற்குள் நினைத்த சீதா தனது பார்வையை விலக்கிக் கொண்டாள். ஆனால் அவன் விலக்கவில்லையே!
அதன் பிறகு சொப்னா நண்பர்களை ஓய்வெடுக்க சொல்லி அனுப்ப, அவர்களும் அந்த அறையை விட்டு சென்றனர் போகும்பொழுது அவளை ஆர்வமாக பார்த்த அந்த அமெரிக்க இளைஞன் அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு செல்ல சீதாவிற்கு திக்கென்று இருந்தது.
அதன் பிறகு சொப்னாவை ரெடியாகுவதற்காக பார்லர் பெண்கள் தயாராக, சீதா நேற்றைய தினம் போல் சொப்னாவிடம் திட்டு வாங்க விரும்பாமல், நேரடியாக எந்த வேலையும் செய்யாமல் ஓரமாக நின்று மற்ற பெண்கள் கேட்பதை மட்டும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அதை கவனித்துக் கொண்டிருந்த சொப்னாவிற்கு சீதா வேலை செய்யாமல் மட்டம் அடிப்பது போல் இருக்க,
அதற்கு ஒப்பீடாக
அன்றைய விழாவில் சீதாவை தனது டச்சப் கேர்ள் ஆக தன் அருகிலேயே இருக்குமாறு உத்தரவிட்டு விட்டாள் அவள்.
அதைக் கேட்ட சீதாவோ, "பேசாம நேத்திக்கு மாதிரி ரெண்டே ரெண்டு திட்டு வாங்கினு போயிருக்கலாமே.. வட போச்சே" என்ற மனநிலையில் இருந்தாள். பின்னே நேற்று எப்படியோ யாதவ் கைகளில் இருந்து தப்பித்து விட்டாலும் அவனுக்கு ஒரு வேளை தன் முகம் அரைகுறை ஞாபகத்தில் இருந்தாலும் அவள் அவன் கண்முன்னே சென்று நின்றால் கண்டு கொள்வான் தானே?
"யாதவ் கண்ணா என்னடா கைல இவ்ளோ பெரிய காயம் ஆகிருக்கு அதுக்கு மருந்து கூட போடாம இவ்ளோ நேரம் வச்சிருக்க?" என்று கடிந்து கொண்டே அவனது கையில் மருந்து தடவிக் கொண்டிருந்தார் தாயம்மாள்.
அவர் அருகில் அமர்ந்திருந்த அதை கவனித்துக் கொண்டிருந்த அவனின் அன்னை யசோதா, "உங்களுக்கு எதுக்கு சிரமம் என்கிட்ட குடுங்க அத்தை நான் போட்டு விடுறேன்" என்று சொல்ல, "இதுல என்ன சிரமம் இருக்கு" என்று அதை மறுத்த தாயம்மாள் தன் பேரனுக்கு தானே மருந்திட்டு பேண்டேஜும் போட்டு விட்டார்.
" கல்யாண வேலை ஆரம்பிச்சதுல இருந்து சகுனமே சரியில்ல .. ஒவ்வொரு பிரச்சனையா வந்துட்டே இருக்கு என் பேரனுக்கு" என்று தாயம்மாள் புலம்பிக்கொண்டே மற்ற வேலைகளை மேற்பார்வை செய்ய யமுனாவை அழைத்துக் கொண்டு செல்ல, அவர்கள் சென்றதும் அவசர அவசரமாக உள்ளே வந்த அனன்யா சிரித்துக்கொண்டே "அண்ணா அண்ணிய மீட் பண்ணியா?" என்று குறும்புடன் சிறுபிள்ளை போல் கேட்க, யாதவ் இதழ் பிரியாத சிரிப்புடன் ஆம் என்பது போல் தலையசைத்தான்.
அதற்குள் அனன்யாவின் பின்னே வந்த பிரகாஷ், "ஓ நைட் ஃபுல்லா நீ ரூம்ல இல்லாததுக்கு இதுதான் காரணமா? நான் கூட உன்னை பொண்ணுங்க விஷயத்துல அம்பின்னு நெனச்சேன் டா.. நீ என்னடானா ஜெட் ஸ்பீட்லல போற"என்று சொல்ல,
யாதவ் சிரிப்பை நிறுத்திவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.
'அண்ணா இப்பதான் நல்ல மூடுல இருந்தான் அதுக்குள்ள மூக்கு வேர்த்த மாதிரி இந்த வளர்ந்து கெட்டவன் வந்து கெடுத்துட்டான்' என்று நினைத்தவள், "அடுத்தவங்க பர்சனல் லைஃப்க்குள்ள மூக்கு நுழைக்காதீங்க மிஸ்டர் தென்ன மரம்.. உங்க வேலைய மட்டும் பாருங்க"என்று கடுப்பாக சொல்ல,
"ஓஹோ சரிங்க குட்ட கத்திரிக்கா நீங்க சொல்லிட்டீங்கனா கரெக்டா தான் இருக்கும்.. நீங்க தான் பெரிய வக்கீலு ஆச்சே"என்று அதே கடுப்புடன் சொல்ல, இரண்டு பேரும் எப்போதும் போல எலியும் பூனையுமாக சண்டையை சிறப்பாகவே ஆரம்பித்திருந்தனர்.
யாதவ் அவர்களை கண்டு கொள்ளாமல் தனது மரகதக்கல் நிற ஷெர்வாணியில் இடது பக்கம் மார்புக்கு குறுக்காக இருந்த தலைகீழாக கிடந்த தங்க நிற சங்கிலியை கண்ணாடியின் முன்னின்று சரிப்படுத்தி விட்டவன் இறுதியாக தனது கிளவுசை போட்டு முடித்துவிட்டு,
"பங்க்ஷன் ஸ்டார்ட் ஆக கொஞ்ச நேரம் தான் இருக்கு போகலாமா? ஐ வாண்ட் டு சீ மை ஃபியான்சி பேட்லி"என்று சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடம் சொல்ல, இருவரும் ஒன்று போல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு 'போகலாமே' என்றனர் கோரசாக...
பொதுவாக மெஹந்தி பங்க்ஷன் வட இந்தியா பகுதிகளில் ரொம்பவே பிரபலம், திருமணத்தின் போது மணமக்களுக்கு இருக்கும் மன அழுத்தம் குறையவும் மகிழ்ச்சியை பன்மடங்காக்கவே இது பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் இந்த சடங்கை காண்பது சற்று குறைவுதான் ...
அப்படி இருக்க, மற்ற திருமணங்களைவிட இது சற்று வித்தியாசமாகவும் புது விதமாகவும் இருக்குமே என்றுதான் திருமணப் பொறுப்பை கொடுத்திருக்கும் அந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஏற்பாடு செய்திருந்தார்கள்...
மணமக்கள் மட்டுமல்ல வந்திருந்த மற்றவர்களும் கூட இதை நன்றாக என்ஜாய் செய்வதற்காக, பலவிதமான நிகழ்ச்சிகள் அந்த பெரிய கார்டன் முழுவதும் நிரம்பியிருந்தது.
உணவு பிரியர்களுக்காக பாப்கான் ஸ்டால் ஸ்வீட் ஸ்டால் ஐஸ்கிரீம் ஸ்டால் குழந்தைகளுக்கான பஞ்சு மிட்டாய் ஸ்டால் என்று வரிசையாக தள்ளுவண்டி கடை போல் ஒரு புறம் வைத்திருக்க, மற்றொருபுறம் பெண்களுக்கான என்டர்டைன்மென்ட் ஆக பல்வேறு விதமான நிறங்களில் வளையல்களும் கம்மல்களும் ஹேண்ட் பேக்குகளும் விதவிதமாக அடுக்கி இருக்க,
அது போதாது என்று போட்டோ பூத் எனப்படும் புதுவிதமான போட்டோகிராபிக் ஐடியாவும் அன்றைய மெஹந்தி பங்க்ஷன் தீம்மில் இருந்தது. போலராய்டு கேமரா மூலம் விரும்பிய படி எந்தவித காஸ்ட்யூமிலும் உடனடியாக போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளலாம்.. இது பெரும்பாலும் இளைய தலைமுறையினரை ஈர்க்க அங்கு சற்று கூட்டம் அதிகமாகத் தான் இருந்தது.
அடுத்த பெரியவர்களுக்கான என்டர்டைன்மென்ட் ஆக புகழ்பெற்ற பாடல்கள்... தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற இளைய தலைமுறையினரால் பாடப்பட்டது.
இப்படியாக அந்த மண்டபமே கலகலவென்று சிரிப்பினாலும் சந்தோஷத்தினாலும் மூழ்கியிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
மற்ற இடங்களே அப்படி என்றால் மெஹந்தி பங்க்ஷன் நடக்கும் இடத்தை சொல்லவா வேண்டும்? மஞ்சள் ஊதா சிகப்பு நீலம் பச்சை என்ற பல வண்ண நிறங்களினால் ஆன துணிகளினால் கூரை வடிவம் போல் அழகாக கட்டப்பட்டு பூக்களினால் அலங்காரம் செய்யப்பட்டு கனகச்சிதமாக இருந்தது.
பூக்களினால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தாம்பூலத்தின் மேலே சுத்தமாக அரைத்த மருதாணி, கோன் வடிவத்தில் பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்க, அதை போட்டு விடுவதற்காகவே பியூட்டி பார்லர் பெண்கள் நான்கு ஐந்து பேர் வர வைக்கப்பட்டிருந்தனர்.
எல்லா ஏற்பாடுகளும் நிறைவடைந்த உடன் மணமகளான சொப்னா தனது தோழர் தோழிகளுடன் சிரித்துக் கொண்டே வர அதை வீடியோகிராபர்கள் வீடியோ எடுக்க என்று விழாவும் ஒருவழியாக ஆரம்பமானது.
இரண்டு பெண்கள் சொப்னா கைகளில் மெஹந்தி போட ஆரம்பிக்க, அவளின் அமெரிக்க தோழர்கள் சிலர் கிட்டார் வாசித்து ஆங்கில பாடல்களை பாட உற்சாகமாகியது அவ்விடமே...
மணமகள் இருக்கைக்கு சற்று தொலைவில் போடப்பட்டிருந்த இருக்கையில் யாதவ் அமர்ந்திருக்க, அவனின் தொழில் முறை நண்பர்கள் சிலர் அவனுடன் பேசியவாறு இருந்தனர்.
அவர்கள் கேட்டதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் யாதவ்வின் கண்கள் சுற்றி சுற்றி தன்னை அடித்து விட்டு சென்ற அந்த பர்தா போட்ட பஞ்சமுகி எங்கே? என்றுதான் தேடிக் கொண்டிருந்தது.
இதை அறிந்ததாலேயே சீதா தன் முகத்தை யாதவ் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்று நினைத்தவள், கூட்டத்தில் தன் முன்னால் நின்ற உருவத்தின் பின்னால் மறைந்து கொள்ள, அதுவோ மேலும் ஒரு பிரச்சனையை அவளுக்கு கொடுத்தது. பின்னே அந்த உருவம் வேறு யாரும் அல்ல இதற்கு முன் அவளைப் பார்த்து கண்ணடித்த அந்த அமெரிக்கா இளைஞன் தான்...
"ஹே கேர்ள்.. யு ஆர் சோ பியூட்டிஃபுல்.. டூ யூ வாண்ட் சிங் வித் மீ.."என்ற தன் பின்னால் நின்றவளைப் பார்த்து அவன் கேட்க, ஏற்கனவே ஆங்கிலம் பேசினால் அரை மைல் தூரம் ஓடிவிடும் சீதாவிற்கு அவன் சிங் என்று சொன்னது மட்டும் புரிய,
"நோ சிங்கு ...நோ சிங்கு எனக்கு பாடத் தெரியாது" என்று தனக்கு தெரிந்த வரை மறுத்து பார்த்தாள்.
ஆனால் அவனோ விடாது,
"ப்ளீஸ் ப்யூட்டிஃபுல் ஜஸ்ட் ஒன் சாங் இஸ் எனாப்? ப்ளீஸ்"என்று ஒரு பாடலாவது தன்னுடன் பாடுமாறு அவன் தொடர்ந்து வற்புறுத்த, அதுவரை தங்களுக்குள் பாடி சிரித்துக் கொண்டிருந்த மற்ற அமெரிக்க தோழர்கள் ஓரிருவர் கவனமும் அவனால் அவள் மீது வந்து விட,
'ஐயோ எல்லாம் ரவுண்டு கட்டி என்னையே போக்கஸ் பண்ணுதே ...டேய் பரட்ட தல நான்லா பாடுனா நீ செத்துப் போய்டுவியே டா'என்று நினைத்தவள், சரி உன் விதி சாவுடா செத்த பயலே என்று விட்டு பாட சம்மதித்த சீதா,
"ஸ்நேகிதனை... ஸ்நேகிதனை... ரக்கசிய்ய.. ஸ்நேகிதனை.."என்று கோவை சரளா பாணியில் தலையை சொரிந்து கொண்டே பாட,
பாட சொன்னவனின் நிலை கேட்கவும் வேண்டுமா?
இது பைத்தியமோ? என்று விழி பிதுங்கி பயத்துடன் அவளைப் பார்த்தவன், "சாரி சிஸ்டர்" என்று அங்கிருந்து நகர்ந்து விட ,
'இதுக்காண்டி தான்டே சொன்னேன் வேணாம் வேணானு கேட்டியா நீ? போ போ பொழச்சிகின்ன' என்று மனதிற்குள் நினைத்தவள்,
அப்பொழுது தான் கவனித்தாள்.. கருப்பு பாகுபலி தூரத்தில் இருந்து அவளை அழைப்பதை... தான் அங்கே வருவதாய் சைகை செய்தவள், சுற்று முற்றும் யாரும் தன்னை பார்க்கிறார்களா? என்று ஒரு முறை பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றாள்.
இங்கு யாதவ் கண்களில் பர்தா அணிந்த பெண் ஒருத்தி பட அவசர அவசரமாக மற்றவர்களை கடந்து அவள் பின்னே சென்றவன், "ஹேய் நில்லு" என்று அந்தப் பெண்ணின் தோளைத் தொட,
அந்த பெண்ணோ பயத்தில் இரண்டடி பின்வாங்கினாள்.
யாதவ்விற்கு இது தான் தேடுபவள் இல்லை என்று புரிய, "சாரி சிஸ்டர் என் ஃப்ரண்டுன்னு நெனைச்சேன்" என்று மன்னிப்பு கேட்டுவிட்டு அவசரமாக அங்கிருந்து நகர,
யாதவ் பின்னையே வந்திருந்த பிரகாஷ் அவன் சொல்லியதை கேட்டு 'இவனுக்கு பெண் தோழியா?' என்று அதிர்ச்சி கலந்த சந்தேகத்தோடு யாதவ்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
கருப்பு பாகுபலியான பூபதி கூப்பிட்டதும் தனியாக வந்திருந்த சீதா,"சொல்லுடா பூவு, நான் சொன்ன வேலைல்லாம் பினிஷ் பண்ட்டியா?"என்று கேட்க
"ஆமா சீத்து எல்லாம் பினிஷ் பண்ணியாச்சு... பொருள தூக்குறது மட்டும் தான் பாக்கி.."என்றான் பூபதி. அவன் முகத்தில் இதை கச்சிதமாக முடித்து விடலாம் என்ற நம்பிக்கை வந்திருந்தது.
"ம்ம் அப்புறம் அந்த சாவி மேட்டரு?"
"அதுவும் ரெடி ஆயிடுச்சு சீத்து செக்யூரிட்டி ஹெட்டான்ட தான் சாவி இருக்கு.. நான் நோட் பண்டேன் அவர் எங்க வைக்கார்னு... நீ டைமிங்கு மட்டும் சொல்லு மீதி எல்லாம் நானும் கிரிஜாவும் பாத்துக்கிறோம்"
" ம்ம் சரி நான் கொஞ்சம் செக் பண்ண வேண்டிருக்கு ..அதை முடிச்சுட்டு டைமிங்கு மெசேஜ் ல போடுறேன்.. அதவிடு நம்மளாண்ட ஆளு குட்டி புலி சிசிடிவி கண்ட்ரோல் ரூம்குள்ள போயிட்டானா?"
"அத்த ஏன் கேக்குற? பெரிய ப்ராப்ளம் ஆவ பாத்துச்சாம்.. அவன் ஏதோ ஒரு குக்கர் மண்டையன்ட சிக்கிக்கின்னான் போல.. அப்றம் அவன கரெக்ட் பண்ணி எப்படியோ
சிசிடிவி கண்ட்ரோல் ரூம்குள்ள ஜாயிண்ட் அடிச்சிட்டான்... அந்த குக்கர் மண்டய எப்டி உஷார் பண்ணான்னு என்ட்ட கூட சொல்ல மாட்டேங்கறான் சீத்து"
"சரி எப்டியோ பாதி கடல தாண்டியாச்சு.. இன்னும் கொஞ்சம் தூரம் தான்.. இன்னைக்கு நைட்டே வேலய பினிஷ் பண்றோம் இந்த நாராசம் ஆன இடத்தை காலி பண்றோம்" என்று சீதா சொல்ல, பூபதியும் சரிதான் என்பது போல் தலையசைத்தான்.
சீதா நினைத்தது போலவே அன்றைய தினம் அவர்களின் திட்டம் நிறைவேறியது தான்... அதே நேரம் சீதா கனவில் கூட நினைக்காத விஷயமும் நடந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro