Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

✨திருடியே! மேரி மீ மேரி மீ-5✨

அத்தியாயம் 5:

"சீத்து எனக்கு நெஞ்சுக்குள்ள திக்கு திக்குன்னு இருக்கு டி கண்டிப்பா நம்ம இவ்வளவு இறங்கி போய் ரிஸ்க் எடுக்கணுமா ?"என்று பாவமாக கேட்ட பூபதியை பார்த்த முறைத்தாள் சீதா.

"டேய் கருவாயா உன்னோட தொங்கச்சி கல்யாணம் நடக்கணுமா? வேண்டாமா? "

"நடக்கணும் தான் ஆனாலும் எனக்கு பயமா இருக்கே சீத்து"

"டேய் டர்ரு பீசு ... பயமா இருந்தா போய் நடு ரோட்ல நில்லு லாரி ஏத்தினு போகும்...உனக்கு போய் எவன்டா கருப்பு பாகுபலின்னு பேரு வச்சா? அந்த கருமம் புடிச்சவன் மட்டும் என் கைல கிடைச்சா கைமா தான்"

"ஏன் சீத்து நீயும் கோபப்படுற? உன்ட்ட கேக்காம நான் யாராண்ட போய் கேப்பேன்"

"இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. இந்த செண்டிமெண்ட்டு மட்டும் கொடம் கொடமா கொட்டும்..வேற ஒன்னும் நொட்டாது.. சரியான தொட நடுங்கி பய"

"சீத்து... ஆனாலும்... எனக்கு என்னமோ.. ஒரு மாதிரி"என்று விடாமல் அவன் ஏதோ சொல்ல வர,

"எப்பாடா டேய் ...ஏண்டா இந்தா வரத்துக்கு வார ..சும்மா நொய்யி நொய்யின்னு வராத. கோவம் வந்தா ஓங்கி செவில்ல விட்டுருவேன்.. அப்றம் காது கொய்யின்னு தா கேட்கும்"

"எப்பா ரெண்டு பேரும் தயவு பண்ணி சண்டையை விட்டு தொலைங்க.. நமக்கு இப்போ தொழில் தான் முக்கியம்" என்று இருவரையும் எச்சரித்தான் அவர்களின் சண்டையை அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குட்டி யானை ரவி.

"ஆமாக்கா சீக்கிரம் பிளான் என்னது ன்னு சொல்லு?'இன்று குட்டிப் புலியும் கேட்க,

"சரி சரி பொங்காதீங்க பிளான் என்னன்னு டீடைலா சொல்றேன்"என்ற சீதா"அதுக்கு முன்ன.. டேய் பூவு நான் பேசும்போது வாய பொத்தினு இருக்கணும் புரிஞ்சுதா? இல்லாட்டி மொகறையை பேத்துடுவேன்" என்று எச்சரித்து விட்டு சொல்ல ஆரம்பித்தான்.

"இப்ப நம்மளாண்ட ஃபிளான் என்னன்னா நான் மண்டபத்துக்குள்ள பியூட்டி பார்லர் பொண்ணுங்க கூட உள்ளக்க போய்டுவேன்...
கிரிஜா நீ மண்டபத்துல டீ காபி கூல் ட்ரிங்ஸ் குடுக்குற ஆட்களோட ஜாயின் அடிக்க போற...
அப்புறம் பூவு நீ மீசை மருவு எல்லாம் வச்சு மாறுவேஷத்துல  பாடி கார்ட் கெட்டப்ல அவங்களோட மிங்கிளாகிடுற... குட்டி புலி நான் சொல்ற டைமிங்ல நீ மண்டபத்துல உள்ள சிசிடிவி கண்ட்ரோல் ரூம் குள்ள போய் ஆகணும்... நீ எந்த கெட்டப்புல போவியோ அது உன்னோட இஷ்டம் ...
அப்பறம் ரவி அண்ணே நீங்க அங்க சமையலுக்கு தேவையான பொருள மண்டபத்துக்கு கொண்டார்ற குட்டி யானை டிரைவரு... நான் கிரிஜா பூவு குட்டி புலி நாலு பேரும் மட்டும் தான் மண்டபத்துக்குள்ள இருப்போம்.. நீங்க நாங்க வந்ததும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மண்டபத்தை விட்டு வெளியே போகணும்."

"சீத்து பிளான் எல்லாம் கேட்க ரொம்ப சுலபமா தான் இருக்கு ஆனால் அடி வயித்த கலக்குதுடி.."என்று பூபதி திரும்பவும் பழைய ராகத்தை பாட ஆரம்பிக்க,

"இந்த ஆரம்பிச்சிட்டான்ல"என்று தலையில் அடித்துக் கொண்ட சீதா, அவன் புலம்பலை கண்டுகொள்ளாமல் புறந்தள்ளிவிட்டு,
"கண்ணுங்களா அவங்கவங்க வேலையே கச்சிதமா நான் சொன்ன மாதிரி அச்சு பெசங்கம்மா பினிஷ் பண்ணீங்கன்னா... நம்மளாண்ட பிளானு வொர்க் அவுட் ஆயிடும்.. இல்லாகாட்டி நம்ம வாஷ் அவுட் ஆயிடுவோம்"

"ஆமா நம்ம எப்படி அந்த மண்டபத்துக்குள்ள ஈஸியா போகப் போறோம் சீட்டு?"என்று கிரிஜா கேக்க,

"இது ஒரு நல்ல கேள்வி..இத நா அப்ரிஷியேட்டு பண்ணுறேன்..இந்த மேரேஜு வேல மொத்தத்தையும் ஒரு ஏஜென்சி கையில தான் கொடுத்திருக்காங்க... அவங்களுக்கு கொறஞ்ச சம்பளத்துல நிறைய கையாளுங்க தேவைப்படுதுனு நம்ம சேட்டு சொல்லுச்சு... நான் ஆல்ரெடி டீல் பேசிட்டேன் .. என் கணிப்பு சரியா இருந்துச்சுன்னா நம்ம சேட்டு மூலமா நமக்கு சுலபமாக வேலை கிடச்சுடும்... கெடச்சாகணும்.."

"அப்போ எந்த பிரச்சினையும் வராது தானே சீத்து?"என்று கேட்டது வேறு யாரும் அல்ல பூபதி தான்.

'மாரியாத்தா என்னான்ட கொஞ்சமாவது பொறுமைய கடன் கொடு‌‌...‌ மிடில' என்று மனதிற்குள் வேண்டுதல் வைத்தவள்,

"இங்க பாரு பூவு நமக்கு இருக்குறது ரெண்டே ரெண்டு ப்ராப்ளமுதான் ஒன்னு சிசிடிவி கேமரா இன்னொன்னு நாமதான்.. நம்ம எவ்வளவு தூரம் மத்தவங்க கண்ண உறுத்தாம கணிசமா நடந்துக்கிறோமோ.. அந்த மட்டுக்கு நம்ம பிளான் சக்சஸ் ஆயிடும்"

"சக்ஸஸ் ஆன குஜாலா தான் இருக்கும்" என்று மனதிற்குள் நினைத்த பூபதிக்கு நெஞ்சம் முழுவதும் பயம் மட்டும் குறையவில்லை.

பின்னே அவர்கள் திருட போவது என்ன சாதாரண வீட்டு கல்யாணத்திலா?

மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தும் முக்கிய புள்ளியின் திருமணத்தில் அல்லவா?... அவர்கள் கைவரிசையை காண்பிக்கப் போகிறார்கள்.

இன்று மண்டபத்தில்,

மணப்பெண் அலங்கார அறையில்,
மற்ற பியூட்டி பார்லர் பெண்களுடன் கலந்து இருந்தாள் சீதா.
இந்த வேலைக்கு அவள் செலக்ட் ஆனதற்கு முதற்காரணமே அவள் போலியாக வாங்கி இருந்த அந்த புகழ்பெற்ற கல்லூரியில் பேஷன் கோர்ஸ் சர்டிபிகேட் தான்... எப்படியோ செலக்ட் ஆகி விட்ட சந்தோஷத்தில் இதோ இங்கு தரையில் அமர்ந்து மணப்பெண்ணிற்கு காலில் நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருக்கிறாள் அவள்...

இந்த திருமணம் வடமாநிலத்து திருமணத்தை போன்று மூன்று நாட்கள் திருவிழா போல் நடைபெறுவதாக இருந்தது. முதல் நாள் நிச்சயதார்த்தம் இரண்டாம் நாள் மெஹந்தி பங்க்ஷன்/நலங்கு பங்க்ஷன் மூன்றாம் நாள் காலை திருமண வைபோகம் மாலை ரிசப்ஷன் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டு வீட்டிலும் இது தான் முதல் திருமணம் என்பதால் ரொம்பவே கோலகாலமாக கொண்டாட முடிவு செய்திருந்தனர்.

மணமகள் கோலத்தில் இருந்த சொப்னா சீதாவின் கண்களுக்கு பேரழகியாக தெரிந்தாள்.
பின்னே சுண்டி விட்டால் ரத்தம் வரும் போல் அந்த அளவிற்கு பள பளவென்று தமன்னாவைப் போல் வெள்ளையாக பளிங்கு சிலை போல் இருந்தவளை பார்த்தால் அவளும் என்ன நினைப்பாள்? "வெள்ள பிகரு.. ரிச்சு கேர்ளு.. கட்டிக்க போறவன் தொக்கா தூக்கினு போகப்போறான்.."என்று
மனதிற்குள் நினைத்தவள் மிக கவனமாகத்தான் நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது அந்த பளிங்கு சிலைக்கு ஃபோன் வர அலங்கார மேஜையின் அருகில் இருந்த டேபிளில் இருந்த மொபைலை எட்டி எடுக்க முயன்றவள் அவளாகத்தான் காலை ஆட்டிவிட்டாள். அப்போது ஏற்பட்ட அசைவினால் சீதா காலில் போட்டுக் கொண்டிருந்த நெயில்பாலிஷ் கோடாக கிழிக்க, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கையிலெடுத்த போனையும் தவறவிட்டிருந்தாள் சொப்னா.
தவறு என்னவோ அவள் மீதுதான்.
ஆனால் பழி என்னவோ சீதாவின் மீது விழுந்து விட்டது.

"ஓ ஷிட்ட்..."கீழே விழுந்து டிஸ்ப்ளே உடைந்து போன மொபைலையும் தனது அலங்கோலமாய் போன கால் அலங்காரத்தையும் பார்த்து கத்தியவளின் கை விரல்கள் கோபத்தில் சீதாவின் கன்னத்தில் பதிந்திருந்தது.

"ஹொவ் டேர் யு? எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட கால இவ்வளவு அசிங்கமாக்கி இருப்ப? ஒரு வேலையை உருப்படியா செய்ய முடியாத ஆட்களை எல்லாம் எதுக்கு தான் அரேஞ்ச் பண்ணாங்கன்னு தெரியல.. கெட் அவுட் ஆப் மை சைட்" என்று அவள் கத்திய கத்தலில் சீதாவின் காதுகள் இரண்டிலும் 'கொய்ங்'என்று சத்தம் கேட்டது.

உண்மையான சீதா என்றால் இந்நேரம் சொப்னாவின் காதுகள் தான் அவளின் பேச்சைக் கேட்டு 'கொய்ங்' என்று சத்தம் எழுப்பி இருக்க வேண்டும். ..
இங்கு தான் வந்த வேலையை வேறு என்பதால், 'பொறும பொறும' என்று கோவத்தையும் ரோஷத்தையும் மூட்டை கட்டி வைத்த சீதா, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு,
"ரொம்ப சாரி மேடம் மன்னிச்சுக்கோங்க வேலைக்கு புதுசு இனி இப்படி தப்பு நடக்காது மேடம்"என்று சொல்ல அவளுடன் இருந்த மற்றவர்களும் "ஆமாம் மேடம் புதுசா வேலைக்கு வந்திருக்கிற பொண்ணு.. மன்னிச்சுடுங்க.. இனி அப்படி பண்ண மாட்டா.. வேலைய விட்டு அனுப்பிடாதீங்க மேடம்" என்று சீதாவை பாவம் என்று நினைத்து சப்போர்ட் செய்தார்கள்.

பின்னே வேலைக்கு சேரும்பொழுதே தனக்கு உடல்நிலை சரியில்லாத தாயும் கல்யாண வயதில் ஒரு அக்காவும் குடிகார அண்ணனும் இருப்பதாகவும் செண்டிமெண்டாக பல கதைகள் சொல்லி அல்லவா? அவள் வேலைக்கு சேர்ந்தாள்.

சீதா தனக்கு சப்போர்ட் செய்தவர்களை நன்றியுடன் பார்க்க, சொப்னா மீண்டும் கத்த ஆரம்பித்திருந்தாள்.

"வாட் த ஹெல்? நீங்க சொல்றத பார்த்தா நான் என்னவோ தப்பு பண்ண போற மாதிரியும் அவ உலகமே தெரியாது அப்பாவி மாதிரியும் இருக்கே? டூ யூ ஆல் நோ ஹூ ஐ அம்? எனக்கு தெரியும் யார வேலைக்கு வைக்கணும் யாரை வைக்க வேண்டாம்னு.. சோ ஷட் அப் யுவர் மவுத் இடியட்ஸ்..இப்ப கூட நான் நெனைச்சா உங்க எல்லாரையும் வேலையை விட்டு தூக்க முடியும் பி கேர்ஃபுல்"
என்றவள் தலையை சிலுப்பிக் கொள்ள,

'ச்சீ த்தூஊஊ இதப்போய் அழகு செல பளிங்கு  மலன்னு நெனச்சு ஜொள்ளு விட்டேனே சரியான காட்டேரிக்கு பொறந்த காட்டேரியா இருப்பா போல.. இங்கிலீஷ்ல புரியாத மாதிரி வள்ளுவள்ளுன்னு கொலச்சிகிட்டே இருக்கா.. இவளான்ட கல்யாணத்துல போய் இப்படி பண்ண போறமேனு உள்ளுக்குள்ள அரிச்சிடே இருந்துச்சு இனி உனக்கு பாவமே கிடையாது டி வெள்ள காக்கா' என்று சீதா ஒருபுறம் மனதிற்குள் அவளை வறுத்தெடுக்க ,

"சாரி மேடம் தெரியாம சொல்லிட்டோம்.. இனி இப்படி தப்பு நடக்காது ... இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க"என்று மற்ற பார்லர் பெண்கள் ஒன்று போல் மன்னிப்பு கேட்டதும் சற்று அமைதியானவள்,

"சரி இதுதான் லாஸ்ட் வார்னிங் ... இனி ஒழுங்கா நடந்துக்கணும்"என்று எச்சரித்துவிட்டு

"ஃபர்ஸ்ட் நீ என்னோட கால நீட்டா கிளீன் பண்ணு"என்று அதிகாரமாக கீழே அமர்ந்திருந்த சீதாவின் முகத்திற்கு நேரே காலை நீட்டினாள் அவள்.

விட்டால் முகத்தில் பட்டுவிடும் தூரத்தில் இருந்த அவளது கால்களை மடியில் வைத்தவள், மனதிற்குள் 'சீதா பொறும பொறும... பொறும எருமையை விட பெருசு ..இதெல்லாம் யாருக்காக பண்றோம் நம்ம தோஸ்த்து பூவுக்காக தானே..' என்று தனக்கு தானே மந்திரம் போல் சொல்லிக் கொண்டவள் நெயில் பாலிஷ் ரிமூவர் மூலமாக சொப்னா கால்களில் கோடாக இருந்த நெயில் பாலிஷை காட்டன் உதவியால் துடைத்தாள்.
பின் பொறுமையாக நெயில் பாலிஷ் போட்டு  முடித்தவள், அடுத்ததாக சொப்னாவின் காலுக்கு மணிகள் பொதிந்த தங்க கொலுசினை மாட்டிவிட்டு  அப்பாடா என்று நிமிர அந்த அழகு சிலை சிகை அலங்காரம் முக அலங்காரம் முடிந்து தயாராகி இருந்தது.

உடை மட்டுமே மாற்ற வேண்டும் என்பதால், டிரஸ் ஸ்டைலிஸ்டான இரண்டு பெண்களை தவிர மற்ற பார்லர்  பெண்கள் அனைவரும் வெளியே வர அவர்களுடன் சேர்ந்து வெளியே வந்து விட்டாள் சீதா.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அவர்கள் அங்கேயே தான் தங்க வேண்டும் என்பதால் அனைவருக்கும் ஒரு அறையை அங்கு ஒதுக்கி கொடுத்திருந்தார்கள். அறைக்கு வந்தவள் தனது மொபைலில் தனது கூட்டாளிகளுக்கு தகவல் அனுப்பியவள்.. பெருமூச்சுடன் தான் செய்ய வேண்டியதை திட்டமிட ஆரம்பித்தாள்.

அதே நேரத்தில் இங்கு மணமகன் அறையில்  ஹேர் ஸ்டைலிஸ்ட் உதவியுடன் தனது முடியை ஜல் தடவி முடியின் மேல் பகுதியை இறகு போல் ஒதுக்கி விட்டு பின்பகுதியை படிய வாரி ஹாலிவுட் ஹீரோவிற்கே டஃப் கொடுப்பது போல் தயாராகி இருந்தான் யாதவ் ஜிதேந்திரன்.

அவன் அணிந்திருந்த ராயல் ப்ளூ நிறத்திலான கோட் மாடலில் செய்யப்பட்ட ஷர்வானி அவனை இளவரசனாக காட்ட,

"அண்ணா செம ஹேண்ட்ஸமா இருக்க... இன்னைக்கு உன்ன பார்த்ததுமே அண்ணி பிளாட்டாக போறாங்க.. யுவர் மார்வலஸ்"என்று அனன்யா தன் அண்ணனின் அழகை பாராட்டிக் கொண்டிருக்க, செய்கையாலேயே ஹேர் ஸ்டைலிஸ்ட்  டிரஸ் ஸ்டைலிஸ்ட் அனைவரையும் வெளியே அனுப்பியவன்,
"அனு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்... "என்றான்.

தன் அண்ணன் அவ்வளவு சீக்கிரம் உதவி கேட்கும் ஆள் இல்லை என்பது தெரிந்ததால்
"சொல்லு அண்ணா என்ன பண்ணனும் நான்?"என்று அனன்யா தன் அண்ணனுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்து சீரியஸாக கேட்க,

அவனோ,"ஐ வாண்ட் டு மீட் சொப்னா ஆனா அது யாருக்கும் தெரிய கூடாது இன்க்ளூடிங் நம்ம ஃபேமிலிக்கு தெரியக்கூடாது ... எங்கேஜ்மென்ட் செர்மோனி ஓவரானதும், ஒரு பத்து மணிக்கு மேல மத்தவங்கள அட்ராக்ட் பண்ணாத மாதிரி எப்படியாவது அவள மேரேஜ் ஹாலொட லாஸ்ட் ப்ளோர் பால்கனிக்கு வர சொல்லிடு.. முக்கியமான விஷயம் அவள தனியா வர சொல்லு..."என்று சொன்னது தான் தாமதம் அவ்வளவு நேரம் அமைதியாக அதை கேட்டுக் கொண்டிருந்த அனன்யா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

பின்னே திருமணத்தில் ஆர்வமே இல்லாதது போல் சுற்றிக் கொண்டிருக்கும் அண்ணனை நினைத்து தன் பெற்றோர்கள் எவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறார்கள் என்று அவளுக்கும் தெரியும் தானே?

ஆனால் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல் இருக்கும்  அண்ணன் தன் வருங்கால அண்ணியை சந்திப்பதற்காக அதுவும் தனியாக சந்ததிப்பதற்காக நடுராத்திரி பால்கனிக்கு வரச் சொல்லி தங்கையை தூது விடுகிறான்? திருமணத்தில் ஈடுபாடு இல்லாதவன் செய்யும் செயலா இது? என்று நினைத்தவள் சிரிப்பை அடக்க இயலாது குலுங்கி குலுங்கி சிரித்தவள்
"அனு ஸ்டாப் இட் எதுக்கு இப்போ சிரிச்சிட்டு இருக்க? நான் என்ன ஜோக்கா சொல்லிட்டு இருக்கேன்? உனக்கு ஹெல்ப் பண்ண முடிஞ்சா ஹெல்ப் பண்ணு... ஆர் லீவ் இட்"என்று தன் அண்ணனின் கோபமான குரலில் தான் அடங்கினாள்.

"சாரி அண்ணா ப்ளீஸ் கோச்சுக்காத.. நீ சொன்னத அண்ணி கிட்ட இப்பவே போய் சொல்லிடுறேன்.. யூ டோன்ட் வொரி யார்கிட்டயும் இந்த சீக்ரெட்டை சொல்ல மாட்டேன்" என்று உறுதியுடன் சொன்னவள் மீண்டும் சிரித்துவிட்டு  ஓடிவிட,

தங்கையின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட யாதவ் அவள் செல்வதை மௌனமாக பார்த்திருந்தான்.

அலங்காரம் பொருந்திய அந்த மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர் மணமக்கள். மேடையை அலங்கரித்திருந்த வண்ண பூக்கள் ...சீரியல் பல்ப் மூலமாக உருவாக்கப்பட்டிருந்த இதய வடிவ கூண்டு அதில் 3d பிரிண்ட் அவுட் போல்  அழகாக அடுக்கி  வைக்கப்பட்டிருந்த மணமக்களின் பெயர்கள்.. மேடையின் இருபுறமும் ப்ளுரசன்ட் லைட்டினால் உருவாக்கப்பட்டிருந்த டியூப் வடிவ அலங்கார பூச்செடிகள் அந்த இடத்தின் பளபளப்பை கூட்ட பூலோக சொர்க்கமாக காட்சியளித்தது அந்த மேடையே...உற்சாகமுடன் உறவினர்களும் நண்பர்களும் சுற்றித்தார்களும் அறிந்தவர்களும் தெரிந்தவர்களும் ஒன்றாக கூடி ஆர்ப்பரிக்க, அழகு மயிலென மணப்பெண்ணும் ஆண்களுக்கே உரிதான அனைத்து லட்சணங்களும் பொருந்திய ராஜகளையுடன் மணமகனும், மேடையில் வீற்றிருக்க இனிதாக துவங்கியது அந்த நிச்சயதார்த்த விழா.

மேடையில் இரண்டு வரிசையாக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தாம்பூலங்கள், இரண்டு வீட்டு பெற்றோர்களால் மாற்றப்பட்டு சம்மதத்தை உறுதி செய்ய, அடுத்த சடங்காக ஐயர் மூலம் நிச்சய பத்திரிகை வாசிக்கப்பட்டது.

அதன் பிறகு மணமக்கள் மோதிரம் மாற்றி கொள்ளும் சடங்கு ஆரம்பமாக, அழகான  ரோஜா பூக்கள் சூழ அலங்கரிக்கப்பட்டிருந்த வெள்ளி தாம்பூலத்தின் நடுவே வைக்கப்பட்டிருந்த மோதிரத்தை கையில் எடுத்துக் கொண்ட சொப்னா யாதவ்வை பார்க்க, அவனும் அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த மோதிரத்தை கையில் எடுத்தபடி அவளை பார்க்க, அந்த நொடி அழகாக புகைப்படமாக எடுக்கப்பட்டது.

தாயம்மாவின் ஆணைக்கிணங்க மோதிரம் மாற்றுவதற்காக வலது கையில் மட்டும் கிளவுஸ் அணியாமல் இருந்த யாதவ்வின் கைகளைப் பிடித்து அழகாக மோதிரத்தை மாட்டி விட்டாள் சொப்னா. அவள் கைகளைப் பிடித்த நேரம் அவன் உடல் இறுகியது.

அடுத்ததாக அவனும் பட்டும் படாமலும் எப்படியோ மோதிரத்தை அவளுக்கு மாட்டிவிட  சடங்கு பூர்த்தியானது.

அங்கு மண்டபத்தில் கூடியிருந்த  அனைவருமே அவர்களின் ஜோடி பொருத்தத்தை பற்றி பேச, கூட்டத்தின் கடைசியில் ஓரமாக நின்று கொண்டிருந்த சீதாவும் அவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து வாயைப் பிளந்தாள்.

"எப்படா டேய் ...வெள்ள பிகரு ரிச்சு கேர்ளுக்கு ஏத்த சரியான ஜோடிதாயா.. என்னா அழகு என்னா கம்பிரம்... என்னா ஸ்டைலு  என்ன மூஞ்சில தான் ஒரு ரியாக்ஷனும் இல்ல.. ஏதோ உணர்ச்சியில்லாத ரோபோ மாதிரி நிக்குது.. அந்த வெள்ள பிகர பிக்கப் பண்ண பிகிலு பார்டி..."என்று நினைத்தவள் தன் அருகில் வந்து நின்ற கருப்பு பாகுபலியை கவனிக்கவில்லை.

"சீத்து" என்று தன் அருகில் கேட்ட பழக்கப்பட்ட குரலில் திரும்பியவள், அவனின் முகத்தை பார்த்து அதிர்ச்சியானாள்.யாரோ அவனை நன்றாக அடித்ததற்கான அடையாளமாக  கன்னம் ஒரு பக்கமாக பொத்தாக வீங்கி போயிருந்தது.

அவனை இழுத்துக்கொண்டு, மறைவாக இருந்த தூண் அருகில் சென்றவள்,"டேய் என்னாச்சுடா பூவு யாரு உன்ன அடிச்சா?"என்று கோபத்துடன் கேட்க,

"எல்லாம் அந்த கல்யாண மாப்புள ராட்சசன் ....."என்று அவன் ஏதோ கூற வருவதற்குள்,

"ஹே அந்த தூண் பக்கத்துல நிக்குற ... பாடிகார்ட் சீக்கிரமா இங்க வா.. உனக்கு ஒரு வேல இருக்கு " என்று பெரியவர் ஒருவர்  கூப்பிட,

"நா அப்புறமா சொல்றேன்" என்று விட்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான் பூபதி.

அவன் மாப்பிள்ளை ராட்சசன் என்று பாதியில் விட்டு சென்றதே தானே பூர்த்தி செய்து கொண்டவள், இதற்கெல்லாம் காரணம் அந்த 'ரோபோ மாப்பிள்ளை' என்று  புரிந்து கொண்டாள்.

சீதாவை பொருத்த முடியும் அவளை காயப்படுத்தினால் கூட அவள் எளிதாக மன்னித்து விடுவாள்.. மறந்து விடுவாள்.. ஆனால் எக்காரணத்தைக் கொண்டு தனக்கு வேண்டியவர்களையோ நண்பர்களையோ காயப்படுத்தினால் அவர்களை அவ்வளவு எளிதில் சும்மா விட மாட்டாள்.

இன்றும் அதுபோல் தன் நண்பனை காயப்படுத்தியவனை சும்மா விடுவதா? என்று அவளின்  ரத்தம் கொதிக்க, அதனால் தான் இங்கிருந்து செல்வதற்கு முன் அவனுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

ஆனால் அவள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டாள் அதனின் பலனை...

தொடரும்...

உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன் நான்..☺️💗

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro