5. அவனுக்காக
காவலர்களோடு தந்தை வந்தார் என்னை மீட்க....
காவலனிடம் வந்துள்ளேன் என நான் சொல்ல...
சொந்தம் சொல்லி வாயில்படி மிதிந்துவிடாதே என்க...
சொர்க்கமே சென்றாலும் அவன் மட்டும் துணை என பதிலளிக்க..
அவசரமாய் மாமன் திருமண ஏற்பாடுகள் செய்ய...
அத்தான் வந்து என்னை திட்டி என்இல்லம் போக சொல்ல...
அப்பா மகன் இருவரும் என்னை வைத்து வாதாட...
அவன் வந்தான் எதிரில் என் மணளானாய் ....
மாங்கல்யம் சூடினான், தன்னவளாய் ஏற்றான்..
மகிழ்ச்சியோடு சென்றேன்.. அவனின் பாதியாய் மாற...
மங்கையவளை அணைத்து ரசிக்க வேண்டியவன் அலைபேசியில்...
மனம் லயித்து தன்னவள் கொடுத்த பாலை கூட தவிர்த்தான்...
அவன் விருப்பமில்லா திருமணம், அவனே மனம் மாறுவான்...
அவளும் தேற்றி.. அவனுடன் செல்ல தயாராக...
அவனோ உன்படிப்பு முக்கியம் என கூறி...
அவளை தவிர்த்து பணியிடம் தனியே சென்றான்....
ஆறுமாதங்கள் ஆறு யுகங்களாய் மாற...
அவன் நினைவில் இவளோ பசலையில் உடல் தேய...
அவன்முகமே தேர்வுதாளில் தோன்றி மறைய...
அவளோ துணிந்து எழுதினாள் அவன் மதிப்பு உயர..
தேர்வுகள் முடிந்தன.. அவனுக்கு சோதனை ஆரம்பித்தது...
தந்தை சொல்லின் கடுமை அழைத்து செல்ல வைத்தது..
தன்னவனுடன் சென்றாள்...அவள் மகிழ்ச்சி முடிவுக்கு வந்தது...
பால் பொங்க... அவள் மணவாழ்வின் சாவுமணி அடித்தது..
அழகு பெண்ணொருத்தி வாயிலில் நின்றிருந்தாள்....
இவள் வெளியேவர அவளோ அவனை அணைந்திருந்தாள்...
அதிர்ந்து இவள் பார்க்க, அவளோ இயல்பாய் கை கொடுத்தாள்...
அவரின் நெருங்கிய தோழி என்று அறிமுகப்படுத்தினாள்...
ஆனால் அவரோ இவள் என் வாழ்வின் பாதி என்றான்...
மன்றம் வந்தும் என் மனதில் நீ வரவில்லை என்றான்..
மனதில் வந்து மஞ்சத்தில் பாதியாய் வாழ்பவள் என்றான்...
மாலை மாற்றுவதல்ல காதல். மனங்களின் மாற்றம் என்றான்...
ஒரு நிமிடம் என்னுயிர் பிரிவதை உணர்ந்தேன்...
ஒருமுடிவுடன் என்னை விடுதியில் சேர்ந்துவிடு என்றேன்..
உன் மகிழ்ச்சிதான் என்
வாழ்க்கையடா எனநினைந்தேன்..
உறவுகளுக்கு தனிகுடித்தனம் நானோ தனியாக வாழ்ந்தேன்....
வாழ்க்கை வெறுமையாய் செல்ல, மாமாவுக்கு உண்மை தெரிந்தது..
வாதங்கள் பல நடக்க நான் அவன் மகிழ்வுகாக பிரிய துணிந்தேன்...
வாழைடிவாழையாய் தொடர வேண்டிய புனித பந்தம்...
வழக்காடு மன்றம் சென்று, முடிந்து வைக்கப்பட்ட பந்தம்..
அவனில்லா வாழ்வு... உயிர்கூட பாரமாய் ஆனது...
அன்னையவள் மட்டுமே என் துணை என்றானது...
அவளிடம் செல்ல நஞ்சை விழுங்கி காத்திருந்தேன்..
அன்னையவள் கைநீட்டி அழைக்க நானும் காற்றில் கைநீட்டினேன்..
இல்வுலக வாழ்வு முடிந்து அவ்வுலகம் செல்லப் போகிறேன்...
இனி எனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான் தாயுடன் இருக்க போகிறேன்...
இறுதியாக கண்கள் மூட, அவனை உலகம் தூற்றுவது தெரிந்தது...
இல்லை நான் வாழவேண்டும்.. அவன் மகிழ்ச்சிக்கு என உள்ளம் துடித்தது.
விடியலே வேண்டாம் என நினைந்தவள் உதயத்தை நாடினாள்...
வீழுந்திடக்கூடாது என ஏங்கியவள் கருணை இதயத்தை தேடினாள்..
விரைவாய் அவள் உயிர் செல்ல, மென்மையாய் இருகரங்களில் அடைக்கலமானாள்...
விழிகள் சொருக.. அவன் கரங்கள் தலையை வருட தாயன்பை உணர்ந்தாள்...
இவள் யார், என்ன விவரங்கள் அவனிடம் கேட்கப்பட்டது...
இதற்கு இப்போது நேரமில்லை, கிசிச்சைக்கு வாதிடப்பட்டது..
இறுதியில் அவன் பிடிவாதம் முன் நிர்வாகம் தோற்றது..
இவள் செவிகள் இறுதியாய் கேட்டது அவன் பெயர் அது
உதய்... அவளின் உதயம்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro