💜 3. அவனுக்காக 💜
காலம் கடந்து கல்லூரி காலம் வந்தது...
காதல் விண்ணப்பங்களும் குவிந்தது..
காளையவன் நினைவு மட்டுமே இருந்தது..
கன்னியவள் மனதை தினம் வாட்டியது...
தன்னழகை ரசித்தாள் தன்னவன் கண்பார்வையிலே....
தன்னை பிறர் ரசித்தால் பதிலளித்தாள் தன்னவன் கைமொழியிலே...
தங்கச்சிலை என வர்ணித்து வந்தவன்..
தங்கச்சி என அழைத்து ஓடி போனான்..
தன்காதலை காகிதத்தில் அவன் எழுதினான் நீல மையிலே
தன் பதிலை அடித்து சொன்னாள் அவன்மேனியில் சிவப்புமையிலே..
மற்றபெண்கள் பின்னால் சுற்றினர் வாலிபர்கள் ரோஜா நீட்டி
இவள் முன்னால் நின்றனர்
வாலிபர்கள் ராக்கிகயிறு நீட்டி...
அனைவரிடம் தான் அவளுவடையவன் என்றுரைத்தவள் மறந்தாள்
தன்னவனிடம் நான் உனக்காக மட்டும் வாழ்கிறேன் என்றுரைக்க..
அனைத்திலும் அவனை மட்டும் கண்டவள் ஒன்றை மறந்தாள்..
தன்னவன் தன்னிடம் காதல் காண்கிறானா எனப் பார்க்க..
அவள் இளங்கலை முடித்தாள் கனினி அறிவியலில்...
அவன் சிக்காமல் ஓடினான் அவள் வைத்த கன்னிபொறியில்..
மீண்டும் வருவாள் அவன் நினைவுகளோடு..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro