2. அவனுக்காக
நான் சைலஜா..
மற்றவர்களுககு சைலு...
உனக்கு மட்டும் சைஜூ...
என் தலையெழுத்து சபிக்கப்பட்டது.
என் வாழும்தெய்வம் அன்னை..
என்னை பிரிந்தது நாலுஅகவையில்
எனக்கென்று வேறுதெய்வம் வந்தாள்..
என்னைவிட்டு தந்தையும் போனார்...
என் இளையவன் ஒருவன் உதித்தான்..
என் உரிமையும் பறித்துக்கொண்டான்..
என் வீட்டின் நான் தனியானேன்...
என் ஆசைகள் ஊமையானது..
என் கனவுகள் கருமையானது...
என் மகிழ்ச்சி பகையானது...
என் பலமும் பலவீனமானது..
என் உணர்வுகள் பிணமானது...
என் கோபம் கூட அடக்கமானது
என் சாவுகூட என்னை கண்டு ஓடலானது...
என் வயதும் கூடியது..
என் பெண்மை பூத்து குலுங்கியது...
என் தாய்மாமன் சீரோடு வந்தான்...
என் அத்தான் எனக்கு மாலையிட்டான்..
என் துணைவன் என்று பிறர் அழைத்தனர்..
என் அறிவும் என்பாதி என நம்பியது...
என் மனம் முழுவதும் குடிக்கொண்டான்...
என் வாழ்வு அவன் வசம் சென்றது..
என் உலகம் அவன் அன்பால் நிறைந்தது..
என் காதல் அவன் அக்கறையில் வளர்ந்தது
என் பெண்மை அவனுக்காக மலர்ந்தது..
ஆனால் பின்னால் நடந்தது.... வரும் பகுதியில்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro