💕தித்திக்கின்ற தீயே 4💕
அவனின் ஆத்திரம் அதிகமாகியதைப் பார்த்த கௌதமிற்கோ ஜல்லிக்கட்டு காளையை கூட அடக்கிடலாம் போல இவனை எப்படி சமாளிப்பது என்று இருந்தது.
"மச்சான் ... மச்சான் ... இங்க ஏதும் வேண்டாம் மச்சான்.. அப்புறமா பேசிக்கலாம்..." என்று அவன் முறுக்கிய கையை கௌதம் விடுவித்து தனியாக அழைத்து போனான்.
அவனும் காலேஜ் ஆசிரியர்களின் கூட்டம் வந்ததால், கௌதமுடன் முகத்தில் மட்டும் அமைதி நிலவியபடி தனியாக வந்தான்.
அவர்கள் இருவரும் தனியாக இருந்த ஒரு அறையில் இருந்தனர், ஆனால் கௌதமிற்கோ சிங்கத்தின் குகையில் இருப்பது போல் இருந்தது.
"இவனுக்கு எவ்வளவு தைரியம்... நான் சொல்லியும் கேட்காமல் இவக் கூட சுத்திக்கிட்டு இருக்கான்..." என்று ஆருயிர் தோழன் ஜீவாவை திட்டிக் கொண்டு இருந்தான் அவன்.
"நீ ... டென்ஷன் ஆகாத மச்சான்... அவனுக்கு பட்டாதான் புரியும்" என்று அவனை ஆசுவாசப் படுத்திக் கொண்டு இருந்தான் கௌதம்.
"இல்லடா... அவன் அம்மா இல்லாத பையன் என்று எங்க வீட்ல என் அம்மா அவனைக் கொஞ்சுனது தான் அதிகம். எப்படி ஒரே வருஷத்தில் இப்படி மாறிட்டான் " என்று அவன் நண்பனை நினைத்து வருந்திக் கூறிக் கொண்டு இருந்தான்.
"புரியுது மச்சான்... நீயும் அவனும் ஸ்கூல்ல இருந்தே நண்பர்கள், இப்படி பதினேழு வருட காலம் ஒன்னாவே இருந்துட்டு... இப்படி பேசிக்காம இருப்பது கஷ்டம் தான்" என்று அவனை சமாதானப் படுத்துகின்றோம் என்ற நினைப்பில் கூறினான் கௌதம்.
"லூசு பயலே... இப்போ அது முக்கியமான பிரச்சினை இல்லை... எப்படியாவது அவளை அவன் கிட்ட இருந்து பிரிக்கணும்.. அவனுக்கு உண்மை தெரிஞ்சா அவனே என் கிட்ட பேசிருவான்" என்று ஆத்திரத்தில் மேஜையின் மேல் கையைக் கொண்டு அடித்தான் அவன்.
"மச்சான் இது பழைய மேஜை...நீ ஜிம்முக்கு போகிற என எனக்கு தெரியும், ஆனால் அதை இங்க காட்ட வேண்டாம் ... சொல்லிப் புட்டேன்" என்று அங்கு இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தான் கௌதம்.
"மச்சி.... ஏதாச்சும் யோசி... எப்படியாது நமக்கு ஒரு க்ளூ கிடைக்கும்...அவளை கையும் களவுமாக பிடிக்கனும்..என் கிட்டையே அவ சவால் விட்டுருக்காள்... பாப்போம் அவளா? நானா? " என்று சொல்லி விட்டு அறையில் இருந்து எழுந்து வெளியில் சென்றான் அவன்.
"ஆளாளுக்கு ஒரு ஃபிகரை உஷார் பண்ணிட்டு சுத்திக்கிட்டு இருக்குரானுங்க... கடைசி வரைக்கும் நம்ம சிங்கிள் தான் போல... நமக்கு வவுத்துல கதவு தட்டுது, அதையாது கவனிப்போம், இவனுங்கள நம்பினால் ஒன்னும் ஆகாது, நம்ம கேன்டீன் பக்கம் போவோம்..." என்று சோறு தான் முக்கியம் என்பது போல் இடத்தை விட்டு கிளம்பினான் கௌதம்.
சூரியனின் கதிர் வீச்சயும் தாண்டி ஜீவாவையும் மோனிகாவையும் தூரத்தில் இருந்து இரு கண்கள் சுட்டெரித்துக் கொண்டு இருந்தது. இதைக் கவனித்த மோனிகா ஜீவாவுடன் வேண்டுமென்றே உரசி நின்றுக் கொண்டு இவனை வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தாள்.
அங்கு ஒரு பெண் தீடிரென்று மயக்கம் போட்டு விழுந்து விட ஜீவா அங்கு விரைந்து அப்பெண்ணிற்கு முதலுதவி கொடுத்துக் கொண்டு இருந்தான். இங்கு மோனிகாவோ இது தான் தக்க சமயம் என்று அவ்விடத்தை விட்டு நகன்றாள்.
"ஹலோ... மிஸ்டர். ஆதிகன் (Mr.Aathigan)... என்ன இந்தப் பக்கம்... அப்புறம் எப்படி இருக்கீங்க??..." என்று திமிருடன் அங்கு நின்று கொண்டிருந்த ஆதிகனைப் பார்த்துக் கேட்டாள் மோனிகா.
இவன் ஏதும் பதில் கூறாமல் இருந்ததால் அவளே மேலும் பேசினாள், "அட்லீஸ்ட் பதிலுக்கு நான் எப்படி இருக்கேன்னு கேட்க மாட்டிங்களா?? சரி அத உங்க கிட்ட எதிர் பார்த்தது என் தப்பு.. என்ன பார்த்தாலே தெரிந்திருக்கும் நான் சூப்பரா இருக்கேன்னு... " என்று கூறிக் கொண்டே ஆதிகனின் பக்கத்தில் வந்தாள் மோனிகா.
"உனக்கு என்னப்பா ... எல்லாமே செஞ்சுத் தரத்தான் ஒரு நல்லவனை அடிமையாய் வச்சுருக்கியே ..." என்று கையைக் கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றான்.
இவனை ஏத்தி விட்டு குளிர் காயலாம் என்று நினைத்தவள், ஏதோ எண்ணியவாறு
"இதுக்கே வா... மூன்று மாதத்திற்குள் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்க போது... ஆனா பாரேன் யாரோ என்கிட்ட சவால் எல்லாம் விட்டாங்க...? Mr.Aathigan " என்று அவனை சண்டைக்கு இழுப்பது போல பேசினாள் மோனிகா.
"என்ன உளறுகிறாய்" என்று நெற்றியை சுருக்கிக் கொண்டு கேட்டான் ஆதிகன்.
"நீ இந்த ஊரை விட்டே போகுற நேரம் பக்கத்துல வந்துருச்சு டா... உன்னையும் ஜீவாவையும் சேரவே விட மாட்டேன்..."என்று கையைக் காட்டி திமிருடன் பேசினாள் மோனிகா.
அவள் கையை முறித்து பின்னுக்குத் தள்ளி, அவள் இதழ்களைப் பிடித்து "இந்த வாயாலேயே உண்மையை சொல்ல வைக்குறேன் பாருடி... நீ எல்லாம் ஒரு பொண்ணா... உன்னை தொடுறதுக் கூட பாவம்" என்று பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே, இதனைச் சற்றும் எதிர் பார்க்காத மோனிகா நிலை குலைந்து அருகில் இருந்த மாமரத்தின் மேல் மோதி சாய்ந்து நின்றாள்.
வேறு திசையில் இருந்து "ச்சை கருமம்" என்று யாரோ கத்துவது கேட்டு, நின்று கொண்டிருந்த இருவரும் சத்தம் வந்த திசையை பார்த்தனர்.
அங்கு அவர்களுக்கு அருகில் இருந்த மாடியில் பஞ்ச பாண்டவர்கள் போல் நின்றுக் கொண்டு இருந்தனர் நம் பெண்மணிகள்.
"ஹே மெனில்லா நீ கத்துனது அவுங்களுக்கு கேட்டுருச்சுனு நினைக்கிறேன்..." என்று இவள் பீதியில் கத்த. ஆதிகனிற்கு எல்லாம் தெளிவாக கேட்டுக் கொண்டு இருந்தது.
அங்கு இருந்த ராஜி "ஹே... வாங்கடி அவுங்க பார்த்துடாங்க போல, போயிரலாம்.." என்று மெதுவாக கூறினாள்.
மீண்டும் அவனைப் பார்த்து " அவன் கிடக்கிறான் பொறுக்கி " என்று சொல்லி விட்டு நகர்ந்தாள் மெனில்லா.
இதைக் கேட்ட ஆத்திரம் அடைந்த அவன்,
Do give your valuable comments!🤗
Spread Happiness!💕
With lots of Love,
Lolita!😉
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro