💕தித்திக்கின்ற தீயே 3💕
கதிரவன் தன் அழகினால் மேகங்களை சுண்டி இழுத்துக் கண் அடித்துக் கொண்டிருக்க, பறவைகள் எல்லாம் தன் குட்டிகளுக்கு உண்ண உணவுத் தேடலின் வேட்டையில் ஈடுபட காலை ஒன்பது மணி நேரம் மிக சுறு சுறுப்பாக ஓடிக் கொண்டிருந்தது.
அரசு மருத்துவமனை,
பொது வார்டில் கூட்டம் கூடிக் கொண்டேப் போக, இந்திரா லோகச் சந்திரன்னுக்குப் போட்டிப் போடும் வகையில் கண்களில் காந்தத்தின் உரைவிடம் போல் எல்லோரையும் தன் வசப்படுத்தும் ஆற்றல் கொண்டவனாய், கோதுமை நிறத்தில் உடலில் வலிமையும் முகத்தில் தாடி இன்றியும் மீசையுடன் வாலிப தோற்றத்தில் சுத்திக் கொண்டிருந்தான் அவன்.
ஆட்கள் யாரும் இல்லாத ஒரு பக்கம்
"ஹே பேபி... " என்று பின்புறமிருந்து அவன் தோளில் கைகளைக் கொண்டு பின்னிக் கொண்டாள் காவ்யா.
" ஹான்... சொல்லு காவ்யா " என்று அவன் கைபேசியில் வாட்ஸ்ஆப்பில் ஏதோ பார்த்தவாறு கூற. எப்போதும் போல் அவன் இல்லை என்பதை காவ்யா புரிந்துக் கொண்டாள். அதற்கு தகுந்தாற்போல் அவனும் அவள் கையைப் பேசிக் கொண்டு எடுத்து விட்டான்.
"இல்ல இன்னிக்கு எங்கையாச்சு வெளிய போகலாமா...?" என்று அவன் பதில்காக காத்திருந்தாள் காவ்யா.
"இல்ல காவ்யா... கொஞ்சம் பிஸி... இன்னிக்கு எனக்கு நைட் ஷிஃப்ட்... மறந்துட்டியா? " என்று அவளை பார்க்காமலே பதில் கூறிக் கொண்டு இருந்தான் அவன்.
"ம்ம்ம்ம்... மறந்துட்டேன்...?" என்று தரையை பார்த்துக் கொண்டு ஒரு வித பயத்துடன் இவனுக்கு ஏதேனும் தெரிந்து விட்டதோ என்று யோசனையில் இருந்தாள் காவ்யா.
"ஹே... லூசு என்ன யோசனை ? நேரம் கிடைக்குறப்ப வெளிய போகலாம்... இதுக்கு போய் ஏன் மூஞ்சியை ஒரு பக்கம் திரிபிக்குற... இப்போ போய் ஒழுங்கா வேலையை பாரு" என்று அவள் வருத்தப்பட கூடாது எனச் சமாதானம் படுத்தினான் அவன்.
"ஹ்ம்ம்.. ஓகே..." என்று போலியாய் சிரித்து விட்டு சென்றாள் காவ்யா.
"இந்த நாய் எங்க போச்சுன்னு தெரியலையே.." என்று அவன் தன் கைப்பேசியில் அவன் நண்பன் கௌதமிற்கு போன் செய்தான்.
" நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
" நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்
போடு கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா ஹோய் "
"சொல்லு மச்சான்... கெளம்பிடியா ..." என்று கைப்பேசியில் கேட்டுக் கொண்டே வண்டிச் சாவியை எடுத்தான் கௌதம்.
"என்னடா (caller tune) காலர் டியுன் இது..? " என்றான் அவன்.
"நீ இன்னும் பாட்டு பாக்கலனு நினைக்கிறேன்... பாத்தா உனக்கும் பிடிக்கும்.. அப்படி நீ பார்த்துடனு சொன்னேனா... பார்க்க பார்க்க பிடிக்கும்" என்றான் கௌதம்.
"உன் மொக்கையை கொஞ்சம் நிப்பாட்டு...மச்சான் நீ நேராக நான் சொல்ற காலேஜுக்கு வந்துரு... அட்ரஸ் வாட்ஸ்ஆப்பில் அனுப்புறேன் " என்று சொல்லிவிட்டு இதற்கு மேல் அறுவை தாங்காது என்பது போல் காளை கட் செய்தான் அவன்.
"காலேஜுக்கு எதுக்கு இப்போ...? என்னத்த உலறுரான் என்று தெரிய வில்லையே..." என்று எண்ணிக் கொண்டே மேபில் லொகேஷன் போட முகமெங்கும் பற்கலாக மாறி இளித்து கொண்டு வேகமாக வண்டியில் பறந்தான் கௌதம். ஏனென்றால் போகும் இடம் அப்படி.
அரை மணி நேரத்தில் காலேஜுக்கு வந்தடைந்தான் கௌதம். ABC Women's college, முதல் கேட்டின் அருகில் இருந்த காவலாளி இடம் கௌதம் அவனது ஐடி கார்டைச் சரிபார்த்து, பாஸ் குடுத்தப் பின் கையொப்பம் வாங்கி அவனை உள்ளே அனுப்பினார்.
"டேய் ... எப்போ மச்சான் வந்த... இங்க நமக்கு என்ன ஜோலி?" என்று
அங்கே இருச் சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கௌதம் அவன் நண்பனை பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"வா உள்ளே சென்று பேசலாம்..." என்று கூலர்ஸை எடுத்துக் கண்களில் போட்டுக் கொண்டான் அவன்.
"மச்சான் உனக்கு தான் செட் ஆகிருச்சுல ... கொஞ்சம் அந்த கண்ணாடியை என் கிட்ட தரது... இங்கயாச்சு ஏதாவது நல்லது நடக்கட்டுமே" என்று அவன் வேக நடைக்கு கொஞ்சம் ஈடு கொடுத்து நடந்தான்.
"அதுக்கெல்லாம் நீ செட் ஆக மாட்ட.." என்று சொல்லிக் கொண்டே ரிசப்ஷன் இல் இந்த மாதிரி blood donation camp க்கு வாந்துருக்கோம் என்று அவன் அடையாள அட்டையை காட்டினான் அவன்.
"இப்படியே நேராகச் சென்றால் இடது புறத்தில் இருக்கு..." என்று கூறி அவனின் வலிமையான தோற்றத்தை அளவு எடுத்துக் கொண்டிருந்தாள் வரவேற்பாளர்.
நன்றிக் கூறிவிட்டு இருவரும் நர்சரி நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.
"மச்சான் கொஞ்சம் என்னையும் performance செய்ய விடுடா..." என்று அவனை முறைத்துக் கொண்டே வந்தான் கௌதம்.
"நான் எங்க ... உன்ன பிடிச்சா வச்சுருக்கேன்...இல்ல ஏதும் நீ பன்றத தடுத்திருக்கேனா?" என்று கூறி விட்டு கௌதமின் தோலில் கையைப் போட்டான் அவன்.
"எனக்கு ஒன்னு நல்லா தெரிஞ்சுறுச்சு, உன் கூட இருக்க வரைக்கும் நான் கமிட் ஆக மாட்டேண்டா..." என்று அவன் கையைத் தள்ளி விட்டு முன்னே நடந்தான் கௌதம்.
இவர்களை ஏலியனைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர் பெண்கள். இந்த காலேஜில் இப்படிலாம் நடக்காதே என்று ஒருத்தி எண்ணிக் கொண்டு இருக்க, கூட்டத்தில் இன்னொருத்தி அவளின் தோழியின் கையினைக் கிள்ளி உண்மை என்க, மற்றொருவள் அவன் தான் படத்தின் ஹீரோ என்றும் ஷூட்டிங் நடக்க உள்ளது என்றும் ஒரு புரளியை கிளப்ப. இவர்கள் அனைவரையும் சட்டைச் செய்யாமல் நர்சரிக்குள் சென்றான் அவன்.
அங்கு எல்லாமே தயாராக இருக்க, சின்னதாய் ஒரு முகவுரைக் கொடுக்கும் படி அங்கு இருக்கும் கல்லூரி டாக்டர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவனும்
இரத்தக் கொடைப் (Blood donation) பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் விரிவாகவும் சுருக்கமாகவும் கூறி முடித்தான்.
"மச்சான் சூப்பர் ..." என்று கௌதம் கூறிக் கொண்டு இருக்க, ஆனால் அவன் பார்வையோ வேறு இடத்தில் இருந்தது.
அவன் பார்த்த திசையில் கௌதமின் பார்வையும் பட, அங்கு இவர்கள் வந்த வழியில் கருப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்தவனும் பிங்க் நிற புடவையில் இருந்தவளும் ஒன்றாக சேர்ந்து வர இவனுக்கு ஆத்திரம் பெறுக்கெடுத்து வந்தது.
அவனின் கோபம் பல மடங்கு அதிகமாகும் வகையில் அந்நபரின் இரும்புக் கை அவளின் மென்மையான இடையினை பற்றி இருந்தது.
Keep Smiling & Spread Love
💕
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro