இருவாழ்வி அவன்
ச்ச ச்ச ச்ச ச்ச ச்ச.... என்ன கெரகம் புடிச்ச வேல டா இது... ஆடாம அசையாம ஒரே எடத்துல ஒக்காந்துட்டு... ச்ச்சை... இந்த ஒரே ஒரு கம்பியூட்டர் ஸ்கிரீன பாத்துட்டு.... இப்போ நா எங்க எப்டி இருக்க வேண்டியவன்.... என் நேரம் இந்த நாசமா போன கால் சென்டர் வேலைல வந்து மாட்டிகிட்டேன்.. எல்லாம் என் விதி... கொடும டா..
ஓரிடத்தில் உட்கார்ந்து உருப்படியாக ஒரு வேலை செய்வதில் நாட்டம் இல்லாமல் துறுதுறுவென எங்கேயாவது சுற்றி திரிய ஆவல் கொண்டிருக்கும் நாயகன்...
✨✨✨
ரசாக் பேபி... இந்த ஜென்மம் மட்டும் இல்ல... இனி வர்ற ஏழு ஜென்மம்... அதுக்கு முன்னாடி இருந்த ஏழு ஜென்மம்... அதுக்கு அப்பரமா வர்ற நூறு ஜென்மம்... அப்பறம்....
அம்மாடி தெய்வமே... போதும் நிறுத்து மா... எனக்கு அத்தன ஜென்மம்லாம் இந்த பூமில பொறந்து நொந்து நூடுல்ஸ் ஆவ தெம்பு இல்ல மா... எனக்கு என் ராகி கொழுகட்ட கூட இருக்குற இந்த ஒரே ஒரு ஜென்மமே போதும்... மை லவ்லி பொண்டாட்டி...
அவனுக்கே அவனுக்கென இருக்கும் ஒரு காதல் நாயகி...
✨✨✨
"எதுக்கு பேபி எல்லாத்தையும் பேக் பண்ணுற... மறுபடியும் எதாச்சும் மல ஏற போறியா.."
"போறியா இல்ல டி செல்லம்.... போறோம்."
"எதே.. போரோமா???... ஹ்ம்ம்... நோ... எனக்கு கால் வலிக்கும்..."
"நா எதுக்கு இருக்கேன்... உன்ன அப்படியே தூக்கிட்டு போய்ட்டா போச்சு"
சிறு அவகாசம் கிடைத்தாலும் நாயகியை இழுத்துக்கொண்டு சந்து பொந்து தொடங்கி காடு மலை ஏரி குளம் குகை என ஓரிடம் விடாமல் பம்பராமாய் சுற்றி வருபவன்
✨✨✨
"வாவ்... பேபி... இதுகுள்ள பாரேன்... எவ்ளோ அழகா இருக்கு.... இத ஒரு குகைன்னு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா..."
"அட போடா... நீ எந்த எடத்த பாத்தாலும் இப்டி தா ஒரு ரியாக்ஷன குடுப்ப... போ டா.. நா தூங்க போறேன்."
அட பேபி... ஒரு நிமிஷம் கண்ண திறந்து பாத்துட்டு பேசு டி..
டேய்.. என்ன டா இது ... கலர் கலரா இருக்கு... எதோ ஊர் திருவிழா அலங்காரம் மாறி லைட் லைட்டா தொங்குது.. டேய்... உண்மைய சொல்லு.. இது நெஜமாவே ஆள் நடமாட்டமே இல்லாத காடு தானா??
உண்மையாவே இங்க மனுஷங்க வந்து கிட்டத்தட்ட ஐநூறு வருஷதுகும் மேல இருக்கும் பேபி.... சுத்துவட்டம் முப்பது கிலோ மீட்டருக்கு மனுஷன் என்ன.. மிருகம் கூட வராது.
தெரிந்தோ தெரியாமலோ அடைகிறான் அவன் விதியை மாற்ற போகும் பாதாளத்தின் சாபக்குகையை...
✨✨✨
டேய்.. என்ன டா இது... கண்ணு வச்சு கம்பு குச்சி... கால் வச்சு பட்டாம்பூச்சி....
பேபி நீ பயத்துல அழகா ரைமிங்கா பேசுற டி
ஆமா இப்போ இது ரொம்ப முக்கியம்... அது என்னது டா... மல சைசுக்கு இருக்கு... ஆத்தாடி மனுஷன்....
மாறுபட்ட நிலத்தோற்றம்... விசித்திர உயிர்கள்... இனம் கண்டறியப்படாத ஜந்துக்கள் என....
அவன விடு பேபி... இங்க பாரு... மினுக் மினுக் பூச்சி
அது மின்மினி பூச்சி டா எரும...
ஆ... அது என்ன கடிச்சுறுச்சு பேபி... ஸ்ஸ்ஸ்... ரொம்ப வலிக்கது டீ.
என்னது... இந்த பூச்சி கடிக்குமா???
அங்கே அவனுக்கென இருக்கும் சவால்களையும் காத்திருக்கும் ஆபத்துகளையும் தாண்டி தப்பி வந்தாலும்...
பேபி.... உனக்கு நியபாகம் இல்ல... இத அந்த குகைல பாத்ததா சொன்னேனே... நா கூட ஒரு குட்டி பப்பி மாறி இருந்த மிருகத்த புடிக்க போனப்போ அது பெருசா மாரீருச்சுண்ணு சொன்னேனா... இந்த குட்டி பப்பி அதே தா பேபி... என் பின்னாடியே வந்துருச்சு... எனக்கு பயமா இருக்கு பேபி.. இத இங்க இருந்து தூக்கிட்டு போய்ரு...
நாயகியை பின் தொடரும் அமானுஷ்யம்...
இவர்கள் வாழ்வையே புரட்டி போட்ட அந்த குகையின் உண்மையை உணர்ந்து நாயகியை மீட்கும் சாகச காதல் கதை.
💙இருவாழ்வி அவன்💙
Genere : Fantasy
Starting : soon
Ending. : --/--/----.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro