மாயம்
வேகமாக விரைந்துகொண்டிருந்த அந்த காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த மதுவர்ஷினி தன் அருகே கம்பீரமாக அமர்ந்திருந்த நந்தனை கர்மசிரத்தையாக சைட் அடித்துக்கொண்டிருந்தாள் .
தான் கேட்ட கேள்விக்கு விடை இதுவரை வராததால் மதுவை திரும்பி நோக்கியவன் எப்பொழுதும் போல இப்பொழுதும் அவள் அழகில் தன்னை தொலைத்தான். அவளது பார்வை அவனை இம்சிக்க வண்டியை ஓரமாக நிறுத்தி அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து தன் வலது கையை தாடையில் வைத்து ," ம்...இப்போ நல்லா பாரு செல்லம்....," என்று கூறினான்.
அவனது இந்த செய்கையில் பதறியவள்," ஏய்...லூசு மாமா ஸ்டியரிங்ல கை வை முன்னாடி பார்த்து வண்டி ஓட்டு ," என்று கூறியவளை நந்தனின் சிரிப்பு சத்தம் சுயநினைவடையச்செய்தது பின் பொய் கோபத்துடன் ," எருமை...எருமை.....," என்று திட்டிக்கொண்டே அவனை அடித்தவள் அவனது இடது தோளில் சாய்ந்து கொண்டு கண் மூடி அமர்ந்து கொண்டாள்.
"வண்டி நின்னது கூட தெரியாம என்னை சைட் அடிச்சது நீ இப்போ திட்டும் அடியும் மட்டும் எனக்கா?? இது எந்த ஊரு ஞாயம் வர்ஷீ??? என்று நக்கலடித்த நந்தனை நோக்கி பழிப்புகாட்டியவள்," ஊருல என் அண்ணணுக்கும் உங்க தங்கச்சிக்கும் நாளைக்கு கல்யாணம் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இன்னைக்கு ஊருக்கு போறீங்க ?? எவ்ளோ அக்கரை மாமா உங்க தங்கச்சி மேல," என்று பேச்சை திசைதிருப்பினாள் மது.
அவளது எண்ணத்தை புரிந்த கொண்ட நந்தன் ஒரு மென் சிரிப்பு இதழில் தவழ வாகனத்தை கிளப்பிக்கொண்டே ," ம்....என்ன பண்றது ?? என் வருங்கால பொண்டாட்டியோட கடைசி பரீட்சை இப்ப தானே முடிஞ்சது தங்கச்சிக்கு அண்ணணமாருங்க நிறைய இருக்காங்க ஆனால் என் பொண்டாடாடிய ஊருக்கு என்னை தவற யாரால பத்திரமா கூட்டிட்டு போக முடியும் ?? என்று அவளை நோக்கி கண்ணடித்தவனின் கண்ணத்தில் ஒரு.முத்தம் வைத்தவள் அந்த பயணத்தை அனுபவிக்கும் விதமாக அவனது தோள்களில் சாய்ந்து கொண்டு அவனது இடது கைகளுக்குள் தனது கையை நுழைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்துகொண்டாள்.அவளை போலவே இந்த அறிய தருணத்தை அவனும் அனுபவிக்கத்தொடங்க அவர்களது வாகனம் தஞ்சைக்கு அருகே உள்ள பச்சைபுதிய நல்லூரை நோக்கி பயணிக்கத்தொடங்கியது.
மதுவர்ஷினி இருபத்தைந்து வயதுடைய செதுக்கி வைத்த அழகுசிலை , தனது மருத்துவபடிப்பபை முடித்துவிட்டு மனோதத்துவ துறையில் தன் மேல் படிப்பையும் இன்றுடன் முடித்துவிட்டு தன் ஒரே அண்ணண் ஆகாஷின் திருமணத்திற்காக தன் மாமன் மகனாகிய நந்தனுடன் தன் சொந்த ஊர் நோக்கி போய்கொண்டிருக்கிறாள். நந்தன் அது அவள் அழைக்கும் செல்ல பெயர் அவளுக்கே சொந்தமான அந்தரங்க பெயர் மற்றவர்களுக்கு அவன் அரவிந்தன் , தனது கனவு தொழிலான பத்திரிகை துறையில் தனக்கென ஒரு.தனி இடத்தை தக்க வைத்துகொண்டிருக்கும் இக்கால இளைஞன்.
இவர்களின் வாகனம் சென்னையிலிருந்து தஞ்சை மாவட்டத்தை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தது. தஞ்சையை அடைய இன்னும் அரைமணி நேரம் இருந்த நிலையில் நந்தனின் கார் திடீரென்று நின்றுவிட,அவனை புரியாமல் பார்த்த மது," என்னாச்சு நந்து ??" என்று வினவினாள்.
" தெரியலைடா இரு நான் இறங்கி பார்க்குறேன்," என்று கூறியவன் கீழே இறங்கி பார்க்க முன் பக்க சக்கரம் பஞ்சர் என உணர்ந்து கொண்டான்.காரின் உள்ளே எட்டிபார்த்தவன்," டயர் பஞ்சர் டா ஒரு பத்து நிமிஷம் மாத்திடறேன்," என்று கூறிவிட்டு வேகமாக காரின் பின்புறமிருந்த ஸ்டெப்னியை எடுத்து டயரை மாற்ற தொடங்கினான்.அவன் மாற்றும் அழகை சிறிது நேரம் பார்த்து ரசித்தவள் பின் மெதுவாக காரைவிட்டு இறங்கி சுற்றுபுறம் நோக்கினாள்.
சிலுசிலு வென்று காற்றுவீச அந்த மாலை மங்கும் நேரம் மனதுற்கு இதமான சூழலை ஏற்படுத்தி இருந்தது.ஊரை விட்டு சற்று ஒதுக்குபுறமான இடமாக இருந்தாலும் போக்குவரத்து இருந்துக்கொண்டிருந்தது , அந்த தார் சாலையின் இடது புறத்தில் சிறிய குளம் ஒன்றிருக்க இன்னும் இருள் முழுவதும் மறைக்காத நிலையில் அந்த குளம் மிக அழகாக காட்சி அளித்தது.
" மாம்ஸ் அந்த குளம் ரொம்ப அழகா இருக்கு அதோட கரையில நான் கொஞ்ச நேரம் உட்கார்துட்டு வரட்டா??" என்று சிறு பிள்ளையாய் தலையை சாய்த்து அவள் கேட்ட தோரனையில் அவனையும் அறியாமல் அவன் தலையாட்டிவிட்டான்.
அவள் திரும்பி நடகாக முயல்கையில் ," ஆனால் இருட்டு நேரம் பார்த்து இரு ஏதாவது னா உடனே குரல் கொடு ," என்று கட்டளையிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.
அவனை விட்டு சிறிது தூரம் தள்ளி சென்று அந்த குளக்கரையில் அமர்ந்தவள் முன்னங்கால்கலை கட்டி தலையை அதில் வைத்து அந்த இயற்கை யை ரசிக்கத்தொடங்கினாள். எவ்வளவு நேரம் அவள் அவ்வாறுஅமர்ந்திருந்தாள் என்பதை அவள் அறியாள் அருகில் யாரோ அமரும் சத்தம்கேட்டு திடுக்கிட்டு நோக்க அங்கே அவளின் நந்தன் புன்சிரிப்புடன் இவளை நோக்கி ," கல்யாண வீட்டுக்கு சீக்கிரம் போகனும் னு நினைவில்லாம இங்க என்ன ரசிச்சுக்கிட்டு இருக்க??" என்று வினவ, ஒரு பெருமூச்சுடன் அவனை நோக்கியவள் ," வீட்டுக்கு போய்டா உங்களை தனியா பார்க்கவே முடியாது நந்து ....வீடு முழுக்க ஆளுங்க நிறைஞ்சு இருப்பாங்க , பேருக்கு தான் இரண்டு பேரும் ஒரே ஊருல இருக்கோம் ஆனால் நம்மால சந்திக்க முடியுறதில்லை ," என்று கூறி அவன் தோள் சாய்ந்தவளின் குரலில் இருந்த பிரிவு துயரை கண்டுகொண்டவன் , " கவலை படாதடா கூடிய சீக்கிரம் ஏதாவது ஏற்பாடு செய்யலாம் , இப்பவா நமக்கு நேரமாயிடுச்சு ," என்று கூறியவன் எழுந்து நின்று அவளுக்கும் உதவினான். இருவரும் தஇரும்பி நடக்கையில் அவனது அலைபேசியில் அவன் தாய் அழைக்க அதை ஏற்றவன் இன்னும் அரைமணிநேரத்தில் அங்கு வருவதாக வாக்களித்துவிட்டு நடக்கையில் ஏதோ சத்தம் கேட்க தன்னை சுற்றி நோக்கியவர்களின் முகம் திகிலை தத்தெடுத்தது .
இதுவரை மது அமர்ந்திருந்த மணல் மேலே எழும்புவதும் பின் மீண்டும் உள்ளே அடங்குவதுமாக இருக்க அதை நோங்கியவர்கள் மனதில் திகில் பரவியது.
அவ்விடம் விட்டு நகர அறிவு அறிவுறித்தினாலும் கால்கள் நகர மறுக்க அவர்கள் இருவரின் கைகளும் தனிச்சையாக சென்று அந்த மணலை தோண்டியது , பேச நா எழாத நிலையில் கண்களில் அப்பிய பீதியுடன் ஒருவரை ஒருவர் புரியாமல் நோக்கினர்.ஏதோ மந்திரத்திற்கு கட்டுபட்டதை போன்ற செயல்பட்ட கைகள் ஏதோ ஒரு பொருளின் மீது பட அந்த பொருளை வெளியே எடுத்ததனர்.காற்றினில் ஒரு சுகந்தமனம் தவழ இருவரும் தங்கள் சுற்றுபுறம் நோக்கினர்.
அந்த இருட்டிலும் அந்த பொருள் தங்கமென ஜொலிக்க அதை பார்த்த இருவரின் இதயமும் தங்களது துடிப்பை நிறுத்தியது காரணம் அது ஒரு தங்கத்தாலான சவப்பெட்டி.
************
பச்சைபுதிய நல்லூர் பெயர்கேற்றார் போல பச்சை பசேலென்று இருந்தது அந்த அழகிய கிராமம்.
மக்கள்தொகையில் சிறிதாக.இருந்தாலும் மிகவும் நேர்த்தியாக.அமைக்கப்படிருக்கும் வீடுகள் அந்த ஊரின்.அழகை அதிகரிக்கச்செய்தது. அந்த ஊரின்.பெரிய.செல்வந்தர் சோமநாதன். அனைவரும் அவரை பெரியவர் என்று பாசமாக அழைப்பர். அது அவரிடம் இருக்கும் செல்வத்திற்காக கொடுக்கப்படும் மரியாதை அல்ல அவர் இந்த ஊர் மக்கள் மீதும் வைத்திருக்கிரும் அன்பிற்காகவும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டு செய்த நற்செயல்களினாளும் மக்கள் அவருக்கு சூட்டிய அன்பு அடைமொழி.
சோமநாதனிற்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் ஆண்கள் இரண்டு பெண்கள்.இரண்டு .அனைவரும் தத்தமது வாழ்வில் முன்னேறி தனித்தனியே வேறு மாநிலத்திற்கு சென்றாலும் பண்டிகை மற்றும் குடும்பவிழாவின் போது எல்லாரும் இங்கே கூடுவது வழக்கம்.
நாளை அவரது மூத்த மகள் புனிதாதாவின் மகனிற்கும் இரண்டாவது மகன் சேகரின்.மகளிற்கும் திருமணம் நடக்க இருக்கிறது அதனால அவரது குடும்ப உறுப்பினர் இருவரை தவிர அனைவரும் அவரது மாளிகையில் குழுமியிருக்க அங்கே மகிழ்சிக்கும் ஆரவாரத்திற்கும் குறைவில்லாமல் இருந்தது.
நடுக்கூடத்தில் பெண்ணிற்கு நலுங்கு வைக்கும் வைபவம் நடைபெற்றுக்கொண்டிருக்க அனைவரும் மணப்பெண்ணாண மகிமாவை கேலிபேசிக்கொண்டு அவளது கண்ணங்கள் சிவக்கச்செய்துகொண்டிருந்தனர் அப்பொழுது அங்கே வந்த சோமநாதனின் தர்மபத்தினி சிவகாமி , " அரவிந்தன் கால் பண்ணாண?? எப்போ வருவாங்க இரண்டுபேரும் "என்று வினவினார்.
அதற்கு அரவிந்தனின் தாய் பானுமதி," இன்னும் அரைமணிநேரத்தில வந்துடுவாங்க மா இப்ப தான் அரவிந்தன் கிட்ட பேசுனேன் அத்தே," என்று கூறி முடிக்கவும் அங்கே எரிந்து கொண்டிருந்த அனைத்து விளக்குகளும் அனைந்து போகவும் சரியாக இருந்தது.
எங்கும் கும்மிருட்டாயிருக்க சூழ்திருக்க திடீரென ஒரு மயான அமைதி அங்கே நிலவியது பின்பு சுதாரித்த சோமநாதன் ," எலே மாரி .....என்னாச்சு ?? அந்த ஜெனரேட்டர ஆன் பண்ணு " என்று சத்தமாக கூறினார்.
பதிலேதும் வராது போகவே மீண்டும் ," யாராவது இருக்கீங்களா ?? யாராச்சும் மெழுகுபத்தியாவது பத்த வைங்க ஒரே இருட்டா இருக்கு , " என்று இம்முறை உரக்க கூற வெளியே இருந்த வேலையாள் வேகமாக உள்ள வந்தான் ," ஐயா....கூப்டீங்களா???"
" ஆமா யாரையும் காணல மொதல்ல போய் ஜெனரேட்டர போடு " என்று கட்டளையிட , அவன் சென்று வேகமாக ஜெனரேட்டர் ஆன் செய்தான்.
இருண்டிருந்த ஹாலில் அதீத வெளிச்சம் மின்னியது மாறாக சோமநாத தாத்தாவின் முகத்தில் இருள் பரவத்தொடங்கியது.காரணம் சற்றுநேரத்திற்கு முன்பு தன் மக்களால் நிறைந்திருந்த ஹால் இப்பொழுது வெரிச்சோடி இருக்க வீட்டில் இருந்த அனைவரும் மாயாமாய் மறைந்திருந்தனர்.
ஐந்து நிமிடத்திற்குள் வீட்டிலிருந்த அனைவரும் மாயமாய் மறைந்தது எப்படி என்பதை அறியாத அந்த பெரியவர் செய்வதறியாது சிலையென இருக்கையில் அமர்ந்தார்.
(தொடரும்....)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro