Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சவப்பெட்டி


எங்கும் இருள் சூழ்ந்திருக்க தெருவிளக்கின் மங்கிய ஒளியில் அந்த சவப்பெட்டி ஜொலித்தது. மந்திரத்திற்கு கட்டுபட்டதை போல இருந்த அந்த இருவரும் தங்கள் கைகள் தோண்டி எடுத்த பொருளை நம்ப முடியாத திகிலுடன் பார்த்த வண்ணம் இருந்தனர்.

காற்றிலே மிதந்து வந்த சுகந்தமனம் அவர்களை மதியிழக்கச்செய்து கொண்டிருந்தது. அதுவரை மந்திரத்திற்கு கட்டுப்பட்டிருந்த கைகளில் சிறு விடுபட்ட உணர்வு தென்பட சிறு ஆசுவாசமூச்சு விட்ட மது  நந்தனை அழைத்து, " இங்க என்ன நடக்குது நந்து  எனக்கு  பயமா இருக்கு  ," என்று நடுங்கிய குரலில் வினவ அவளது  பயத்தை அறிந்து கொண்டவன் மெதுவாக அவளது கைகளை பற்றி தைரியமூட்டினான்.

அவனது தொடுகை தந்த தெம்பில்," நம்ம இந்த இடத்தை விட்டு எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போயிடுவோம் நந்தன்," என்று கூறிய மது அவனது கைகளை பற்றி அவ்விடம் விட்டு நகர துவங்குகையில் ஒரு மெலிதான முனகல் சத்தம் இருவரின் கால்களையும் அவ்விடத்தில் வேரிட செய்தது.

மெலிதாக துவங்கிய அந்த முனகல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக தனது சத்தத்தை அதிகரித்து அவர்களின் அருகிலே கேட்க துவங்கியது.

தங்கள் அருகில் கேட்ட அந்த சத்தம் வந்த திசையை ஆராய்ந்த அவர்கள் அது  சவப்பெட்டியின் உள்ளிருந்து வருவதை உணர்ந்து திக்பிமை அடைந்தனர்.

வேகமாக சவப்பெட்டியை நோக்கி சென்ற  தன்னவளின் கைகளை பிடித்தது நந்தனின் கைகள். அவனை கேள்வியுடன் நோக்கியவளை," அறிவிருக்கா?? என்ன காரியம் செய்யப்போற நீ??" என்று கோபமாக கேட்டான்.

" அந்த பெட்டியில இருந்து தான் சத்தம் வருது , அவங்க உயிர காப்பாத்த நமக்கு ஒரு சந்தர்பம் இருந்தா காப்பாத்தளாம் ல?? ஏன் என்னை தடுக்குறீங்க??" என்று புரியாமல் வினவியவளை பார்த்த நந்தனின் நிதானம் பறக்க துவங்க மீண்டும் ஒரு முறை அமைதியாக அவளிடம்," வர்ஷீ.....இங்க பாரு நாம நிக்கிறது ஒரு குளக்கரை   அப்பறம் அந்த பெட்டி அது சாதாரண பெட்டி இல்லை அது ஒரு சவப்பெட்டி   இங்க யாரும் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டாங்க, அப்படியே அடக்கம் செஞ்சிருந்தாலும் அது சட்டவிரோதமானதா தான் இருக்கும், இரண்டாவது இறந்து போன ஒரு மனிதன் திரும்ப குரல் குடுக்க முடியாது , இதுக்குள்ள என்ன இருக்குனு நமக்கு தெரியாது, இந்த மணலை நம்ம கட்டுபாட்டில இல்லாத நம்ம கைகள் தோண்டுனதை மறந்தேட்டியா??? இந்த இடத்தில ஏதோ சரியில்லை அது நம்ம பாதிக்குறதுக்குள்ள நம்மை இந்த இடத்தை தொந்தரவு செய்யாம இங்க இருந்து போறது தான் நல்லதுடா , நமக்காக வீட்டில எல்லோரும் காத்திருக்காங்க," என்று அவளிற்கு புரிய வைக்கவேண்டும் என்று மிகவும் பொறுமையாக நீண்ட தன் விளக்கத்தை கூறி முடித்தான்.

அவனின் கூற்றில் உண்மையிருப்பதை உணர்ந்தவள் அமைதியாக தலையசைத்தாள். அவளது கைகளை பற்றிக்கொண்டு காரை நோக்கி செல்ல  முற்பட்டான் அரவிந்தன். அந்த இருவரின் மனம் மட்டுமே நகர முற்பட்டது மாறாக அவர்களின் கால்கள் பூமியோடு வேரிட்டு நிற்க இருவரும் செய்வதறியாது குழம்பினர்.

அந்த இடத்தில் ஒரு அமானுஷ அமைதி நிலவ காற்றில் வந்த மனமும் தன் வாசத்தை நிறுத்திக்கொள்ள அந்த முனகல் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தது. நேரம் செல்ல செல்ல இருவரின் மனதையும் பயம் பிடித்துக்கொள்ள செய்வதறியாது திகைத்து நின்றனர்.

எங்கிருந்தோ பறந்து வந்த ஆந்தை ஒன்று அந்த சவப்பெட்டியின் மேலே அமர்ந்து மதுவை உற்று நோக்கியது, அதன் கண்கள் பளபளப்பாக இருக்க மதுவின் பயம் எல்லையை கடக்கத்துவங்கியது." நந்தன் அந்த ஆந்தை என்னையே முறைச்சு பாக்குது எனக்கு பயமா இருக்கு," என்று கூறிய மது அதை தன் கைகளால் விரட்ட பார்த்தாள் , அது அங்கு இங்கு நகராமல் அவளது கைகள் தன்னை நோக்கி வருகிறது என்று பயம் கொள்ளாமல் அவளையே உற்று நோக்கியது , அதனது இந்த செய்கை மதுவிற்கும் அரவிந்தனிற்கும் குழப்பத்தை உண்டுபண்ண , என்ன செய்வது என்று குழம்பிய நிலையில் மதுவை நோக்கினான்.

நோக்கியவன் திடுக்கிட்டான் காரணம் இப்பொழுது மதுவும் அந்த ஆந்தையை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள் இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் இருக்க மதுவை உலுக்கினான் அரவிந்தன் ஆனால் மது அவனது எந்த வித அழைப்பிற்கும் செவிசாய்காமல் வேறு ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

வேறு வழியில்லாமல் மதுவை கவனிக்கத்துவங்கினான். மது அந்த ஆந்தையின் கண்களையே வெறித்து பார்த்தாள் பின் மெதுவாக தலையை மேலும் கீழும் அசைத்தாள் அதன் பிறகு அந்த சவப்பெட்டியை நோக்கி எட்டு வைத்தாள், இப்பொழுது அரவிந்தனும்
நடக்க முற்பட்டான் ஆனால் அவனால் நகர முடியவில்லை மதுவை தடுக்கும் வழி அறியாமல் கவலையும் பயமும் மாற்றி மாற்றி போட்டி போட மதுவின் அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்று எண்ணி பீதி அடைந்தான்.

அந்த சவப்பெட்டியை நெருங்கிய மது அந்த ஆந்தையை நோக்கி கைகளை நீட்டினாள்.அவளது கைகளில் அந்த ஆந்தை அமர்ந்து கொள்ள அதனை தடவி கொடுத்து மது பின் அதை தன் தோள்களில் அமரசெய்து அந்த சவப்பெட்டியின் நான்கு புறமிருந்த ஆணிகளை நீக்க முயற்சி செய்தாள்.

அந்த ஆணிகள் நன்றாக படிந்திருந்ததால் அவளது மெல்லிய விரல்களால் அதை நீக்க முடியவில்லை இப்பொழுது அவளது தோளிலிருந்த ஆந்தை அதன் கூறிய நகங்களை கொண்டு அந்த ஆணிகளை எடுக்க உதவியது. பின் மீண்டும் அவளது தோள்களிலே அமர்ந்து அவளை கவனித்தது. எல்லா ஆணிகளையும் நீக்கிய மது தன் பலம் கொண்டு அந்த பெட்டியின் மூடியை நகர்த்தி கீழே தள்ளினாள். அவள் மூடியை நீக்கியவும் உள்ளிருந்து ஒரு 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் வேகமாக எழுந்து நின்றான்.

அதே சமயம் மதுவின் கைகடிகாரத்திலிருந்து பீப் பீப் என்னும் ஒலி சத்தமாக ஒலிக்க துவங்கியது. அவளது கைகடிகாரத்தில் அரைமணிநேரத்திற்கு ஒரு.முறை பீப் ஒலி கேட்கும். தனது கைகடிகாரத்தில் ஒலியில் சுயநினைவு கொண்டு கைகடிகாரத்தை நிறுத்தினாள் அது எட்டு மணி முப்பது நிமிடம் என்று காட்டியது. தன் நிலை உணர்ந்து வேகமாக அரவிந்தனை நோக்கி சென்று அவனை கட்டிக்கொண்டாள்.

அதுவரை மதுவின் செயல்களை பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்த அரவிந்தன் உள்ளிருந்த  சிறுவன் வருவான் என்று சற்றும் எதிர்பார்கவில்லை , அந்த சிறுவன் வெளியே வந்ததும் அந்த ஆந்தை மதுவிடமிருந்து பறந்து சென்றது. மதுவும் சுயநினைவு கொண்டு அரவிந்தனிடம் தஞ்சம் புகுந்தாள். இவை அணைத்தும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்திருந்தது.

அங்கிருந்த நிலையை புரிந்து கொண்ட அரவிந்தன் தனது காலில் ஏற்பட்ட விடுபட்ட உணர்வையும் புரிந்து கொண்டான். வேகமாக மதுவை அழைத்துக்கொண்டு திரும்பியும் பாராமல் தனது காரை நெருங்கி அவளையும் ஏற்றி தானும் ஏறி அமர்ந்து கொண்டு வேகமாக காரை கிளப்பினான்.

அந்த காரின் உள்ளே அமைதி ஆட்சி செய்ய இருவரின் மனமும் பயத்தில் உறைந்திருந்தது.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் பாதையை மட்டுமே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

அரை மணி நேரத்தில் அவர்களது இல்லம் வந்தடைந்த அந்த இருவரும் ஆசுவாசமூச்சு விட நிதானமாக வெளியே இறங்கினர்.அவர்கள் வெளியே இறங்கவும் காரின் பின்புற கதவு திறந்து அந்த சிறுவனும் இறங்கினான். அந்த சிறுவன் எப்படி காரின் பின்னே ஏறினான் அதுவும் இவ்வளவு நேரமும் தங்கள் பின்னே அமர்ந்திருந்ததை எப்படி கவனிக்க தவறினோம்??? என்று பல  கேள்விகள் மனதில் குடைய அந்த சிறுவனை உற்று பார்தனர். அந்த சிறுவனின் முகத்தில் ஒரு அப்பாவிதனம் குடியிருக்க அவன் அவர்களை பாவமாக பார்த்துக்கொண்டிருந்தான். அதில் கரைந்த மது ," நந்தன் மாமா அவனை யாரோ தெரியாம பெட்டியில வெச்சுட்டாங்க னு நினைக்கிறேன் நம்மை உள்ள கூட்டிட்டு போயிடலாம் பார்க்க பாவமா இருக்கு ," என்று அவனது காதுகளில் கூறினாள்.

வெளிப்படையாக மதுவை நோக்கிய நந்தன் தலையை மேலும் கீழும் ஆட்டி சம்மதம் தெரிவித்தான் ஆனால் அவனது மனதில் அந்த சிறுவனை நோக்கும்போது அவன் சாதாரண சிறுவனல்ல என்பதை புரிந்து கொண்டவன் அவன் முன்பு அதை வெளிக்காட்டுவது நல்லதல்ல என்பதையும் உணர்ந்து கொண்டான்.

அந்த சிறுவனை இருவரும் உள்ளே அழைத்து செல்ல அங்கே அவர்களை வரவேற்றது திக் பிரமையுடன் நடுக்கூடத்தில் அமர்ந்திருந்த அவர்களது தாத்தாவும் அவரை சுற்றி நின்ற வேலைகாரர்களுமே.

" தாத்தா.....என்ன ஆச்சு நீங்க ஏன் இப்படி உட்காந்திருக்கீங்க???" என்று வினவியபடி அரவிந்தன் அவரின் அருகே சென்று அமர , அதுவரை இருந்த பிரமை நீங்க பெற்றவராக அரவிந்தனை நோக்கியவர் அங்கே நடந்த நிகழ்வுகளை கூறினார்.

" இதெல்லாம் எப்போ நடந்தது தாத்தா??"என்று வினவிய அரவிந்தனை நோக்கியவர் நேரத்தை பார்தார் அது சரியாக ஒன்பது  என்று காட்டியது ," சரியா எட்டு  முப்பது மணிக்கு நடந்தது," என்று கூறினார்.

தாத்தா கூறிய நேரத்தை கேட்ட இருவரும் " என்ன???  எட்டு முப்பது ????என்று ஒரே குரலில் வினவினர் அவர்களது குரலில் திகில் அப்பியிருந்தது.

(தொடரும்......)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro